11 Nov 2011

பாரவண்டி,,,,,,


                             


      கூட்டக் கூட்ட குப்பை மேடிட்டு வருகிறது.
மண்ணும்தான்.தூசியாய்,அழுக்காய்,மரத்திலிருந்துஉதிர்ந்தஇலைகளாய்,பூக்களாய்/
 அதன்அடிநிழலிலும்,குளிர்விலும்,குளிர்வின்சுகத்திலும்,வெப்பம் தாக்காமலிருக்கவும்
இரை தேடியுமாய் நெளிகிற புழுக்கள்,பூச்சிகள் இரண்டும் அவை தாண்டி சென்ற எறும்புகளிடம் குசலம் விசாரித்து பேசிக்கொள்கின்றன.
      நான் நலம்,நீ நலமா?இரை தேடிக்கொண்டிருக்கிறேன்.சாப்பிட்டு விட்டாயா?
நட்புகள் தோழமைகள்,சொந்தங்கள் யாரையெனும் பார்த்தீர்களா?அவர்களிடம் நலம் விசாரித்தீர்களா?வீட்டுக்குப்போனீர்களா?அவர்களதுபிள்ளை,குட்டிகள்எப்படி இருக்கிறார்கள்?
     முதுகுமேடிட்டஅடுத்ததெருக்காரரின்பிள்ளைக்குயாருடனோ காதலாமே?
இவர்களும் அவர்களும் வேறு வேறு என பேசிக்கொண்டார்கள்.உண்மைதானா அது?
    ஞாயத்தின் வாசலில் நிற்கிற அவன் எதை சொல்லக்கூடும்.பாவம்பிள்ளைக்கு பரிந்து போவானா?பிள்ளையைகாதலித்தவளுக்கு பரிந்து போவானா?தெரியவில்லை என மாறி,மாறி நலம் விசாரித்துக்கொண்டு ஊர்ந்தைவைகளும்,நெளிந்தவைகளும் தனது வேலையை செய்து கொண்டிருக்கிறது. இன்றாவதுவெயிலடிக்குமா?
உலர்ந்த இரைகள் கிடைக்குமா? என்கிற நப்பாசையுடனும் அவைகளின் மீதாக  வானத்திலபறக்கிறபறவைகளைபார்த்துஏக்கப்பெருமூச்சு விட்டவாறு/
    அவைகளுகென்னஇரைகளுக்காபஞ்சம்.போகிறவழியெங்குமாய்பூத்தும்,காய்த்தும் கிடக்கிற எல்லாம் அவைகளுக்குத்தானே?பின் ஏன் அவைகள் உடல் மெலிந்து அலைய வேண்டும்.வாழ்க்கை பிடுங்கப்பட்ட ரங்கநாதன் தெரு கடையின் வேலைகாரர்களைப்போல?
    அதில் வாயில் இரையை தொங்கப்போட்டவாறு திரியும் கருப்பு நிறப்பறவை ஒன்று இப்படித்தான் காட்டிக்கொள்கிறது. அவைகளும் அப்படியப்படியே காட்டிகொண்டு தனது வேலைகளை பார்த்துக்கொண்டு திரிகின்றன அத்துவான வான வெளியில்/
   பூப்பது,காய்ப்பது,மலர்வது,உதிர்வது,காலம்,நேரம் என்கிற எல்லா பரிணாமத்திலும் கலந்துகொண்டவாறு.அவைகளெல்லாம்இப்படிபோகிறபோக்கில் பேசிக்கொண்டும்,
நலம்விசாரித்துக்கொண்டால்மட்டுமேஉண்டு.அவைகளுக்கென மாநாடுகள்,
கூட்டங்கள்,செயற்குழு எதுவும் கிடையாது.
    சில ஈரமாயும் சில காய்ந்தும் தரையுடன் ஒட்டி அழுகிப்போயிமிருந்த பூக்கள்,இலைகளின் வாசம் அழுக்குடன் சேர்ந்து வீசிய போது சிலு,சிலுவென அடித்த காற்று வாசனையை தூக்கிவிட வீட்டு வெளியின் பக்கச் சுவரோரம் பக்கவாட்டாயும்,வரிசைதப்பியுமாய் நின்ற பன்னீர் மரங்கள் இரண்டும்,வேப்ப மரங்கள் மூன்றும் தனது பூச்செரிதலையும்,இலை உதிர்வையும் செய்து முடித்துக்கொள்கிற தருணங்கள் இனிமையானதாய் இருந்தாலும் குப்பை சேர காரணமாகி விடுகிறது.
    இந்த மழை நேரத்திலும் சரி,பிற காலத்திலும் சரி மாடியிலும் தரையெல்லுமாக தன்னிலிருந்து அவிழ்ந்துகொட்டிவிடுபவைகளைகூட்டி அள்ளுகையில்தான் இப்படி.
    ஈரமும் அழுகலும்,புதிதுமான பூக்களும்,இலைகளும் உதிர்ந்து கிடக்கிற மண்ணுக்கு எப்போதும் ஒரு வாசனை இருக்கிறது.
    அதுமனைவியின்தலையிலிருந்துவருகிறமல்லிகைப்பூ வாசனையாயும்,
மனதுக்குப்பிடித்தஇளம்பிராயத்து,மூத்தபிராயத்து நினைவுகளாயும்கிறக்கிவிடுகிறது.
     ஈரம் மிகுந்ததகாய்ந்த மண் பொதித்து வைத்திருந்த வாசனை போலவே நிறைய நிறையனவாய் விரிந்து காட்டியளித்தும்,விரிந்தும்  தெரிகிறது.
    வீதியாய்,வீடுகளைசுமந்ததெருக்களாய்,சாலைகளாய்.ஆறாய்,நதிகளாய்,
பள்ளத்தாக்காய்,பாலைவனங்களாய்,மலைகள் சுமந்த அத்துவான வெளியாய்,காடாய் காட்சி தருகிற மண் எனக்கு சிறுவயது முதலே உறவாகி இருந்தது.
   நான் உழைத்த மண் எனக்கும்,மண்ணுக்கு நானுமாய் மிக மிக விசுவாசமாய் இருந்தநேரமது.காலைகண்விழிப்பதும்,இரவுகண்மூடுவதும் தோட்டத்தில்தான்.
     அப்போதெல்லாம்எனதுஇடதுதோளில் மண்வெட்டி,கடப்பாரை,கோடாலி அல்லது ஏர்கலப்பை என ஏதாவது ஒன்று இருந்து கொண்டே இருந்தது.
      மண்வெட்டிவெட்டியமண்ணிலிருந்தும்,கடப்பாரைதோண்டிய குழிகளிலிருந்தும்,
கோடாலி வெட்டிச்சிதற செய்த மரங்களிலிருந்தும்,ஏர்கலப்பை உழுத மண்ணில்
இருந்துமாய்எனதுஉழைப்பின்வட்டம் ஆரம்பிக்கிறது,
    காடுவயல்,தோட்டம்,கிணறு என எதுவும் மிச்சம் கிடையாது.மெல்ல,மெல்ல ஊரும் எறும்பு போல மெதுமெதுவாய் ஊர்ந்து,ஊர்ந்துஉழைப்பின் கரம் பற்றியவனாய்
தெளிந்தென்அல்லதுஉழன்றுகொண்டிருந்தேன்.
    மண்எனக்குநெருக்கமானது.வாசனையைசொன்னது.அதன் பலனைகாண்பித்தது.
வாரிக்கொடுத்து.
      அதில்தான்உழைத்தேன்,விதைத்தேன், பாடுபட்டேன். பலன்எடுத்தேன்.
      பலன்எடுத்தவையாவும் நெல்லாய்,கம்பாய்,கேப்பையாய்,திணையாய்,
குதிரைவாலியாய் இன்னும் பிறவான விளை பொருட்களாய் கண்முன் காட்சிதந்தது.
    அப்படி காட்சியளித்த பொருட்களை வீட்டின் சாப்பாட்டு தேவைக்குப் போக மிச்சத்தை கமிஷன் மண்டியில் போட்டு காசாக்கினேன்.
    இப்போதுஅப்படிஇல்லையெனமுழுவதுமாக மறுத்துச் சொல்லி விடமுடியவில்லை.
ஆனாலும் முன்பு போல் எனது உழைப்பு  இருந்தாலும் இன்று எனது நிலத்தில்  நெல்லும்,கரும்பும் ,விளையவில்லை,
      
       கூட்டக்கூட்ட குப்பை மேடிட்டு வருகிறது.மண்ணும்தான்.



12 comments:

SURYAJEEVA said...

உண்மையாகவே சொல் சித்திரம் தான், வலிகள் ஆங்காங்கே, வலிகள் உணர்ந்தவர்கள் மட்டும் புரிந்து கொள்ளும் படி...

குடிமகன் said...

பதிவு அருமை மண்வாசனை அடிக்கிறது! கிராமத்தில் மழை பெய்யும்போது வரும் மண்வாசனைக்கு நிகர் அதுவேதான்..

vimalanperali said...

வணக்கம் குடிமகன் சார்.நலம்தானே?மண் வாசனை அடிக்கும் எத்தனையோ விஷயங்கள் நம்மை விட்டு பறி போய்க்
கொண்டிருக்கிறது.பீட்சாக்களும்,பாஸ்ட் புட்களும் நிறைந்து மாறித்தெரிகிற நமது உணவு கல்சர் நம்மை எங்கோ அலைத்துசெல்கிறது.உணவு விஷயத்தில் மட்டும் இல்லை.எல்லா விஷயங்களிலும் நமது சமுதாயம் ஒரு விதமாக வடிவமைக்கப்பட்டு வருகிறது.
அதன் உருவகம்தான் இந்த சொல் சித்திரம்.நன்றி,வணக்கம்.

vimalanperali said...

வணக்கம் சூரயஜீவா தோழர்.நலம்தானே?வலிகல் சொல்லும் வலிகலை உணர்ந்தவர்களாய் நாம் இருக்கிறோம் என்பதே ஆறுதலான விஷயமாக உள்ளது,ஆனாலும் நாம் அனைவரும் ஒரு விதமாக வடிவமைக்கப்பட்டு வருகிறோம்.அதன் உருவகமாக தோன்றியதை எழுதினேன்.
நன்றி உங்களது கருத்துரைக்கும்,
வருகைக்குமாக/

ADMIN said...

உள்ளதை சொல்லியிருக்கிறீர்கள்..!! உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்..!! வெளிப்படுத்திய விதம் அருமை..!! வெளிப்பட்ட வார்த்தைகள் பிரமாதம்..!!

ADMIN said...

எனது வலையில்
உங்கள் செயல்களை யுக்தியுடன் செய்யுங்கள்

நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

vimalanperali said...

வணக்கம் தங்கம் பழனி சார்.நலம்தானே?நன்றி ஔங்கலது வருகைக்கும் கருத்துரைக்குமாக/

Anonymous said...

ஆதங்க வரிகள்...
நல்லாயிருந்தது...

vimalanperali said...

வனக்கம் ரெவெரி சார்,நலம்தானே?ஆதங்கங்கள் நிறைந்து இருக்கிற வரை மட்டுமே வாழ்விலிருந்து வாரிக்கொள்ள வார்தை கிடைக்கிறது,ஆதங்கப்படுவோம்/

சித்திரவீதிக்காரன் said...

குதிரைவாலி என்ற பெயரை எல்லாம் கேட்டால் இன்றைய தலைமுறைக்கு நெல்லின் பெயரென்றாவது தெரியுமா? எல்லாம் நம்பரில் போய் கொண்டிருக்கிறது. பகிர்விற்கு நன்றி.

vimalanperali said...

வணக்கம் சித்திரவீதிக்காரன் சார்,நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

DSLR days said...

நிதர்சன உண்மை ..!!!