7 Nov 2011

பூமணம்,,,,,,


             

ல்லோரும் வழிவிட்டு நில்லுங்கள்.
தவழ்ந்து வருகிறது குழந்தை.
சிறிது நேரம் வீதியில்
யாரும் நடக்க வேண்டாம்.
தேவைப்பட்டால்
போக்குவரத்து காவலர்களை
நிறுத்தி வீதியின் நெரிசலை
ஒழுங்கு பண்ணுங்கள்.
பொக்லைன் இயந்திரம்
கொண்டு சுத்தம் செய்யுங்கள்
தெருவை/
தேவைப்பட்டால்
போர்க்கால அடிப்படையில்
சாலை கூட அமையுங்கள்.
முடிந்தால் வீதி முழுவதும்
மலர்தூவி மெத்தை விரியுங்கள்.
வீடுகளின் வாசலில்
வண்ணக் கோலமிட்டு
வரவேற்க காத்திருங்கள்.
தயவு செய்து எல்லோரும்
வழிவிட்டு நில்லுங்கள்.
தனது பிஞ்சுக்கரங்கள் ஊன்றி,
சின்னக் கால்கள் தரையில் உரச,
பூ உடல் தூக்கி
தவழ்ந்து வருகிறது குழந்தை.
மனதில் கொள்ளுங்கள்
அந்த பிஞ்சு உங்களை
பார்க்கக்கூட வரலாம்/
  

4 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மீண்டும் ஒரு அழகிய கவிதை..
வாழ்த்துக்கள்..

Anonymous said...

வித்தியாச நோக்கு...
அரசியல் தலைவருக்கு உள்ள மரியாதை பச்சிளம் குழந்தைக்கும்...பிடித்தது..

vimalanperali said...

வணக்கம் கவிதை வீதி செளந்தர் சார்.உங்கலது வருகைக்கும் உயர்ந்ததகருத்துரைக்கும் நன்றி.

vimalanperali said...

வணக்கம் ரெவெரி சார்.பூமணத்தை எங்கும் வீசசெய்யும் குழந்தைகளுக்கு மரியாதை செய்வோம்/