29 Oct 2014

நாணல் புல்.......


அந்தமெல்லியகம்பு அவளது உடல்எடையைதாங்குமாஇல்லையாஎன்பதல்ல தாங்குகிறது.

அவள் அதை நிலையூன்றி வேர்கொண்டு வருகிறாள் என்பதே கண் கூடு. மாத வன் டீக்கடை வாசல்அது.

இவன் தெற்குப்பார்த்து நிற்கிறான். மேற்குப் பார்த்து கடையின் நடை. அப்படி யானால் கடையின் டீப்பட்டரையும் அப்படித்தானே இருக்க வேண்டும்.நீங்கள் நினைப்பது சரிதான்.

ஒன்றல்ல,இரண்டல்லதட்டுநிறைந்த வடைகளும் பஜ்ஜிகளுமாய் அருகில் சட்னி வாளியுடன் வைக்கப்பட்டிருந்த இடத்தினருகில் நிற்கிறான்.கடையின் நடை வாசலருகே கடையின் உள் செல்லவழிவிட்டு அமர்ந்திருந்த டீப்பட்ட ரையில் அடுக்கித்தெரிந்த பஜ்ஜிவடைகளில் நிலையூ ன்றித் தெரிந்த பார்வை நகன்று,நகன்று டீ மாஸ்டரின் மேல் பதிந்த போது மாலை வெயில் மெல்ல இறங்கித்தெரிவதாக/

வடையில் முழித்துத்தெரிந்த பருப்பும்,பஜ்ஜியின் லேசான கருகலுமாய் எதை எடுத்துத் தின்ப து முதலில் என யோசிக்க வைத்துவிடுகிறது.

காலையிலிருந்து மாலை வரை அமர்ந்த இடத்தை விட்டு நகராமல் ஒன்று க்குப் போகக்கூட எந்திரிக்க யோசித்தவனாய் கம்யூட்டரையே உற்றுப்பார்த்த படி அமர்ந்து வேலை பார்ப்பதில் இப்படி ஆகிப்போகிறது.

அதன் விளைவு இப்படி போகிற வழியில் தட்டுப்படுகிற கடையில் ஏதாவது சாப்பிட்டு ஒரு டீக்குடித்தால் தேவலாம் போல தோனி விடுவது தவிர்க்க முடியாததாகிப் போகிறது. முத்து இன்னமும் ஒரு படி மேலே.

தினசரி மாலை வேலை முடிந்து வருகையில் சட்னியுடன் ரெண்டு வடையும் பஜ்ஜியும்சாப்பிடால்தான்கடைக்காரர்அந்தவழியேபோக விடமாட்டார்என்பது போல பேசுவார்.எல்லாம்எண்ணெய் ப்பலகாரங்களின்மேல்இருக்கிறமோகம்.

காய்ந்துபோன மூளைக்குசற்றே ஈரம் பாய்ச்சினால் நன்றாக இருக்கும்என்கிற நினைப்பிலும்நப்பாசையிலுமாய்ஏதாவது ஒருடீக்கடையில் நிற்பதை விடுத்து மாதவன் டீக்கடையில் நிற்கிறான்.

மிகச்சரியாக அதன் எதிர் வரிசையில் நான்கு கடை தள்ளி டாஸ்மாக். சமயத் தில் அந்தக் கடையின் வாடையும், போதையும் இங்கு வந்து தாக்க தலை கிர்ரி ட்டு விடும். அப்புறம் குடிக் கிற திக்கான டீ கிக்காக இருக்கும்.தினசரி காலை, மாலை இரு வேளை அங்கு டீக்காய் நிற்கிற போதுகிடைக்கிற தட்டுப் படுகிற கடையின்அடையாளத்தையும்,வாசனையையும்தவிர்த்துகாணமுடிகிற ஒன்றாய் அந்தப்பாட்டி காட்சிப்பட்டுத் தெரிகிறாள்.

சுட்டுவிரல் தடிமனே இருக்கும் மெல்லிய நாணல் கம்பு .அதுவும் அவளது இடுப்பளவேஇருக்கிறது.80ற்கும்மேற்பட்டவயதில் தெரிந்த அவளது உடலைப் போர்த்திகிடந்த புடவை அந்த மெல்லிய உடலுடன் ஒட்டிப் போயும், நகர்வற் றுமாய்/

அவள் புடவையை உடுத்திருக்கிறாளா அல்லதுஅள்ளிபோர்த்தியிருக்கிறாளா என்கிற சந்தேகம் அவளைப்பார்க்கும் போதெல்லாம் வராமல் இருந்ததில்லை. அவள் வருகை டீக்கடை நடையை தொட்டு விட்டாலோ அல்லது தூர வருகை யில் அவளை எட்டிப்பார்த்துவிட்டாலோ போதும்,மாதவன் ரெடியாக இரண்டு பஜ்ஜிகளை பிய்த்துப் போட்டு சட்னி ஊற்றி வைத்து விடுவார் ரெடியாக ஒரு பிளாஸ்டிக் தட்டில்/

அவளும் கடைக்குள் நுழைந்ததும் அதை வாங்கிக்கொண்டு கடையினுள் இருக்கிற பெஞ்சில் அமர்ந்து விடுவாள்.பெரும்பாலான நாட்களில் கையில் வாங்கிய பஜ்ஜித் தட் டுடன் அவள் கையில் வாங்கிய பஜ்ஜித்தட்டுடன் அவள் சென்று அமர்கிற இடம் கடையின்சமயலறையாய் இருந்திருக்கிறது. அங்கு தான்அவளுக்கு சௌகரியப்படுகிற து எனச்சொல்கிறார் கடையின் உரிமையா ளர் மாதவன்.

அன்றாட நகர்வுகளில் காலையிலும், மாலையிலுமாய் நடந்தேறுகிற இந்த சௌகரியம் அவளது வயதில் அவளை எங்குநிலைநிறுத்தி வைத்திருக்கிறது எனத்தெரியவில்லை.

தினசரிகாலைவேலையிலும்,மாலைவேலையிலுமாகஅவளைப்பார்க்கநேர்ந்து விடுவதுண்டு. சில நாட்கள் பார்க்கமுடியாமல்தப்பிப்போவதும் உண்டு.

மெலிந்து ஒட்டிப்போய்கிடக்கிற உடலில் முளைத்துத் தெரிகிற கைகளும், கால்களும் அவள் உடல்பாரத்தைதாங்கி நடக்க ஏதுவாயும் கம்பு பிடித்து நடந் து செல்ல ஏதுவாயும் ஆகிப் போகி றது.

அவளது இடுப்பளவே உயரம் கொண்ட கம்பு அவள் உடுத்தியிருந்த சேலை யையும் சேர்ந்து தாங்கி சுமந்து வருவதாய்/

”எனக்குசுங்கடிப்பொடவையும்,கண்டாங்கிச்சேலையும்ரொம்பவே புடிக்கும் தம்பி.ஏங் வீட்டுக் காரரு அததான் எடுத்துக்குடுப்பாரு.அதுல நான் ரொம்பவே நல்லா இருக்குறதா சொல்லு வாரு.நானும் ஓரளவுக்கு நல்லாவே இருப்பேன் அப்பம்.ஏங்கூட காடு கரைகள்ல வேல செய்யிறஏங்சேக்காளிகளுக்குஇது ஒண்ணு தான் ஏங் மேல ரொம்ப பொறாமையா இருக்கும்ன்னா பாத்துக்கப்பா, ஏங் மேல ஆசைப்பட்டுதான் என்னையகூட்டிக்கிட்டுவந்தாரு.எங்க கல்யா ண ம் மொ றையா ஆயி,அப்பன்பாத்து பேசி முடிச்ச வச்ச கல்யாணம் இல்ல,நான் மதுரையைத் தாண்டி ரொம்ப தூரத்துல இருக்குற ஊர்க்காரி,காண்ட்ராக்டா மாசக்கணக்குல இங்க நெல்லு நாத்து நடுற வேல செய்ய வந்த யெடத்துல என்னய அவருக்கு ரொம்பவே புடிச்சிப்போச்சி,ஏங்கூட வேலை செய்யிற ஒருத்திகிட்ட கேட்டுப்பாத்துருக்காரு,ஒறவு மொற, ஊரு மொற,,,,,, எல்லாம் எப்பிடி என்ன ஏதுன்னு.

எனக்கும் அவரு மேல ஒருகிறுக்கு இருந்திச்சிதான்,அவர பாத்த நாளு மொதக் கொண்டுமனசு நெல கொள்ளல என்ன,,,ஆம்பள அவரு தைரியமா சொல்லீ ட்டாரு, பொம்பள நான் எப்பிடி பட்டுன்னு சொல்றது/ மனசுக்குள்ளயே போட்டு மருகி நின்ன நாளும் அதுவுமா பாத்து ஒரு நா ராத்திரி வேளையா நாங்க தங்கியிருந்த வயக்காட்டு கூடாரத்துகே வந்துட்டாரு. அப்புறமா என்ன செய்ய மனசும்,மனசும்பேசிக்கிட்டஅருமையானபொழுதாபோச்சிஅது,நாங்களும் மறு நா காண்ட்ராக்ட் முடிஞ்சிகெளம்பப்போறோம். என்ன செய்ய தம்பி ,அவரு எங்க கல்யாணம் பத்தி ஒரு முடிவக்கேக்குறாரு. அப்ப வே அந்த நிமிஷமே சொல்லச்சொல்றாரு.ஆம்பள அவர மாதிரி படக்குன்னு என்னால ஒரு முடிவ சொல்ல முடியல.அவரு இப்பவே இப்பிடியே கெளம்பு.ஏதாவது கோயில்ல போயிகல்யாணம்கட்டிக்கிருவோம்ங்குறாரு,கண்டிப்பா ரெண்டு பேர் வீட்ல யும் சம்மதிக்க மாட்டாங்க,ஜாதி குறுக்க நிக்கும் போது எப்பிடின்னாரு, நானும் காண்ராக்ட் வேல முடிஞ்சி ஊருக்குப்போன ஒருவாரத்துல இவரத் தேடி பஸ்ஸேறி வந்துட் டேன்.

அப்பறம்என்னரெண்டுவீட்லயும்அதகளம்தான்.நாங்கவேற,நீங்கவேறஇனிமே நம்ம ரெண்டு கும்பத்துக்கும் ஒட்டும் கெடையாது ஒறவும் கெடையாதுன்னு சொல்லி ஏங் மொத மகன் பெறக்குற வரைக்கும்பேச்சுவார்த்தபோக்குவரத்து அன்னம்,தண்ணின்னு எதுவும்இல்லாம இருந்தவுங்க மூத்தமகன் பொறந்த கொஞ்ச நாள்ல புள்ளைய பாக்குற சாக்குலவந்தாக .அப்பு றம் பாத்தா சம்பந்த காரங்கரெண்டுபேரும்எங்களக்கூடமறந்துபோற அளவுக்கு ஒண்ணு, மண்ணா ஐக்கியமாகிப்போனாங்க.அப்பயெல்லாம்தாய் வீட்ல யிருந்து என்னய பாக்க வரும்போதுஒருசுங்கடிசேல உறுதி.மதுரப்பக்கம் அதுசௌகரியம்தான, இவரு இங்க எடுத்து தர்ற கண்டாங்கிச் சேலை ன்னு வரும் கடந்தும் எனக்கு கட்ட நேரமில்லாம பெட்டிகுள்ள ஒறங்கும் சேலக.வீட்ல சோறு தண்ணிக்கி பத்தாக் கொற வந்தப்பக்கூடயும் உடுத்துற உடுப்புக்கு பஞ்சம் வந்தது கெடையாது.

அடுத்தவருசங்கள்லபொறந்தரெண்டுகொழந்தைகளுக்கும்என்னோடபழைய
சேலைதான் பீத் துணியா இருந்துச்சி/ அப்பிடியெல்லாம் இருந்துட்டு இப்பம் ஒத்தச் சேலை க்கு அல்லல்ப் பட வேண்டியிருக்கு.
 
அவருபோனதுக்குஅப்புறம் அப்பிடியே அவர நினைச்சிக்கிட்டு காலத்த ஓட்டிக் கிட்டு இருக்கேன் தம்பி. டீக்கடைக்கும் வீட்டுக்கும் ஊடாலையுமா ஜீவன் கெடந்து அல்லாடுது, இப்பம்சாப்புட்டுப்போறேனே,அதுதா ஏங் ராச்சாப்பாடு. வீட்ல போயி இருந்தா சாப்புடுவேன், இல்லைன்னா அப்பிடியே மொடக்கி படுத்துருவேன்,கடைய விட்டுபோகும் போது டீக்கடை தம்பி மிச்சமிருக்குற ரெண்டு பஜ்ஜிய மடிச்சி குடுக்கும், அந்த மாதிரி நாள்கள்ல எனக்கு கூடுதல் சாப்பாடுகெடச்சமாதிரிஇருக்கும்.பிராயத்துலஏங்அளவுக்குசாப்புடஆள்கெடை யாது, ஏங்சோட்டுபொண்ணுங்க ஏங்கூட சாப்பா ட்லபோட்டி போட முடியாது. சரித்தான்அப்பதநெலமையஇப்பநெனைச்சாமுடியுமா,நெலமஎப்பிடிஇருக்கோ அப்பிடிபோயிக்கிறவேண்டியது தா,ஏங்மகனும் என்னைய கொறயா வச்சிப் பாத்துக்கல்ல,அவன் சத்து அவ்வளவுதான்.

உள்ளூரிலேகட்டிக்குடுத்தபொண்ணுரெண்டுபெண்பிள்ளைகளோடநிக்குறா,
அவளுக்குபுள்ளைகளுக்குநல்லயெடத்துலமாப்புளஅமையனுமேன்னுகவல.
இவனுக்குஎன்னையப்பாத்துக்குறதும்,புள்ளைங்களவளக்குறதும்,படிக்கப்
போடுறதுமே பெரும் பாடா இருக்குது.

எங்கதம்பிஅவன்வருமானத்துலவருசத்துக்குஒருநூல்ப்பொடவைஎடுத்துதர்ற

தேபெருசு/ இது போககூப்பன்கார்டுல தைப்பொங்கலுக்கு குடுக்குற சேலை யையும் ஊட,மாட வாங்கிக்கிரு வேன்.அதுவே சரியாகிப் போகும் என்றாள். அவள் கட்டியிருந்த புடவை வயலெட் கலரில் இருந்தது.பார்டர் அடர் ஊதாகக் கலரில்/

முகம் நிறைந்த சுருக்கமும், ஊடல் நிறைந்த தளர்வும்,நடக்க முடியா நகர்வு மாய் நடுத் தெருவி ன் மத்தியிலிருந்து வருகிறாள்.

போன வருசமே மழைக்கு ஒழுகுன வீடு தம்பி.இந்த வருசமாவது மழைக்கு முன்னாடி அதை சரிபண்னனும்ன்னு அலையாஅலையுறான்ஏங் மகன்.எங்க விக்கிறவெலைவாசிக்கும்,கூலிக்கும்அவன்நெனச்சது நடக்காம போயிருமோ ன்னு கெடந்து மருகு றான்.

ரெண்டுலஒண்ணுபொம்பளப்புள்ளையாப்போச்சுஅவனுக்கு.பையனவுடஅவகொஞ்சம் சுதாரிச்ச ஆளு.உருண்டு,பெரண்டு தரையிலே கூட நீந்தீருவான் நீந்தி/ பொம் பளப் புள்ளயும் அவன விட்டவ இல்ல.ஆனாலும் இவள பையன் அளவுக்கு சுதந்திரமா விட முடியல.

இவுங்களாவதுபரவாயில்ல.எங்க காலத்துல எங்காவது பக்கத்து ஊருக்கு போகணுன்னாகூடதொணையோடதான்போகணும்.இப்ப கையில காசும் ஒடம் புல தெம்பும்தான் வேணும்தம்பி. நெனைச்ச நேரம்நெனைச்சயெடம்ன்னு போயி வந்துர்ராங்க/

பஸ்ஸீல,ரயில்லண்ணுஎனச்சொன்னபாட்டியின்பேத்தி12ஆம்வகுப்புப்படித்துக்

கொண்டிருந்தாள் உள்ளூர்ப்பள்ளியில் .

போன வருடம்தான் ப்ளஸ் டூ வரை கொண்டு வந்திருந்தார்கள்.11 ஆம் வகுப்பு க்கு மதுரைபோய்வந்தபிள்ளை.உள்ளூருக்கு12 வரவும்திரும்பவும் உள்ளூர் வகுப்பறையிலேயே/

அவளுக்கு17ஆகப்போகுதுதம்பிவயசு.கல்யாணம்பண்ணிவச்சிரலாம்னுசொல்
றான்மகன்,இந்தக்கழுதகேக்கமாட்டேங்குறா,மேலபடிக்கணும்,வேலைக்கு
போகனுன்னு ஒத்தக்கால்ல நிக்குறா,அத அவன் அப்பங்கிட்ட சொல்றதுக்கு பயந்துக் கிட்டுஎங்கிட்டுவந்துசொல்லிச்சொல்லச்சொல்றா,நான்என்ன செய்ய மத்தளத்துக்கு ரெண்டு பக்க இடிங்குற மாதிரி ரெண்டு பேர்ட்டயுமா வாங்கிக் கட்டிக் கிட்டு,,,,,,,,,,,,,சரி அவுங்க யார் தம்பி ஊராவுங்களா? ஒரு பக்கம் பெத்த மகன்,ஒரு பக்கம் அவன் பெத்த பேத்தி. இப்பஎன்ன கொறஞ்சா போறம், வைய வைய வைரக்கல்லு,.அது சரி இது ஒரு மாத் தந்தான தம்பி.நாங்க அப்ப அப்பிடி இருந் தோம்ங்குறதுக்காக இப்பவும் புள்ளைங்க அப்பிடி இருக்க முடியாது. தவுர இப்ப எதுனாலும் துட்டுன்னு ஆகிப்போச்சு தம்பி/ஒரு காலத்துல காடு, கரைன்னுவெளஞ்சு கெடந்தப்ப பக்கத்து மனுசன்ஒறவுவேணும்ன்னு நெனைச் சோம்/ 

பெத்தவுங்க,பெறந்தவுங்க,அண்ணன்,தம்பி,பெத்தவுங்க,பெறந்தவுங்கஅண்ணன், தம்பி,ஜாதி சனம் எல்லாம் தேவைன்னு ஆகிப்போச்சு. அது தான் இந்த சீரழி வுக்கெல்லாம் காரணமோன்னுதோணுதுதம்பி.மனுச மொகம் பாத்து பேசுனது, பழகுனது எல்லாம் மாறிப்போச்சு தம்பி என்கிறாள்.

9.45 பஸ் பத்து நிமிடம் தாமதம் போலும்.இப்போதுதான் போகிறது. ஆட்களை யே காணவில்லை.

அரை மணிக்கு முன்னதான் மதுரையிலிருந்து வர்ர வண்டி போச்சி. அப்பமே நெனைச்சேன். கூட்டம் கொறைவா இருக்கேன்னு,இன்னைக்கி என்ன எதுவும், அட்டமி,,இல்லவடக்க, தெக்க சூலமாதெரியல,ஒரு வேள அப்பிடித்தான் போல யிருக்கு.இப்பம் யாரு அதையெல்லாம்பாக்குறா,ஏதோஒருதோதுக்காகஅப்பம் சொல்லிவச்சிருக்காங்க, இப்பம் இருக்குற காலத்துக்கு அது ஒத்து வருமா ன்னு தெரியல. தம்பி சரி அப்பம் அப்பிடி இருந்துச்சி,இப்பம் இப்பிடியிருக்கு/

இருக்கட்டும் தம்பி,,,,,,,,,, காலையில வெள்ளன ஏங் மகன மீன் யேவாரத்துக்கு அணுப்பணும்/ வரட்டுமா?

3 comments:

Yarlpavanan said...

கதை நகர்வு நன்று
படிக்க தூண்டும் பதிவு
தொடருங்கள்

Tamizhmuhil Prakasam said...

நல்லதோர் பகிர்வு ஐயா. பகிர்வுக்கு நன்றிகள்.

vimalanperali said...

வணக்கம் தமிழ்முகில் பிரகாசம் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/