21 Dec 2011

நல்லதோர் வீணை,,,,,,,,


   


சைக்கிள்களும்,மினி பஸ்ஸும்
இருசக்கர வாகனங்களும்
பின் பாதசாரிகளும்
மிதமாகக்கூட நடமாடாத
வீதி கிழக்கு,மேற்காய் நீண்டிருந்தது.
ஒன்று,இரண்டு ,மூன்று,,,,,,,என
எதிர்,எதிர் வரிசையில் 
பத்துக்கும் மேற்பட்டதாய்
அடுக்கப்பட்டிருந்த வீடுகளில்
வசித்த மனிதர்களுள்
ஒரு நாயும் இருந்தது.
தினமும் அதிகாலை என்னருகே
வந்து முகர்ந்து வாலாட்டும்
அதன் பெயர் தெரியவில்லை.
எங்கிருந்து வந்தது எனவும் புரியவில்லை.
வெண்ணிறத்தில் கருப்பும்,ப்ரவ்னுமாய்
கலந்து மேனியெங்கும் முடி ஓடிய
அதன் கழுத்தில் பட்டையாய்
வார் கட்டப்பட்டிருந்தது.
ஒட்டிய உடலும்,உயரமானஉடல்வாகும்
கொண்ட அது
ஒரு நிமிடம் கூட சும்மா இருந்து பார்த்தது இல்லை.
நேரமும்,வேலையும் இல்லாத
அது வீதிகளெங்கும் தடம் பதித்ததாய்
ஓடித்திரிந்து களைப்பையும்
அழுக்கையும் தனது உடலிலும்,
கால்களிலும் அப்பிக்கொண்டும்,
பசியை தனது கண்களிலுமாய்
ஏந்தித்திரிந்தது.
அவ்வீதியில் போகும் சிறியவர்கள்,
பெரியவர்கள் யாரைப் பார்த்தாலும்
வர்க்க பேதமின்றி குரைத்த அதை
அருகில் அழைத்து தலையில்
தடவிக்கொடுத்தால் விசுவாசத்துடனும்,
ஏக்கத்துடனுமாய் பார்த்து
கண்களை மூடி,மூடித்திறக்கிறது.
வாலாட்டி எக்குப்போடுகிறது.
நாக்கை துழாவித்துழாவி
உமிழ்நீர் வடித்தவாறு
சுற்றிச்சுற்றி வளையமிடுகிறது.
அண்ணாந்து,அண்ணாந்து பார்க்கிறது.
உற்று நோக்குகிறது.
நட்புகொள்கிறது.
ஏதாயினும் கொடுத்தால்
வாஞ்சையுடன் பார்த்து விட்டு சாப்புடுகிறது.
தன்னுள் ஏதாயினும் நினைத்தவாறே
ஓடித்திரிந்தும்,ஒட்டியுமாய் திரிந்த
நாயின் பெயர் என்னவென
இதுநாள்வரை தெரியவில்லை.
அது எங்கிருந்து வந்ததெனவும் புரியவில்லை.    

2 comments:

Yaathoramani.blogspot.com said...

பாரதி "எங்கிருந்தோ வந்தான் "எனச் சொன்ன
பாடலை நினைவுறுத்திப் போகிறது தங்கள் கவிதையின் ஈற்றடி
மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்.நல்ம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாய்/