3 Dec 2013

விண்ணப்பம்,,,,

அன்பு மூதாட்டிக்கு வணக்கம். தயவு செய்து என்னைமன்னித்துக்கொள்ளு ங்கள் அம்மா. 
 
    நீங்கள்கேட்டசிறு உதவியை கூட செய்ய மறந்து போனதற்காக.அதிகமில்லை நீங்கள் கேட்ட உதவி/
 
அந்த பக்கம் முனை நீட்டிக்கொண்டிருக்கும் காய்ந்த முள் மரத்தின் முனையை இந்தபக்காமாய் திருப்பிப் போடச்சொல்லி கேட்டீர்கள்.
 
“முடிந்தால் செய்து கொடு, இல்லையெனில் அடுத்த வாரம் சனி,ஞாயிறு வரும் போது செய்து கொடு, நான் போய் திருப்பிப் போட்டால் ஒரு வேளை குவிந்து கிடக்கும் முட்களின் மீது விழுந்து விடக்கூடும், ஆகவே நீயே திருப்பிப் போட்டு விடு”என்னமோ போ,இந்த வயசான காலத்துல இப்பிடியெல்லாம்  செரமப்பட  வேண்டியிருக்கு, நாங்க இருக்குற நெலமையில காசு குடுத்து வெறகு வாங்க முடியுமான்னு சொல்லு”_
 
எனக் கூறிய உங்களிடம் ஒன்றும் சொல்லாமல் உங்களை ஏறிட்டவாறு அமைதி யாக வீட்டிற்குள் போய் விடுகிறேன் தாயே,
 
    ஆமாம் தாயே இதுநாள்வரை எனது பழக்கம் இதுவாகத்தான் இருக்கிறது. மனது நினைத்ததை  வார்த்தைகளாக கொட்டி விடாமல் கண்களில் அடைகாத்து மனதினுள்ளாகவே பேசிக்கொண்டுவிடும்,பேசிவிடும்  செயல்கைவரப்பெறவனாக.
 
    அப்படி,இப்படிஎனவர்ணஜாலங்களாலானவார்த்தைவலை விரிக்கத்தெரியாது எனக்கு.
 
   மனதில்தோன்றியதைக்கூடசமயத்தில்சொல்லாமல்போய்விடுகிற மனிதர்களுள் ஒருவனாகபோய் விடுகிறேன் நான்.அதீத பேச்சு,நடிப்பு,க்ஷ்படோடோபம்,,,,,,,, என்கிற கதம்பம் தெரியாததால் என்னை இதுவரை பிழைக்கத்தெரியாதவன் என்றே கூறி வந்திருக்கிறது எனது சுற்றமும் நட்பும்.
 
    இப்பொழுதும் கூறுகிறார்கள்.கூறினால் கூறி விட்டுப்போகட்டும்.அவர்களை என்ன கூறிஎன்ன சமாதானம் செய்வது என தெரியவில்லை.அப்படியே விட்டு விடுகிறேன்.
 
     பாட்டி,பாட்டி,,,,,,,,,,,பழைய அரிசிய தீட்டி,,,,,,,கோணக்கால நீட்டி,,,,,,,,,,என சிறு வயதில் விளையாட்டுத்தனமாக பாடித்திரிந்த பாடல் வரிகள் உன்னை பார்க்கிற போதெல்லாம் எனது நினைவில் வந்து நீந்தி விட்டுப் போகிறதுதான். 
 
     என்னை மீறி சில வரிகளை பாடியும் விடுகிறேன்.அப்படியான சமயங்களில் எனது மனைவி பின்னந்தலையில் தட்டி என்னை நிகழ் உலகத்திற்கு கொண்டு வந்து விடுவாள்.
 
   என் மனதில் ஓடுவது எப்படியோ அவளுக்குத்தெரிந்து விடுகிறது.அந்த வித்தையை அவள் எங்கு கற்றாள் எனத் தெரியவில்லை.அவளைப்பற்றியோ அல்லது ஏதாவது நினைவலைகளில் இருக்கிற பல சமயங்களில் என்ன கூப்பிட்டீர்களா?,,,,,,,,அல்லது ஏதாவது சொன்னீர்களா?என பல சமயம் கேட்டிருக்கிறாள்.
 
 எங்களுள் மட்டும் என இல்லை.பல அந்நியோன்ய தம்பதிகளின் மன ஒற்றுமை அப் படித்தான் அமைந்து போகிறது.
 
வெட்டிவாய்பந்தலெல்லாம் போடத்தெரியாத எங்களிருவரின் மனது பேசிக் கொள் ளும் மொழிகள் நிறைய,நிறையவே/
 
நமது தெரு திரும்பும் வலது முனையில்தான் உள்ளது உங்களது வீடு,அந்தக் காலத்து வீடு.கட்டி 50 வருடம் இருக்கும் என்கிறீர்கள் ஒரு சமயம் பேசிக்கொண் டிருக்கையில்/
 
 அப்படி பேசிக்கொண்டிருக்கையில் தடித்த திரேகங்களை கொண்ட உங்களதும், தாத்தாவினுடையதுமான உடல் எவ்வளவு ஆரோக்கியம் மிக்கது எனவும் உங்க ளின் இளம்பிராய உழைப்பு எவ்வளவு கடினமானது என்பது பற்றியும் சொல்லத் தவறுவதில்லை.
 
   “ஆனால் அந்த உடல் ஆரோக்கியமும்,நலமும் எங்களுக்கு ஒரு பிள்ளை பாக்கியத்தை கொடுக்கவில்லை” என்பீர்கள்.பிள்ளைகள் இல்லையென்றால் என்ன உங்களை எங்களது பிள்ளைகள் போல நினைத்துக்கொள்ளுங்கள் என்கிற பேச்சு க்கு,,,,,,,,,அதெல்லாம் கதைக்குதவாத வெத்துப்பேச்சு என்பீர்கள்.
 
   உங்களிடம் பிடித்ததே அந்த யதார்த்தம்தான்.எதையும் பூசி மொழுகாத வெளிப் படையான பேச்சு உங்களது.அந்த பேச்சு ,அதை ஒட்டி வெளிப்படும் உங்களது செயல்கள் நம் தெருவில் சிலருக்குப்பிடிப்பதில்லை. சிலருக்கு பிடிக்கும் . அப்படிப் பிடித்த சிலரில் நாங்களும்/
 
    எங்களுக்கு உங்களை பிடித்ததை விட உங்களுக்கு எங்களை மிகவும் பிடித்து விட்டதாய் அறிந்தேன்.நான்கு பேரிடம் எங்களை “லட்சிய தம்பதி”என குறிப்பிட் டதை இன்னும் மறக்க முடியவில்லை.
 
   தண்டட்டிகள் தொங்கும் நீண்ட காதுகளும் கருத்து உருண்ட முகமும்,முரட்டு ஆகிருதியும் கொண்ட நீங்களும் முதுமையால் உடல் தளர்வுற்றாலும் மனம் தளரா மல் வீட்டடினருகினிலேயே ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும் தாத்தா வும் தான் லட்சிய தம்பதி என்பேன் நான்.
 
   உங்களுக்கு, அவரே குழந்தையாகவும்,அவருக்கு நீங்களே குழந்தையாகவும் இருக்கிற நீங்கள் ஒருமுறை என்னிடம் சொன்னது இன்னும் என்னுள் நிழலாடு வதாக.
 
   “ஏங் ஒடம்பு நல்லாயிருக்கும் போதே தாத்தா போயி சேந்துரணும் நல்லபடியா”/ என்றீர்கள்.
 
    நீங்கள் தனியாய் இருந்துசிரமப்பட்டாலும் பரவாயில்லை,  சிரமப்படக்கூடாது என்கிற உங்களது மேம்பட்ட எண்ணம் வெளிப்பட்ட அந்த பேச்சையும்,எண்ண த் தையும் உள்ளடக்கிய உங்களின் வீட்டிற்கு ஒரு நாள் வர வேண்டும்.
 
   காலையில் எழுந்து முகம் கழுவுவதிலிருந்து இரவு தூங்கப்போகிறவரை எப்படி யெல்லாம் நகர்கிறது உங்களது அன்றாடம் என்பதை அருகிலிருந்து பார்க்க வேண்டும். அனுமதிப்பீர்களா தாயே?
 
 உங்களின்,,,,,,,தாத்தாவின்,,,,,,,,சுகம்,துக்கம்,சந்தோசம்,கோபம் இன்னவும் இன்னவு மான  பிற விஷயங்கள் அந்த 600 சதுர அடி வீட்டிலேயே அடங்கிப்போவதை நானும் அறிய ஆவல் கொள்கிறேன் தாயே/தயவுசெய்து அனுமதியுங்கள்.
 
   சென்ற வாரத்திற்கு முந்தைய வாரம் நான் விடுப்பில் வந்த போது எங்களது வீட்டின் பக்கவாட்டு வெளியிலும்,எட்டியும் உள்ள முள்செடிகளை வெட்டிப் போட் டேன்.இரண்டு ஆள் உயரத்திற்கு வளர்ந்து சாய்ந்திருந்த அவைகளை வெட்டும் போது உங்களது ஞாபகமெல்லாம் வரவில்லை.அதை வெட்டிவிட்டால் வெறெ துவும் பூச்சிபொட்டுகள் வந்து அடையாது என்கிற தொலை நோக்கு கண்ணோ ட்டத்தில்தான் அதைவெட்டினேன்.
 
  வெட்டியதை அப்படியே இழுத்து இருந்த இடத்திலேயே குவித்துப் போட்டு விட்டு விடுப்பு முடிந்து வேலைக்கு  வந்து விட்டேன்.
 
    பிறகு ஒரு நாள் நீங்கள் வந்து முள்ளை எடுத்து வீட்டுக்கு உபயோகித்துக் கொள்கிறேன் என எனது மனைவியிடம் கூறியிருக்கிறீகள்.அவள் அந்த செய்தியை தொலை பேசியில் சொன்னாள்.
 
     இதைகேட்காவிட்டால்என்னஎடுத்துக் கொண்டு போக வேண்டியதுதானே?
என எனது மனைவியிடம் கூறியதற்கு,,,,,,,,,,,,
“இல்லை அவர்கள் வெட்டியதை அப்படியே இழுத்துச் செல்ல முடியாது.நமது இடத்திலேயே வைத்து வெட்டி எடுத்து செல்கிறேன் என்கிறார்கள்” என்றாள்.
 
     அவள் சேதி சொன்ன இரண்டு நாட்களில் நானும் அந்த வார விடுப்புக்காய் ஊருக்கு வந்து விட்டிருந்தேன். வந்தற்கு மறுநாள் உங்களையும்,தாத்தாவையும் பார்க்கிறேன்.
 
மறுநாள் காலை தாமதமாக படுக்கையையை விட்டு எழுந்த நான் டக்,,,,,டக்,,,,,என்கிற சப்தம் கேட்டு வெளியில் வந்து பார்க்கிறேன்.
 
   வெட்டிக்குவிக்கப்பட்டிருந்த முட்செடிகளின் கனமான முனையை இழுத்து, உங்கள் கைவசம் வைத்துக்கொண்டு அதை எடுத்து தாத்தாவிடம் கொடுக்க தாத்தா அதை பொடிபொடியாக ஒன்று போல அறுத்து எடுத்தது மாதிரி நறுக்கி அடுக்கிறார்.
 
    அப்போதுதான்நீங்கள்சொன்னீர்கள்,இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த என்னிடம்.
 
“அந்தகுவியலில்இருக்கிறமுள்செடியைஇங்கிட்டுஇழுத்துப்போட்டால் நாங்கள்
தோதுப்படுகிறவேளையில் வெட்டிக்கொள்வோம்” என.
 
   பல வேளைகளின் ஞாபகத்தில்அல்லது மும்பரத்தில் உங்களின் வார்த்தை மறந்து போனது அம்மா/தவறாக நினைக்காதீர்கள்.
 
    இந்த வாரம் விடுப்பில் வரும்போது கண்டிப்பாக அந்த முட்செடிகளை இழுத்து முனைதிருப்பி போட்டு விடுகிறேன்.அது மட்டுமல்ல,அந்த வெளியெங்கும் முளை த்துக்கிடக்கும் முட்செடிகளையெல்லாம் உங்களுக்காக வெட்டிப் போட்டு விட்டு வேண்டுமானாலும் வருகிறேன் தாயே/
 
   பிள்ளைகள் அற்ற உங்களுக்கு ,உங்களின் அருகிலிருந்து சாப்பாடு,தண்ணி தரமுடியவில்லையாயினும்இதையாவதுசெய்கிறோம்தாயே/ஏற்றுக் கொள்ளுங்கள்.
 
    இதோ சனிக்கிழமை வர இன்னும் இரண்டு நாட்களே பாக்கி உள்ளது, அதுவரைஎனது மன்னிப்புவிண்ணப்பத்தைநிராகரிக்காமல்ஏற்றுக் கொள்ளு ங்கள் தாயே/

19 comments:

Anonymous said...

வணக்கம்
விமலன்(அண்ணா)

அழகிய மொழி நடையில் தாத்தா பாட்டிக்கு எழுதிய விண்ணப்பம் என்ற சிறுகதை மிக அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

vimalanperali said...

வணக்கம் ரூபன் சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

திண்டுக்கல் தனபாலன் said...

/// நீங்கள் தனியாய் இருந்துசிரமப்பட்டாலும் பரவாயில்லை, சிரமப்படக்கூடாது என்கிற உங்களது மேம்பட்ட எண்ணம் ///

"வேதம்" படத்தில் வரும் ஒரு காட்சி ஞாபகம் வந்தது...

கரந்தை ஜெயக்குமார் said...

தாத்தா பாட்டி என்பவர் கருனையுன் மொத்த உருவம்
விண்ணப்பிக்கத் தேவையில்லை
மன்னித்து விட்டார்கள்

மகிழ்நிறை said...

அந்தமுட்கள் மனசாட்சியை கீறிவிடனவோ ?
அருமை சார் !வாழ்த்துக்கள் !

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்களே.
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

மனசாட்சியை கீறாத முட்கள்
இங்கே ஏது மைதிலி மேடம்/

vimalanperali said...

மன்னித்து விடுவார்கள் என்கிற நம்பிக்கை
குடிகொண்டிருந்த போதிலும் கூட
உறுத்துகிற மனசாட்சி என ஒன்று
இருக்கிறதுதானே, கரந்தை ஜெயக்குமார் சார்.

vimalanperali said...

வேதம் புதிது படத்டில் வருகிற அளவுக்கு
எழுத நான் அவ்வளவு ஒன்றும் பெரிய ஆள்
இல்லை திண்டுக்கல் தனபாலன் சார்.

vimalanperali said...

விண்ணப்பங்கள் கொஞ்சம் அழகாய்த்தான்
போய்ச்சேரட்டுமே தாத்தாவுக்கும்,பாட்டிக்குமாய்,
என்கிற மிகை ஆசை தவிர வேறென்றுமில்ல்லை.ரூபன் சார்/

Geetha said...

மனம் நெகிழ வைத்த யதார்த்தம்.கண்கள் கலங்கியது.முட்கள் மூதாட்டியையே நினைவூட்டுகின்றன. அருமை

vimalanperali said...

வணக்கம் கீதா எம் மேடம்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Tamizhmuhil Prakasam said...

வர்ணனை அருமை. காட்சிகளை கண் முன் கொண்டுவந்து விட்டன.

தங்களது அன்பு நிறைந்த உள்ளம் கேட்ட மன்னிப்பை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

Iniya said...

மனதை தொட்டது உங்கள் வரிகளும் வடிவமும் மன்னிப்பு விண்ணப்பத்தை மனமுவந்து ஏற்பார்கள் நிச்சயமாக தொடர வாழ்த்துக்கள் .....!

vimalanperali said...

வணக்கம் தமிழ்முகில் பிரகாசம் சார்.
நன்றி தங்களது வருகைகும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

காட்சிகளைக்கோர்த்து வர்ணனைகளை அடுக்கி
அவர்களிடம் மன்னிப்பு கேட்கலாம் என்கிற
நினைவே இன்க்க் இம்மாதியான எழுத்தாய் உருக்கொண்டு தமிழ்முகில் சார்.

vimalanperali said...

வணக்கம் இனியா மேடம்
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

மனமுவந்து ஏற்கப்படும் விண்ணப்பங்கள் யாவும் நல்லனவே/