Nov 7, 2011

அணைக்கட்டு,,,,,





ப்படியெல்லாம் பேசக்கூடாது”
என அதட்டும்
அம்மாவை நோக்கி “போ”
என்கிறது குழந்தை.
மறுபடியும் அதட்டும்
அம்மாவின் பிடிவிடுத்து
ஓடுகிற குழந்தை
பக்கத்து வீடு,எதிர் வீடு,
அதற்கடுத்த வீடு,வீதி,,,,,,
என ஒரு சுற்று போய் விட்டு
திரும்பவும் அம்மாவின்
மடி நோக்கியே வருகிறது.
ஓடி வந்த குழந்தையை தூக்கி உச்சி மோந்த
அம்மா மறுமுறையும் சொல்கிறாள்.
“அப்படியெல்லாம் பேசக்கூடாது”என/
“அப்படித்தான் பேசுவேன் போ”என
அம்மாவை விட்டு ஓடிய குழந்தை
திரும்பவும்,திரும்பவுமாய்
வீடுகள், வீதி என
மழலை பேசி
மறுபிரவேசம் மேற்கொள்கிறது.

2 comments:

  1. மழலை பேசி
    மறுபிரவேசம் மேற்கொள்கிறது//

    நல்லாயிருக்கு நண்பரே...

    ReplyDelete
  2. வணக்கம் சார்.நன்றி தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/

    ReplyDelete