20 Jul 2014

ஆடுகள் அடைபட்டுகொண்டிருக்கிற நேரம்,,,,



பட்டியக்கல் பதித்த தொழுவத்தில் ஒரு ஓரமாய்க்கட்டப்பட்டிருந்த ஆடுகளில் கண்ணோரம் வெள்ளை முடி படர்ந்த ஆடு இவனுக்கு எப்பொழுதும் பிடித்துப் போனதாகவே/

கறுப்பும்வெள்ளையுமாய் ரோமக்கலர் தாங்கி கன்னத்தில்வெள்ளைவைத்த ஆடுஅப்படியாய் என்னதான் சொல்லிச்செல்கிறது இறுதியாகவும் அறுதியி ட்டுமாய் எனக்கேட்கவும் என்னதான் நீ பொசுக் பொசுக்கென கண்சிமிட்டி தலையை தொங்கப்போட்டு வெட்கிச்சிரித்த படியும் அசை போட்டவாறும் சென்றாலும் ஒன்றும் ஆகாது இப்போதைக்கு என சொல்லியவாறே நகர் ந்து செல்லவும் தோணுகிறது.

கறுப்பும் வெள்ளையுமாய் ரோமக்கலர் தாங்கி ரோமக்கலர் தாங்கி நின்ற ஆடுகள் ஆறில் இவனுக்குமிகவும் பிடித்த அந்த ஆட்டிடம் மட்டுமாய் ஏன் அப்படிபேசிச்சொல்லத்தோணுகிறது எனத்தெரியவில்லை.நீளநீளமாயும் சற் றே அகலம் காட்டியுமாய் பாலம் பாலமாய் அறுக்கப்பட்டிருந்தது போ லான பழுப்பு நிற பட்டியற்கற்கள் எப்பொழுதுமே இவன் மனம் பிடித்ததாய் இருந்திருக்கிறது.அவைகளைத்தான்தொழுவம் முழுவதற்குமாய் பதித்திருந் தார்கள்.

ஆடுகளைப்பிடித்ததனால் தொழுவத்தை நேசித்தானா இல்லை தொழுவம் பிடித்ததனால் ஆடுகளை நேசித்தானா என்பது தெரியவில்லை தெளிவாக/

மொத்தமிருந்த ஆடுகள் ஆறும் ஒன்று போல் வார்த் தெடுத்த உருவத்திலும் பருமனிலுமாய்/இவனைடம் கூட கேட்பார் சித்தப்பா.”என்னடா ஆட்டுக்கு எடைபோட்டு யெறை வக்கிறியா என்ன”என?சிரித்துக்கொள்வான் அதற்கு.

ஆடு குட்டி,தொழுவம்,,,,,,,,,,,இதைத்தாண்டி இவனது கவனம் வேறெங்குமாய் நிலைகொண்டதில்லை.இங்குஊருக்கு வருகிற தினங்களில்/

ஆடு கட்டியிருக்கும் கல் தூணில் கட்டித்தொங்க விடப்பட்டிருக்கும் அகத்திக் கீரையை அவிழ்த்து கையிலெடுத்துதின்னக் கொடுப்பான்.நீட்டிய கீரையை வாய் நிறைய கடித்து தின்று அசை போடும் வேளையில் அதன் முகத்தையும் வெகுமுக்கியமாய்கண்ணுக்கருகேயுமாய்தடவிக்கொடுக்க மறப்பதில்லை.

உடல்முழுவதிலுமாய்போர்த்திக்காணப்படுகிறகறுப்புமுடிகளிலிருந்து விலகி கண்ணுக்கருகாமையிலும் முகம் மற்றும் கால்கள் நான்கிலுமாய் இறங்கிப் படர்ந்திருக்கிறவெள்ளைமுடிகள்எப்பொழுதுமேஇவனைகவர்ந்திழுப்பதாகவே  இருந்துள்ளது .

மாடு ,தொழுவம் ,மாட்டுச்சாணம் ,கோமியவாசம் என எல்லாம் கலந்திருக்கிற வேளையிலும் கூட ஆடுகளின் மேல் இருந்த பிரியம் இவனில் அலாதியாக வே எப்பொழுதும்/

கட்டிக்கிடந்த ஆடுகளின் மேல் இருந்த பிரியம் அகத்திக்குலை என மட்டு மில்லாது வீட்டில் இருக்கும் சாப்பாட்டை கூட அள்ளி வந்து வைக்கச் சொல் லும்.சித்தப்பா கூட சப்தம் போடுவார்.ஏண்டா அதப்போயி இந்தப்பாடு படுத்துற என/

இப்ப என்னாத்துப்போயிஅதுகநிக்கிற யெடத்ததண்ணி ஊத்தி கழுவி விட்டுக் கிட்டு இருக்க,சும்மா பெருக்கு மாற வச்சு ஒரு தள்ளு தள்ளுனா போதாதா?நீயி கழுவிவிட்டுட்டு வருவ, அதுக பின்னாடியே ஒண்ணுக்கடிச்சி புழுக்க போட்டு ரும் என்பார்.இவன் தினமும் ஆடுகள் நிற்கிற பட்டியல் கல் சுமந்த தொழுவத் தை கழுவிவிடும் போது/ ”அதுக்கு என்ன செய்யிறது சித்தப்பா,நம்ம கூடத் தான் நித்தம் குளிக்கிறோம்.இந்தா நான்கூடத்தான் காலையில் குளிச்சிட்டு வந்தேன். இப்ப வேர்வையில நனைஞ்சு போச்சு ஒடம்பு.இனி சாய்ங்காலமா கம்மாயில போயிகுளிக்கணும்” என்பான்.சரிப்பா போஎனபோய் விடுவார் சித்தப்பா.

இதை ஆமோதிப்பது போல் தலையாட்டும் ஆடுகள் ஆறும் இவன் சொன்னது சரிதான்எனச்சொல்லும்போலிருக்கிறது.”தின்ன இறையில்லாமலும், குடிக்கத் தண்ணியில்லாமலும் காய்ந்து போன வயிறுடன் கிடந்த காலங்களில் நீ வந்திருக்கக்கூடாதா எங்களை கவனிக்க”?என அவைகள் உள்ளின் உள்ளாய் நினைவு கூட்டி வைக்கிற நேரம் டவுனில் இருக்கிற இவனது வீட்டு கொல்லை வேப்ப மரத்தில் குலை ஒடிக்க வருகிற ஆட்டுக்காரரின் ஞாபகம்தான் வரும்.

அவரும் இல்லையென்றால் மரம் கண்டபக்கம் கைநீட்டி சிலும்பல் காட்டிக் கொண்டிருக்கும் இப்போது.அவரும் குலை ஒடிக்க வருகிற நாட்களில் அப்ப டியே சைஸாகத்தான் வருவார்.ஒல்லியாய் ஒட்டிப்போய் கருத்த தேகத்தில் இருந்த அவர்சார் இது எதுக்கு இப்பிடி சிலும்பல் சிலும்பலாகாட்டி நிக்குது மரம்.அங்கிட்டும்,இங்கிட்டுமா,,,,,,,சொன்னபடி கேக்காம நிக்குற கொப்ப வெட்டீருவோம் என்ன நான் சொல்றது” என்பார். ”நீங்க என்ன சொல்றது,நான் கூப்புட்டு சொல்லும் போது வந்து வெட்டுங்க, அது போதும்,சும்மா வந்து ஏங்கிட்ட இப்பிடி கேட்டுக்கிட்டு நிக்காதீங்க” என சொல்லிவிட்டான் ஒருநாள்.

இப்படியான ஒரு சொல்லையும் பேச்சையும்இவனிடமிருந்து எதிர்பார்த்திருக் கவில்லை அவர். இவனும் வழக்கமாய் அப்படி பேசுபவனும் அல்ல.ஏதோ ஒரு மந்திரித்துவிட்ட மனோ நிலை.மனைவி கூடச்சொன்னாள்.”ஏன் இப்பிடிஒரு நாள் மூதேவி ஆயிப்போனோனீங்க” என/

வாஸ்தவம்தான் ஆட்டுக்காரர் வைத்திருந்த பத்துக்கும் மேற்பட்ட உருப் படிகளுக்கு சமயா சமயங்களில் இவனது வீட்டு மரத்திலிருந்துதான் குலை ஒடிக்கப்பட்டுப்போகும் அவரால். அப்போதெல்லாம்தாராளம் காட்டிய இவன்,,,,, 

ஒவ்வொருமுறை ஊருக்குசெல்லும் போதும் நடக்கிற வழக்கமான நிகழ்வு தான் என்ற போதிலும் கூட மொழு மொழு ஹோட்டல் ஆடுகளைப்பார்க்கிற போது இவனது சித்தப்பா வீட்டு ஆடுகளை விட நன்றாக இருக்கிறதே, என்கிற பொறாமைஅவனுள்ளாகஎழாமல்இருந்ததில்லை.கண்மாய்க்கரையைஒட்டிய  மேட்டில் அமைந்திரு ந்தது கடை.

மொச்சை,இட்லி,வடை என மணம் பரப்புகிற காலை வேளையின் ஆரம்பம் அவர்களது கடையிலிருந்து ஆரம்பித்து விடியலைகொண்டு ஊருக்குள்ளாய் சேர்க்கும்.சரியாக உறக்கம் கலைந்து  விழிக்காத ஊரின் உறக்கத்தை எட்டி உதைக்கிறது போல் அதிகாலைநான்குமணிக்கெல்லாம் திறந்து விடுவார் கடையை.

முதன் முதலாக அந்த கிராமத்தில் டீக்கடை திறந்தும் அதில் பதினைந்து பைசாவுக்கு சர்க்கரை டீ போட்டதும் அவர்தான்.அதிகாலை திறக்கபடுகிற கடைக்காக அவரது குடும்பமே வேலை செய்யும்.அவர் அவரது மனைவி, நான்கு பிள்ளைகள் என ஆளுக்குக் கொஞ் சமாய் பகிர்ந்து வேலை செய்தால் தான் அன்றைய தினத்தின் கடை ஆரம்பம் நல்லபடியாக பிள்ளையார் சுழியிட் டு நல்லபடியாக மூடப்படும். பெரியவள் உளுந்த வடைக்கும்,சின்னவள் பருப்பு வடைக்குமாக ஆட்டிகொண்டிருக்க பெரியவன் பால் வாங்கவும் சின்னவன் சில்லறை வேலைகள் செய்யவுமாய் இருக்கிற பொழுதில் மொழு மொழு டீப்பட்டறையில் நிற்பார்.அவரது மனைவி பாத்திரம் கழுவிக் கொண்டிரு ப்பார். ஒரு  தொழிற்சாலைபோல் இயங்கிக் கொண்டிருக்கிற அவசர அவசிய நேரத்திலும் கூடகொஞ்சம்தண்ணீர் கூடகழிவாகமல்பார்த்துக்கொள்வார்கள். மொச்சை கழுவுகிற தண்ணீர் வடை க்கு ஆட்டுகிற மாவின் மிச்சம்,மீந்து போ ன தோசை என எல்லாம் கழுநீர்ப்பானைக்குத்தான்போகும்.

அது குடித்த ஆடுகள் ஓங்குதாங்காக இருப்பது குறித்து இவனுள்ளாக ஒரு பெரும் வியப்பு இருந்ததுண்டு.ஒரு நாள் சித்தப்பாவிடம் கேட்டபோதுதான் சொன்னார்.அது ஹோட்டல் ஆடுப்பா, நம்மது வீட்டு ஆடுப்பா,ரெண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்குப்பா என/

வாஸ்தவம்தான் சித்தப்பாசொன்னது என பின்னாட்களில்  இவன்  கண்டு கொண்டான்.