17 Jan 2012

எதிர்மறை,,,,,,,,


      

தெருவில் நுழையும் போது
எதிர்ப்பட்ட மூதாட்டி
“என்ன ராசா இன்று விடுமுறையா”?
என கேட்டவாறு என்னை கடக்கிறாள்.
தெருமுனை திருப்பத்தில்
வலது பக்கமாய் இருந்த
அவளது பச்சை கலர்
பூசப்பட்டிருந்த  வீட்டில்
அவளையும்,அவளது
வயதான கணவரையும்
தவிர்த்து வேறொறுவருமில்லை.
பிள்ளைகளற்ற அந்த
வயோதிக  தம்பதிகள்
தெருவில் போகிற பிள்ளைகள்
யாரைப் பார்த்தாலும்
வாஞ்சையுடனும்,பிரியத்துடனுமாய்
பேசுவது போலவே
என்னிடமும் பேசுகிறார்கள்.
ஆயினும் அவளது
பேச்சும்,கேட்டலும்
எனக்காவே கட்டி எழுப்பப்பட்டது போல/ 

7 comments:

MaduraiGovindaraj said...

அனுபவம் பேசுகிறது!

vimalanperali said...

வணக்கம் கோவிந்தராஜ் சார்.
நலம்தானே?த்னளது வருகைக்கும் கருத்துரைக்குமாய் நன்றி.

Unknown said...

உறவுகளற்ற தனிமையில்
ஊரே உறவாகும்...

அருமை அண்ணா...

ஹேமா said...

அன்பைத் தேடும்
நெஞ்சங்களின் வரிகள் !

vimalanperali said...

வணக்கம்,மரு.சுந்தரபாண்டியன் சார்.நன்றி உங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ஹேமா அவர்களே,ந்ன்றி உங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் தமிழ்தோட்டம் அவர்களே.பாராட்டுக்கலுக்கும்,தங்களது வருகைக்குமாய்/