28 Apr 2018

சுளிவின் அலை சுமந்து,,,,,/

இவனை எழுப்பிய மனைவி அந்நேரத்திற்கு அழகாகத்தெரிந்தாள்.

கொள்ளை அழகு எல்லாம் இல்லை என்றாலும் கூட அதன்றியும் இல்லை. பாந்தமாக இருந்தாள் பார்ப்பதற்கு/

இருட்டும் மென் வெளிச்சமுமாய் இருந்த வீட்டில் நானு சுவர்களிலும் பளிச் சிட்ட கலர்கள் கண்ணுக்கு உறுத்தாமலும் குளுமை காட்டியுமாய்/

”என்ன இது இந்தக்கலரப்போயி செலக்ட் பண்ணி வாங்கீட்டு வந்துருக்கீங்க, வேற கலரே கெடைக்கலையா ஒங்களுக்கு,எப்பப்பாருங்க இந்த லைட்க் கலரு தான் கெடைக்குமா ஒங்களுக்கு,,?”எனசொன்ன அவளிடம் அந்தக் கலர் பூசப் பட்டிருந்த வீடுகளின் போட்டோக்களை காண்பித்த போது மகிழ்ந்தாள். கையு டன் இரண்டே நாளில் இவனே முன் நின்று மொத்த வீடு முழுவதுமாய் பெயிண்ட் அடித்து முடித்த போது சந்தோஷம் கொண்டாள் அவள்,

பட்டுத்தெரிந்த சந்தோஷத்தில் அவள் முகம்,மனம் எல்லாம் தெரிய வாங்கிக் கொண்டான் அவளை இவன்,

பாத்தியா நான் வாங்கீட்டு வந்த கலரு சோடை போகாது ஆமா எனசொன்ன நாளில்நீங்க வாங்கீட்டு வந்த கலரு மட்டுமா சோடை போகல,கட்டீட்டு வந்த நான் கூடத்தான் சோடை போகாம பத்தரமா ஒக்காந்துக்குட்டு இருக்கேன். நமக்குப்பொறந்த கொழந்தைங்க மட்டும் சோடையாவா ஆகிப்போனாங்க,,,”? என்றாள்,

அவளது பேச்சுக்கும் சிரிப்புக்கும் சொல்லுக்கும் செயலுக்கும் எப்பொழுதுமே ஒரு நூழிலை நெசவு ஓடிக்கொண்டே இருக்கும்.அதில் சிரிப்பும் கோபமும் எள்ளலும் நகைச்சுவையும் கோபமும் சுயபச்சாதாபமும் இன்னமும் இன்ன முமான நிறைந்து போனவைகள் கலந்திருக்கும்.அந்தக்கலவைகளின் மிகுதி பட்டு தொட்டுத்தெரிக்கிற எல்லாம் அவளின் அடையாளம் சுமந்தே காணப் படுவதாய்,,,/

காணப்பட்ட அடையாளங்களின் எச்சங்கள் அவளை இவனருகிலும் இவனை அவளருகிலுமாய் இருந்து விலக விடாமல் பார்த்துக்கொண்டதாய் இருந்தது. பரஸ்பரம் பார்க்கிற பார்வையின் ஆழங்கள் எல்லோர் மீதும் பட்டு விடும் முன்பாய் இவர்கள் மீது பட்டுப் படர்ந்ததாய்,,/

அப்புறமும் இப்புறமாய் பார்த்தவனாய்அப்படியே அவளது கழுத்தைக் கட்டிக் கொண்டு உட்காரவைத்தான் அவனருகாய்,“ஸ்ஸ்சு,,,,வலிக்குது கழுத்து, என்ன அய்யாவுக்கு ஊஞ்சலாடுதோ இளமை,பெரியவ இப்ப பாத்ரூம் போற துக்காக எழுந்திருக்கிற நேரம் ,அவ எந்திரிச்சா பின்னாடியே கால் மணி அரை மணி கழிச்சி சின்னவளும் எந்திரிச்சிருவா,அப்பறம் எங்கிட்டுப்போயி கழுத் தைக்கட்டிக்கிட்டுகொளாவுறது,போதும்விடுங்க,பேசாமஎழுந்திருங்கஒழுங்கா,,,” என்றாள்,

வாஸ்தவம்தான்அவள்சொல்வதும்,கட்டியபொண்டாட்டியைபுருசன்கொஞ்சவும், நேரம் காலமும் இடம் பொருளும் வேண்டியதிருக்கிறதுதான்.அவள் கட்டியி ருந்த புடவை அந்நேரத்தைய அவனின் மன நிலைக்கு அழகாக இருந்தது,

எத்தனையோ தடவை அவள் கட்டியிருக்கிற புடவையால் தலை துவட்டி விட்டிருக்கிறாள்,முகம் துடைத்து விட்டிருக்கிறாள். சமாய சமயங்களில் தோளில் சாய்த்து கொண்டு பின் மண்டையில் முடிகளுக்குள்ளாய் கோர்த் தி ருக்கிற ஈரத்தை துடைத்து விட்டிருக்கிறாள்.

”சொன்னா கேட்டாத்தான,இப்ப எதுக்கு இவ்வளவு முடி தலையில,அதுவும் பின் பக்கத்துல பாகவதர் வச்சிருக்குற மாதிரி கிராப் வேற,எத்தனை தடவை சொன்னாலும் நீங்களும் கேக்குற மாதிரி இல்லை,முடிய ஒட்ட வெட்டிக் கிட்டு வாங்கன்னா அதுவும் செய்ய மாட்டீங்கறீங்க,அதான் அடிக்கடி தலையில வந்து இப்பிடி நீர்கோர்த்துக்கிருது,அப்புறம் தலைவலிக்கு அது இதுன்னுஏங் உசுர வாங்க போட்டு வேண்டியது,,,”என்கிற அவளது சொல்லின் படர்வுகள் இவனின் மீது பட்டுப் படர்ந்த நேரங்களில் கூட இவன் அவள் கட்டியிருக்கிற புடவையை இவ்வளவு உற்று கவனித்ததில்லை.

இதுபோலான தருணங்களில் மனைவியிடம் சொல்லுவான்.“இப்பிடித்தான் ஒன்னையப்போலஒருத்தி வீடு பொடவையா வாங்கி குவிச்சிருக்கா,,,,, குவிச்ச குவியலு கொஞ்சம் வலுவாப்போச்சி, எந்தப்பக்கம் தூக்கி மாத்தி மாத்தி வச்சாலும் பொடவைகள வைக்க வீடு போதல, அதுக்காக பொட வை கள தூக்கி யாருக்காவது குடுத்துறவா போறா,,,,/ அதச் செய்யாம குடியி ருக்குற வீடு காணலைன்னு சொல்லி இடிச்சிட்டு விரிவாக்கம் பண்ணி கட்டச் சொல்லீருக்குறா, சரின்னு அவனும் வீட்டுல இருக்குற பணம் பேங்குல கெடக்குறது இன்னும் இன்னுமா கூட்டுச்சேத்து எடுத்து வச்சி கட்டி முடிச் சிட்டு ஆத்திரம் தாங்க மாட்டாமயும் தலைய சொரிஞ்சிக்கிட்டும் சங்கடப் பட்டு பொண்டாட்டிய கேட் டுருக்கான்,என்னம்மா இது இப்பிடியெல் லாம் சேலைகள எடுத்து குவிக்காட்டி என்னன்னு,,,,மறு நா பாத்தா அவன் பேண்ட் சட்டைய எடுத்து பழைய வெலைக்கி போட்டுட் டா,,அவன் காலையில குளிச்சிட்டு இடுப்புல துண்டோட ஆபீஸ்போற அவசரத்துல நிக்கும்போது பேண்ட் சட்டை எங்கைன்னு கேட்டு ருக்கான், எல்லாம் பழைய பேப்பரக் காரங்கிட்ட போட்டுருக்கேன், ஆபிஸீக்கு போற வழியில வாங்கி மாட்டிக் கிட்டு போங்கன்னு சொல்லீற்ரா ,அவனும் சரின்னு அங்க போனா அங்க இவனுக்கு முன்னால வரிசையா இடுப்புல துண்டோட ரொம்பப் பேரு நிக்குறாங்க,என்னடா இதுன்னு நின்னுக்கிட்டு இருக்கும் போது உள்ள இருந்து வெளியில வந்த கடைக்காரரு நீங்க எல்லாம் ஏங்கிட்ட வந்து நிக்குறீங்க, நான் யாருகிட்டப் போயி நிக்கிறதுன்னு தெரி யலைன்னுஅவரும் இடுப்புல துண்டோட வந்து நிக்குறாரு,,,,,”என மனைவி யிடம் கேலி பேசிய பொழுது அவள் கொமட்டில் இடித்துக்கொண்டு ஓடிப் போனாள்.

ஆமா நீங்க சொல்லுற மாதிரி இங்க என்ன வீடு நெறைஞ்சி போயா கெடக்கு துணி மணிங்க,எனக்கு இன்னைய தேதி வரைக்கும் உடு மாத்துக்கு நாலும் நல்லதா உடுத்திக்கிற நாலுமா சேலைங்க வச்சிருக்கேனே தவிர்த்து வேற எதுவும் இல்ல பெரிசா,,,,இது போல புள்ளைங்களுக்கும் அளவாத்தான இரு க்கு,”

”இவ்வளவுஎதுக்குநீங்களே கூட மூணுசெட்டுதான வச்சிருக்கீங்க,,,, அப்பிடி யெல்லாம் ஆடம்பரமா இங்க யாரும் இல்ல ,சும்மா கத சொல்றேன்னு குத்திக்காட்டக்கூடாது.,,,,,”எனபொய்கோபம்காட்டிஉதட்டைச்சுளித்துசிரிக்கிறாள்,

”அந்தசுளிப்புக்கே இன்னொரு புடவை எடுத்து குடுக்கலாம் போல இருக்கு” என யோசித்த மனதை இடம் கொடுக்காத பொருளாதாரம் தடுத்து விடுவதாய் ஆகித்தெரிகிறது.

அவளது புடவையில் பூத்திருந்த பூக்கள் யாவும் சின்னதும் பெரியதுமாய் மரமின்றி அழகாக பூத்துக் காணப்பட்டது, அந்தக்காலத்து சினிமா நாயகிகள் கட்டி வருகிறடிசைனில் புடவையாய் காட்சிப்பட்ட புடவையைப்போல இப்பொழுது திரும்பவும் ஒரு ரவுண்ட் வருகிறது. புடவையெங்குமாய் பூத்துக் காணப்பட்ட பூக்கள் கொஞ்சம் அசந்தாலோ கவனிக்காமல் விட்டாலோ கீழே விழுந்து விடும் போலிருக்கிறது.

அதை தாங்கிப்பிடிக்க எத்தனை பேரை எங்கிருந்து யார் துணை கொண்டு நியமிப்பது எனத்தெரியவில்லை, நியமித்தவர்களை யாரின் துணை கொண்டு நிர்வகிப்பது எனவும் புரியவில்லை என்கிற சிந்தனையில் இருந்த பொழுது பூக்காமல் சிரித்த பூக்களை கைகளில் எடுத்தள்ளிக் கொண்டு போய் விடுகி றாள் மனைவி இவனை எழுந்திரிக்கச் சொன்னவாறே,,,/

போனவளின் அழகை ரசிக்க இன்னும் ஒரு ஜென்மம் எடுக்கலாம் போலிருக் கிறது.

”இருக்கட்டும் விடுங்க,அதுக்காக இப்பிடியா வயசு போன காலத்துல போயிக் கிட்டு நீயி அழகு அசிங்கமுன்னு பேசிக்கிட்டு,புள்ளைங்க ரெண்டும் தலைக்கு மேல வளந்து நிக்குதுங்க,மொதல்ல அதுகளுக்கு நல்ல யெடமா பாக்கப் பாருங்க, அத விட்டுட்டு,,,,சும்மா கற்பனை உலகத்துலயே இருக்காதீங்க,,,, என சொன்னவளை நோக்கி கண்ணடித்து சிரித்து விட்டு அவளது காதில் ஏதோ சொல்கிறான்.

“ஆமா நான் கற்பனை ஒலகத்துல இருக்கேன்,நீயி அப்பிடியே யதார்த்தத்துல மெதக்குற,என்னவோ போ,,,தலைக்கு மேல வளந்து நிக்கிற புள்ளைங்கள வச்சிருக்குறவுங்க யாரும் இப்ப கற்பனையில சஞ்சரிக்கிறது இல்லைன்னும், அழக ரசிக்காம இருக்காங்கன்னும் சொல்லீற முடியுமா சொல்லு,,,” என்ற போது சங்கடமாக நெளிந்து சிரித்தாள் அவள்,

அப்படி சிரிக்கிற அவளுக்கும் ஒரு ஆழ்ந்த வருத்தம் இல்லாமல் இல்லை. சொல்லுவாள் ஆந்து அலுத்துப்போன நேரங்களிலும், தனிமை தாங்கிய பொழுது களிலுமாய்/.

“என்ன நீங்கபோங்க, கல்யாணம் ஆன புதுசுலயெல்லாம் இயக்கம், யூனிய னுன்னு அலைஞ்சிட்டு இப்பவயசுபோன காலத்துல வந்து தலையில தூக்கி வச்சி கொஞ்சி கோயில் கட்டணுமுன்னு பேசிக்கிட்டு அலையிறீங்க. ,அதெல் லாம் இப்ப சரிப்பட்டு வருமா,சும்மா பேசாதீங்க,..” என்பாள்,

அப்படியாய் அவளுக்குள் இருந்த வருத்தம் இவனினும் பெரிதாய் சமயா சமயங்களில் வளர்ச்சி காட்டி நிற்கிற போது கொஞ்சம் வருத்தமடைந்தும் நெகிழ்தும் போவான் சுய பச்சாதாபம் காட்டியவனாய்,,/

நடந்தவள் நடந்து விட்டாள்,கடந்த அடியின் ஈரம் இன்னும் காயாமல் மனதுக்குள்ளாய் இருந்த அல்லது குடிகொண்ட நேரமாய் எழுந்தமர்கிறான்,

இனி எங்கிட்டு தூங்க,,, முற்றுப்புள்ளி வைத்து விட வேண்டியதுதான் தூக்கத் திற்கு என நினைத்தவனாய் எழுந்தமர்ந்தவன் ”டீக்கிடைக்குமா என அவளை நோக்கி கேட்ட பொழுது இருக்கிறது டீ நீங்க கேப்பீங்கன்னு தெரியும்,அப்பவெ கடுன்டீ போட்டு வச்சிட்டேன்,இந்நேரத்துக்கு எங்கிட்டுப்போறது பால் டீ போட,,,,/ நேத்து ராத்திரியிலயே நாகர்கோயில்க்காரர் கடையில் ராத்திரியே பால் பாக்கெட்டு வாங்கி வைக்கணுமுன்னு நெனைச்சேன், முடியாம போச்சி, நெனைச்சிட்டே இருந்தவ அப்பிடியே மறந்து போயி தூங்கீட்டேன்.இப்ப ஒங்க ள எழுப்பும் போதுதான் ஞாபகம் வருது ,ஆகா ராத்திரியே பால் பாக்கெட்டு வாங்கி வைக்காம விட்டுட்டமேன்னு,,,/சரி விட்டதுதான் விட்டம்.கடுன் டீ போட்டுக்குடுத்துருவோம் கண்டிப்பான்னு டீபோட்டு வச்சேன்.கரெக்டா நீங்க ளும் கேட்டுட்டீங்க,,,,”

“போதும்வயசாகவயசாககொஞ்சம்கொறைச்சிக்கிறவேண்டியதுதானடீயோட எண்ணிக்கைய,முன்னப்போலயா இருக்கு ஒடம்பு இப்ப ஒங்களுக்கு, இல்லை யில்ல,முன்னாடியெல்லாம் ஒரு குண்டால் மூட்டைய தனியாளா முதுகுல தூக்கிப் போட்டுட்டு வந்துருவீங்க,இப்ப அப்பிடியா இருபத்தியஞ்சி கிலோ அரிசிச்சிப்பத்ததூக்குறதுக்கேதரிங்கினத்தோம்போடுறீங்க,இந்தலட்சணத்துல பழைய மாதிரியே இன்னும் டீயகுடிச்சிக்கிட்டு திரிஞ்சீங்கன்னா எப்பிடி,,,? என அவள் கேட்ட போது உண்மையின் உறைப்பு உரசி செல்கிறது மனதோ ரமாய்/

உரசலில் பற்றிய தீயின் வெம்மை தாளாமல் குளத்தில் குதித்த கதையாய் எழுந்தவர்ந்தவன் வாஸ்தவம்தான்நீசொல்றதும் என இனிம கொஞ்சம் கொ றச்சிக்கிற வேண்டியதுதான் டீய எனச் சொல்லியவாறே போட்ட டீ வேஸ்டா யிறக்கூடாதுங்குற எண்ணத்தோட கேக்குறேன், கொண்டு வா,சாப்புட்டுட்டு எந்திருக்கிறேன் எனச்சொன்னவன் மணியைப் பார்க்கிறான்,

இரண்டுக்குள்இருந்து இரண்டரை வரை காட்டியது,தூக்கக்கலத்தில் சரியாகத் தெரியவில்லை,வட்ட வடிவ குட்டிக்கடிகாரத்திற்குள்ளாய் விநாடி முள்ளை துணைக்கு அழைத்துக்கொண்டு சின்ன முள்ளும் பெரிய முள்ளுமாய் தன் பிடிவாதம் காட்டியும் காலம் காட்டியும் ஓடிக் கொண்டிருந்தது,

ஓடிக்கொண்டிருந்த ஓட்டத்தின் பிடிவாதம் நின்று நிலைத்த நேரமாய் டீயைக் கொண்டுவருகிறாள்மனைவி,டீயைவாங்கிக்கொண்டவன்அவளைஏறிடுகிறான்,  அவள் வெட்கம் கொண்டு சிரிக்கிறாள் உதடு சுளித்து,,,/

No comments: