13 Nov 2011

செஞ்சோறு,,,,,,,


  
சிறுவர்களைக்கண்டால்
விரட்டுகிற நாய்
எங்களது எதிர் வீட்டில் இருந்தது.
காலையிலும் மாலையிலும்,
இன்னும் பிற வேளையிலுமாக
எங்களது வீட்டின்
பக்கவாட்டு வெளியில்
முகம் தொங்கிபடுத்துக்கிடக்கும்.
நானும்,மனைவியும்,பிள்ளைகளுமாக
அன்றாடம் ஒரு முறை
அழைத்து பிஸ்கட் அல்லது ரஸ்க்
ஏதாவது கொடுப்பதுண்டு.
சிரத்தையாய் சாப்பிட்டு விட்டு
நாவால் வாயை துடைத்துக்கொண்டு
வாலாட்டுகிற அது
பழையபடியும் தன்னிடத்தில்
போய் படுத்துக்கொள்ளும்.
பூச்சிகளை,பறவைகளை,
பூனைகளை,ஆடுகளை,மாடுகளை,,,,,,,என
எதைக்கண்டாலும் குரைத்துக்கொண்டிருக்கிற
அதை இப்போதெல்லாம்
அதன் உரிமையாளர்
கட்டிப்போடுவதேயில்லை.
ஏன் எனக்கேட்டபோது
அப்படியே போகட்டும்
என அவிழ்த்து விட்டு விட்டோம்.
ஆயினும் வீட்டைச் சுற்றிச் சுற்றி
வருகிறது என்கிறார்.

7 comments:

Yaathoramani.blogspot.com said...

தலைப்பும் படைப்பும் அருமை
நாயிலிருந்து நன்றியைக் க்ழித்தால்
அது உலகிற்கு தேவையே இல்லை என ஒரு
சொலவடை படித்த ஞாபகம் தங்கள்
பதிவைப் படிக்க வந்தது
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்.நலம்தானே? நாய் ஒரு உருவகமாக காண்பிக்கபட்டுள்ளது இங்கே.அவ்வளவுதான்.வருகைக்கும்,
கருத்துரைக்குமாய் நன்றி.

வலிப்போக்கன் said...

எனக்கு நாயை பிடிப்பதில்லை.ஏனென்றால் உழைப்பதுமில்லை,விசுவாசமாகவும் இருப்பதில்லை.இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்

vimalanperali said...

வணக்கம் வலிப்போக்கன் சார்.நலம்தானே? உழைப்பிற்கான விலங்கு வீட்டுமிருகங்களில் மாடுமட்டும்தானே?நாய் காவலிருக்க என ஆகிப்போன நமது சமுதாயத்தில்அதை ஏன் விக்லக்கி வைத்துப்பார்க்க வேண்டும்?

Thooral said...

செய் நன்றி ..
அருமையான பதிவு

vimalanperali said...

வணக்கம் ஜெயராமபாண்டியன் சார்.நலம்தானே?நன்றி உங்கள்து வருகைக்கும் கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ஜெயராமபாண்டியன் சார்.நலம்தானே?நன்றி உங்கள்து வருகைக்கும் கருத்துரைக்குமாக/