14 Nov 2011

விட்டுவிலகி,,,,,,,



  
தெருமுனை திரும்பும் போது
கையேந்திய பிச்சைக்காரியை
கடந்து விட்ட பின்தான் தோனுகிறது.
கையிலிருந்த சில்லறையை
போட்டிருக்கலாம் என/
திரும்பிப்பார்க்கிறேன்.
அவளை காணவில்லை.
திரும்பவுமாய் போய்
அவளுக்கு பிச்சையிட
எனது கெளரவம் இடம்தரவில்லை.
போய்விடுகிறேன்.
எனது வாழ்க்கையும்
இப்படியேதான் போய்க்கொண்டிருக்கிறது.

18 comments:

M.R said...

அருமையான சிந்தனை ,அழகிய நடை

நன்றி நண்பரே

MANO நாஞ்சில் மனோ said...

செமையான நிதர்சனம்....!!!

vimalanperali said...

வனக்கம் M.R சார்.நலம்தானே.நன்றி உங்கலது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் நாஞ்சில் மனோசார் நலம்தானே? நிதர்சனங்கள் நிறைந்து மிதக்கும் நமது சமூகத்தில் இதுபோல நிறையவே/

Anonymous said...

எனது வாழ்க்கையும்
இப்படியேதான் போய்க்கொண்டிருக்கிறது.//

நீங்கள் தனி ஆள் இல்லை...

vimalanperali said...

வணக்கம் ரெவெரி சார்.கிட்டத்தட்ட எல்லோர் வாழ்க்கையும் இப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது.

சென்னை பித்தன் said...

யதார்த்தம்!அருமை.

vimalanperali said...

வணக்கம் சென்னை பித்தன் சார்.நலம்தானே?உங்கலது வருகைக்கும்,மேன்மையான கருத்துரைக்கும் நன்றி.

சாகம்பரி said...

அடுத்த நொடி என்பதுகூட நம் கையில் இல்லாத இந்த வாழ்க்கையில் இது போன்ற நினைவுக்கடன்களை சுமந்து கொண்டு அழைகிறோம். நல்ல கவிதை.

G.M Balasubramaniam said...

வணக்கம் விமலன். உங்கள் அறிமுகம் படிக்கும்போது, முதன்முதலில் எழுதுபவன் எனும்போது கூடவே ஒரு தாழ்வுணர்வுடன் கூடிய பெருமிதம் தெரிகிறது, மற்ற இரு வலைப் பூக்களிலும் உங்கள் எழுத்தைக் காணவில்லை. சிட்டுக்குருவியில் எழுதுகிறீர்கள். இர்ண்டு மூன்று இடுகைகள் படித்தேன். எண்ணங்களும் எழுத்தும் சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

Thooral said...

உண்மை உண்மை ..
அருமையான பதிவு ..:)

vimalanperali said...

வணக்கம் சாகம்பரி அவர்களே,
நன்றி உங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் G.M பாலசுப்ரமணியன் சார்.நலம்தானே?சிட்டுக்குருவியில் எனது எழுத்துக்கள்.மற்ற இரண்டிலும் படங்களும்,யூடியூப் பாடகளுமாக கலந்த கலவை.

vimalanperali said...

வணக்கம் ஜெயராம் தினகரப்பாண்டியன் சார்.நல்ம்தானே?நன்றி உங்காளது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

ராஜி said...

கவிதை நல்லா இருக்கு

vimalanperali said...

வணக்கம் ராஜி அவர்களே/நலம்தானே?உங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

கே. பி. ஜனா... said...

உணர்வை உருக்கும் கவிதை...

vimalanperali said...

வணக்கம் கே.பி ஜனா அவர்களே/
நன்றி உங்களது வருகைக்கும்,
கருத்துரைக்கும்/