13 Nov 2011

வேர்ப்புழு,,,,,,

        இனக்கலப்பில் கலர்கலராய் பிறந்த கலர் நாய் முதல் நாட்டு நாய் வரை அந்த இடத்தை சுற்றிச்சுற்றி வருகிறது.
     கருப்பாய்,செந்நிறமாய்,,வெள்ளையாய்,,,உயரமாகவும்,நீண்டும்,,குள்ளமாயும்,,,,,,,,,,,,,,,,,/
    கறுத்து நீண்ட தார்ச்சாலைகளிலும்,விரிந்தும்,சுருங்கியுமாய் தெரிந்த வீதிகளிலும் அன்றாடம் அதன் பயணம் ஆரம்பித்து தொடர்கிறது.
    வீடுகள்,வீதிகள்,கடைகள்எனஎல்லாவற்றின்முன்பும் நின்று,படுத்து,அமர்ந்து புரண்டு
கொண்டிருக்கிற அவைகள் தனது இரை தேடும் இடத்தை எங்கெங்கோ என வைத்திருந்தாலும் கூட ஞாயிறின் காலையில் மிகச் சரியாக எங்களது வீதியில் ஆஜர் ஆகி விடுவதுண்டு.
      எச்சில் வழிய நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டும், வழி நெடுக வழிய விட்டுக்கொண்டுமாய் வந்து சேருகிற இடம் எங்களது சாலை விரிந்து மெயின் ரோட்டில் சேருகிற இடமாய் இருக்கிறது.
   சைக்கிள்களும்,இருசக்கரவாகனங்களும்,எப்போதாவதுபஸ்ஸீம்,லாரியும்போய்வருகிற
சாலையாய் அது மையமிட்டு அமர்ந்திருந்தது.
    வீட்டின் முன்பும்,பக்கவாட்டு வெளியிலும்,தெருநெடுகிலும் சாக்கடை ஓரங்களில் ஆங்காங்கே முளைத்துத்தெரிந்த திடீர் கோழிக்கறி கடைகளை சுற்றிச்சுற்றி ஓடிக்கொண்டும்,நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு அங்கு மொய்க்கிற ஈக்களின் எண்ணிக்கைக்கு குறையாமல் சுற்றித்திரிகின்றன.  தங்களது பக்கம் கடை முதலாளி
திரும்ப மாட்டாரா,தங்களுக்கு ஏதாவது கொஞ்சமாவது தூக்கிப்போட்டுவிட மாட்டாரா என்கிற நப்பாசையுடன்/
     சாக்கடையில் மிதித்து மண்ணில் புரண்டு உடலெங்குமாயும் கூட இல்லாவிட்டாலும் கூட குறைந்த பட்சம் தங்களது கால்களிரண்டிலுமாவது சகதியை அப்பிக்கொண்டு வரும் அவைகளை கடை ஓனர்கள் துரத்தத்துரத்த திரும்பவும் வந்து ஒட்டிக்கொள்ளும் காற்றின் தூசியாக வருகின்றன.
    கடையின்ஓரமாய்நின்று கடைக்கார்களையும்,அங்கு நிற்பவர்களையும் முகம் பார்க்கின்றன.வாலை ஆட்டுகின்றன.கண்களில் ஏக்கம் காண்பிக்கின்றன.ஒருவித சங்கோஜத்துடனும்,சங்கடத்துடனுமாய் நிற்கிற அவைகளை கண்டு கொண்டாலும் காணாதது போல தலை அறுத்த கோழிகளை ஈயச்சட்டியில் கொதிக்கும் சுடுநீரில் முக்கி,முக்கி எடுத்து ஆட்டிக்கொண்டிருக்கிறார்கள் கடையின் ஓனர்கள்.(இதில் கணவனும்,மனைவியுமாக மட்டுமே சேர்ந்து தங்களது கரங்களையும்,உழைப்பையும் கலக்க விட்டிருக்கும் இருபத்தி நான்கு மணிநேர கோழிக்கறிக்கடையும் அடக்கம்,மாலை நேரமாகிவிட்டால் கோழிக்கறி ரோஸ்ட் போட்டு எடை போட்டு விற்பனைசெய்வதுமுண்டு)
    அப்படி செய்தால்தான் கோழியின் இறகு பிய்க்க தோதாதாக இருக்கும் என்பது அவர்களது கணக்கும்,வாதமும்,உண்மையுமையாகவும் தெரிந்தது.
    சரி அதில் போய் நாம் என்ன தலையிடுவது என்கிற நோக்கில் ஒன்றும் பேசாமல் ஒரு கிலோ கறிக்கு சொல்லி விட்டு நின்றால் ஈயச்சட்டி வைத்திருந்த மண்ணெண்ணெய் ஸ்டவ் சரியாக எரியவில்லை.அமந்து அமந்து தீயை லேசாகவும்,குப்பென மிக அதிகமாகவும் வெளிப்படுத்திக்கொண்டிருந்தது.கனிவான மனைவியின் கோபத்தைப்போல/
    கண்ணுக்கு அழகாய் நிறைந்து தெரிகிற மனைவியின் சொல்லும்,கோபமும் எப்பொழுதும் யாரையும் ஒன்றும் செய்து விடுவதில்லை.அதுபோலத்தான் பார்க்கின்றன நாய்களும் தங்களது ஓனர்களை அல்லது இரை தேடவந்த இடத்தில் இருக்கும் கடைக்காரர்களை/
    அணைந்து,அணைந்து எரிந்த ஸ்டவ் தனது மூச்சை வெகுசீக்கிரம் நிறுத்திக்கொண்டு விடும் போல தெரிந்தது.
   கடைக்கும்,நின்று கொண்டு நெளியும் எங்களுக்கும் ஊடாக  ஓடுகிற சாக்கடையையும்,அதில்மிதித்துவருகிற நாயையும்,தலை அறுத்த கோழியையும்,தகராறு செய்த அடுப்பையும் ஆற்றாமையுடன் மாறி மாறிப்பார்த்தவாறு எங்களை ஏறிட்டு மிக சங்கடமாய் சொல்கிறார் கடைக்காரர். “ஒரு பாத்து நிமிஷம் கழிச்சு வாங்க சார்.ரெடியாகிவிடும்” என/
    அது சரி என நானும் என்னைப்போன்றவர்களும் நகன்று விடுகிறோம் அவ்விடத்தை விட்டு.
     நகன்றநான் சிறிது தூரம் சென்று திரும்பிப் பார்க்கிறேன்.நாக்கைதொங்கப்போட்டுக்
கொண்டுஅலைந்தநாய்கள்இன்னும்அந்தஇடத்தை சுற்றியவாறு/
    அவைகளுக்குத்தெரியுமா,தகறாறு செய்த ஸடவ்வைப்பற்றியும் கடைக்காரரின் ஆற்றாமை பற்றியும்/
    ஆனால்அவர்களிவருக்கும்சரியாகத்தெரியுமா,தெரியாதாஎனத்தெரியவில்லை.    
   குளிரூட்டப்பட்டகோழிகறிக்கடைகள்வந்துவிட்டால்மேற்சொன்ன காட்சிகளும்,
  காட்சிகளில் சம்மந்தப்பட்டவர்களின் பிழைப்பும் வேரற்றுப்போய் விடும் என/

2 comments:

  1. அருமை, நானும் நினைத்து பார்ப்பதுண்டு, ஒரு காலத்தில் சுவர் விளம்பரம் எழுதியவன், போஸ்டர் ஓட்ட தட்டிகள் செய்தவன், காணாமல் போய் விட்டானே என்று...

    ReplyDelete
  2. வணக்கம் தோழர் வாஸ்தவம்தானே?போஸ்டர் ஒட்டுவது மட்டுமல்ல,போஸ்டர் ஒட்டுவது போன்ற நிறைய விஷயங்கள் நமது சமுதாயத்தில் காணாமல் போயவிட்டதுதான்.
    ரொம்பவும் ஒன்றும் வேண்டாம்.ஒரு பத்து வருட காலத்திற்குள்தான் இவ்வளவும்/
    ATM பணப்புழக்கம் ரூ;500,1000 புழங்கல்,தவணை முறையில் இருசக்கரவாகனம் முதல் கார்வரை,குடியிருக்க வசதியில்லாத ஒரு சிறு வீட்டில் ஆடம்பரப்பொருட்கள் சர்வசாதாரணமாக குடிகொண்டுள்ளன.இதன் அர்த்தம் அந்த வீட்டில் குடியெருப்போர் மேற்கண்ட பொருட்களை வாங்கக்கூடது என இல்லை.சக்கிதிக்கு மீறி அனைத்துப்பொருளையும் வாங்க வைத்து விடுகிற consumarisam இங்கே வென்று விடுகிறது,தான் தயாரித்த பொருளை எவர் தலையிலாவது தந்திராமாய் கட்டி லாபம் சம்பாதிது விடுகிற தந்திரோபாயத்தை கற்றவன் மெல்ல,மெல்ல ஊர்ந்து வந்து நமது மேதேறி இப்பொழுது மென்னியில் மீதேறி மிதிது நிற்கிறான்.அவனுக்குத் தேவை பணம் அதை தனது உற்பத்திப்பொருள் மூலமாக மக்களின் தலையில் கட்டி லாபம் சம்பாதிக்கப்பார்க்கிறான்.நாமும் அடிமையாகிவிட்டோம்,நமக்குத்தெரியாமலேயே/நமது மனித மனங்கள் ஒருவிதமாக வடிமைக்கப்பட்டு வருகிறது தோழரே?அந்த வடிவமைப்பின் வெளிப்பாடுகளில்,,,,,,,

    ReplyDelete