10 Mar 2015

இலைக்காம்பு,,,,

கால்முளைத்துநடந்துவந்தவைகளாய்ஒன்றன்பின் ஒன்றாய் வரிசை காட்டி சிலுசிலுத்து நகர்கின்றன மஞ்சளும் பச்சையும் இளம்பழுப்புமாய் நிறம் காட்டி தெருவுக்கே கட்டியம் கூறி வந்த இலைகள்.

குவித்துவைத்தவாய்வழியாய்ஊதுகிற காற்றுக்கு எவ்வளவு பலம் அல்லது அதிலிருந்துவருகிறகாற்றுஎவ்வளவுதூரத்திற்குஎங்களை இழுத்துப் போகும் எனத்தெரியவில்லை என்பதுபோலும் அதற்கு கட்டுப்பட்டது போலவுமாய் நகர்கின்றஇலைகளின்கைகோர்ப்பில்தெரிந்து காட்சிபட்டது அழகா அல்லது இன்னதெனபுரிபடாதஒன்றா என அந்த மதிய வெயிலில் சரியாக புடிபட்டுத் தெரியவும் இல்லை.

அடித்தவெய்யிலின்கிரணங்கள்பட்டுவெட்கிக்கூசிதலைக்குனிந்தவைகளாய் இல்லாமல்தலைநிமிர்ந்து கொண்டேவந்தஇலைகள்மீது பாதி படர்ந்தும் மீதி அதுஅற்றுமாய்இருந்தரோட்டையும்இலைகளையுமாய்தொட்டுக்காண்பித்து விட்டுச்சென்றதாய்/

இளம்பிஞ்சுகளின்நடமிடலுக்குதடையும்காவலும்என்னவேண்டிக்கிடக்கிறது? வேண்டாம்தானே,?தன்திசைஅறிந்தும்தன்போக்குக்காட்டியும்அது பாட்டுக்கு வருகிறஅதற்குஎதற்குபோக்குவரத்துபோலீஸாரும்சிவப்புவிளக்குசிக்னலும்,,,? 

எப்படியாய்வேண்டுமானாலும்இருந்துவிட்டுப்போகட்டும்.என்னஇப்பொழுது அதனால்கெட்டுப்போனதுஎன்றில்லாவிட்டாலும்கூடஅந்தஇலைகளின்நகர்வு இவன் மனம் பாதித்து நின்று விட்டதுதான்.

இவன்இளையமகன்மற்றும்இவனதுஇருசக்கரவாகனம்என்கிறகைகோர்ப்பின் நகர்வில்வந்துகொண்டிருந்தவேளைமதியம்1.30அல்லதுஇரண்டைநெருக்கியிரு க்கலாம்.

ஓடோடிவந்தஇலைகள்இவனது இரு சக்கர வாகனத்தின்முன்சக்கரத்தைத் தொட்ட போது இருந்த உணர்வு இப்பொழுது இல்லை,அதுஏன்எனத்தெரிய வில்லை,அதுஅப்படித்தான்ஒன்றைதொடும்போது இருக்கிற உணர்வு அதை காட்சிப் பொருளாய் பார்க்கிற போது இருப்பதில்லை போலும்.

காலையிலேயே சொல்லிவிட்டாள் மூத்தமகள்.இன்று ஸ்பெஷல் கிளாஸ் சீக்கிரம்போகவேண்டும்என/இவனதுநண்பனின்பெண்ணின் திருமண நிச்சய தார்த்திற்குசெல்லவேண்டி இருந்தது இவன்.மனைவி தெருக்காரர்களுடன் சேர்ந்துமதுரைக்குஒருதிருமணத்திற்குசெல்லவேண்டும்எனச்சொல்லியிருந் தாள்.இப்பொழுது மிஞ்சியிருப்பது இளைய மகன் மட்டுமே,அவனை இவ னுடன்சேர்த்துநண்பன்வீட்டு விசேசத்திற்குகூட்டிப்போக வேண்டியதுதான். செய்கிற மொய்க்கு இருவரின் வருகையும்,பதிவும்அனாவசியம் என்றால் மதியச்சாப்பாடுகடையில்சாப்பிட்டுக்கொள்ளவேண்டியதுதான்என்கிற நினை வுடனாய்போய்வந்து கொண்டிருந்த வேளையைமதியம்1.30ஐதக்க வைத்துக் கொண்டிருந்தது எனச்சொல்லாம்.

இனிஎங்காவதுகடையில்சாப்பிட்டு விட்டு மதுரைக்குப்போயிருந்த மனைவி யையும், ஸ்பெஷல் கிளாஸிற்குப்போயிருந்த மகளையும் பற்றி கேட்க வேண்டும்,எந்நேரம் வருவார்கள் வீட்டிற்கு என்ன ஏது என,மகள் மதியம் வீடுவந்துதான் சாப்பிடுவாள்,அவளுக்கும்சேர்த்துகடையில்பார்சல்வாங்கிக் கொள்ளலாம்.அக்காவோடுசேர்ந்து சாப்பிடுவது இளைய மகனுக்கு மிகவும் பிடிக்கும்.

ஆனால்சண்டைஎன வந்து விட்டால் மன்னர் காலத்துப்போர்கள் தோற்றுப் போகக்கூடும்,அப்படி சண்டையிடுவார்கள்.

இவனதுமனைவிகூடவைவாள்,இந்தக்கொடுமையகண்டமாஎந்தவீட்லயாவது,,? அப்பாமடியில்படுக்குறதுக்குஇப்பிடியா வகைதொகையில்லாமயா அடிச்சிக் கிறுவாங்க,ஏண்டிஅவந்தான்ஆம்பளப்பையன்அப்பிடிச்செய்யிறான்னா பொம் பளப் புள்ள ஒனக்காவது அறிவு வேணாம்,நாளைக்கி இன்னொரு வீட்ல போயி வாழப் போறவநீயி,ரொம்பத்தானஅழிச்சாட்டியம்பண்ணாத,என்பாள்.

கடிகாரத்திற்குள்ளாய்இருக்கும்சின்னமுள்ளும்,பெரியமுள்ளும்விநாடிமுள்ளு மாய் கைகோர்த்து நகர்கிற காட்சியை சொல்கிற அவளின் ரசனை ஆகிற மணியைஅழகுப்படுத்திக்காட்டும்,இப்படியானஒவ்வொன்றிலுமான அவளது பார்வையும்ரசனையும்அவளதுசெயலையும்,அவளையும்மேம்படுத்திக்காண்பி
க்கிற போக்கு இவனுக்கு மிகவும் பிடிக்கும்.

அந்தப்பிடித்தலினூடாய் மகளிடம் சொல்வான், ஒங்க அம்மா சும்மா சத்தம் போடுவாளேஒழியஅவளுக்குஓம்மேலகோவமெல்லாம்கெடையாது,அவுங்க காலத்துலபெத்ததகப்பன்ட்ட கூட அவ்வளவு ஈஸியா பொம்பளப் புள்ளைக பேசிறமுடியாது, இப்ப நீயி தகப்பன் மடியில படுத்து உருண்டுக்கிட்டு  கத பேசிக்கிட்டு இருக்கயா அதுனாலயே அவளுக்கு கொஞ்சம் ஒரு மாதிரியா தெரியலாம்ரெண்டாவதுமிதமிஞ்சிப்போனஜாக்கரதைத்தனம்.என்பான்இவன். அம்மாதிரியான வேளைகளில்/

மிகவும்குறுகலாய் அல்ல,நன்றாகவே அகலம் காட்டி இருந்த அந்த சாலை ராமன் பட்டி சாலைக்கு மாற்றாய் அமைந்திருந்தது.

ராமமூர்த்திசாலைதிரும்பிநேராகஎங்கும்திரும்பாமல் நூல்ப்பிடித்து வந்தால் வருகிறதியேட்டர்ஆஸ்பத்திரிஒயின்ஷாப்இத்தியாதி,இத்தியாதிஎனஎல்லாம் கடந்து ரயில்வே கேட்டை எட்டித்தொட்டு வேகம் காட்டி ஓடுகிற சாலை விரித்து வைத்த கறுப்பு வாழை இலைபோல் தன் நிறம் காட்டி விரிந்து எட்டிப்பிடிக்கிறகைக்கு எட்டாமல் தூரப்போய் விழுந்தது போல கண் கட்டி வித்தை காட்டி அரசு மருத்துவமனை மற்றும் அரசு அரசு மேல்நிலைப் பள்ளியை ஒட்டித்திரும்புகிற சாலையாய் இருந்திருக்கிறது.

அவ்வளவுதூரம்போய் திரும்புவானேன் எதற்கு போக பஸ் மற்றும் கனரக இலகுரகவாகனங்கள்பயணிக்கிறசாலையில்எதற்குப்போய்எனநினைப்போர்
க்கும்போய்விடலாம்விரைவாகசாலையில்எனஉந்துதலுடனுமாய்வருவோர்க் கானமாற்றுப்பாதையாயும்பிள்ளைகுட்டிகளுடன்பாதுகாப்பாயும்காலாறாவுமாய் நடந்துசெல்வதற்கான ஏற்பட்டிருக்கிறஎளிமையானவழியாகவேஇருந்திருக் கிறது இதுநாள்வரை இந்தப்பாதையை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

பஞ்சுமில்லைஒட்டிஇருக்கிறலட்சுமிநகருக்குஇந்தவழியாகத்தான்செல்கிறார்
கள்இவனுக்கு நினைவு தெரிந்த நாள்முதலாய். 

என்னஆள்அரவமற்றமதியநேரம்மட்டும்நடந்து வந்துவிடமுடியாது பயமாய் இருக்கும்,ஏன்அப்படிஎனச்சொல்வதற்கில்லைவிரிவாகஎன்றாலும்கூடஓரிரு முறைநடந்தசம்பவங்களைகேள்விப்பட்டபோதுஅப்படியானபொழுதுகளில்
ஒற்றையாய் தனித்து வருவது உசிதமல்லஎனத் தோணியது, எனலாம்,

காவேரிஅக்காஎன்பதாகத்தான் நினைக்கிறான். பஜாரிலிருந்து வரும் போது இந்தத்தெருவழியாகவரும்பொழுதுஅவளதுகைப்பையிலிருந்தசாமான்களைப் பிடுங்கிக் கொண்டுபோய்விட்டான்ஒருவன் என்றார்கள்.

நல்லபசிகொண்டமதிய வேளை மார்க்கெட்டுக்குப்போய் காய்கறி வாங்கிக் கொண்டு பஜாரில் வீட்டில் இல்லாத ஒன்றிரண்டு சாமான்களை வாங்கிக் கொண்டுவந்தபோதுவழக்கமாய்அந்நேரம் பாண்டியன் காலனிக்கு போகிற மினி பஸ் போய் விட்டிருந்தது.சரி இப்படியே பஸ்டாண்டிலிருக்கிற கடை யில் ஒரு வடையை  வாங்கிசாப்பிட்டு விட்டு கிளம்பி நடந்தால் சரியாக இன்னும்கால்மணியில்வீட்டிற்கு போய்விடலாம்.சாப்பிட்டவடையின் கனம் வயிற்றில் குடிகொண்டிருக்கிற வேளையினூடாகவே/ என்கிற நினைப் புடன் பஸ்டாண்டிலிருந்து கிளம்பி ராமமூர்த்தி ரோட்டில் விழுந்து வந்து கொண்டிருக்கிறபொழுதுதான்இந்தவழி போனால் என்ன என்கிற எண்ணம் தோண இந்தச் சாலை வழியாய் வந்து விட்டாள்.

சாலையின் நுழைவாயிலில் அவள் காலடி எடுத்து வைத்த வேளை அங்கு நடமாட்டம்இல்லாமல்போனதாஅல்லது நடமாட்டம் சுத்தமாக இல்லாமல் போனவேளைஅவளின் நுழைவுஇருந்ததாஎனத்தெரியவில்லை.திக் திக்கென இருந்தாலும் நடந்து விட்டாள்.அவள் நடந்த தூரம் சிறிதே ஆனாலும் வந்த வினை பெரிதாக இருந்தது. கையில் பளபளக்கும் கத்தியுடனும், கஸ்தூரி அக்காவின்முன்னால்நின்றுவிட்டான்,சாலையின்ஓரமாய்வீடுகள்அவ்வளவாய் முளைத்துக்காணப்படாதபகுதியில்ஓர்ஓரமாய்நின்றிருந்தவன்அக்கா சாலை க்குள்நுழைந்ததும்ரெடியாகிவிடுகிறான். 

கையெல்லாம்ஈரம்பிசுபிசுப்பாய் இருக்க ஒட்டிக்கிடந்த கத்திபிடித்திருந்த கையும்மனதும்படபடத்திருக்கஅதேபடபடப்புடனேயே அக்காவின் முன்னே வழிமறித்து நின்று விடுகிறான், 

கணமும்தாமதிக்கவில்லைஅக்கா,ஏண்டா இப்பிடிப்பண்ற பாத்தா ஏங் தம்பி போலஇருக்க,ஒழுக்கமா ஒழச்சி சாப்பிட வேண்டியதுதான,இப்பிடி கையில கத்திய தூக்கிட்டு திரிஞ்சயின்னா யாராவது மனத்துணிச்சல் உள்ள வங்க பதிலுக்கு ஏதாவது பண்ணீட்டா என்ன செய்ய செய்வ,,,,,என பேசிக் கொண் டே கீழே குனிந்து எடுத்த கல்லை அவன் மீது வீசும் முன்னாய் அக்கா வின் கையிலிருந்த பையைப்பிடுங்கிக்கொண்டு போய் விட்டான்,

அடக்கழுதநல்லபடியாச்சொன்னாகேக்கமாட்டஒனக்கு,,,,,,,,,,எனகையிலிருந்த கல்லைஅவனை குறி பார்த்து எறிந்து விட்டாள்,எறிந்த கல் குறி தவறாது அவன்முதுகில்விழுந்துவிடஅடியின் வேகம் தாங்காமல் உட்கார்ந்து விடுகி றான்,பதறிப்போன அக்கா அவன் அருகே போய் முதலில் கையிலிருந்த கத்தியைப்பிடுங்கி தூர எறிந்து விட்டு மூதேவி முண்டம், இந்நேரம் கல்லு படாத யெடத்துல பட்டு ஏதாவது ஆயிருந்துச்சின்னா கிறுக்குப் பயலே என அவன் கையிலிருந்த இவளதுபையைவாங்கி அதனுள்ளாய் இருந்த தண்ணீ ரை கொடுத்துக் கொண்டிருந்த நேரம் எங்கிருந்து வந்தது எனத்தெரியவில் லை அவனுள்ளாய் இத்தனை அழுகை,ஓவென அழுதே விட்டான்.அக்கா மன்னிக்கிருங்க என காலில் விழுந்தவாறே,,,,,,,,,/

அவன்அழுததும்காலைப்பிடித்ததும்அவருக்குஎப்படித்தெரிந்தது எனத் தெரிய வில்லை வந்து விட்டார் கந்தன் சார்,அந்த மதிய வேளையில் அவரு க்கு என்ன வேலை அங்கு எனக்கேட்கமுடியாது.அவர் எந்நேரம் வீட்டை விட்டு வெளியேவருவார்,எந்நேரம்வீட்டிற்குள்இருப்பார்என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.அவர் சார்ந்திருந்த பொதுநலஇயக்கமும்அதன்வேலையும் அவரை அப்படியாய் பதப்படுத்தி வைத்திருந்தது.அவர் ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியராய் இருந்தார்,பள்ளிக்கு செல்லும் நேரமும்,பாடம் கற்றுக்கொடுக் கிற பொழுதும் அவரில் எப்பொழுதும் நன்றாகவே இருந்திருக்கிறது.

எதையும்ஒருஅர்ப்பணிப்புடனேயேசெய்கிற அவர் அவர் சார்ந்திருந்த பொது நலஇயக்கப்பணிகளையும்அப்படியேசெய்துவந்தார்.அப்படியானஅர்ப் பணிப்பு மனிதரான அவரிடம் இவனுக்கு தொடர்பு ஏற்பட்டது எப்பொழுது, என சரியாக ஞாபகம் இல்லை..ஆனால் அவருடனான கண்ணி முடிச்சு அவர் நடத்திய ஒரு தொழிற்ச்சங்க பத்திரிக்கை மூலமாய்த் தான் ஏற்பட்டது என உறுதிபடக்கூறலாம்.

அவரதுபத்திரிக்கைக்காககதைகள்தேடிக்கொண்டிருந்த காலமாயும் விஷயத் தேடல்தேடிஅலைந்த நேரமாயும் அது இருந்தது.அந்நேரம் இவனாய் போய் அவரிடம்மனம் அவிழ்த்தது தற்செயலா அல்லது திட்டமிட்டதா எனத் தெரி யவில்லை.அவர்தேடியதுஇவனிடம்இருந்ததுஎனநம்பினார்.பரஸ்பரம்இருமனங் களும்பேசிக்கொண்டஒருதோழமைபூத்தநாளொன்றிற்குசிறிதிலிருந்துஇன்று வரையானஅவரதுபடர்வுஇவனைகொஞ்சமல்ல,நிறையவேநெகிழ்ந்துபோகச் செய்திருக்கிறதுதான்பலசமயங்களில்/

பெரியபெரியவீடுகளாய்முளைத்துக் கிடந்தஅந்தவீதியில்இவரதுவீடு மட்டும் தெரு ஓரமாய் கொஞ்சம் சிறியதாய் காணப்பட்டது குறித்துக்கேட்கும் சமயங்களில் பறவைக்கு எதற்கு வீடு,கூடு போதாதா என்பார்.உண்மைதான் அதுவும் என இவன் கட்டிய வீடு போலான கூடு பற்றியும் கூட்டை கட்டித் தந்தவர் பற்றியுமானவற்றை அவரிடம் சொன்னபோது  அது அப்படித்தான் எனதனக்கு பெயிண்ட அடித்துக் கொடுத்தவரைபற்றியாய்கதைகதையாய்ச் சொன்னார்,அந்தக்கதையைக்கேட்டதும்இவனுக்குநேர்ந்தகொடுமையை விட அது பல மடங்கு அதிகமாகித்தெரிந்தது.

சிமிண்ட்பூக்கற்கள்பார்க்கஎவ்வளவுஅழகாக இருக்கிறதோ அவ்வளவு ஆபத் தாயும் இருக்குமோ என எண்ணவைத்ததுண்டு இவனை,ஆனால் அப்படி யாய் ஆபத்து பட்டு ஒன்றும் தெரியவில்லை.தெருவின் இரு ஓரமுமாய் பார்டர் கட்டியது போல் சிவப்புக்கலர் கற்களையும் இடையாய் சாம்பல் வர்ணக்கற்களையும் பதிக்கப்பட்டிருந்ததெருஅவரதுவீடுஇருந்தமுனையில் வந்து கத்தரித்தாற்ப்போல் முடிந்தது.

அந்த முடிவிலிருந்து அவர் கிளம்பிதெருவில் இறங்கிவிட்டால் எங்காவது வெளியூர் பயணம் போகிறார் என அர்த்தம் என்பார்கள், அவரைப் பற்றி விளையாட்டாகவோஅல்லதுநிஜமாகவோ ஒரு கதை சொல்வார்கள். தமிழ் நாட்டில் இருக்கிற பஸ்களில் அதிகமாய் பயணிக்கிற நபர் அவராய்த்தான் இருப்பார்என/தவிரஅவர்சார்ந்திருந்ததொழிற்சங்கம்அவருக்கெனஇன்சூரன்ஸ் செய்து வைத்திருந்தது எனவுமாய்ச் சொல்வார்கள்.

அப்படியாய் வீட்டிலிருந்து வெளியே கிளம்புகிற நாளன்றில் ஒன்றில்தான் இன்றுகாவேரிஅக்காவைவழிமறித்தவன்அன்றுஅவரை மறிக்கவும் அவனை அடித்துத் துவைத்து காயப்போடும் போது அவனது கைலிருந்த கத்தியை பிடுங்கி எறிந்து விட்டு கையில் இருபது ரூபாய்யைகொடுத்து நாளைக்கு வந்து என்னை பார் எனச்சொல்லிவிட்டு போய்விட்டார்,

அவனும் சரி என நகன்று விட்டான்,அன்று நகன்றஅவனின்உருவம் இன்று காவேரி அக்காவின் காலில் விழுந்து நிற்பதாய்/

இன்னும்திருந்தலையாஇந்தமூதேவி,,,,என்கிறசப்தத்துடன் வந்தவர் காவேரி அக்காவின் காலிலிருந்து அவனைத்தூக்கி நிறுத்திவிட்டு சொன்னார்.

அடிப்படையிலநல்லபையந்தான்,காலை ஷிப்ட்டு,மதியம் ஷிப்ட்டு, ராத்திரி ஷிப்ட்டுன்னு மில்லுல ஒழுக்கமா வேலைக்கு போயிக்கிட்டு வந்துக்கிட்டு இருந்தஆளுதான்.மில்லுக்கு போயிட்டு வந்து தீப்பெட்டிகட்டுஒட்டுவான், குச்சிஅடுக்குவான்,இவன்சோட்டுபையங்கெல்லாம், மில்லுக்கு போயிட்டு வந்து டீக்கடையில சினிமா தியேட்டர்ல,ஒயின் ஷாப் பக்கம்ன்னு திரியும் போது இவன் மட்டும் இப்பிடி இருந்தான்,மில்லு சம்பளம் தீப்பெட்டி கட்டு குச்சிஅடுக்குற வருமானம்ன்னு கொஞ்சம் செழிப்பமா இருந்த வேளையில தான்மில்லுல ஏதோ பிரச்சனன்னுமில்ல மூடிட்டாங்க, மில்ல மூடுனவங்க நல்லாயிருக்காங்க, பாவம் இவங்க கெட்டுப்போனாங்க.

மில்லமூடுனநாள்லயிருந்துஇவனும்பாக்காதவேலையில்லபாவம், கொஞ்ச நாள் காய்கறி யேவாரம் கூட பாத்தான்,எங்க தெருப்பக்கம் வரும் போ து நான்இவன்கிட்டமட்டும்தான்காய்கறி வாங்குவேன்,வீட்லகூடசத்தம் போடு வாங்கமார்க்கெட்டவிடஇவன்கிட்டவெலைகூடன்னு,பரவாயில்லஒருநாளை
க்குஎவ்வளவோசெலவழிக்கிறோம்,அதுலகூடரெண்டுகாசுபோனதாநெனைச்சி க்கு வோன்னு நாந்தான் சமாதானம் சொல்லி சமாளிப்பேன்.

அப்படியெல்லாம்இவனுக்காகபேசிசெஞ்சி தெருக்காரகளப் பூராம் காய்கறி வாங்க வச்சிக்கிட்டு இருந்த பொழுதுகள்ல தீடீர்ன்னு ஒரு நா காணாமப் போனான்,என்னாஏதுன்னுகேட்டப்பசொன்னாங்க,முன்னமாதிரி இல்ல இப்ப அவன்ஒருமாதிரிதூர்ந்துபோனான்னு.அப்படியான்னு,,,,கேட்டுக்கிட்டு இருந்த ஒரு நா தற்செயலா ரோட்ல அவனப் பாக்கும் போது தெரிஞ்சது.சரி கழுத அவனுக்குஅப்பிடிஇருக்க பிடிச்சிருக்குன்னு.அப்பிடியான நெனப்புல இருந்த வேளையில  ஒரு நாளன்னைக்கி மதியம் நா ஊருக்கு போயிட்டு வரயில தண்ணீயப்போட்டுட்டுஏங்கிட்டயேகத்தியக்காட்டிமடக்கீட்டான்,வந்தகோவத்து
க்குதூக்கிபந்தாடிட்டேன்,,,,,அதுக்கப்புறம்எங்கயாவதுஎன்னயப் பாக்கும்போது தலையக்குனிஞ்சிக்கிருவான்.அன்னைக்கிஅப்படிப்பாத்தவனஇன்னிக்கிஇப்பிடி த்தான்பாக்குறேன்எனச்சொன்னஆசிரியர்புத்திஇருந்தாஒழுங்காபொழச்சிக்க, இல்லசீரழிஞ்சிபோவசீரழிஞ்சி,,,,,,எனச்சொல்லிஅனுப்பிவிட்டுகஸ்தூரிஅக்கா வையும் தன் வீடுவரைஅழைத்துஅழைத்துவந்துதண்ணீர்கொடுத்து அனுப்பி வைத்தார். 

நன்றல்லநன்றுதான்.நன்றும்நன்றல்லதான்,,,,என்கிறவிகிதாச்சார பிசைவில் அமைந்திருந்ததெருவில்கால்முளைத்துநடந்துவந்தவைகளாய்ஒன்றன் பின் ஒன்றாய் வரிசை காட்டி சிலுசிலுத்து நகர்கின்றன மஞ்சளும் பச்சையும் இளம்பழுப்புமாய் நிறம் காட்டி தெருவுக்கே கட்டியம் கூறி வந்த இலைகள்/

8 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

தொடக்கிய விதமும் முடித்த விதமும் நன்று.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

vimalanperali said...

வணக்கம் ரூபன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

'பரிவை' சே.குமார் said...

அருமையான பகிர்வு அண்ணா...
வாழ்த்துக்கள்.

KILLERGEE Devakottai said...

ஸூப்பர் நண்பரே...
தமிழ் மணம் 2

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
அருமை
தம +1

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... அருமை தோழர்...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/