29 Jul 2017

மழை,,,,,



மழைபெய்து கொண்டிருக்கிறது,
வானத்திற்கும் பூமிக்கும் நெசவிட்ட
வெள்ளிக் கம்பிகளாய்/
நான் போய்க்கொண்டிருக்கிறேன்,
வகிடெடுத்தது போல் நேராயும் நீளமாயும்
ஓடிவிரைகிற சிமிண்ட் சாலையில் அதன்
கைபிடித்துக்  கொண்டும் மேடு பள்ளங்கள் கடந்தும்
அதில் விழுந்துமாய் போய்க்கொண்டிருக்கிறேன்.
அதுவரையிலுமாய் நெசவிட்டிருந்த
வெள்ளிக்கம்பிகள் கொஞ்சமாக வளைந்து வளைந்தும்
நெளிந்து நெளிந்துமாய் படம் காட்டியும்
சூறைக்காற்றுடன் கலந்து வீசியுமாய்
முகத்தில்அரைகிறது.
அரைகிற தண்ணீர் ஹெல்மெட் தாண்டி
அதன் ஜில்லிடலை உணர வைக்கிறது.
உணர வைத்த ஜில்லிடல்
தண்ணீராய் பெருகி சாலை மற்றும்
தெருவோரங்களில் ஓடி காட்சிப்படுகிறதாய்/
காட்சிப்பட்ட தண்ணிரின் ஊடாக
இரு சக்கர வாகனத்துடன் நீந்திக்கடந்த போது
இடைப்பட்ட இடமாய் காட்சிப்பட்ட இருப்புப்பாதையை
கடக்க முயல்கிற போது எதிர்ப்பட்ட
இருசக்கர வாகனத்தில் கணவனும் மனைவியும்
கைக்குழந்தையுமாக வந்தவர்கள்
தண்டவாளம் இடறி கீழே விழுந்து விட
ஓடோடிப்போய் தூக்கி விட்டபோது,,,,,
குழந்தைக்கு ஏதும் அடிபட்டி விடவில்லை.
நன்றி என கையெடுத்துக்கும்பிட்ட தாய்
வெளியில் பெய்த மழையை கண்களில் வாங்கிக்கொள்கிறாள்.

7 comments:

Yaathoramani.blogspot.com said...

இரசித்தேன்
கவிதை என்பது ஒட்டக்காய்ச்சிய
உரை நடை என்பது என் அபிப்பிராயம்
இன்னும் கொஞ்சம் ஒட்டக் காய்ச்சி இருந்தால்
இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதுவும்
என் அபிப்பிராயம்

vimalanperali said...

வணக்கம் சார்,
நன்றியும் அன்பும் கருத்துரைக்கு/

vimalanperali said...

வணக்கம் நன்றியும் அன்பும்
கருத்துரைக்கும்,வருகைக்கும்,,,,

வெங்கட் நாகராஜ் said...

ரசித்தேன்...

vimalanperali said...

வணக்கம் சார்,
ரசிப்பை ஏற்கிறேன்
முழுமனது கொண்டு,,,/
நன்றியும் வணக்கமும்/

Thulasidharan V Thillaiakathu said...

மழையை ரசித்தோம்!!
வானத்திற்கும் பூமிக்கும் நெசவிட்ட
வெள்ளிக் கம்பிகளாய்///// நல்ல உவமை!!!

இடைப்பட்ட இடமாய் காட்சிப்பட்ட இருப்புப்பாதையை
கடக்க முயல்கிற போது எதிர்ப்பட்ட
இருசக்கர வாகனத்தில் கணவனும் மனைவியும்
கைக்குழந்தையுமாக வந்தவர்கள்
தண்டவாளம் இடறி கீழே விழுந்து விட//

மழையில் தண்டவாளத்தைக் கடப்பதா! பயம் எகிறியது...!!! அபாயம் அல்லவா?!!

துளசிதரன், கீதா

vimalanperali said...

வணக்கம் துளசிதரன் சார்,
நன்றியும் அன்புமாய்.,,,,,,/
தண்டவாளங்கள் கடக்கிற வாழ்க்கை
இங்கே நிறையப்பேருக்கு விதிக்கப்பட்டிருக்கிறது/