16 Jan 2012

ஈரசுவடு,,,,,



               
  “யாருஅவரு இந்த ஊருதானா”? என்கிற எனது கேள்விக்கு டீக்கடைக்காரர் பதில் சொல்லவில்லை.
      கடைக்கு வந்திருந்தவர்தான் சொன்னார். அவர் டீ மட்டுமே குடிக்க வந்தவராயும்,
எங்களைப் போல என்றைக்காவது ஒருநாள் வந்து டீக்குடிப்பவராகத் தெரியவில்லை.
     டீ,டிபன்என்கிறரகவாடிக்கையாளராய்இருக்கவேண்டும் போலிருக்கிறது.
    தினசரிகளின் புலர்வுகளில் அதிகாலையில் திறக்கப்படுகிற அந்தக்கடையில் முதன் முதலில் டீக்குடிக்க வருபவரும் அவராகத்தான் இருப்பாராம்,சொன்னார்கள்.
    இடையிடையில்டீ,டிபன்,வடைஎன்கிறஎக்ஸட்ராக்களிலும்நிறைந்து தெரிகிறவர்.
    அவர்தான் சொன்னார்.வெள்ளை வேஷ்டி,வெள்ளை சட்டை அழுக்குப்படாத மேனி,அலுப்பில்லாத உடல். ஆனால் முகத்தில் நிரந்தரமாய் ஒட்டிக்கிடந்த கவலை ரேகைகள் எல்லாம் தாண்டி சிரித்துக்கொண்டே சொன்னார்.
    வாடலாய் தெரிந்த கருத்த மேனியினரான அவர் கால் மீது கால் போட்டு பெஞ்சில் அமர்ந்திருந்தது பார்க்க பாந்தமாய் இருந்தது.ஆட்டி,ஆட்டிப்பேசிய அவரது வலது கையால்இடதுகையில்சிலிர்த்துத்தெரிந்தமுடிகளைதடவிவிட்டவாறும்,தலை கோதிக்
கொண்டும்மூக்குகண்ணாடியைசரிசெய்தவாறுமாய்சொன்னார்.நாற்பதிற்குமேலிருக்கும்
வயதின் அனுபவம் போலிருக்கிறது.
    “இந்த ஊருதா அவன்,நல்லா படிச்ச பையன்.திடீர்ன்னு புத்திபேதலிச்சுப்போச்சு” என்றார்.
    “பக்கத்து டவுன்லதான் படிச்சான்.வசதியான வீட்டுபுள்ள,அடுக்குத்தகுந்தாப்புல வாக்கப்பட்டு வந்தவளும் எக்கா நகநட்டு, துட்டுதுக்கானின்னுதா வந்தா,
    உத்தியோகம்ன்னு பையனுக்கு நெரந்தரமா எதுவும் இல்லைன்னாலும் அவன் சொத்த நம்பி பொண்ணகுடுத்தாக,சும்மா சொல்லக்கூடாது பையன,வந்தவள கையில் வச்சி தாங்குனான்.
   அப்பறம்ஒருபுள்ளபெர்ர வரைக்கும் புதுச்செழிப்புமா,குதுகூலமும் சந்தோசமுமாத்தான் இருந்தாங்க,எத்தனஇருந்தாலும்உக்காந்துதின்னாமலையும் கடுகாயிரும்தான?
    பாத்தான்,வீட்டுக்காரிக்குவளைகாப்புநடந்தகையோடபஸ் ஏறிட்டான்.வேலைதேடிப்போரம்னு/
   பழக்காமனவன்ட்ட ஏற்கனவே சொல்லி வச்சிருந்ததால இவன் நேராப்போயி வேலையில சேந்துட்டான்.
    அவ்வளவு படிச்சவன் ஓட்டல்ல கணக்கு எழுதுற வேலையின்னு கொறவா நெனைக்கல,கைநெறைய இல்லைன்னாலும் ஏதோ சம்ளம்முன்னு அவன் பாத்த வேளைக்கு தகுந்தாப்புல குடுத்துருக்காங்க/
    வேலையிலசேந்தகொஞ்சநாளையிலயேமொதலாளிமனசுக்கு புடிச்சவனாயும்,
கைராசிக்காரன்னும் ஆகிபோனான்.
   அப்பறம் என்ன கடையில இவன் ராஜாதான். அது பொறுக்குமா கூட வேலை
பாக்குறவுங்களுக்கு.கடைகல்லாவுலகைவச்சிட்டான்னுஇவனசிக்கல்லமாட்டி
விட்டுட்டாங்க/
    இத வாடிக்கையா கடைக்கு சாப்புட வர்ர ஒருத்தர்தா கவனிச்சு மொதலாளிகிட்ட எடுத்துச்சொல்லி அவன மீட்டுருக்காரு.கடையில சேந்த கொஞ்ச நாளையிலையே  அங்கயிருக்குற மனுச மக்க,மண்ணு  ,ஊரோட தரம்  எல்லாம் பத்தி அறிஞ்சி அதுக்கு தக்கன போயிகிட்டான்.
    பெரிய டவுன்னுன்னாலும் ஒரு ஜாதி ஆதிக்கம் உள்ள ஊரு.அதுலயும் அவன் வேலை பாத்த கடையில கூட வேலை பாக்குறவுங்க கூட அப்பிடி பிரிச்சுத்தான் பாப்பாங்க/
    அதுல இருந்தெல்லாம் நெளிவு சுளிவா தப்பிச்சு நெரந்தரமா அங்கயே இருந்து சாதிச்சவன் மாசத்துக்கு ஒரு தடவ வீட்டுக்கு வருவான்.சில சமயம் ரெண்டு மூணு நா லீவுல வருவான்,சில சமயம் மொத நா நைட்டு வர்றவன் மறுநா சாயந்தரம் பஸ் ஏறிருவான். என்ன செய்ய அவன் பொழப்பு அப்பிடி/
    இப்பிடி இருந்த அவங்க மேல யாரு கண்ணு பட்டுச்சோ தெரியல,  நல்லா இருந்த அவுங்க பொழப்புல மண்ணு விழுந்துருச்சி,,,,,,,,,” என பேச்சு விரிந்த  நாளொன்றின் காலை நேரம் நானும் எனது நண்பனுமாக அலுவகத்திற்கு சென்று கொண்டிருந்தோம்.
     நண்பன் என்றால் பல வருடங்களாக பழகிய  பழக்கமோ,நட்பு முறையோ அல்ல.உடன் வேலை பார்ப்பவர்தான் நண்பர் ஆகிப்போனார் அல்லது அவரை வலிந்து நண்பராக ஏற்றுக்கொள்ள வேண்டிய மனோபாவம் வந்து விழுந்து விடுகிறது.
    வந்து விழுந்தது விதையாக, செடியாக மரமாக பூவாக,பிஞ்சாக,காயாக,பழமாக கனிந்து கிளை பரப்பி நிற்கிறது.
    அதிலிருந்து விழுகிற துளிகளாக கனிந்து,கனிந்து விழுந்து எழுந்து நிற்கிற உயர் நவிற்சி மனோபாவம் வந்துவிட்ட காரணங்களாலேயே அப்படி சாத்தியம் கொள்ளவும் கைவரப்பெறவுமாய் செய்கிறது.
   அப்படி வரப்பெற்ற கைகளின் பரஸ்பர கைகுலுக்கலில்தான் நட்பின் பரப்பு விரிந்து நின்றது கைத்தாங்கலாக/
    நாங்கள்வந்த இருசக்கர வாகனத்தை கடையின் ஓரமாக் நிறுத்தி விட்டு டீக்குடித்துக் கொண்டிருந்தோம்.
     அப்போது ஒருவர் அழுக்கு வேஷ்டியுடனும்,மேனியுடனுமாய், தலை முடிகள் பறக்க கடை முன் வந்து நிற்கிறார்.
     சைகையால் டீ தருமாறு  கையேந்தி நிற்கிறார்.(கேட்கிறார்.) பஞ்சடைந்த கண்களில் விட்டேத்தியான ஒரு பார்வை.எண்ணை காணாத தலைமுடி பரட்டை விழுந்து சிக்கல்,சிக்கலாக திரிந்துபோய்/காய்ந்து ஈரமற்றுப்போயிருந்த உதடுகள் வெடிப்பு விழுந்து/முகத்தில் அடர்ந்து தெரிந்த தாடி அவரை இன்னமும் கொஞ்சம் விகாரமாய்க் காட்டியது.நடுங்கிய கரங்கள் எதையும் பிடிக்க சக்தியற்று/மெலிந்து இற்றுப்போனது போலிருந்த கால்கள் நிற்கக்கூட வலுவற்று/சட்டையணியாத வெற்று மேனி அழுக்குடனும்,பிசுபிசுப்பாயும்/
     தினசரியான அவரது வழக்கமோ அல்லது அப்படிகேட்டதால் கடைக்காரருக்கு அவர்மீதுவந்த வெறுப்போ தெரியவில்லை.
    “ஓடு அங்கிட்டு,இங்கயெல்லாம் வரக்கூடாது ஆமாம்”என்கிறார்.டீக்கேட்டவரும் பரிதாபமாக போய் கடையின் ஓரமாய் நின்று கொண்டிருந்தார்.
   அப்படிவிரட்டப்பட்டவரைப்பற்றிதான் இவ்வளவு நேரமும் சொல்லிக்கொண்டிருந்தார் டீக்கிளாஸைகையில்வைத்துக்கொண்டவாறே கைக்கு டீக்குடிக்க வந்திருந்தவர்.குடித்த டீக்கும், தின்றவடைக்குமாக காசு கொடுத்து விட்டு கிளம்புகிறேன்.
    பூத்து மகிழ்ந்து நின்ற மண்ணும்,விரிந்து ஓடிய தார்ச்சாலையும்,கரம் விரித்து நின்ற மரங்களும்,சாலையில்ஓடியகனரக,மிதரகவாகனங்களும் அவரின் நிலைபற்றியும்,அப்படி ஒருவர் நின்று கொண்டிருப்பதைப்பற்றியும் கவலை கொள்ளாதவர்களாக.படுகிற கவலையும் ஞாயமற்றது என தோன்றியவாறு சென்று விடுகிறார்கள்.
    கடையோரமாக நிறுத்தியிருந்த வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பும்போது நண்பனிடம்சொல்லுகிறேன்கடையின்ஓரமாகநின்ற அவரை திரும்பவும் பார்த்தவனாக/
 மனோநிலைசரியற்றவர்களின்வாழ்வுபெரும்பாலும்இப்படி கவனிக்கப்படாமல் தெருவோரங்களிலும், கிட்டத்தட்ட நாடு முழுவதுமாயும்/  

12 comments:

Anonymous said...

மனோநிலைசரியற்றவர்களின்வாழ்வுபெரும்பாலும்இப்படி கவனிக்கப்படாமல் தெருவோரங்களிலும், கிட்டத்தட்ட நாடு முழுவதுமாயும்//

உங்கள் எண்ணத்திலேயே...இன்று என் பதிவும்...வாழ்த்துக்கள்...

vimalanperali said...

வணக்கம்.ரெவெரி சார்.நலம்தானே?இருக்கிற ஊனங்களிலேயே மனநிலை சரியற்றவர்களின்,நிலையும் பார்வையற்றவர்களின் நிலையும் மிகவும் மோசமாக கருதப்படுகிறது,அதன் வெளிப்பாடாக வந்த இந்த பதிவும்இது போல பல பதிவுகளையும் தாங்கள் மற்றும் தங்களைப்போன்றவர்களின் வாழ்த்துக்களுடன் தொடரவேண்டும் என்பதே எனது தாழ்மையான இன்னெரத்தைய எண்ணம்,தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமான நன்றி.

Anonymous said...

அருமையான நண்பரே! நெஞ்சு கனக்கும் பதிவு. உங்கள் தளத்தில் உள்ள மாடர்ன் ஆர்ட் படங்கள் எங்கிருந்து சேகரிக்கப்படுகிறது. சூப்பர். இனிய வாழ்த்துக்கள்.

vimalanperali said...

வணக்கம்,அட்சயா அவர்களே,ந்ன்றி உங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக.images ல் இருந்துதான்.

தமிழ் உதயம் said...

மனதை கணக்க செய்துவிட்டீர்கள்

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

கிளிகளைப் பிடிப்பதுபோல சிட்டுக் குருவிகளையும் எனக்குப் பிடிக்கும்.உங்கள் சிட்டுக் குருவி மனதை கனக்கச் செய்கிறது..மௌனங்களை உடைத்தெரிகிறீர்கள்.நன்று.

சென்னை பித்தன் said...

//மனோநிலைசரியற்றவர்களின்வாழ்வுபெரும்பாலும்இப்படி கவனிக்கப்படாமல் தெருவோரங்களிலும், கிட்டத்தட்ட நாடு முழுவதுமாயும்/ //
வருத்தும் உண்மை.
நன்று.

ஹேமா said...

சிலசமயம் கடவுள்மீதும் கோபமாய் வருகிறது.மனதைக் கனக்க வைக்கிறது கதை.

vimalanperali said...

வணக்கம் ஹேமா அவர்களே,
நலம்தானா?மனம் கனக்க வைக்கிற நிகழ்வுகளுக்குக் காரணம் கடவுள் இல்லை சமூகம்தான் எனப்படுகிறது.நன்றி உங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சென்னை பித்தன் சார்.
நலம்தானே?
நன்றி உங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் தென்காசி பைங்கிளிசார்.நலம்தானே?சிட்டுக்குருவியை பிடிக்கிற இந்த பரந்த மனதுக்கு எனது சிரந்தாழ்ந்த வணக்கங்கள்.உடைபடுகிற மெளனங்களின் கனம் மனதை அழுத்துகிற நேரங்கள் இது மாதிரியான படப்புகள் அவசியமாகிறது.
நன்றி உங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் தமிழ் உதயம் சார்.நலம்தானே?கணத்துப்போன மனங்களின் பிரதிபிம்பமாய் ஈரச்சுவடுகள்/
நன்றி உங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/