24 Dec 2011

பாதரசம்,,,,,,,,,,

                      
       நிர்வாகியானால் அவர்கள் அழகாகத்தான் தெரிகிறார்கள்.
அதிலும் ஒரு கண்ணாடியை போட்டுக்கொண்டால் மேதமைத்தனம்  வந்து விடுகிறது.
     நெற்றிக்க்கும்,மூக்குக்கும் இடைப்பட்ட வெளியில் அமர்ந்திருக்கிற அது வட்ட,சதுர மற்றும் நீளமான முகத்திற்கு சட்டென்று அழகைக்கொடுத்துவிடுகிறதுதான்.
     அன்று மாலை காய்கறி வாங்கப்போயிருந்தான்.வழக்கமாக வாங்கும் மார்க்கெட் கடைதான்.
     கடை என சுவர்களும் கதவும் இல்லாமல் கடை வீதி ஓரத்தில் உள்ள வெளியில் பூத்து மலர்ந்து புழுதியாய் இருந்த வெளியில் நீள,நீளமான பெஞ்சும் கள்ளிப்பெட்டியுமாய் அடுக்கி கடைபரப்பியிருந்தார்கள்.
     தக்காளி 1கிலோ,வேறு ஏதாவது காய்களில் அரை,அரைகிலோ என வாங்குவதாய்தான் திட்டம் கடைக்குப்போகும் முன் நிமிடம்வரை/
    ஆனால் கடைக்குப்போனதும் அடுக்கப்பட்டிருந்த காய்கறிகளைப்பார்த்ததும் அவனதுவாங்குதல்திட்டத்தில்அடியோடு மாறுதல்/
     புடலங்காய்,பட்டாணி,முள்ளங்கி,சுரைக்காய் விலை குறைவாக இருந்ததால் கொஞ்சம் அதிகமாய் தக்காளி என வாங்கலாம் என்கிற மனத்திட்டத்தில் இருந்த போதுதான் கவனித்தான்.
     கடையில் வழக்கமாய் நிற்கும் அவரை காணவில்லை.பதிலாக அந்த பெண்தான் தெரிந்தாள்.
     யார் என்ன என விசாரித்ததில் “அவரது மனைவி என்றும் இப்போது ஒருவாரமாக அவள்தான் கடையில் நிற்பதாகவும், அதிகரித்துவிட்ட வேலைகாரணமாக “அவருக்கு”ஓய்வு தேவைப்படுவதால் நான் அவரின் ஓய்வ் நேரத்தை இட்டு நிரப்ப வேண்டி வந்திருக்கிறேன்” எனவுமாய் சொன்னாள்.
    எப்போதுமே இடைவெளிகளையும், ஓய்வு வேளைகளின் கால வெளிகளையும் இட்டு நிரப்புவர்களாக பெண்களே தெரிகிறார்கள்.
   வாங்கிய காய்கறிகளுக்கான பணத்தை கொடுத்து விட்டு கிளம்பும் போதுதான் திரும்பவுமாய் கவனிக்கிறேன்.அட்டையில் சொருகி அடுக்கப்பட்டிருந்த நீள,நீளமான பேப்பர்களில் மேல் பேப்பரில் இன்னொருவர் வாங்கிய காய்கறிகளுக்கு கணக்கு எழுதிக்கொண்டிருந்தார்.கூடவே காய்கறி வாங்கியவருடன் பேசிக்கொண்டும் கண்ணாடியின் பிரேமை தூக்கிவிட்டுக்கொண்டுமாய்/
     வாங்கிய காய்கறிகளை பையிலும்,கடையின் நிர்வாகியை மனதிலுமாய் சுமந்தவாறு டீக்கடையின் ஓரம் நின்றபோது நண்பன் சொன்னான்.
     “இருந்துவிட்டுப்போகட்டுமேஅவர்கள்கடையின்நிர்வாகியாக/         
     மாட்டிக்கொள்ளட்டுமே நல்லதானதொரு கண்ணாடியை/        
    தெரியட்டுமேஅவர்கள்பாந்தமாகவும்,அழகாகவும்,மேதமைத்தனமாகவும்/
    இப்பொழுது என்ன கெட்டுவிடப்போகிறது” என/ 
                                              








2 comments:

Admin said...

ஆமாம் நீங்கள் குறிப்பிட்ட விசயம் உண்மைதான்..நானும் ஒரு கண்ணாடியை வாங்கி மாட்டிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்..ஹி.ஹி.ஹி..


அன்போடு அழைக்கிறேன்..

மௌனம் விளக்கிச் சொல்லும்

vimalanperali said...

வணக்கம் மதுமதி சார்.நலம்தானே?கண்ணாடியை மட்டுமல்ல.வரும்காலத்தில் இதுமாதிரியான கடைகளைபார்க்க முடியுமா என்பதே கேள்விக்குறியாக போய்விட்ட நிலை/வால்மார்ட்களும்,சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடும் நுழைந்துவிட்டால்,,,,???