14 Sept 2013

செப் 11 மகாகவி பாரதி நினைவு தின கவிதாஞ்சலி,,,,,,,

 காதலுக்கு மரியாதை தந்த மண்ணில் கவிதைக்கு மரியாதை தந்திருக்கிறது விருதுநகர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம்,அது ஒரு தொழிற்சங்க அலுவலகம்,

செப்11மாலை மிகச்சரியாக 6 மணிக்கு ஒன்றிரண்டுபேராய்சேர்ந்தகவிஞர்கள் கவிதைகளை மனதில் சூழ்க்கொண்டு கூடி விடுகிறார்கள்.அதில் விருதுநகர் கலைஇலக்கியபெருமன்றத்தின் செயலாளர் திரு செண்பகராஜனும், சிவகாசி  பொருப்பாளர் திரு பாண்டுவும் கலந்து கொள்கின்றனர்,

அடடா தாகம் கொண்ட நதிகள் இரண்டு(த,மு,எ.க.ச, கலைஇலக்கியபெரும ன்றம்)பரஸ்பரம் சங்கமித்தும்,கைகோர்த்தும் மகிழ்ந்த இடம் இதுதானோ?ஆம் எனச்சொல்லலாம்.

தலைமைகிளைத்தலைவர் திரு,பாண்டிக்கண்ணன்,முன்னிலைதோழர் முரு கேசன், வரவேற்புரை கிளைச்செயலாளர் முத்துக்குமார்,எழுத்தாளர் மணிமாற ன்,தேனி வசந்தன்,ஜெகதீசன் என காட்சிப்பட்டஅனைவரையும்உள்ளடக்கி கொஞ்சம் பெருந்திரளாய் எளிமையான ஒரு கவிதாஞ்சலி நிகழ்வு கடந்த செப் 11 மகாகவி பாரதியாரின் நினைவுதினத்தை ஒட்டி நடத்தப்பட்டது.

கவிதாஞ்சலி நிகழ்வில் வாசிக்கப்பட்ட கவிதைகளில் சில,,,,,,,,,
                  
                          ரௌத்திரம் பழகு,,,,,

யுத்த களத்தில் சிந்திய ரத்தம் இன்னும் உறையவில்லை.
கொதிகொதித்து குமிழிடும் குருதியின் ஓசை
உலகமெல்லாம் உலாவிக்கொண்டேயிருக்க
குற்றமிழைத்தவனை குற்றாய்வு செய்திடும் அபத்தம்.
பாஞ்சாலியின் சபதம். கண்ணகியின் சாபம் பற்றியும்
காலந்தோறும் கதைத்துக் கொண்டேயிருக்கும்
இந்நொடியில் கூட வல்லூறுக்கு இரையாகும்
நிர்பாயக்கள் இன்னும் எத்தனை,எத்தனை.
அமராவதியும்,அம்பிகாபதியும்
ரோமியோ ஜூலியட்டும்,லைலா,மஜ்னுவும்
 மகாகாவியமாய் ஊதிப்பெருக்கிய
அனல் கற்றைகள் நம்மில் தகிக்கத்தகிக்க
இளவரசனின் மரணம் தண்டவாளத்தில் தடதடக்கிறது.
மிடுக்கான நடை,நுனி நாக்கில் தவழும் ஆங்கிலலயம்,
வெள்லைச்சட்டைப்பையில் பொக்கை வாய் காட்டும் காந்தி
பெருக்கும் முன் பட்டங்கள்
இது எதுவாகினும் தாழ்சாதி என்கிறபோது சவமாய் பார்க்கும் சமூகம்.
தேசம் ஒலிர்கிறது தேனாறும் பாலாறும் பாய்கிறது.
பிதா பிதற்றுகிறாள்.
உணவு மசோதா,ஏட்டுச்சுரைகாய் கூட்டாக்கிவிட்டு
நாட்டுக்கே படியளக்கும் அட்சயப்பாத்திரமாய்
மணிமேகலையாய் அன்னை.
உலகப்பட்டியலில் இந்தியா மூன்றாமிடமாம்.
இஸ்லாமிய சகோதரியின் கருவிலிருக்கும் சிசுவை
திரிசூலத்தால் குத்தி இளம் ரத்ததால் அபிசேகித்த
குருதியின் நெடி நம் நாசியை வருடிகொண்டிருக்க
அடுத்த பிரதமர் தேடி அலைகிறது இந்தியம்,
நொடிக்கொரு திருட்டு,நிமிடத்திற்கொரு கொலை
நாளுக்கொரு சாதிக்கலவரம்,வாரமொரு வெடி குண்டு கலாச்சாரம்,
மாதத்திற்கொரு விசாரணைக்கமிஷன்,
காலாண்டுக்கொரு அமைச்சரவை மாற்றம்
அரையாண்டுகொருமுறை அயலகத்தமிழனைப்பற்றி அக்கறை.
ஆண்டுக்கொரு மாநாடு
அய்தாண்டுக்குள் அரசியல் அரவாணிகளின் கட்சித்தாவல்
ஆறாவது ஆண்டில் நாம் எல்லோரும்
கம்பிகளற்ற வெளியின் கைதிகள்.
இதுவா பாரதி நீ கண்ட கனவு,
இதற்காகவா பாரதி ரௌத்திரமும்,சூட்சுமமும்
எனக்குக்கற்றுத்தந்தாய்.
முண்டாசுக்கவிஞனின் ஞானச்செருக்கோடும்
 எமக்குத்தொழில் கவிதை என்ற  திமிரோடும்
சமகாலத்தில் சமதர்மம் காக்க
சமரசமற்ற போராளியாய் சபதமேற்போம்/
    

                                                           பாண்டியக்கண்ணன்,
                                                           கிளைத்தலைவர்,
                                                           த.மு.எ.க.ச
                                                           விருதுநகர்
  

பாரதி ,பள்ளிப்பிள்ளைகளின் மாறு வேடப்போட்டி.
மேடை நிறைந்து எங்கெங்கு காணிணும் பாரதி.
முண்டாசும்,செதுக்கிய மீசையும்
ஊடுருவும் பார்வையுமாய்
வெடிப்புறப்பேசி நேர்மையற்றோரை நையப்புடைக்க
எங்கள் பிஞ்சுகளை அக்னிக்குஞ்சுகளாய் ,,,,,,,,
பொய்மை சாதி அழிக்க,முரசரைந்த பாரதி
உன் கனவே எங்கள் வழிகாட்டி,
தொலை நோக்குப்பார்வையே எங்கள் வெளிச்சம்.
பாண்டவர் ஆண்ட கண்ணனின் வம்சத்தை
நதிக்கரை நாணல்களே உலக்கையாய் மாறி அழித்ததாம்.
நீஅணிந்த முண்டாசும் செதுக்கிய் மீசையும்,
நதிக்கரை நாணல்களாய் மாறும்,
மனுதர்ம மதில் சுவர்களை உடைத்தெரியும்.
நிச்சயம் அது அழிக்கும்,
ஆயிரமாயிரம் ஆண்டு ஆண்டாண் அட்மை சங்கிலிகளை.
அப்போதுதான் வெண்மணிக்கும்,
தர்மபுரிக்கும்,நியாயம் கிடைக்கும்.
சேரிகளில் வெளிச்சம் பூக்கும்,
இல்லார் யாவர்கும் பொதுவாய் விடியல் சிவக்கும்/

                                                                   அன்னை பாலு,,,
                                                                     விருதுநகர்,,,,,,                                                                                                                                                               
                                                                  
திரைப்படங்களையும் கவிதைகளையும் வாழவைக்கிறது.
கவிதை எழுதத்தெரியாதவர்களையும்
கவிஞர்களாக உருமாற்றுகிறது.
வாழ்கையை அழகாக்கி அர்த்தப்படுத்துகிறது.
இயற்கையை நேசிக்ககற்றுக்கொடுக்கிறது.
பொதுவுடமைப்போராளி மார்க்ஸையும் ஆட்க்கொண்டது.
சரித்திர்ர வீரர்களையும் தோற்கடிக்கசெய்தது.
துவண்டு போனவர்களையும்
பீனிக்ஸ் பாறவையாய் உயிர்ப்பிக்கசெய்கிறது,
புறாக்களின் வழியே தூது போனது அன்று/
பேஸ்புக்,ட்விட்டர் வழியே அன்பை பரிமாறுகிறது இன்று/
யந்திர யுகத்திலும் இதயங்களை
இடம் மாறச்செய்கிறது.உணர்வுபூர்வமாய்/
 நாடகக் காதலென சாதிகள் சதிராட்டம்
ஆடி ரயிலடியில் பிணமானாலும் உயிருடன் வாழ்கிறது.
சாதிக்கு பாடைகட்ட
சமத்துவத்துவத்தைநடைமுறைப்படுத்த
பாரதி கூறியபடி மானிடர்களே ஆதலால் காதல் செய்வீர்/


                                                                  நீலநிலாசெண்பகராஜன்,,,,, 
                                                                                  விருதுநகர்,                                                                                                                 

      
 மேச்சல்  நிலமெல்லாம் பணம் காய்த்தல்
நிலமாகிப்போனதால் ஆடு மாடு
கட்டிமேய்க்கக்கூட இடமில்லை இந்த பூமியில்/
மீதி நிலத்திலோ விதைததோ நெல்
தண்ணீர்ப்பஞ்சத்தால் விளைந்ததோ புல்,
நிலத்தடி நீரை உறிஞ்ச முளைத்த
கருவேல முள்.                       
அசோகர் சாலை ஓரம் மரங்கள் நட்டார் நிழலுக்கு/
மறத்தமிழனோ அந்த மரங்களை வெட்டி
மரத்தமிழன் என மார்தட்டி
களங்க ஏற்படுத்தி விட்டான் தமிழுக்கு/
மரங்களை வெட்டி பிளாட்ப்போட கல்கள் நடுகிறான்.
அம்மணமாய் இருந்த ரோட்டோர நிலமெல்லாம்
கரம்பையும்,செம்மண்ணும் அடித்து
அழகாய் சொக்காய் போட்டது போல உள்ளது.
வர்ணஜாலம் பூசிய இரண்டு அடி கல்லை
பயிர் செய்து எந்தப்பயிரிலும் காணாத
லாபத்தைப்பெற்று விட்டான்.
விவசாய நிலமெல்லாம் விற்று விட்டான்.
இதைத்தான் கல்லிலே கலை வண்ணம்
கண்டான்னென பாடினார்களோ நம் முன்னோர்கள்/
அவரை பூசணி பாவைக்கொடிகள்
படர்ந்த காட்டில் பலவண்ண துணிக்கொடிகளை
பறக்க விட்டு சதுர அடி இவ்வளவு
என சதுரங்கம் ஆடுகிறான் சகுனி போல்/
யாரைச்சொல்லியும் குற்றமில்லை.
வானம் பார்த்த பூமியிலே/
பருவம்ழை உருவம் கூட காட்டவில்லை.
மழையின் அருவம் கூடதெரியவில்லை,
ஓ,மழையே ஏனிந்த கொலை வெறி,,,,,/


                                                      கிருஷ்ணகுமார்(எ)குமாரதாசன்
                                                                   திருத்தங்கல்

    எனக்கு வேண்டாம் சாதி மதம்,,,,,,,,,,

சகமனிதனை மனிதனாகப்பார்க்காமல்
சாதியாய்,மதமாய்ப்பார்க்க வைக்கும்,
இந்த சாதியும்,மதமும் எனக்கு வேண்டாம்.
எல்லா சாதிக்கும் ஒரு அடிமை சாதி தேவைப்படுகிறது
அதனால் சாதி வேண்டாம்.
பெண்ணை மதிக்கத்தெரியாத
இந்த சாதியும்,மதமும் எனக்கு வேண்டவே வேண்டாம்.
சாதீயை அணைப்போம்,,மதத்தை மறப்போம்,
மனித நேயத்தை வளர்ப்போம்.
மார்க்சியத்தின் துணையோடு/


                                                                    ம.மாரிமுத்து
                                                                    விருதுநகர்.


1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... அருமை... வாழ்த்துக்கள்...