25 Jun 2016

பரப்பு,,,/




சாலையின் நடுவில் கிடந்த
சிவப்புத்துணி மீது
கார் ஒன்று ஏறிச்சென்றது.
ஒன்றிரண்டு லாரிகளும்,
பேருந்துகளும் கூட அப்படியே/
இருசக்கர வாகனங்களும்,
மிதி வண்டிகளும்
அதற்கு விதிவிலக்கில்லாமலும்,
அதை பின் பற்றியுமாய்/
காலில் சிக்கினால் தடுக்கிவிடக்கூடும்
என்றஞ்சி ஒதுங்கி நடந்த பாதசாரிகள்/
இவை எல்லாவற்றையும்
பார்த்தவாறு துள்ளித்திரிந்தவாறுமாய்
சாலையோரம் விளையாடியவாறுமாய்
இருந்த சிறுபிள்ளைகள்
துணியை எடுக்க கைநீட்டி
விரைந்த போது
காற்றில் மேலெழுந்து
விரிந்து நின்ற துணி
அங்குள்ள அனைவருக்கும் நிழலளித்ததாய்/

3 comments:

துரை செல்வராஜூ said...

இப்படித்தான் பலவற்றுக்கும் ஒதுங்கிச் செல்கின்றனர் - மக்கள்..
நிதர்சனம் கண் முன்னே விரிகின்றது..

vimalanperali said...

வணக்கம் துரை செல்வராஜி சார்,
நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/

Thulasidharan V Thillaiakathu said...

பரபரப்பான உலகம் தான். சுற்றி நடப்பது எதுவும் கண்டுகொள்ளப்படாமல் ....உண்மை