22 Jul 2012

இறகு........


  வழக்கம் போலவே உடலும்,மனது அலுப்பாகிப்போகிறது.ஏறிப்போன வயதின் சுவடுகள் உடலிலா,மனதிலா?
   
 அது தெரியாமலேயே ஓடிக்கொண்டிருக்கிறது நாட்களின் நகர்வுகள்.இதுபோக
மனதுள்முளைவிட்ட கனத்த சந்தேகமும் பெரிய காரணியாய் அமைந்து போகிறது இப்படியான எண்ணங்கள் முளைவிட/
 
ரொம்பவும் சொம்பேறியாகிப் போனேனோ என.ஓடும் வரைதான் போலும்,உட்கார்ந்து விட்டால்?

போகிற போக்கில் எவ்வளவு அலுப்பு இருந்தாபோதிலும் ஓடிவிட முடிகிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை.மொட்டை போடுவதற்காக திருசெந்தூர் போக வேண்டும் என்ற மகனிடம் ஒத்துழைக்காத உடலின் பாட்டை சொன்னபோது அவன் ஒத்துக்கொள்ளவில்லை.

அடுத்த வாரம் பார்ப்போம் என கொஞ்சம் பேச்சில் அழுத்தம் கொடுத்து சொன்னதும்அரைமனதாய் ஒத்துக்  கொள்கிறான். இது  போக  நண்பர் ஒருவர்
அழைப்பு விடுத்த இடத்திற்கு போகமுடியவில்லை.

 இத்தனைக்கும் நேற்று வீட்டை வேறு எங்கும் போகவில்லை .ஆனாலும்  அலுப்பாகிப்   போனதுதான்  உடலும்,  மனதும்  என நினத்து  கொண்டிருக்கிற
வேளையில் எனது வீட்டை கடந்த எழுபது வயது மூதாட்டி தன் கூன் விழுந்த முதுகை நிமிர்த்தி என்னைப்பார்த்து சிரித்து விட்டுச் செல்கிறார்.

அவரை கடந்து சென்ற ஒற்றைக் குருவி வேகம் காட்டி பறக்கிறது.

14 comments:

விச்சு said...

இயல்பானதுதான். வீட்டிலேயே இருந்தாலும் சிலநேரம் எங்கும் செல்ல மனம் ஒத்துக்கொள்வதில்லைதான்.

Yaathoramani.blogspot.com said...

அலுப்பாகிப் போனதுதான் உடலும், மனதும் என நினத்து கொண்டிருக்கிற
வேளையில் எனது வீட்டை கடந்த எழுபது வயது மூதாட்டி தன் கூன் விழுந்த முதுகை நிமிர்த்தி என்னைப்பார்த்து சிரித்து விட்டுச் செல்கிறார்//

அருமை அருமை
தொடங்கியதும் தொடர்ந்ததும்
முடித்த விதமும் மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

ஆமாம் சார்... சில வேளைகளில் இந்த மாதிரி எனக்கும் ஏற்படுவதுண்டு...
அதை மாற்ற நான் செய்வதெல்லாம் "மனதிற்கினிய பாட்டு கேட்பது"
அப்புறம் திருச்செந்தூர் போயிட்டு வந்துட்டீங்களா ?
என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

அம்பாளடியாள் said...

இத்தனைக்கும் நேற்று வீட்டை வேறு எங்கும் போகவில்லை .ஆனாலும் அலுப்பாகிப் போனதுதான் உடலும், மனதும் என நினத்து கொண்டிருக்கிற
வேளையில் எனது வீட்டை கடந்த எழுபது வயது மூதாட்டி தன் கூன் விழுந்த முதுகை நிமிர்த்தி என்னைப்பார்த்து சிரித்து விட்டுச் செல்கிறார்.
உடல் எவ்வளவு பலமாக இருந்தாலும் உள்ளம் சோர்வடைந்தால் எதுவும் சாத்தியம்
இல்லை என்பதே உண்மை!!...நல்ல படைப்பு தொடர வாழ்த்துக்கள்.....

பாலா said...

முதுமை உடலுக்கே அன்றி உள்ளத்துக்கல்ல ...

முத்தரசு said...

நிதர்சமான உண்மை - சில நேரங்களில்....

vimalanperali said...

வணக்கம் மனசாட்சி சார்,நன்றி தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் பாலா சார்.முதுமை உடலுக்கல்ல என்ற போதும் கூட ஏதாவது ஒன்றில் சலிப்பு ஏற்பட்டுப்போகிற மனதின் ஓரத்தை என்னவென சொல்ல?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் அம்பாளடியாள் மேடம்.நன்றி தங்களதுவருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார் நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் விச்சு சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்க்குமாக/

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அந்த மூதாட்டியப் போல வாழ்ந்து பாடம் சொல்பவர்கள் நிறையப் பேர் உண்டு. நல்ல சொற்சித்திரம்

vimalanperali said...

வணக்கம் முரளிதரன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்கருத்துரைக்குமாக/