27 Nov 2011

காலக்கண்ணாடி,,,,,,





பிறந்து வளர்ந்ததிலிருந்து
இந்த ஊரிலேயே
தனது காலம் கழிந்து விட்டதாக
கூறிய நண்பனுக்கு வயது நாற்பத்தைந்து/
வெகு நாட்களின் இடைவெளியில்
மெலிந்து தெரிந்தான்.
நடைமுறையில் மெலிதாகவும்,நிறையவுமாய்
மாற்றம் தெரிந்தது.
வெள்ளை வேஷ்டி,வெள்ளை சட்டையில்
பளிச்சென தெரிந்தான்.
கைவிரலகள் இரண்டிலும் மோதிரங்கள்
வலது கையில் ப்ரேஸ்லெட்
கழுத்தில் மைனர் செயின் /
விட்டுப்போகக்கூடாது என்பதற்காக
தந்தை செய்த வியாபாரத்தை
தொடர்கிறேன் எனச் சொன்னவன்
பிழைப்பிறகாக------தின்று கொண்டிருக்கிறேன்
என்றான்.
இருவரின் மனதும் கண்களில்
பிரதிபலித்த போது
சாலையோர கடையில் டீ சாப்பிட்டோம்.
கை கொடுத்து பிரிந்த போது தான்
கேட்டேன் இப்பொழுதெல்லாம்
கால் பந்து விளையாடப்போவதுண்டா என/
இல்லை என்கிற ஆற்றாமையுடன்
தலை குனிந்து சென்ற அவனை
வெகு நேரமாக பார்த்து
கொண்டிருப்பவனாக நான்/

7 comments:

SURYAJEEVA said...

வரிகள் சொல்வது அர்த்தமல்ல, வேறு எதோ இருக்கிறது... சென்ற கவிதை போல் அசை போட்டு விட்டு இரண்டு மூன்று நாட்கள் கழித்து கருத்திடுகிறேன்

vimalanperali said...

வணக்கம் சூரிய ஜீவாதோழர்.
கட்டாயத்திற்கு வாக்கப்பட்ட பிழைப்பு இங்கேபலருக்குவாய்க்கப்பெற்றிருக்கிறது.தங்களது வருகைக்கு மிக்க நன்றி.

Thooral said...

நம் விருப்பம் ஒன்றாக இருக்கிறது
நாம் சூழல் நம்மை வேறு ஒன்றை தேர்ந்தெடுக்க
செய்கிறது ..
அருமை

vimalanperali said...

வணக்கம் ஜெயராமன் தினகரப்பாண்டியன் சார்.நலம்தானே?கட்டாயத்திற்கு வாக்கப்பட்ட வாழ்க்கை முறையின் கசப்புகள் நம் சமூகத்தில் நம் கண்ணெதிரே/
உங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

காலம் யாருக்கும் புரியாதது...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழகிய கவிதை

vimalanperali said...

வணக்கம் கவிதைவீதி செளந்தர் சார்,நலம்தானே?
நன்றி உங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/