8 Jan 2012

சுவடு,,,,,,,,


                                       
  
       தலையிலும், தோள்களிலும், மார்மீதும் அள்ளிச்சுமந்த துவரங்காய்களும்,அதன்
பூக்களை,பிஞ்சுகளை,காய்களை தன்னகத்தே தாங்கி சுமந்த துவரஞ்செடிகளும் மறந்து போனது கிட்டத்தட்ட/
     கிட்டத்தட்ட என்பது கூட பொய்தான் முழுவதுமாக என்பதுவே சரியாக இருக்கும்.
     கடையில் வாங்கிய காய்கறிகளை கேரி பேக்கில் போட்டு தோள்பையில் இறக்கிய தருணம் ஒரு வட்டத்தட்டில் (அழகாக பிண்ணப்பட்டிருந்த மூங்கில் தட்டு,யார் கைபட்டு இப்படி உருவெடுத்திருந்தது எனத்தெரியவில்லை.நன்றாக இருந்தது பார்க்க.
பிண்ணியவர்களின் கைவண்ணம் மட்டுமில்லை,அவர்களது வாழ்க்கையும் அந்த சின்னத்தட்டில் பிரதிப்பலிப்பதாக/)குவித்து வைக்கப்பட்டிருந்த பொடிப்பொடியான நீள,நீள காய்களைப்பார்த்து கேட்கிறேன் இது என்ன என/
     என்னைப்பற்றியும்,எனது இளம் பிராயத்து நாட்களைப் பற்றியுமாய் முழுவதுமாய் தெரிந்தவரும்,எனது அருகாமை ஊர்க்காரருமான கடைக்காரர்தான் சொன்னார்.இது தொவரங்கா,இது கூட மறந்து போச்சா,ஒங்களுக்கு என /
    அவரின் வார்தைகள் முழுவதுமாக எனது செவிப்பறைகளில் மோதி,மனதிலும்,
கன்னத்திலுமாய்விழுந்தசெருப்படியாய்வெகுநேரம் வலித்துக்கொண்டிருந்தது.கடையை
விட்டு அகன்ற பின்னும் கூட/
   அதிலும் “இது கூட மறந்து போச்சா” என்கிற வரிகளை மறக்காமல் மனம் முழுக்க கனத்துடன் வாழ்வின் மிகப்பெரிய அவமானம் சுமந்தவனாய் தலை குனிந்து கொண்டு
வந்துகொண்டிருந்தேன்.
   என்னுள் குடிகொண்டிருந்த பழைய மென்நினைவுகைளையும்,நான் பொத்தி பாதுகாத்து வந்து கொண்டிருந்த ஞாபகங்களின் புனிதங்களையும் சுத்தமாக மறந்து போனேனா?அல்லது அதை என்னுள் இருந்து துடைத்தெடுத்து எறிகிற அளவுக்கு மொன்னைதனம் கூடிப்போனதா என்னுள்/அல்லது பட்டதெல்லாவற்றையும் மறந்து போனேனா?
   70களின்முடிவிலும்80களின்முற்பகுதியிலும்வாய்க்கப்பெற்றிருந்த விவசாயக்கூலித்
தொழிலாளி வாழ்க்கை கற்றுத்தந்தது ஏராளம்,ஏராளம்/
     உழைப்பிற்குவாக்கப்படிருந்தபிழைப்பின் நேரமாக அதைக்கொள்ளலாம்.இரண்டரை ஆண்டுகாலங்களேஅந்தவேலையைநான்செய்தபோதும்கூட கிட்டத்தட்ட,
பத்தாண்டுகளுக்கும் மேலான உழைப்பின் தடங்கள் ஏனது தழும்பு எனது உடம்பில்/
    உழைப்பு,உழைப்பு,உழைப்பு,,,,,,,,,,,,,,,,,,,என எந்நேரமும் உடம்பில் இறக்கையை கட்டி ஓடிக்கொண்டிருந்த எனது உடலில் ஒட்டிய உறுப்பாக எப்போதுமே(தூங்குகிற நேரம் தவிர்த்து)உழைப்பின் கருவிகளான மண்வெட்டி,கடப்பாரை,கோடாலிஇல்லையெனில் ஏர்கலப்பை என ஏதாவது ஒன்று இருந்து கொண்டே இருக்கும்.
  இப்படி மாறி,மாறி எனது உடலில் ஒட்டிக்கொண்டிருக்கிற அந்தக் கருவிகளின் அடிமையான நான் அவை தவிர்த்து ஆடு,மாடுகள் மீதும் அக்கறை கொள்பவனாகவும்,
பிரியம்கொண்டவனாகவும்,அவைகளுக்குமிகவும்பரிச்சயம்உள்ளவனாகவும் ஆகிப்
போகிறேன்.
   தினசரிகளிலான எனது காலை எழுச்சியே மாட்டுத்தொழுவத்தை ஒட்டி நான் போட்டுபடுத்திருக்கிறறகயிற்றுக்கட்டிலின்பின்னல்களின் மீதிருந்துதான்.
   அதிகாலை ஐந்து மணிக்குள்ளான எனது விழிப்பின் நீட்சி மொழு,மொழு   கடையில் போய் மையம் கொள்ளும்.
    பின் என்ன டீ,பேச்சு,உழைப்பிற்கான ஓட்டம்,,,,,,எனநாளின்ஆரம்பம் சுழியிட்டும்,கால் பாவியும் என்னில் ஆழ ஊன்றியுமாய்/
   உழைப்பின் கருவிகளான மண்வெட்டி வெட்டிய மண்ணிலிருந்தும், கோடாலிகள் பிளந்த மரங்களிலிருந்தும்,கடப்பாரை புரட்டிப்போட்ட பாறைகளிலிருந்தும்,ஏர்கலப்பை உழுது போட்ட மண்ணிலிருந்தும் வருகிற வாசனையையும்,அதைநுகர்ந்தும் உண்டும் அதை சுற்றிலுமாய் இருந்த ஆண்களும்,பெண்களும்,குழந்தைகளும்,முதியவர்களும் எப்போதுமே என் மனம் கவர்ந்தவர்களாகவே/
    தோட்டம்,காடு,வயல்,களம்,,,,,,,இதுஎதுவாகஇருந்தபோதும்அவர்களை சுற்றிபடர்ந்தும்,
அவர்களதுநினைவுகளைசூழ்கொண்டுமேஎனதுநினைவுகள்/   
    அப்படி பற்றிப்படர்ந்த நாட்களில் காடுகளில் அறுத்து, கழுத்து வலிக்க சுமந்து தலைமீதும்,மார்மீதும்,தோள் மீதுமாய் சுமந்து அதை களம் வரை கொண்டு வந்து அடுக்கி படப்புகூட்டி வைத்து மறுநாள்,,,மறுநாள்,,,,மறுநாளைக்குமாக அதை காய வைத்து அடித்து எடுத்து உதிர்த்து உருட்டி அழகுகாட்டும் விழிகளாக உள்ள துவரம் பருப்புகளை மூடை கட்டி வீட்டிற்கு கொண்டு வருகிறவரை அதன் வாசனையையும்,தூசியையும் உடலில் குத்தி உரசும் அதன் உருவத்தையும் பார்த்து,நுகர்ந்து கூட்டி அள்ளித்திரிந்த  வியர்வை நாட்களின் நினைவுகள் என்னில் இருந்து கழன்று போனதா,அல்லது அவ்வளவு தூரத்திற்கு  ஞாபகமறதிக்காரனாயும், மொன்னைத்தனம் வாய்ந்தவனாயும் ஆகிப்போனேனா?
    ஆடு,மாடுகளின்அருகாமை,அவற்றின்சாண,கோமியவாசம்,கயிற்றுக்கட்டில் உறக்கம்,
கண்மாய்,கரை,ஓடை,காடு,வயல்,தோட்டம் பயிர்கள் என எல்லாம் சுமந்து சூழ்கொண்டு
இருந்த அந்த உழைப்பின் நாட்களிலிருந்து விலகி,மின் விசிறி காற்றிலும், ட்யூப் லைட் வெளிச்சத்திலும்,மத்தியதரவாழ்க்கைசுகத்திலும்உடலும்மனமும்லியிக்ககனத்து,மரத்துப்போனேனா?,,,,,,,,
    நான் மறந்து போனது தலை மீது,தோள் மீது,மார்மீதும் அள்ளி சுமந்த துவரங்காயை மட்டும்தானா,அல்லதுஅது சார்ந்த எனது பழைய வாழ்வின் நினைவுகளையா,,,,,,,,,,,,?     

8 comments:

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்.நலம்தானே?
நன்றி உங்களதுவருகைக்கும்,
கருத்துரைக்குமாக/ஞாபகங்களின் மற்தி சூழ்ந்த வாழ்க்கை ஒரு மனிதனை எப்படியெல்லாம் இழுத்துகோண்டுபோய் மொண்ணைத்தனமாக ஆக்கி விட்டிருக்கிறது என்பதை சொல்லுவதே இந்த பதிவின் நோக்கமாய் இருந்தது.விட்டிருக்கிறது

காமராஜ் said...

அருமையான நினைவு கூறல். மண்வாசம் வருகிறது.

vimalanperali said...

வணக்கம் காம்ஸ்.நலம்தானே?
நன்றி உங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் காம்ஸ்.நலம்தானே?
நன்றி உங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

Anonymous said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

நலம்தானே?

மறுபடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் சந்தோசம்..

வாழ்த்துக்கள்...

vimalanperali said...

வணக்கம் ரெவரி சார்,நல்ம்தானே/நீண்ட இடைவெளிக்குப்பின் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி/நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரெவரி சார்,நல்ம்தானே/நீண்ட இடைவெளிக்குப்பின் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி/நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரெவரி சார்,நல்ம்தானே/நீண்ட இடைவெளிக்குப்பின் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி/நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/