2 Dec 2011

டீ சாப்பிடுவோமா,,,,,,,,


                                
  
                டீக்கடைகளின்பரந்த,சின்னவெளியெங்கும்மழைபெய்துகொண்டிருக்கிறது.
      
  டீக்கடைகள் எப்பொழுதும் ஏழைகளின், உழைப்பாளி மக்களின் சொர்க்கமாகவும் அவர்களது வேடந்தாங்கலாகவும் ஆகித்தெரிகிறது.
    அது தற்செயல் நிகழ்வா அல்லது திட்டமிடப்பட்டதா? என்பதெல்லாம் வேண்டாம் இங்கு.
    உடலும் கையும் காலும் உரமேறிப் போயிருக்கிற உழைப்பின் மக்களான  மூடைதூக்குபவர்களிலிருந்து அரசு ஊழியர்கள் வரை அங்கு வராதவர்களும்,அவரகள் பரிமாறிக்கொள்ளாத விசயங்களும் கிட்டத்தட்ட இல்லை எனலாம்.
    அதிலும் வாரக் கடைசியான சனிக்கிழமை மாலைகளில் தனிகளைகட்டிவிடும் இந்த டீக்கடைகள்.அப்படி என்ன விசேஷம் இந்த டீக்கடைகளில்?அன்றுதான் கொத்தனார்,சித்தாள் போன்ற உதிரித்தொழிலாளர்களுக்கு சம்பள பட்டுவாடா/
    வாரம் முழுவதும் தனது ரத்தத்தை வியர்வையாக சிந்தி பல கட்டிடங்கள் எழும்ப செங்கலும்,மண்ணும் சுமந்தவர்களும் இதர பல தொழிலாளர்களும் தங்களது உழைப்பிறகான பலனான ஊதியத்தை பெற்று மனம் நிறைந்து வீடு போகிற வேலையின் நடுவாந்திரமாய் இப்படி தென்படுகிற டீக்கடைகளில் அடைக்களமாகிற,இளைப்பாரிக்கொள்கிற  பொழுதுகள் பொன்மாலை பொழுதுகளாய் ஆகியும் தெரியவுமாய் செய்கின்றன.
    அப்படி தெரிகிற வேலைகளில் எழுகிற பேச்சுக்களும்,பிறக்கிற சொல்லும்,வடிவம் கொள்கிற உற்சாகமும்,பூக்கிற புதுத் தெம்பும் அவர்களை ஒரு குடிக்கும்,ஒரு கடிக்கும் அங்கே அனுப்பி வைத்து விடுகிறது.
    குடும்பவிஷயங்கள்,அலுவலக விசயங்கள்,நட்பு,தோழமை இன்னபிற என அந்த இடத்தில் அரைபடாத விஷயங்கள் ரொம்பவும்குறைவும், விதிவிலக்குமாக/
    டீக்கடைகள் அமைந்திருக்கும் இடங்களும்,அதன் விலாசமுமே இதற்கு முழு நீள மெளன சாட்சியாக/
    ஒரு அரசு ஊழியர் சொல்கிறார். “எப்பப்பாத்தாலும் இதே பொழப்பாபோச்சு,வேல குவிஞ்சு கெடக்குது,ஆள் சாட்டேஜ்,கூடிப்போன வொர்க்லோட் எல்லாம் ஆள அமுக்குது.நீங்க நினைக்கிற மாதிரி இல்ல ,ஒங்க ஆபீசுல எப்படின்னு தெரியல எங்க ஆபீசுல வேலைகொல்லுது ஆள/ நாலு ஆள் வேலைய ஒரே ஆள் செய்ய வேண்டியிருக்கு,எங்க போயி முட்டுறதுன்னு தெரியல,இருக்குற டெம்பரவரி ஸ்டாப்பயாவது பெர்மணென்ட் பண்ணி விடலாம்.அதவிட்டுட்டு இப்பிடி வேலய பாத்துக்கிட்டு,இருக்குறவுங்களயும் வீட்டுக்கு அனுப்பீட்டு எரியிற தீயில இன்னும் கொஞ்சம் எண்ணைய ஊத்துற மாதிரி வேலைய செஞ்சிட்டு இருக்காங்க”என அவர்களும்,,,,,,,,
    “யெறக்குற லோடுக்கு அன்னன்னைக்கு காசு குடுத்தாவுள்ள நல்லாயிருக்கும் வேலை செய்யிறதுக்கு,சேத்து வச்சி ஒரு வார கழிச்சுக்குடுத்தா வீட்டுக்கும்,கைச்செலவுக்கும் என்னா,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,கொண்டு போறது? எங்க மொதலாளி இன்னைக்கு கூலி தரலையின்னு சொன்னா கேக்கப்போறானா கடைக்காரன்” என கோபமாக லோடும்மேன்களும்,,,,,,,,,,,
    “புள்ளைக்கு விசேசம் வச்சிருக்கு,விக்கிற வெலவாசியில ஒரு அம்பது பேர கூப்புடனும்னாக்கூடயோசிக்கவேண்டியிருக்கு.என்னசெஞ்சிஎப்பிடிசமாளிக்குறதுன்னு
தெரியல.எப்பிடி சுத்தினாலும் சொந்ததக்காரங்களே அம்பது பேரு பக்கத்துல வருவாங்க,இன்னும் நம்மளோட பழகுன ஆட்கள்,அக்கம்,பக்கம் எல்லாம் இருக்கு,முழி பிதுங்கிப்போகுது”,,,,,,,,,,,,,,,,,, என  அன்றாட சம்பாத்தியர்களில் ஒருவருமாய் மாறி,மாறி தனது ஆதங்களை கொட்டிக்கொண்டிருக்கிற நேரத்தில் வந்த பெட்டிகடைவைத்திருக்கும் நண்பர் ஒருவர் சொல்வதையும் செவிசாய்க்க நேரிடுகிறது.
     “உள்ளதுலேயே எங்க பொழப்புதான் ரொம்ப கஷ்டமான பொழப்பு அண்ணாச்சி,சீப்பட்டபொழப்பு, அன்னையிலயிருந்து இன்னைய வரைக்கும்
வாழைப்பழத்துக்கு லாபம் 50 பைசாதான். சிகரெட்டு, பீடிக்கு ரொம்ப கொறஞ்ச லாபம்தான்,கலர் பாட்டில்ல எல்லாம் அவுங்களே வெல அடிச்சிக்குடுத்துர்றாங்க.நாங்க  பெருசா எதுவும் பண்ணீற முடியாது.அப்பிடி பண்ணுனா யேவாரம் படுத்துரும்”,,,,,,
    என ஒருவருமாய் மாறி,மாறி தனது ஆதங்களை பேசிக்கொள்கிற இந்த நாட்களின் நகர்வுகளில் மழைபெய்கிறது.வெயில் அடிக்கிறது. பெருங்காற்றையும் கூட கரம் கோர்த்துக் கொண்டு.
    வாகனங்களும், மிதிவண்டிகளும்,பாதசாரிகளுமாய் கலந்து செல்கிற புழுதி பறக்கிற சாலையில் நடக்கிற எல்லாவற்றையும் பார்த்தவாறே ஒரு குடியும்,ஒரு கடியுமாய் டீ,ஒரு அல்லது இரண்டு வடை என கலந்து கட்டி சாப்பிட்டு தைப்பாறி செல்கிற நாட்களின் ஒன்றில்தான்   டீ விலை ஒரு ரூபாய் கூடியிருக்கிறது.
    சாதாரண  சின்ன நகரங்களில் இப்படி.பெரிய நகரங்களின் பிடியில் இருக்கிற கடைகளில் இரண்டு ரூபாயிலிருந்து மூன்று  ரூபாய்வரை ஏறியிருக்கலாம்.எப்படி என தெரியவில்லை என்கிற ஆதங்கத்துடன் டீயையும் வடையையும் கடித்தும் குடித்தும் கொண்டுமாய் கலைந்து செல்கின்றனர்.
     டீக்கடைகளின்பரந்த,சின்னவெளியெங்கும் மழை பெய்துகொண்டிருக்கிறது.மேகம் அடர்ந்திருக்கிறது.ரோடுகளில் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது.மனிதர்கள் குடை பிடித்துக்கொண்டும்,ரெயின் கோட்டைப்போட்டுக்கொண்டுமாய் ஓட்டமும்,நடையுமாய் ஓடிக்கொண்டிருக்கின்றனர்.
     டீக்கடைகளில் பாலும் வெந்நீரும் கொதித்துக் கொண்டிருக்கிறது.










  

9 comments:

வலிப்போக்கன் said...

பால் வில ஏறிபோச்சுனு டீ விலய எத்திடாங்க நண்பரே!

Anonymous said...

Ginger tea...-:)

vimalanperali said...

வணக்கம் வலிப்போக்கன் சார்.நலம்தானே?ஆற்றுகிற டீயில் பறக்கிற ஆவி போல ஏறுகிற டீயின் விலை ஏற்றம் எளியவர்களின் வேடந்தாங்ல்களை பாதிக்கும்தானே?
நன்றி உங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரெவெரி சார்.நலம்தானே?ஜிஞ்சர் டீ ஒற்றை வரியில்சமாதானம் செய்து கொண்டு கடந்து விட முடியவில்லை.
ஆற்றுகிற டீயில் பறக்கிற ஆவி சொல்கிற கதைகள் நிறைந்து தெரிகிறது.அந்த ஆவிக்கும் அதை தாங்கி கையில் டீ ஏந்தியவருக்குமாக இருக்கிற உறவு இங்கு லேசுப்பட்டதல்ல.
அந்த உறவின் விளிம்பில் வெந்நீர் ஊற்றுகிற வேலைகளில் இதுவும் ஒன்றாக/
தங்களது வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி/

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வாங்க ஒரு டீ சாப்பிடுவோம்....

இந்த வார்த்தைக்குள் எவ்வளவு மரியாதை...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

//
Blogger வலிபோக்கன் said...

பால் வில ஏறிபோச்சுனு டீ விலய எத்திடாங்க நண்பரே!
////////

ஏங்க அதை எப்போ ஏத்திட்டாங்க..

இப்ப டீ 7 ரூபாய், காபி 10 ரூபாய்...

சக்தி கல்வி மையம் said...

பால்விலை உயர்வைக்காட்டி எங்க ஊர்லேயும் டீ விலை ஏத்திடாங்க..

vimalanperali said...

வணக்கம் வேடந்தாங்கல் கருன் சார்.நலம்தானே?பால்விலைமட்டுமா இதில்?

vimalanperali said...

வணக்கம் கவிதை வீதி செளந்தர் சார்.நலம்தானே?உங்களது வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி.