8 Feb 2014

டிக்கெட்,டிக்கெட்,,,,,,,,



நிச்சயமாக தூங்கியிருக்க மாட்டார் நேற்றிரவு.எப்படி தூங்கியிருக்க முடியும்? நாரசம் தாங்கிய வார்த்தைகள் சுமந்தமனதுடனும்,அவ்வார்த்தைகள்உதிர்ந்து பரவிய நிமிடங்கள் நடந்தேறிய சம்பவத்தையும்,சம்பவத்தின் மையப் புள்ளி யையும் அது சுமந்த பாரத்தையும் எப்படி மறக்க?மனைவி மக்களிடம் கூட சொல்லிக்கொண்டிருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்.

அன்பும் காதலும் நிறைந்த மனைவியின் வாஞ்சைமிகுந்தபேச்சில்மனம் ஏறி விட்ட பாரத்தை ஒரு வேளை அவிழ்த்து வைத்திருக்கலாம்.

ஒரு ரூம்,சமையலறை வராண்டா,ஹால்எனவிரிந்துகாட்சிப்படுகிற600க்கும் குறையாத சதுர அடி வீடும் அதில் மையம் கொண்டிருந்த பொருட்களும், கடந்து அணைத்து விட்ட மின் விளக்குகளும்,சுற்றிக்கொண்டிருக்கிற மின் விசிறி சப்தமும் காதருகே ரீங்கரித்துக்கொண்டிருந்த கொசுசப்தமும் தவிர்த் து வேறொன்றுமாய் கேட்டு விடாத நிசப்ததில் பாரமாய் அழுத்துகிற கண் இமைகளை அழுத்த மூட முயன்றும் மனம் சுமந்து நின்ற ஒற்றைச் சம்பவத் தைப்பற்றி நினைத்தவராயும் படுக்கையிலிருந்து எழுந்துபித்துப்பிடித்தவர் போல் மேழும் கீழுமாய் நடந்தும் இரண்டு,மூன்று முறைகள் வம்பாக தண் ணீர் குடித்துக் கொண்டும்,டீவி பார்த்துகொண்டுமாய் இருந்திருப்பார் .தூங்கி யிருக்க வாய்ப்பில்லை என்றே தோணுகிறது.

காலையில் ஒன்பது மணி பஸ்ஸை எட்டிப்பிடிக்க வேண்டும் என்கிற நினைப் பை மட்டுமே மனம் தாங்கி சென்று சென்று கொண்டிருந்த வேளை மக்கர் பண்ணி விடுகிறது சைக்கிள்.அதனால் என்ன இப்பொழுது பண்ணி விட்டு த்தான் போகட்டுமே,மக்கர்ப்ப்பண்ணுகிற எத்தனையோ விஷயங்களை   இழுத்தும், அனுசரித்தும் கொண்டு போகும் போதுசைக்கிள்தானா,,,,,?வந்து  கெடுத்து விட்டது இப்போது?

பின் பிரேக் பிடிக்கவில்லை சுத்தமாக என்பது கூட பெரிய காரணமாய் பட வில்லை.10 மிதிக்கு ஒருதடவையாய் கழண்டு விடுகிற செயினை திரும்பத் திரும்பவுமாய் மாட்டி,மாட்டி செல்வதற்குள்ளாக போதும்,போதும் என்றாகி விட்டது.சை இது பெரிய சோதனைதான் என்றாவாறு சைக்கிளை ஸ்டாண் டில் போய் நிறுத்துகையில் வெறுப்புமட்டுமே மிஞ்சிப்போன மனம் கண் முன்னாய் காட்சி கொண்டு நின்றதாய்/

வீட்டிலிருந்து பஸ்டாப் முக்கு இரண்டு கிலோ மீட்டராவது இருக்கும். இரண்டு கிலோ மீட்டருக்கும் பத்தடிக்கொருதடவையாய் இறங்கி சைக்கிள்ச் செயினை மாட்டிக்கொண்டு வருவதற்குள் ஊரே கூடி வேடிக்கை பார்த்தது போலவும், கைகொட்டிச் எள்ளி நகையாடியது  போலவுமாய்  தோணுகிறது. 

பஸ்சும் லாரியும் இருசக்கர வாகனமும் பாதசாரிகளுமாய் விரைந்து கொண் டிருந்த சாலையில் சைக்கிளை தலையில் சுருமாடு கட்டிக்கொண்டு தூக்கிச் சுமக்கிறது போலவே/இதற்கு பேசாமல் நடந்தே வந்திருக்கலாம்.பஸ்ஸேறி வரலாம் என்றால் வழியில்லை.இந்த முக்குக்கு வருவதென்றால் பஸ்டாண்ட் போய்த்தான் மாறி வரவேண்டும்.அதற்கு இதுவே மேல் என வந்து விட்டான்.
நேற்றிரவே சரி பண்ணியிருக்கலாம்சைக்கிளைகடையில்விட்டு/மிதமிஞ்சிய சோம்பேறித்தனமா அல்லது அழுத்துப்போன மனோ நிலையா தெரியவில் லை.

இப்படித்தான் ஆகிப்போகிறது சமயா சமயங்களில்/அலுவலகம் விட்டுத் திரு ம்பும்அலுப்பும்,மனச்சோர்வும்ஏற்படுத்தி விடுகிற அழுத்தம் மனதில் சோம்பல் சூழ்கொள்ளச்செய்ய இப்படியும் ஆகிப்போகிறதாய்/

ஸ்டாண்டில் நிறுத்தி விட்ட சைக்கிளை வெறுப்புடனும் பரிதாபம் தோன்ற வுமாய் பார்த்துவிட்டு கையில் வாங்கிய தகர டோக்கனை பேண்ட் பாக்கெட் டுக்குள்ளாய் போடும் போது வியர்வையில் கசகசத்த பேண்டும் ,சர்ட்டும் உட ம்பில் சிலஇடங்களில் ஒட்டியும்,பிரிந்துமாய்,பொம்மென ஊதியுமாய்/ இதில் பாழாய்ப்போன இன்னிங்க்ஸ் வேறு/

பொதுவாகவே குளிர் காலத்தில் இன் பண்ணுவதும் வெயில் காலம் வந்ததும் இன்பண்ணாமல்சட்டைபோடுவதும்தான்எனதுபழக்கமாய்இருந்தது.குளிர் காலம்தான் இன்னும் முடியவில்லையே,அது தன் எல்லையைக்கடக்க இன் னும் சில நாட்கள் இருக்கிறதே  என்கிற நினைப்பில் இன் பண்ணலிலிருந்து மாறாமல் அப்படியே வந்ததன்விளைவுஇப்படியாய்உருமாறித்தான்போகிறது.
கறுப்புப்பேண்ட்,வெளிர்க்கலரில்ரோஸ் சட்டை இதுதான் நான் அன்று உடுத் திப் போனது,,லக்கி என இல்லை,மேலே அடர் நிறமென்றால் கீழே வெளிர் நிறமாயும்,கீழே அடர் நிறமென்றால் மேலே வெளிர் நிறமாயும் பேண்ட் சட்டை அணிகிற பழக்கம்தான் எனக்கு விபரம் தெரிந்த நாள் முதலாய் இன்றுவரை கைவரப்பெற்றிருக்கிறது.ஒரு வேளைஇன்றுவரை சரியாய் விப ரம் தெரியா வெள்ளந்தியாய் இருந்திருக்கிறேனோ அன்னவோ தெரியவில் லை.  பரவாயில்லை.வெள்ளந்திகளால் யாருக்கும் எந்தவித தொந்தரவும் இது நாள்வரை இருந்ததில்லை என்கிற எண்ணத்தில் செம்மை கொண்டு பயணி க்கிறவனாய் இருக்கிற போது இதெல்லாம் ஒன்றும் பெரிதாய் தெரிந்து கண் ணை மறைக்கச்செய்து விடுவதில்லைதான்.கோ அகெட்,,,, ,,,,,,,,, மனோ நிலை தான் பல நேரங்களில் உந்திச்செல்ல பயன்படுவதாய்/ 

புத்தகங்களும் நோட்டும் நோட்ஸீம் ,படிப்புமாய் விரைந்து கொண்டிருந்த மா ணவ மாணவிகள் சாலையில் உதிர்ந்த மரத்திலைகளின் மீது பயணப் படுகி றவர்களாய்/ இலைகளில் பின்னப்பட்டுத்தெரிந்த மென் நரம்புகளின் நெசவு ஒவ்வொரு இலைக்கும் வேறுபட்டுத்தெரிந்ததாய் உணர்கிறான் அதைப் பார் க்கும் கணங்களில்,மெதுவாய் அல்லது வேகமாய் சென்ற சைக்கிள்கள் இரு சக்கர மற்றும் கனரக,இலகு ரக வாகனங்கள் அவைகளின் மீது ஏறி இறங்கி பயணிக்கிறவையாகவும்,அவைகளை புறந்தள்ளிவிட்டுச்செல்பவையாகவும்/
தடித்தும் வளர்ந்தும்,ஐம்பது வருடங்களுக்கும் குறையாத தன் வாழ்நாளை அறிவிக்கும் மரங்கள் சாலையின் இருப்பக்கமுமாய்தன்இருப்பைஅறிவித்துக் கொண்டு/சாலையை விரிவு செய்ய இன்னும் இம்மரங்களை வெட்ட ஆரம்பி க்கவில்லை.ஆர்.கே ரோட்டில் வெட்டி விட்டார்கள்.சாலையின் இரு பக்கமும் சோலையாய் நின்ற மரங்களைவெட்டியதும்சாலை வெரிச்சிட்டு/  நன்றாக  இருந்தால் வெட்டப்பட்ட மரங்களின் பரப்பில் ஒரு சைக்கிளோ அல்லது இரு சக்கர வாகனமோ செல்லலாம். அவ்வளவே. இதற்குப் போய்,,,,,/ சரி மாற்றாய் வேறெதுவும் தோனாதபோது இப்படித்தான் கண்ணில் பட்டவைக ளை அழிக்க தோணும். 

முதுகெலும்பின் பள்ளத்தில் நேர்கோடாய் இறங்கிய வியர்வை வரி சென்று மறையும் முன்பாகவே பஸ்வந்து விட ஏற வேண்டியவனாய்/

வழக்கமான நேரத்தை விட பத்து நிமிடங்கள்தாமதமாக வந்துவிட்ட பஸ்சை  எட்டிப்பிடிக்க நின்றவர்கள் எண்ணிக்கை சற்றுக்கூடுதலாகவே/ முன் புற படிக்கெட்டின் வழி ஏற பத்துப் பேருக்கும்குறையாமலும்,பின்புறபட்டிக்கட்டு வழியாக ஏற அதே எண்ணிக்கையிலுமாய் நின்றிருந்தார்கள்.

பஸ் வருவதற்கு முன்பாய் பஸ்டாப்பில் நிறைபோதையுடன் சலம்பித் தெரிந் தவர்கள் மூன்று பேரும் பின் படிக்கட்டின் வழியாக ஏற முற்படுகிறார்கள் . கல்லூரிக்குச்செல்லும்மாணவர்கள்இருவர், கூடைக்காரம்மா ஒருத்தி, வயதா னவராய் இரண்டு பேர் நடுவாந்திரவயதும், உடையும் தாங்கி ஒருவரும்  மற்றொருவருமாய் ஏறிய பின் படிக்கட்டு வழியாக அந்த மூவரும் நின்றிருந் தார்கள்.நான் அவர்களின் பின்பாக/ஏறுவார்கள் என்று பார்த்தால் ஏறவில் லை.வழிவிட்டு நகரவும் வழியில்லை.சரி எதற்கு வீண் வம்பு என முன் வாசல் வழியாக ஏறவும் பஸ் நகரவும் சரியாக இருந்தது.

உட்கார இடமின்றிகம்பியை ப்பிடித்துக்கொண்டு நின்ற நான் திரும்பிப் பார்க்கிறேன் தற்செயலாக /நிறை போதையில் நின்றிருந்தவர்கள் மூவரும் ஏறிவிட்டிருந்தார்கள்.அவர்கள் உட்கார இடமில்லாமல் நின்று கொண்டே/ மடித்துக்கட்டிய கட்டம் போட்ட கைலி,ரோஸ்க்கலர் சட்டையில் ஒருவர் ,வெள்ளை வேஷ்டி,டீசர்ட்டில் ஒருவர் ,பூப்போட்டகைலியும் வெள்ளைச் சட் டையுமாய் மற்றொருவர் என இருந்தவர்கள் பஸ்சின் கம்பியை பிடித்த கெட் டியான பிடியை விடாதவர்களாகவும், ஏதாவதுகொண்டேவந்தவர்களாகவும். 

அதில் ஒருவன் பேசிய கெட்டவார்த்தைக்குமற்றவன்திட்டினான். அவனைப் பார்த்து,”டேய் அறிவு கெட்ட நாயி,இதென்ன ஒங்க வீடுன்னு நெனைச்சை யா, பொம்பள புள்ள வர்ர பஸ்ஸீடா,கேணப்பயலே,அறிவில்லாம இனிமே பேசுன வாயக்கிழிச்சிருவேன்” என்றான். 

அதற்கு அவன் போஓஓடா பெரிய்ய்ய்ய, பஸ்ஸ்சூசூசூ,,,,, நான் பாக்காத பஸ்ஸா,போடா டேய் போடா தெரியும்,,என்றான். வாய்கொளளாத பேச்சும், நிலை கொள்ளாத நிற்றலும்,தள்ளாடலுமாய் வந்த அவர்களின் பேச்சும், செய் கையும் ஒட்டுமொத்தபஸ்சையும் திரும்பிப்பார்க்கச்செய்ததாக/ 

பஸ்ஸின் உட்புறமும், இருக்கைகளின் பின்புறமுமாய் ஒட்டப்பட்டிருந்த மைக்காரோஸ்க்கலர் காட்டி அழகாய் கண்சிமிட்டியது. அதேகலரிலேயே  பஸ் ஸின் இருக்கைக்கவரும் இருந்தது.இருக்கையின் ரெக்ஸின் சீட்டும் அப்ப டியே/ அதன் பக்கமாய் பஸ்சின் தரைக்கும் மேல்ப்புறவிளிம்பிற்குமாய் பள பளத்து நின்ற சில்வர் கம்பிகளில் டிக்கெட் கிழித்தகண்டக்டர் முகமும், அமர்ந்திருந்த பயணிகள் சிலரின் ஓரமுகமுமாய்/அதில் வெகு முக்கியமாய் அந்த மூவரின் முகமும் ஓரம் பட்டு காட்சிப்படவும் தள்ளி விலகிச் செல்லவு மாய்/ அப்படி தள்ளித்தள்ளி விலகியவரில் ஒருவர்தான்  ஒரு இடம் சொல்லி டிக்கெட் கேட்கிறார் மூவருக்கும் சேர்த்து/ 

”வரத் தாட்டுக் காரங்க  நாங்க யெடையில் இருக்குற ஒருகாட்டிலகெடை அமத்தீருக்கோம்.அந்த யெடம்தான்நாங்கஇறங்கவேண்டிய யெடம்” எனவும், ”ஒரு அவசரத்துக்கு ஏறிட்டோம் டவுன் பஸ்ஸீன்னு நெனைச்சி,இனிம ஏற மாட்டோம்,இன்னிக்கு மட்டும் எப்பிடியாவது எறக்கி விட்டுருங்க, புண்ணி யமா போவும் ஒங்களுக்கு,”என/

 ”முடியாது நடக்காத விஷயம் இது.இது பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ்.இங்க பஸ்ஸ எடுத்தா சேர வேண்டிய யெடத்தத்தவுர வேற எங்கயும் இடையில நிக்காது” என்கிறார் கண்டக்டர். 

அப்போது அங்கே எழுந்த மெல்லிய சலசலப்பு தடித்த சுவராய் மாறி பஸ்சை வழி மறித்து நிற்கும் என யாரும் நினைக்கவில்லை.

பூப்போட்ட கைலிதான் ஆரம்பிக்கிறார்.”ஏப்பா கண்டக்டரு ஏங்மகன் வயசு இருக்குமா ஒனக்கு,தண்ணி போட்டுட்டு பேசுரம்ன்னு நெனைச்சையா, என்னமோ ஒடம்பு வலிக்கு ஆத்த மாட்டாம ரெண்டு ஊத்திக்கிட்டு வந்து ருக்கம்யா,இதப்போயி ஒரு குத்தமா எடுத்துக்கிட்டு என்னவோ கொலக்குத் தவாளிகிட்ட பேசுன மாதிரி பேசுறயே,நாங்க கேட்ட யெடத்துல நிப்பாட்டி யெறக்கிவிடமுடியாது அப்படீங்குறதோட நிறுத்திக்க,மேக்கொண்டு அனாசி யமான பேச்செல்லாம் பேசனா அசிங்கமாயிரும் பாத்துக்க,,,,,,,”என அவர் சொல்லவும் பதிலுக்கு கண்டக்டர் வையவுமாய் தொடர்கிறதாய் பேச்சு.

”என்னடா அசிங்கமாயிரும்,பெரிய,,,,,,,,,,,நீயி,வகுந்துருவேன்வகுந்து,பஸ்சில ஏறுனாஒழுக்கமாவந்துஒழுக்கமாபோஇல்ல,செத்துப்போவ”,,,,,,,,,,_கண்டக்டர்.

”என்னடா பேசிக்கிட்டே போற வகுந்துருவயா நீயி,அவன மொதல்ல தொடு ரா பாக்கலாம்,தொட்டகையி ஒடம்புல நிக்காது பாத்துக்க கிறுக்கு”,,,,,,,,,, என வெள்ளை வேஷ்டி நெஞ்சு நிமிர்த்தி  வர கூட இருந்தவர் செருப்பைக்கழட்டி கொண்டு ஓங்கியவராய் வருகிறார்.

ரசாபாசம் கொள்கிறது பஸ்,பயணிகள் ஒவ்வொருவரிலுமாய் திடீரென பற்றிக் கொண்ட பதட்டம்.பஸ் போக வேண்டும் நேரத்திற்கு,அலுவலகம்,போய்ச்சேர வேண்டிய இடம் எல்லாம் கால நேரத்திற்கு நடக்க வேண்டும்.இது போக பஸ்சில் ஏதாவது நடந்து தொலைந்து  விட்டால்,,,,,,,,,,,டிரைவர் பஸ்சை ஓரம் கட்டி விட்டு கையில் ஒரு நீளமான இரும்பு ராடுடன் வந்து விட்டார். “யெறங்குங்கடா மூணு பேரும்,இல்ல மண்டையப் பொளந்துருவேன்”,,,,என பூப்போட்டகைலியின் நெஞ்சில் கை வைத்து தள்ளிவிட கீழே விழப்போய் சுதாரித்து நின்றவராய்/

சப்தம் நாரச வசவு, பதிலுக்கு பதிலான பேச்சு,ஆறாய் பெருக்கெடுத்து ஓடிய கெட்ட வார்த்தைகள் என பயணிகளின் எண்ணிகையைவிட அதிகம் காட்டி நிற்கவழக்கமாய் பஸ்ஸில் வருகிறபாயணிகள்  சிலரும்,மற்றவர்களுமாய் சேர் ந்து சொல்லியதில்  கிளம்பி விடுகிறது பஸ்.

பஸ்கிளம்பி வெகு நேரம் ஆகியும் மனச்சமாதானத்திற்கு வராத கண்டக்டர் டிரைவரின் அருகில் போய் அமர்ந்து கொள்கிறார். 

வீசியகாற்றும் மனம்தொட்டநினைவுமாய் பயணிகளும்,பஸ்ஸீம் பயணித்துக் கொண்டிருக்கையில் பஸ் ஓரிடத்தில் சாலையோரம் கிரீச்சிட்டு நிற்கிறது, போதையுடன் சண்டையிட்ட மூவருமாய் இறங்கிச்செல்கின்றனர் பஸ்ஸை விட்டு/

13 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

தொடக்கம் முதல் முடிவு வரை சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

சொல்லிச் செல்லும் நிகழ்வுகள்
காட்சிகளாய் விரிந்தபடி/
மனம் கவர்ந்த பதிவு
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே
காட்சிகளைக் கண் முன் ஓடவிட்டுவிட்டீர்கள்
நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

என்ன ஒரு விவரிப்பு...!

வாழ்த்துக்கள்...

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

நன்றி வாக்களிப்பிற்கு/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

நன்றி சார் வாக்களீப்பிற்கு/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

மகிழ்நிறை said...

கதையோடு மட்டுமல்ல
பேருந்தோடும் பயணித்த அனுபவம்!

vimalanperali said...

வணக்கம் கஸ்தூரி ரெங்கன் அவர்களே.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

ezhil said...

உங்களின் இயல்பான வர்ணனை எப்போதும் போல் அருமை.

vimalanperali said...

வணக்கம் எழில் மேடம்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/