6 Aug 2015

சொல்பரப்பு,,,,,

சொன்னசொல்கடந்துசொன்னவரேமனம்தங்கிப்போகிறதருணமாகிப்போகி றதாய் இந்த மாலைவேளை.

சுட்டெரித்தசூரியன் இதுவரைவெளிக்காட்டிக் கொண்டிருந்த தன் உக் கிரம் குறைத்து மாலை வெயிலுக்கு மாறிப்போன இனிமைப் பொழு தாய் அது.

மண் மீதும்,மண்ணில் நிலை கொண்டமனிதர்கள்மீதுமாய் படர்ந்தி ருந்த வெயில் அகலமாய் தன் கரம் விரித்து படர்ந்திருந்த பொழுது.

செந்தில்முருகன்பஸ் இன்னும்வரவில்லை. 5.40ற்கும் இல்லாமல் 5.20ற் குமாய் இல்லாமல் 5.30 ற்குநூல்ப்பிடித்தாற்ப் போல் சரியாக வந்து விடு கிற பேருந்து மிதமாகவோ அல்லது கூட்டம் காட்டியோ இல்லாமல் நடு வாந் திரம் தாங்கி பயணிகளை ஏற்றி வருகிற பாட்டு பஸ்ஸாய்/
5.30 ற்கு அங்கு ஏறினால் போய் இறங்குகிற அரைமணி நேரமும் பாட்டுகேட்டுக்கொண்டே போகலாம்.விரைவின் தடதடப்பிலும் வே கக் குறிப்புகளி லும் நடத்து னர் மற்றும் ஓட்டுனரின் சப்தத்தையும் டிக்கெட் கேட்கிற மிரட்டலையும் மீறி பேருந்தின் ஆரம்பம் தொட்டு முடிவுவரை பேருந்தினுள்ளாய்விரைந்துவியாபித்துநிற்கிற இளைய ராஜாவின் பாடல்கள்என்னையும் என் போன்றவர்களையும்  தாலா ட்டி அல்லது மனம் ஆற்றி இறக்கிவிடுவதாய்/

இதில்எந்தடிரைவர் எந்தக்கண்டக்டர் என கணக்கில்லை. கறுப்பாய் ஒல்லி யாய் வருகிறநடத்துனருக்குஎப்பொழுதுமேபாட்டு என்றால் அலர்ஜி என சொல்லமுடியாவிட்டாலும் எப்பொழுதாவது ”அதக் கொஞ்சம் நிப்பாட்டு னாத்தான்” என்ன எனச்சொல்கிற வேளையில் குள்ளமாய் குண்டாய் இருக்கும் ஓட்டுனர் அட அதவிடுப்பா அது தொண்டையிலஎதுக்கு கை வைக்கிற” என்பார்.இப்படியாய்ஓட்டுனர் சொல்லுகிறவேளையில்நடத்துனரும்,நடத்துனர்சொல்லுகிறவேளை யில் ஓட்டுனருமாய் மாற்றுக் கருத் துக்களை முன்னிருத்தி பாடல்க ளைநிறுத்தாமல்ஒலிபரப்பிக் கொண்டேசெல்கிற நேரமாய்த் தான் அமைந்து போவதுண்டு.

முன் மற்றும் பின் வாசல்களுக்குதலா ஒவ்வொருவர் என்கிற கணக் கில் இரண்டு நடத்துனரையும் வட்டக்கட்டை ஒன்றே இருக்கிற காரணத்தினால்வேறு வழியில்லாமல் ஒரேஒரு ஓட்டுனரை யும் கொண்ட அந்தப் பேருந்து எத்தனை ஓட்டுனர்களை மாற்றி தன் னில்அமரவைத்துக்கொண்டபோதிலும் கூடவிடாப்பிடியாய் இளைய ராஜாவின்பாடல்களைஒலி பரப்பச்செய்து கொண்டேதான் தன் வழிப் பாதையில்பிசகாமல்தன் பயணப் படுகிறதாய்/

60 பேருக்கும் குறையாமல் அமரக் கூடிய இருக்கை வசதிகளை தன்னகத்தே கொண்ட பேருந்தில் கலர்க் கலர் லைட்டுகளும் அலங் காரப்பில்லாமல் வெல்வெட்துணி போர்த்தி தைக்கப் பட்டிருந்த இருக்கைகளும் இருக்கைகளின்பின்னாலும்பேருந்தின் உட்புறமா யும் ஒட்டப்பட்டிருந்த ரோஸ்க் கலர்மைக்காவும் வானத்திற்கும், பூமிக்குமாய்நட்டுவைத்த வெள்ளிக் கம் பிகளாய் பேருந்தினுள்ளே வரிசை காட்டி நின்றிருந்த கம்பிகளின் பளிச்சிடலும் கேட்கிற பாட லை இனிமை கூட்டி ரசிக்கs செய்வதாயும், இதந்தருகிறதாயும்/
இப்படியான இதந்தருகிற மனதுடன்பயணித்த போனவாரம் வெள்ளி க் கிழமையின் மாலைப் பொழுதில் பேருந்தினுள் கேட்டுக் கொண் டிருந்தபாடலையும்மீறியசப்தம்இருக்கையில்அமர்ந்தவாறுகாக்காத் தூக்கம் போட்டுக் கொண்டி ருந்தஎன்னை விழிக்கச் செய்ததாக.

”சனியனே,எங்கிட்டாவது போய்த் தொலைய வேண்டியதுதான” என அவளதுஅருகில்அமர்ந்திருந்தபிள்ளையைப் போட்டு அடித்தவளாய் சொல்கிறாள். நன்றாகயிருந்தால் எட்டு அல்லது பத்துவயது இருக்க லாம்பிள்ளைக்கு,பெண்பிள்ளை.உடுத்தியிருந்ததிலும்அவளதுஇருப்பு மாய்அழுக்காய் தென்பட்டாள்.

”அப்பனப்போலவேபுள்ளவந்து வாய்ச்சிருக்குபாரு என்றாள். புள்ளை யவும் மொகரக்கட்டையும் பாரு,” என்றவளின் மடியில் ஒரு பழைய சூட்கேஸீம், அவளது காலுக்குக் கீழே பழைய துணி அடைக்கப்பட்டி ருந்த வயர்க் கூடையும் இருந்தது. பிள்ளையின் தகப்பன் கோயம்பு த்தூருக்குகட்டிடவேலைக்குஇருப்புக்கூலியாய் போனவன் இன்னும் திரும்பவில்லை என்றாள்.

இங்குவீட்டில்ஒன்றும்இல்லை,கூலிக்குப்போகஇவளுக்கும் வேலை இல்லை,காடுகரைகள் காய்ந்து கிடக்கிறது என்றாள்.என்ன செய்ய வேறவழிதெரியாமஅம்மாவீட்டுக்கு போய்க்கிட்டிருக்கேன் மதுரைக் கு என்றாள் .பிள்ளையைஅடிப்பதையும்வைவதையும் நிறுத்தாமலே யே/என்றுமே நிற்காத பாடல்கள் அன்று ஒருநாள் பேருந்தில் கேட்க வில்லை.

உள்ளூர்க்காரரான டீக்கடை மாரிச்சாமியிடம் கேட்டால் அது அப்பிடி த்தான் சார். நேரமாச்சுன்னா அப்பிடியே சிவகாசி வழியில போயிரும் சார் என்பார்.சார் இன்னைக்கி சாய்ங்காலம் மூணு மணிக்கு போக வேண்டிய வண்டி மூணே காலுக்கோ, மூணி அஞ்சுக் கோதான் போச்சு சார். அப்பி டியே அஞ்சு நிமிசம் கா மணி நேரம்தான் தாம் சம்ன்னு வச்சாகூட இந் நேரம் வந்துருக்கனுமே சார் மணி ஆற நெருக்கி ஆகப்போற இந்த வேளையில என்பார் நாட்களின் நகர்வில் என்றாவது ஒரு நாள்.

வேப்பமரங்களும்,புளிய மரங்களும் ஆலமும்,அரமும் நெருக்கம் காட்டி அல்லாமல் இருந்தாலும் வரிசைதப்பிமுளைத்துதன்இருப்புக் காட்டியும் ஆகுருதி காட்டியுமாய் நிற்கிற கண்மாய்க் கரையில் அழகு காட்டி நின்றிருந்த டீக்கடையின் இடது ஓரம் எந் நேரமும் அணையா விளக்காய் எரிந்து கொண்டிருக்கிற அடுப்பில் புரோட்டா க் கல் எந்நேரமும் இருந்து கொண்டே இருக்கும்.” நல்லதோ,கெட்ட தோ வாங்க நாலு புரோட்டா பிச்சிப் போட்டுட்டு போங்க” எனச் சொல்லுகிற அவர் காலையிலேயே புரோட்டாவுக்கு மாவு பிசைய ஆரம்பித்து விடுவார்.

ஆத்திர அவசரத்திற்கு சாப்பாடு கொண்டு போகாமல் போகாத தினங்களின் கடுமையான நகர்வுகளில் காலை,மதியம் புரோட்டா வே வாய்த்துப் போ கும்,என்ன சார்,ரெண்டு புரோட்டா சாப்புட்டா வயிறு என்ன தாங்கும் சும்மா கூட ரெண்ட பிச்சிப்போடுங்க என்பார்.

அப்படி சாப்பிட்ட பொழுதுகள் என்னில் கடினம் காட்டி வீற்றிருக்கிற பொழுதுகளாய்/

கட்டம் போட்ட கைலியும் கைவைக்காத வெள்ளைபனியனும் அவர் உடலை அலங்கரிப்பதாய் எப்பொழுதும்/தெனத்துக்கும் நல்ல்லதா உடுத்தி நம்ம என்ன ஆபிசுக்கா போகப்போறம் என்பார்.என்றாவது நல்லதாய் உடுத்துகிற நாளில்.

கடலை மிட்டாய்,முறுக்கு,டீ என்பதுதான் என் கணக்கு அவரது கடைக்குப் போகிற நாட்களில்,இப்பொழுது புதிதாய் பன்னும் சேர்ந் திருக்கிறது அதனுடன்/ இப்படியான சேர்மானங்களை கலந்து உண்ணுகிறநாட்களிலும் ,பொழுதுகளிலுமாய் நிற்கிற வேளைகளில் அவர்இப்படிச்சொல்லுவார். இன்று அவர் அப்படிச்சொல்லாமலேயே பேருந்துவருவதற்குதாமதமாகிப் போகிறது.

உடுத்தியிருக்கிற உடுப்பு நன்றாக இருக்கிறது எனச்சொல்ல முடியவில் லை வெளிப்படையாக/ஆனால் மனதினுள்ளாய் ரசித்து விட முடிகிறது. கறுப்புக்கலரில் பேண்ட் வெள்லைக்கலரில் சட்டை, ஜீன்ஸ் பேண்ட்,டீ சர்ட் எனவும் அது தவிர்த்து அவர் பிற உடுத்தி வருகிற நாட்களிலுமாய் பார்க்க நன்றாகத்தான் இருந்திருக்கிறார் உடன் வேலை பார்க்கிற அலுவலர்.

“ஷேவிங் பண்ணாம வர்றது மட்டும் கொஞ்சம் நல்லாயில்ல சார்,கொஞ்சம் செரமம் பாக்காம ரெண்டு நாளைக்கு ஒரு தடவை யாவது ஷேவிங் பண்ணீ ருங்க சார் என்றால் இப்ப என்ன அதுக்கு வயசு போன காலத்துல இருந்து ட்டுப் போகுது அது வாட்டுக்கு என்பார். இருந்துட்டுப் போகட்டும் ,அதுல எங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்ல,ஆனா பாக்க கொஞ்சம் அசிங்கமா தெரியுதுல்ல என்றால்,,,,,,,,, ,தெரியட்டுமே வுடு என்பார்
முள்ளுமுள்ளாய் கறுப்பிற்கு மத்தியில் வெள்ளையாயும் வெள் ளைக்கு மத்தியில் கறுப்பாயும் குத்தி நின்ற முடிகள் அவருக்கு எடுப் பாய் இல்லை என்ற போதிலும் கூடப் பெரிதாய் ஒன்றும் குறை ந்து விடவில்லை என்பதை பேசிக்கொண்டிருந்த தினங்களில் தான் அன்றும் பேருந்து போகாதது தெரிய வருகிறது.

அப்பொழுதான் ரோட்டோரமாய் நின்று கொண்டிருந்த எங்களிடம் பேசிக் கொண்டிருந்தார் அப்பொழுதுதான் மாரிச்சாமியின் கடையிலி ருந்து வந்த முருகதாஸ்/
சொன்னசொல்கடந்துசொன்னவரேமனம்தங்கிப்போகிறதருணமாகிப்  போகிறதாய் /

No comments: