28 Nov 2011

பதியம்,,,,,,,


                                  
  
       பெரிய மகன் கொடைக்கானல் போக வேண்டும் என்றான்.
நான் இதுவரை கனவில் கூட அந்த ஊரைப்பார்த்ததில்லை.
       ஒருமாதத்திற்குமுன்பாகவேசொல்லிவிட்டான்.அவனும்அவனதுகல்லூரி
நண்பர்களுமாய்சேர்ந்துகுறும்படம்எடுக்கப்போகிறார்களாம்.பரவாயில்லை நல்ல
விஷயம்தான்.ஆனாலும் கொட்டித்தீர்த்துக்கொண்டிருக்கிற மழை ஒவ்வொரு நாளுமாய் ஒவ்வொரு விஷயத்தை சொல்லிச்செல்கிறது.
     மையம் கொண்டிருக்கிற புயல் தன்னை இருத்திக்கொண்டு இருபத்திநான்குமணி நேரமும்,நாற்பத்திமணிநேரமுமாய்நீட்டித்துக் கொண்டும்,புதுப்பித்துக்கொண்டுமாய்
செல்கிறது.
     தொலைக்காட்சியில் செய்தி சொல்கிறார்கள்.அங்கு நிலைமை சரியில்லை என/
     இதையெல்லாம் பார்த்தும் ,கேட்டும் கொண்டிருக்கிற அவன் தனது முயற்சியில் சிறிது தளராத விக்கிரமாதித்தனாய் அதே பேச்சை வலியுறுத்தியவனாக/
    உடன் வர இருந்த தனது நண்பர்களுக்கு அடிக்கடி போன் பண்ணுகிறான்.பத்து பேர் கொண்ட குழுவாக பயணிக்கவும்,படமெடுக்கவும் திட்டம் என்கிறான்.சாப்புடுகிற, தூங்குகிற நேரம் தவிர்த்து எந்நேரமும் செல்போனோடேயே அலைகிறான்.
    ஒவ்வொரு முறையும் எடுத்து,எடுத்து வைக்க வேண்டியதிருக்கிறதென்பதும்,போன் வருகிற நேரம் ஓடி வந்து எடுக்க வேண்டியதிருக்கிறதே என்பதுவும் அவனது தலையாய கவலையாய் இருக்கிறது.
    கையிலேயே போனை பதித்து விட முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்பது அவனது தற்போதைய பெரும் சிந்தனையாய் இருக்கிறது. கல்லூரி நேரங்களில் கூட செல்போனை அனுமதிக்கலாமே ஏன் இப்படி யெல்லாம் சொல்கிறார்கள்.என்கிறான்.அது சம்பந்தமாய் நிறைய,நிறைய பேசுகிறான்.கேள்வி கேட்கிறான்.விசனப்படுகிறான்.ஆற்றாமை கொள்கிறான்.பெருமூச்சு விடுகிறான்.
    சென்ற மாதத்தின் ஒரு நாளில் எங்களது வீட்டிற்கு மின் அளவு கணக்கெடுக்க வந்திருந்த மின் ஊழியர் தான் ஒரு குறு படம் எடுத்திருப்பதாகவும்,அதன் தொழில் நுட்பப்பணிகள் தற்பொழுது நடந்து கொண்டிருப்பதாகவும், சொல்லிச்சென்றவர் அதன் கதைகளம்,நடிகர்கள் இத்தியாதி,இத்தியாதி என நிறைய  சொன்னார்.
   ரொம்ப நாட்கள் பழக்கம் அவர் எனக்கு. இரண்டு வருடங்களுக்கு முன்பு மின்சார அலுவலகம் சென்று ஒரு வேலையாய் அலைந்து கொண்டிருந்த போது என்ன,ஏதென விபரம் கேட்டு அந்த வேலை முடிய வேண்டிய இடத்டை காட்டி மேலும்(?/)கொஞ்சம் விபரம் சொல்லி அனுப்பி வைத்தார்.
     அன்றிலிருந்து இன்றுவரை நல்ல நண்பராகளாகவும் நல்ல தோழர்களாகவும் தொடர்ந்தும்,உறவுகளை புதுப்பித்தும் வருகிறவர்களாக பரஸ்பரம் இருவரும்/
    தற்காலிக ஊழியராக அவரது துறையில் வேலைக்குச்சேர்ந்தவர் இன்று கணக்கீட்டாளராக பதவி உயர்பெற்று நிற்கிறார்.
   தற்காலிகராக பணி புரிந்த நாட்களில் அவரும் அவரைப்போன்றவர்களுமாய் தனது தோள்களிலும்,கரங்களிலுமாய் ஏந்தி தூக்கி நட்டிய மின்கம்பங்களும்,அதில் நெசவு கொண்டிருக்கும் மின்கம்பிகளும் இன்றும் ஊரெங்கும் கண்ணில் படுகிறவையாக.
    அன்று அவர்கள் பட்ட கஷ்டமும்,சிந்திய வியர்வையும்தான் மின் ஒளியாக நமது வீடுகளில்/
    நீண்டு முடிந்த அவரது பேச்சின் முடிவு அவரது விடைபெறுதலை சொன்னது.
    அன்று விடைபெற்றுச்சென்ற அவரது உருவில் இன்று இவன் தெரிகிறான் குறும்பட        
    உலகில் கால் பதிக்கப்போகிறாவனாக/ 

10 comments:

Philosophy Prabhakaran said...

வேற ஒரு விஷயத்துல ஆரம்பிச்சு வேற எங்கேயோ வந்து முடிச்சிட்டீங்களே... தொடருவீர்களா...

arasan said...

நல்ல விடயம் .. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிங்க சார்...
எனது அன்பு வாழ்த்துக்களை உங்கள் மகனிடம் சேர்த்து விடுங்க ..

SURYAJEEVA said...

இரு வேறு தளங்கள், இரண்டையும் அருமையாக முடி போட்ட உங்கள் எழுத்து... கதையா அல்லது நிஜமா என்று யோசிக்க வைக்கும் நடை.. அருமை தோழரே

vimalanperali said...

வணக்கம் பிலாசபி பிரபாகரன் சார்.நலம்தானே?ஆரம்பிக்கிற விஷயங்களிலும் முடிக்கிற விஷயங்களிலுமாய் ஏதாவது விஷயம் இருந்தால் நல்லதாக ஆகிவிடுகிறதுதானே?உங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாய் நன்றி.

vimalanperali said...

வணக்கம் சூர்யாஜீவா தோழர் நலம்தானே?தளங்களின் முடிப்புகளை நாம் செய்து முடிக்கிற சமயங்களில் உண்டாகிற மனநிறைவும் இது மாதிரியான படைப்புகளில் கிடைக்கிறது,
நன்றிஉங்களதுவருகைக்கும்,
கருத்துரைக்குமாக/அன்றலர்ந்த பூவின் வாசனையாக, மலர்வாக,பரவாக்கலாக இதுமாதிரியும் என நினைத்துக்கொண்டு எழுதுவதுண்டு/

vimalanperali said...

வணக்கம் அரசன் சார் நலம்தானே?நன்றி உங்களாது வருகைக்கும் கருத்துரைக்குமாக/
உங்களது வாழ்த்துக்களை கண்டிப்பாக எனது மகனிடம் சேர்த்து விடுகிறேன்.

Anonymous said...

ரசித்தேன்...
எனது வாழ்த்துக்களை உங்கள் மகனிடம் சேர்த்து விடுங்க தோழரே ...

vimalanperali said...

வணக்கம் ரெவெரி சார்.நலம்தானே?ந்ன்றி உங்களது வருகைக்கு/
கண்டிப்பாக உங்கலது வாழ்த்துக்களை தெரிவித்துவிடுகிறேன் எனது மகனிடம்/

போளூர் தயாநிதி said...

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

vimalanperali said...

வணக்கம் போளூர் தயாநிதி சார்.நலம்தானே?உங்களது வருகைக்கு நன்றி.