27 Dec 2016

கண்ணாடிக்குண்டு,,,,

 தவறி விழுந்து விட்ட ரேஷரை எடுக்கக்குனிகையில் மனம் மீறி எழுந்து விட்ட பரிதாபமும் பச்சாதாபமும் ஆட்கொண்ட நாட்களின் மிச்சமாய் அந்த ஞாயிறு இருந்தது எனலாம்.

சனி நீர் ஆடு என்கிற பதத்திற்கும் சொல்லிற்குமாய் உட்பட்டும் ஆட்பட்டு மாய் இரண்டாவது சனிக்கிழமை விட்டுமுறையான நேற்று எண்ணெய் தேய்த்துக் குளித்து விட்டு காலையில் போய் எடுத்து வந்த சிக்கனை சமைக் கக் கொடுத்து விட்டு பிடித்ததாய் ரெண்டு படித்தும் நான்கு எழுதியும் மனைவி மக்களுடன் பேசிக்கொண்டும் பின் சாப்பிட்டு விட்டுமாய் பகல் தூக்கம்,பின் தொலைக்காட்சி என தொடர்ந்து விட்டுமாய் தூங்கி எழுந்த போது மனம் விழுந்த இரவுகளின் நினைவுகளை மனம் சுமந்தும் மண் சுமந்துமாய் கேட்டுக் கொண்டிருந்து விட்டு ஞாயிறின் காலையில் கால் பதித்து எழுந்த வேளை முகம் கழுவி துடைத்த பின் தலைவாறுவதற்காய் கண்ணாடி முன் நின்ற போது தோன்றிய யோசனை முதலாக ஷேவிங்க பண்ண வேண்டும் என்பதே.

இந்த 53 வரை என்னென்னமோ செய்து விட்டு எவ்வளவோ கடந்து வந்த இவன் ஷேவிங் செய்வதில் என்ன தவறிருந்து விடமுடியும் பெரிதாக என நினைத்த வேளையிலிருந்து சற்றே முன்னகர்ந்து ஒரு மணி நேரம் கழித்து ஷேவிங்க்செய்து கொண்டிருக்கும் பொழுது விழுந்து விட்ட ரேஷரை எடுக்கக் குனிகையில்மனம் பதட்டத்தை தணித்து அணைந்து போகச்செய்ய மெலிதாக குரல் எழுப்பி கூப்பிடுகிறான் மனைவியை.

பச்சை பட்டுடுத்தி மென் நடை பயிலும் ஒயிலாய் வரமால் என்ன வேண்டும் இப்பொழுதுஏன்இப்படியாய்சப்தம்போடுகிறீர்கள்,என்கிறகுரலைஉள்வாங்கிமதி த்தவனாயும்வருடமெல்லாம்ஆண்களின்குரலைமட்டும்ஏற்றுக்கொண்டகுரலின் பிரதிநிதியானவளின் குரலை ஏற்றுக் கொண்டு செவிசாய்ப்பதில் பெரிதான தவறேதும் நிகழ்ந்து விடப்போவதில்லை. என்கிற முடிவும் மதிப்புமாய் ஒன்று சேர்ந்து பிசைந்த கூட்டிசைவின் இணைவாய் அந்த குரல் வந்த திசை நோக்கி அவள் முகம் ஏறிட்டு நிற்கிறான்.

பச்சை பட்டுமல்ல, சிவப்புப்பட்டுமல்ல,அவள் உடுத்தியிருந்தது நீலநிறத்தில் சாயம் போயிருந்த காட்டன் புடவையே.அதற்கு மேட்சாய் அதை ஒட்டிய கலரில் எத்தனை முறை பட்டி மண்டபம் போட்டு சத்தியம் செய்தாலும் ஊதா என கூறி விட முடியாத அளவிற்கு அவள் உடலுடன் ஒட்டிக்கொண்டிருந்த ஜாக்கெட்,பொதுவாக வீட்டிலிருந்தால் இப்படித்தான் ஒன்று ஏனோ தானோ என்கிற புடவை அல்லது நைட்டி மேக்கப்,,,,,,,இவற்றுடன் சாப்பாட்டையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இதில்என்ன கொடுமை என்றால் பிள்ளைகளும் புருசனும் பக்கத்தில்இல்லாத நேரத்தில் ஒரு வேளை சாப்பாட்டைகூட தியாகம் செய்து விடுகிறா ர்கள்.

அப்படியான தியாகங்களை தாங்கிக்கொண்டும் மேலெழும்பி சொல்லிக் கொண்டுமாய் சென்று விடுகிற பிரதிநிதியான அவளைக்கூப்பிட்ட போது அவள் தவிர்த்து பேச்சின் பொருளை பட்டும் படாமல் முன்னிருத்தி நகர் வதாக ஆகிப்போகிறது.

அடடா என்ன நீங்க வந்துடக்கூடாதே ஞாயித்துக் கெழமைன்னு ஒண்ணு, காலையிலஎந்திரிச்சதுலயிருந்துஇந்நேரம்வரைக்கும்இந்தப்பாடாபடுத்துவீங்க மனுசியபோட்டு,,,,,,,காலையிலவிடிஞ்சிஎந்திரிச்சதுலயிருந்துஇந்நேரம்
வரைக்கும் அது ஆகிப்போச்சி மூணு டீக்கு மேல, இன்னொரு டீ வேணுமின்னா எங்க போறது சொல்லுங்க,,,,,,, இதுக்காகவே ஒங்களுக்குஞாயித்துக் கெழமை யும் ஆபீஸ் வைக்க ச்சொல்லணும் போல இருக்கே, எனச்சொல்லியவளாய் நகர்கிறாள்.

இவன்கூப்பிடவில்லைடீகேட்பதற்குஎன்கிற சொல் பதம் உள்ளடக்கி. அவளும் தான் என்ன செய்வாள் பாவம், காலையில் எழுந்துடீப் போடுவதிலிருந்து துணிதுவைக்க,மாவாட்ட,சமையல்செய்ய,,,,,இன்னும் இன்னுமான இத்தியாதி இத்தியாதி வேலைகளை செய்து முடிக்கிற வேளைகளில் இது போலான எரிச்சல் எழுந்தடங்குவதில் தவறேதும் அல்லது எழுத்துபிழை ஏதும் இருந்து விட முடியாதுதான்.

மணி பதினொன்றை எட்டித்தொட்டு விடப்போகிறது.இன்னும் சிறிது நேர இடை வெளியில் காலை ஆகாரம் சாப்பிட வேண்டும்.ஆகவே வேண்டாம் இனி ஒரு டீ என்கிற முடிவில் லேசாக ஓரத்தில் ரசம் போயிருந்த கண்ணா டியைப் பார்க்கிறான்.முகம் காட்டுகிரது மட்டுமல்லாமல் முழு உடலையும் காட்டுகிற அளவிற்கு பெரியதாய் மாட்டப்பட்டிருந்த கண்ணாடியை பெல்ஜிய ம் கிளாஸ் என்கிறார்கள்.

அது எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப்போகட்டும். அல்லது எங்கி ருந்து தருவித்ததாகவும் இருந்து விட்டுப்போகட்டும். இப்போதைக்கு அதன் பெயர் பெல்ஜியம் கிளாஸ் அன்றி வேறொன்றும் இல்லை. பயன்பட்டாலும் பயன்பாடு அற்று இருந்தாலும்அதன் பெயர்கண்ணாடிதானே, ,,?

முகம் காட்டுகிறது இப்போதைக்கு,காட்டட்டும் நன்றாக என்கிற முடிவுடன் கீழே விழுந்து விட்ட ரேஷரை எடுக்கக்குனிகையில் மனம் மீறி எழுந்து விட்ட பரிதாபமும்,பச்சாதாபமும் ஆட்கொண்ட நாட்களின் மிச்சமாய் அந்த ஞாயிறு இருந்தது எனலாம்.

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஒரு சின்ன நிகழ்வில் எத்தனை எத்தனை சிந்தனைகள்...!

vimalanperali said...

வணக்கம் திண்டுகல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக.

Yarlpavanan said...

அருமையான பதிவு

vimalanperali said...

வணக்கம் காசி ராஜலிங்கம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/