26 Oct 2015

வட்டச்சக்கரம்,,,,,,

உனது சைக்கிள்தான் இன்று எனது வாகனமாகிப் போனது தோழனே?மகனே என்னச் சொன்னால் வழக்கம் போலத் தெரியலாம்.ஆகவேதான் தோழனே என்கிற சொற்பதம். 

தவிரவும் தோளுக்கு மேல் வளர்ந்து விட்டால் தோழன் என்பதுதானே என்பது ஊர் வழக்குச் சொல்லாகஉள்ளது. நான் மட்டும் ஏன் அதிலிருந்து பிரிந்து யோசிப்பானேன்?

உயர்படிப்பு படிக்கிற நீ கோயம்புத்தூரில் இருக்கிற ஒரு தனியார் கல்லூரியில் படித்துக்கொண்டும்,அங்கேயேவிடுதியில்தங்கிக்கொண்டுமாய் இருக்கிறாய்.
நம்மூரில் இருக்கிற கல்லூரியில் உனக்கு இடம் கிடைத்தது வாஸ்தவம்தான்.

ஆனால் அதற்குக் கட்டணமாக நமது வீட்டின் பத்திரத்தைக் கேட்டார்கள். காடு
மேடெல்லாம்பறந்துஒவ்வொருகுச்சியாயும்,செத்தையாயும் பொறுக்கிக்
கொணர்ந்து தன் கூட்டைக்கட்டுகிற குருவியின் லாவகத்துடனும், மனம் நிரம்பிப்போன சந்தோசத்துடனுமாய் கட்டிய வீடு அது.

அதில் நிலை கொண்டுள்ள செங்கலும்,சிமிண்டும் இன்னப்பிற இடு பொருட்க ளுமாய்எங்களின்வியர்வைலும்,ரத்தத்திலும்தோய்த்தெடுக்கப்பட்டது.

அந்தத்தோய்த்தலை இப்போது கல்லூரிக் கட்டணமாய் கட்டுவதென்றால் எப்படி?,,,,,,,,,புரியவில்லை.எனச்சொல்லிவிட்டு (மனதினுள்தான்) கல்லூரியின் வாசல்கடந்து அலுவலகம் வரை சென்ற நான் ரிவர்ஸ் கியர் போட்டு வந்து
விடுகிறேன். 

அப்புறமாய்த்தான்உன்னைகோயம்பத்தூரில்சேர்க்கஏற்பாடு ஆனது. இப்போது அசைண்மெண்ட்,கம்ப்யூட்டர் பிரிண்ட் அவுட் என பிஸியாகிவிட்டாய். 

சனி ஞாயிறுகளில் கூட வீடு வர மறுக்கிறாய்.காரணம் கேட்ட போது அவ்வ ளவு தூரம் படிப்பும்,எழுத்தும் இருக்கிறது,ப்பை,,,,, என சொல்லிவிட்டு கை பேசியை வைத்டு விடுகிறாய் சடுதியாக/

நல்ல விஷயம்தான் படி,படி,படி,,,எழுது,எழுது,எழுது,,,,நிறைய படித்து நிறைய எழுதுவதன்மூலம்பொதுவானபலவிஷயங்களையும் கற்றுக்கொள்,அந்தப்
படிப்பு மிகவும் அவசியம்.

காலையில் மூன்று மணிக்கு எழுந்து உருப்போட்டுப் படித்து முடித்து இரவு பணிரெண்டுமணிவரைபடிப்பு,மனப்பாடம்என்கிற வரையறக்குள்ளாக இருந்து தாண்டமுடியாமலும்,மனம் குமைந்துகொண்டுமாய் கூண்டுக்குள்ளாய் அடை பட்ட பறவையைப் போல உருவாக்கப்பட்டிருக்கிற மாணவ மாணவிகளின் மனோ நிலை எப்படியிருக்கும்,அவர்கள் எப்படி முழுநேரமும் கவனம் ஊன்றி படிப்பார்கள்?,,, என்பது தெரியவில்லை.

எனது இருசக்கர வாகனம் நான் பணிபுரிகிற ஊரிலேயே நிலை கொண்டு விட்டது.

நேற்றுப்பெய்த மிதமானமழையின்காரணமாகவைத்துவிட்டுவந்துவிட்டேன். 

மழை என்னவோ மிதமானதுதான்.ஆனால் இடி மின்னல்தான் கொஞ்சம் பலப் பட்டுத் தெரிந்தது.

ஒற்றைவரியாய்மேகவெளியில்படரும்கோட்டிலிருந்துகிளம்பிகிளைபரப்பியும்,அகலக்கரம் விரித்துமாய் பளிச்சென வெளிச்சம் காட்டி கோபம் கொண்ட தகப்பனின் உறும மைப்போல கனத்த இடிசப்தத்துடன் மறைகிறது. 

“சற்றேபலப்பட்டுப்போனவைகண்சிமிட்டி,சப்தம்காட்டிஇடியும்,மின்னலுமாய் மென்தூவலுடன்பூமிநனைத்துச்செல்கிறது.நனைத்தமழைகால்வாயாய்,ஓடை
யாய்,நதியாய்,ஆறாய்,குளமாய்,குட்டையாய்,கண்மாயாய்பொங்கிப்பிரவகிக்கிறபுது வெள்ளமாய் பிறப்பெடுத்து காட்சிப்பட்டு சிரித்து  விட்டுப் போகிறது என
தோணிய வரிகளையும்,வார்த்தைகளையும்உள்ளடக்கவேண்டியவனாகவும், அதைதாண்டமுடியாதவனாகவும்எனது இரு சக்கர வாகனத்தை நான் வேலை பார்கிற ஊரிலேயே வைத்து விட்டு வந்த கணம் மனம் மீட்டிய எண்ணங்கள் மிகவும் ரம்யமானதாகவே/ 

மீன்களும்தவளைகளும்நண்டுகளும்இன்னபிறஉயிரினங்களுமாகஉருவெடுக்க உதவுகிறநீர் நிலைகள் இலவசமாய் உயிபெற பெய்கிற மழை என்னை நனைத்து உடன் வருபவரையும் நனைத்து போட்டிருக்கிற ஆடைகளுக்குள் புகுந்து உடலை ஏதேனுமாய் சுகக்கேட்டுக்குள்ளாக்கி விடக்கூடும் என்கிற பயமும் கூடச் சேரவேபெய்தமழைக்கு மதிப்புத்தந்துபஸ்சில்ஏறி விடுகிறேன்.

அங்கிருந்து நம் வீடு வரும் வரையான 15 கிலோ மீட்டர் தூரமும் இப்படியான பளிச்,பளிச்சும்,உறுமலுமாகவே/

அதுவும் ஒருவிதத்தில் நன்றாகத்தான் இருக்கிறது.என்ன பஸ்சின் பாதி வரை தூறல் அடித்து நனைந்து போகிறது. மீதியை பஸ்ஸின் மேற்கூரை ஓட்டை வழியாக சொட்டும் தண்ணீர் தன் கை வரிசை காட்டி சிரிக்கிறது. 

நேற்று மாலை தன் நீளக்கரம் நீட்டி இரவை எட்டித்தொடுகிற நேரம் வீட்டிற்கு வந்தேன். 

இப்போதுஅலுவலகத்திற்குபோகவேண்டும்.போகும்முன்இரண்டொருவேலைகளை முடித்துக்கொண்டு/ 

அந்தவேலைகள்முளைவிட்டுநிலைகொண்டிருக்கிறஇடம்ஒன்றுவட கடைசி,
இன்னொன்று  தென் கடைசி,பிறிதொன்று கீழ் கோடி. 

மூன்றுக்கும் நெசவிடுகிற இடமாயும் மூன்று இடங்களிலும் பூத்து நின்ற வேலைகளையும்,வேலைகள் சுமந்து மலர்ந்து நின்ற மனிதர்களையுமாய் பார்த்து விட்டும்,பேசி விட்டு,டீ சாப்பிட்டு விட்டும் வருவதற்கு இன்று காலை உன் சைக்கிள்தான் வாகனமாகிப் போகிறது தோழனே.நன்றி,வணக்கம்.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை தோழர்... அந்தப் படிப்பு மிகவும் அவசியம் தான்...

vimalanperali said...

வணக்கம் நாகேந்திர பாரதி சார்,
வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் பொதுவன் சங்கன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/