13 Mar 2015

மிச்சச்சுவர்,,,,,

               
வந்தவேலையை எல்லாம் முடித்து விட்டு என்னிடம் பணம்வாங்க வந்தவளு க்கு 25 வயதிருக்கும்.அச்சடிக்கப்படிருந்த கிராமத்து முகம்.
 
 நீங்க,,,,,,,,,,,,ஊருதானா?என என்னை ஏறிட்டவள் என்னையும் அவளை நோக்கி பார்க்கவைத்தாள்.
   அலுவலகத்தில் நின்றிருந்த அவ்வளவு கூட்டத்திலும் அவளதும்,என்னதுமான சந்தித்துக் கொண்ட எதிரெதிர் பார்வையும் ஒரே நூழிலையில் ஓடிய நேரெதிர் பேச்சில் குடிகொண்டிருந்த மெல்லியஉயிரோட்டம்அவளைப்பார்த்துஇன்னும்இன்னும்சிலவைகளைகேட்கவும்வைக்கிறது.     
 
   தேவைவேண்டி நகைக்கடன் வாங்குவதற்கு  எங்களது  அலுவகத்திற்கு வந்திருந்தாள்.   அவள்  கொண்டு  வந்தது  எந்த   வகையான  பொருள்   எனத்  தெரியவில்லை.
 
செயினா,நெக்லஸ்ஸா,மோதிரமா,கம்மலா,,,எதுவாயினும் தங்கமே கொண்டு வந்ததங்கத்திற்கு ஏது பொருள்,கணக்கு என்கிற அடைபாட்டுடன்  நகைக்கடன் இன்னாருக்கு இவ்வளவு என பெயர் எழுதிய ரசீது என்னிடம் வந்த பொழுது  கூப்பிட்டுகொடுக்கிறேன்.  அப்போதுதான்  மேற்கண்ட  இத்தனையும்  நேரடி ஒளிபரப்பாக/
 
 நல்லமனம்,நல்ல உடல்,நல்ல எண்ணம்,நல்லசெயல்,நல்லநண்பர்கள்,நல்ல தோழர்கள்,,,என்பது போன்றஇதரஇதரவைகளாய்வாய்த்தும்கைவரவும்பெற்றுவிடுகிறவரிசையில்நல்லமனிதர்களின் பழக்கமும்அவர்களதுஉறவும்தேவையாகவே இருக்கிறது. 
 
இப்பூவுலகில்கைகுலுக்கிக்கொள்ளவும்,தோளோடும்மனதோடும்சேர்ந்துஉறவாடி நெசவிட்டுக்
கொள்ளவுமாய்/
 
   “எங்க வீட்டுக்  காரர்கிட்ட  கேட்டிங்களாம்ல  சொன்னாரு”-அவள்.
 
   “ஊம்”- நான் 
 
    “பக்கத்தூருதான்,நானு,,,,,,,,,,,,,எங்க வீட்டுக்காரரு முருகன்,கொத்தனார் வேலை பாக்குறாரு” எனஅவள்சொன்னஉருவம்அரிச்சலாகபிடிபட்டாலும்இவர்தான்எனஉறுதிசெய்யமுடியவில்லை.
 "யாரும்மாகிட்ணய்யாவீட்டுஆளுகளாம்மா,சந்தோசம்மாசந்தோஷம், நல்லாயிருக்கீங்களா?நீங்கசொன்னஒடனேபடக்குன்னுஞாபகத்துக்குவரல,சாரிம்மா,ஒங்கவீட்டுக் காரரவுட அவுங்க அப்பா,தாத்தாதாம்மா நல்ல பழக்கம்.எல்லாரும் ஒண்ணா வேல செஞ்சிட்டு திரிஞ்ச ஆட்கள்மா என அவளிடம் சொல்லிய நேரம் என்னுள் நிழலாடிய கிட்ணய்யா முழு உருவினராயும், என் நினைவில் கால் பதித்தவராயும்/
 
  ஊரில் வேலை ஏதும் அற்ற வெயில் பொழுது அது.கூலிக்காரர்கள்  டீக்கடையிலும் பல்சரக்குக் கடையிலுமாக கூசிக்கூசி கடன் சொல்லி தனது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டிருந்த வெப்ப நாட்களின் பொழுதுகள்.
 
சுட்டெரித்தசூரியனின்சக்கரம்மனிதர்களைமட்டுமில்லாமல்அவர்களது அன்றாடப்பாடுகளை
எத்தியும்,எள்ளிநகையாடியுமாய்கேலி செய்தும் கொண்டிருந்தநேரம் நானும் என்னை போலவே உழைப்பின்மடியில்ஊஞ்சலாடிகைபிடித்துநடம்பதித்து பிழைத்தவர்களின்பாடுகளும் நிரம்பவே கேள்விக்குறியாகி கஷ்ட ஜீவனம் நடத்திக்கொண்டு நகர்ந்த புழுக்கமான பொழுதுகள்.
 
  ஒன்றில் சறுக்கிய காலை மற்றொன்றில்சரிசெய்துகையூன்றிஎழுந்திரிக்கும் முன்உடன்தோள்
சேர்ந்திருந்தவேலைக்காரர்களேகிடைத்த வேலைக்கும்,எங்காவது வேலை விசாரித்தும் ஒருவ ருக் கொருவர் தெரியாமல் போய் வந்து கொண்டிருந்த ரகசிய நாட்களின் முரட்டு நகர்வுப் பொழுதுகளில் பக்கத்து ஊரில் கிட்ணய்யா  ஒரு கிணறு வெட்டை காண்ராக்ட் எடுத்திருந்தார்.
 
  விஷயம் கேள்விப்பட்டு ஒற்றையடிப்பாதையில் சென்று கொண்டிருந்த 15 பேரில் நானும் ஒருவனாக சேர்ந்து கொண்டேன்.கையில்மண்வெட்டியும் இல்லை.மதிய நேர சோறும் இல்லை.
 
 “மாப்ளஇதுஒண்ணும்காட்ல மம்பட்டிபுடிச்சி செய்யிற வேலை கெடையாது.கெணறு வெட்டு வேல.அடிக்கிற வெயில்ல ஆள அமுத்திப்புடும் பாத்துக்க”.என என்னை நோக்கி வந்த  கிட்ணய் யாவை வார்த்தைகளை பாவமாக ஏறிட்டவனை பார்த்து “சரி,சரிவா,நீயும்தாஎன்ன செய்வ பாவம்.வந்ததுதா வந்த மம்பட்டி இல்லன்னாக்கூட பரவாயில்ல,ஒரு தூக்குச்சட்டியில கொஞ்சம் சாப்பாடாவது கொண்டு வர்ரதுக்கு என்ன என வந்த கோபத்தை மென்று தின்றவராய் சிரித்து சமாளித்து என்னை அவருடன் வேலைக்கு அலைத்து சென்ற நாட்கள் நனைந்த கோழியின் இறகு நீவி உள்ளுள்காத்துக்கொண்டபஞ்சாரத்தைஞாபகப்படுத்தியது.
 
அதுமட்டுமில்லைகிட்ணய்யாநான்நான்கிட்ணய்யாஎனபடம்விரிக்கிற பொழுதுகளில்எங்களுள் இருந்தநட்பும்நெருக்கமும்உறவும்அந்தஊரில்  பெரும்பாலுமாய்யாரிடமும்காணப்பட்டதாக
இல்லை.
 
காடுகரைகளிலும்வேலைத்தளங்களிலும்,மட்டும்நெருக்கம்கொண்டிருக்கவில்லைஎங்களுக்குள் பூத்திருந்த நட்பு.
 
 அது தாண்டிகுடும்பம் ,குடுக்கல்,வாங்கல்,நட்பு ,தோழமை கைமாத்துஎன்கிற அளவிற்குமலர்ந்து சிரித்து நின்றது.
 
   காயம்பட்ட  மனதுகளின் ஆறுதல்வார்த்தைகளாய் ஒன்றோடுஒன்றுதழுவிக்கொண்ட ஆதரவுப் பொழுதுகள்அவை.
 
 இல்லாதவர்களுக்குஇல்லாதவர்களேஆதரவாயும்,அடைக்கலமாயும்தோள்தருகிறவர்களாயும் ஆகிப்போன பொழுதுகளில் படர்ந்து கிடந்த நட்பாக அந்தஊரில் எங்களது நெருக்கம்.இத்தனை க்கும் அவர்கள் எங்களுக்கு சொந்தமோ உடன் பிறந்தவர்களோ கிடையாது.
 
  வேற்று  ஜாதிகளுக்குள்  உறவுசொல்லி  அழைத்துக்  கொள்கிற  பழக்கத்தை தன்னகத்தேமுடியி ட் டு பாதுகாத்து வைத்திருந்த கிராமங்களில் எங்களது ஊரும் ஒன்றாய்/
 
  பிழைப்பு தேடி ஊர்விட்டு ஊர்வந்தவர்களிடம் மிகுந்து தெரிந்த உழைப்பின்  வாசனையும்,
வியர்வையின்தடமும் எங்களைஅவர்களின்பால்ஈர்த்துநேசம் கொள்ளச்செய்தது.
 
 அப்படியான ஈர்ப்பு விடிந்தெழுந்த ஒரு நாளில் மாப்ள,மாமா,,,என நேசம் கொள்ள வைத்தது. அந்த  ரசாயண மாற்றம் எங்களில் நிகழ்ந்த அந்த  கணமே எங்களின் இறுக்கத்தையும், நட்பை யும், நேசத்தையும்,உறவையும் கொண்டாடி மகிழ்ந்ததாய்/
 
   நான்,கிட்ணய்யா,அவரது மகன் இன்னும் சில பேர் என ஒரு பழைய வீட்டை இடித்துக் கொண்டிருந்தோம்காண்ட்ராக்டவேலையது. இடிபாடுகளுக்குள்ளாக  நின்ற  பழைய  வீட்டை
இடித்து தரை மட்டமாக்கி சுத்தமாக்கி தரவேண்டும்.
 
  வேலைஆரம்பித்தஇரண்டாவதுநாளோ,மூன்றாவதுநாளோஎன்கிறதாக நினைவு.
 
சுட்டெரிக்கும் மதிய வெயிலில் கிட்ணய்யா மற்றவர்கள் என  ஆளாளுக்கு  ஒரு வேலையை செய்த் கொண்டிருக்க பழைய சுவரின் மீது கால் பரப்பி சம்மட்டி அடித்துக்கொண்டிருந்த கிட்ணய் யாவின்மகன் சுவரோடு சுவராக சேர்ந்து இடிந்து விழுந்து இடிபாடுகளுக்குள் குற்றுயிராக கிடந்த நேரம். பாதி இடிந்து மீதி இடிந்து விழ தயாராக காத்திருந்த சுவர் இடிபாடுகளின் தலைக்கு மேலாக/
 
 தொக்கி நிற்கும்  மிச்சச்சுவர்  தன்மீது   விழுந்துவிடுமோ   என்கிற  பயத்திலும்,யோசனையிலும் மற்ற அனைவரும் கொஞ்சம் விலகியும் யோசனையாயும் நின்ற நேரம் நானும், கிட்ணய்யா வும்தான் இடிபாடுகளுக்குள் கிடந்தவரை மீட்டு தூக்கி வந்தோம்.
 
  சோடா தெளிப்பு,தண்ணீர் கொடுத்தல்,உடல் நீவி விட்டது  என்கிற  முதலுதவிகள் முடிந்து எங்களது சித்தப்பா வீட்டில் நின்ற மாட்டு வண்டியில்தான் அவரை பக்கத்து டவுன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனோம்.  பிழைத்தது பெரும் பாடு என்றார்கள்.
 
  அவர் வீடு வந்து சேர்ந்த மறு வாரத்தில் ஒரு நாள் ஊர் எல்லை அய்யனார் கோவிலில் சென்று பொங்கல் வைத்து விட்டு வந்தோம் நானும் கிட்ணய்யாவுமாக/
 
அன்று பொங்கிய பொங்கலிருந்து உதிர்ந்த சோற்றுப் பருக்கையாய் பிழைப்பு  வேண்டி ஆளுக்கொரு பக்கமாய் பிரிந்து போன இந்த 30 ஆண்டுகள் கழித்து இன்று கிட்ணய்யாவும் அவரது மகனும்  இல்லை.
 
  ஆனால் அவர்களது மகன் வயிற்று பேரனும்,பேரனின் சம்பந்தகாரர்களும் இப்பொழுதுமாய் நிலைத்து நின்று என்னோடு பேசியும் நட்புறவாடியும் நலம் விசாரித்தும் விட்டுமாய் போகிறார்கள்.
 
இந்த உறவு இதன் மூலம் துளிர்க்குமா,கிட்ணய்யாவின் வாரிசுகளோடு    எனது வாரிசுகளும்நட்பாய்படர்ந்துநிற்பார்களா?படரவேண்டும்எனஆசைதான். பார்த் துக்கொண்டிருக்கிறகாலம்பதில்சொல்லட்டும்.கொஞ்சம்வழிவிட்டுநிற்போம்.
 
வந்திருந்தவளுக்குபணம் கொடுத்து கைகூப்பி அனுப்புகிறேன்,நட்புடன்   
  சிரித்தவாறு/     

7 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

உறவுகள் துளிர்க்கும் நண்பரே
அருமை
தம 2

திண்டுக்கல் தனபாலன் said...

ஊருடுவும் வெளிச்சம் புலப்படுகிறதாய்...

KILLERGEE Devakottai said...

உறவுகள் தொடரட்டும்....
தமிழ் மணம் 3

Thulasidharan V Thillaiakathu said...

மிச்சச் சுவர் மனதில் நிறைந்து நிற்கின்றது! அந்த மிச்சச் சுவர் இந்த உறவுகளை வளர்க்கலாம் என்ற நம்பிக்கைதான்....

அருமை!

UmayalGayathri said...

உறவும், நட்பும் மீண்டும் மீண்டும் துளித்துக் கொண்டே செல்லட்டும்.

தம 4

படம் அழகு.

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் உமையாள் காயத்தி அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/