23 Oct 2011

சளதாரி,,,,,,,


 

மறதி இருப்பதினாலேயே
நட்புகளும் உறவுகளும்
தோழமையும் சாத்தியப்படுகிறதாய்
தோனுகிறது.
பலபேரின் முன்னிலையில்
என்னை மனநோயாளி என
சித்தரித்த நண்பனை
நேற்று இருதய விலாஸ்
முன்பு பார்த்தேன்.
வெள்ளை வேஷ்டி,
வெள்ளை சட்டையில்
அழுக்குப்படாமல் தெரிந்தான்.
அவசரமாய் வெளியூர் போவதாயும்,
அங்கு ஒரு பொதுக்கூட்டம்
இருப்பதாகவும் சொன்னவனை
சாப்பிட அழைத்ததும்
சங்கோஜம் ஏதுமின்றி
வந்தவன்
பக்கத்தில் அமர்ந்து
இருவருக்குமான உணவு வகைகளை
உத்தரவு மொழியில் சொன்னான்.
பேச்சேதுமின்றி
சாப்பிட்ட இருவரும்
முகம் கூட பார்த்துக்கொள்ளவில்லை.
அரைமணி நேரத்திற்கும்
குறையாமல் சாப்பிட்டவன்
என்னையே பணம் கொடுக்க
சொல்லிவிட்டு வேக, வேகமாய்
போய்விட்டான்.
ஒருவேளை
அவன் நினைத்திருக்கக்கூடும்.
என்னின் இந்த செயலும்
 மனநோயே என/
ஆயினும் மறதி இருப்பதனாலேயே
உறவுகளும்,நட்பும்,
பல நேரங்களில் தோழமையும்
சாத்தியப்படுகிறதாய் தோனுகிறது.


14 comments:

மாய உலகம் said...

மனநோயாளி என்ற நண்பனின் பணத்தை காலி செய்துவிட்டு செல்ல மட்டும் மனம் உள்ளதா... அந்த மானங்கெட்டவனுக்கு... இருந்தாலும் நட்பை பெரிதாய் எண்ணிய நல்லவனுக்கு மன்னிக்க தெரிந்ததால் சமூகத்திற்கு அவன் இளிச்சவாயன்.... என்ன செய்ய நிறைய நல்லவரின் நிலைமையும் இது தான்... சூப்பர் நண்பரே பகிர்வுக்கு நன்றி

vimalanperali said...

வாஸ்தவம்தான்.மாய உலகம் சார் நீங்கள் சொல்வது.ஆனாலும் புற உலகை அனுசரித்து வாழ்பவர்களாக நாம்.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
உலகம் இப்படித்தான் இருக்கிறது.
வாழ்த்துக்கள்.

vimalanperali said...

வணக்கம் ரத்தின வேல் சார்,நலம்தானே?நினைவலைகளில் நீந்தித்திரிகிற நண்பன் மனம் நிறைப்பான் என நினைக்கையில் இப்படி சொல்லி விட்டு மாயம் நம்சமூகத்தில் நிறைந்து திரிகிறதுதான்.

கிராமத்து காக்கை said...

மறதி பற்றிய நல்ல பதிவு
தமிழ் மணம் 4

vimalanperali said...

வணக்கம் கிராமத்து காக்கை அவர்களே,நலம்தானே?காக்கைகளைப்பற்றிய சொற்பசிந்தனையும் அருகிப்போய் விட்ட நமது சமூகத்தில் நீங்களாவது கிராமத்து காக்கையாய் பெயர் சூட்டி இருப்பது மகிழ்ச்சி/
மறதி சமயத்தில் மனித மன்ங்களை மீட்டு விடுகிறதல்லவா?
உங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாய் நன்றி.

காந்தி பனங்கூர் said...

தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோ.

மாய உலகம் said...

தங்களுக்கு, தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா... சந்தோசமும் வளமும் பெருகட்டும்...

Anonymous said...

தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...

vimalanperali said...

வணக்கம் காந்தி பனகூர் சார்.தங்களுக்கும்,தங்கள் குடும்பத்தாருக்கும் மனம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

vimalanperali said...

வணக்கம் மாய உலகம் சார்.நலம்தானே?இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உண்மைதான்... மறதி மட்டும் இல்லையென்றால்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழகிய கவிதை அழகிய கருத்து..

vimalanperali said...

வணக்கம் கவித வீதி செளந்தர் சார்.மறதிகளே மனிதனுக்கு வரமாயும் சாபமாயும் ஆகிப்போன வாழ்க்கையில் இதெல்லாம் நடக்கும்தான்.
தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாய் நன்றி.