29 Apr 2018

தொட்டுச்சுட்டது,,,,

மீட்டர் பாக்சைபார்த்ததும் கேட்டுவிடத்தோணியது,இந்தமாசம் கரண்டு பில்லு கட்டியாச்சா என,,,/

அவளைப்பார்த்ததும் அப்படியெல்லாம் கேட்க வேண்டும் என்கிற எண்ணம் தற்செயலானதா இல்லை ஏற்கனவே இவனில் ஊறி உருவெடுத்திருந்ததா தெரியவில்லை.

கரண்ட் பில் கட்டியாச்சா என்பதே கேள்வியின் சாராம்சம், கேட்ட கேள்வி கேட்டதாய் நிற்க சொல்ல வேண்டிய பதிலை நூற்தெடுத்துக்கொண்டிருப்பாள் போலும், நூற்றெடுத்தலின் அகமும் புறமும் நுனியும் அடியும் அப்படியே உருதாங்கி நிற்பதாய் படுகிறது அவளில்/

இளம் பச்சை நிறத்தில் சிறிதும் பெரிதுமாய் பூத்திருந்த பூக்களை காசு கொடுத்தோ கடன் வாங்கியோ வெளி பழுக்கலர் சேலை முழுவதுமாய் படர விட்டிருந்தாள் யார் அனுமதியும் இன்றி,,/

இதெற்கெல்லாம் யாரிடம் அனுமதி கேட்கவேண்டும் நாங்கள்,இதெல்லாம் எங்களதுஉரிமை,அதில் தலையிட உங்களுக்கு அனுமதி கிடையாது, வேண்டு மானால் எட்ட நின்று பார்த்துக்கொள்ளுங்கள்,உங்களிடம் வந்து செல்லமாய் கன்னம் தட்டி சொல்லிச்செல்கிறேன்,இதுதவிர்த்து அனுமதி,,அது இது என்பதெல்லாம் பெரிய வார்த்தை ஆமாம் சொல்லிவிட்டேன் என அவள் சொல்வதான எனது கற்பனை எண்ணத்தை அவளிடம் சொன்ன போது,,,

”அடப்பாவமே,நான் எப்ப இந்த மாதிரியெல்லாம் ஒங்ககிட்ட பேசுனேன், எப்பாவாச்சும் என்னத்துக்காவது சின்னதாசண்டை போட்டுருப்பேனே ஒழிய பொடவை விஷயத்துக்காக எப்பப் போயி என்ன பேசினேன்னு தெரியல, ஏதாவது அப்பிடி எசக்கேடா பேசி அது ஒங்க மனசுல நாத்தாங்கால் போட்டு ஒக்காந்துந்துச்சின்னா அத அடியோட அழிச்சிருங்க, வளர விடாதீங்க, அப்ப றம் அது வளந்து தனியா வேர் விட்டு மரமா நிக்கும்,அப்பிடி நிக்கிறது ஒங்க ளுக்கும் நல்லதில்ல, எனக்கும் நல்லதில்ல,,,, இதுமாதிரி வளந்து நின்னு வன் மம் காட்டுற மரங்கள ஒடனுக்குடனே வெட்டீறணும் தெரிஞ்சிக்கங்க என்றவ ள் என்னவோ நாந்தான் போயி எனக்கான சேலைகள செலக்ட் பண்ணுறது போல பேசிக்கிர்றீங்க,என்னைய விட எனக்காக சேலை எடுக்குறதுல அதிக அக்கறை காட்டுறது நீங்கதான, அதுவும் ஒங்க செலக்‌ஷந்தானே எப்பவும் நல்லாயிருக்கும்.கூட நா வந்துருந்தாலும் கூட நான் எடுக்குற பொடைவை யும் நீங்க செலட் பண்ணிக்குடுக்குற பொடவைக்கும் வித்தியாசம் இருக்கத் தான செய்யும்.

“பத்தஞ்சி கொறையா இருந்தாலும் கூட நீங்க எடுக்குற பொடவை நல்ல படியா அமைஞ்சி போகும், நீங்கஎடுத்துருக்குற பொடவைய விட ஒரு நூறு ரூபா கூட இருந்தாலும் கூட நான் எடுத்துக்குற பொடவை கொஞ்சம் கம்மி யாத்தான் தெரியும்,நீங்க எடுத்து வைச்சிருக்குற பொடவைக்கு என்பாள் லேசாக சிரித்தவாறே,,,/

அவள் இதை சொல்லும் போதான் ஞாபகம் வருகிறது,சென்ட்ரல் சினிமா வீதியிலிருக்கிற ஆபீஸில்இவன்வேலைபார்க்கிற போது திருநெல்வேலியை சொந்த ஊராகக் கொண்ட ஆனந்து அண்ணன் ஒரு வேளை நாளின் மாலை வேளையாக ”தங்கச்சிக்கு பொடவை எடுக்கணும் கொஞ்சம் கூட வர முடியு மா” என்றார்,

ஏன் திருநெல்வேலையில இல்லாத ஜவுளிக் கடையா,இங்க வந்து எடுக்கு றீ ங்களே என கேட்டபொழுது எடுக்கலாம் திருநெல்வேலியில, ஆனா அங்க ஒன்னைய மாதிரி ஒரு ஆள் கெடைக்கணுமில்ல. நீநல்லாபொடவை செலக்ட் பண்ணுவயாமில்ல,சொன்னாங்கஅதான் ஒன்னைய கூட்டிப் போகணுமின்னு வந்தேன் என இவனது டிபார்ட்மெண்டுக்கு தேடி வந்துவிட்டார்,

அவரை கூட்டிக் கொண்டு போய் புடவை எடுத்து வந்த அன்று அவர்அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை.

“இப்பிடி கருத்தா ஒரு வேலைய செய்வேன்னு நெனைச்சிக்கூடபாக்கலப்பா,,, கடைக்கு போன ஒடனே ஏங்தங்கச்சி யோட கலர் என்னன்னு கேக்குற ,பொதுவா என்ன கலர் சேலைய விரும்பி கட்டுவான்னு கேக்குற,,, டிசைன் சேலை கட்டுவாங்களா,பிளைன் சேலை கட்டு வாங்களான்னு கேக்குற,இது போலான விவரமெல்லாம் எனக்கெல்லாம் சத்தியமா தெரியாது, தெரிஞ்சாலும் கேக்குறதில்ல,பொம்பளப்புள்ளைகிட்டப் போயி என்னத்தன்னு,, விட்டுருவேன். சேலைன்னு ஒண்ணு கேட்டான்னா கடையில ஏதோ ஒரு கலர்ல வாங்கீட்டு வந்து கையில் குடுத்துட்டு நல்லா யிருக்கான்னு கூட கேக்காம திரும்பி வந்துருவேன்.

“நீஎன்னடான்னாகடையில போயி கடைக்காரரு கூட என்னென்னமோ பேசுற, பொம்பளைங்களுக்கு இதுநாள்வரைக்கும் பொடவை மட்டும் எடுத்துக் குடுத்துட்டு சாப்பாடு மட்டும் போட்டா போதும்ன்னு நெனைச்சேன்,ஆனா அதையும் தாண்டி நீயி அவுங்க சம்பந்தமா கடைக்காரரு கூட நெறைய நெறைய பேசுறயேப்பா,,,,பொம்பளப்புள்ளைங்கபொறப்புங்குற,வளர்ப்புங்குற ,படிப்புங்குற, பீரியட் டைம் பிரச்சனைங்குற,கர்ப்ப காலப்பிரச்சனை, வேலைக் குப் போற யெடத்துல ஏற்படுற பாலியல் தொந்தரவு மத்த மத்தமாதிரியான பிரச்சனை ங்குற,,,,,இதப்பத்தியெல்லாம் நாங்க யோசிச்சது கூட இல்லையே ப்பா நீ இவ்வளவு பேசும் போதுதான் தெரியுது, இப்பிடியெல்லாம் பெண்களு க்கு நிறைய பிரச்சனை இருக்குன்னு,,,/”என்பார்,

மேலும்சொல்லுவார்,பொம்ளைங்கன்னாவீட்டோடகெடக்கணும்,சமையல்வீட்டுப் பாடு, ஆம்பளங்க என்ன சொன்னாலும் கேட்டுக்குறது, புருசன் புள்ளகுட்டிக ளுக்காக தன்னோட ஆசா பாசங்கள மனசுள போட்டு பொதச்சிட்டும் கொ ண்ணு எரிச்சிக்கிட்டும் அவுங்களுக்காக மட்டுமே வாழணும்ன்னு நெனைச்சி கிட்டு இருந்தோம். ஆனா யாதார்த்தம் அப்பிடி இல்லை.இந்த முனுச சமூகம் நெலைக்க அவுங்களும் ஒரு முக்கிய சக்தியா எந்திரிச்சி நிக்கணும்னு நெனைக்கத்தோணுதுப்பா ஓங் பேச்ச கேட்டதுக்கப்புறம்,,,”/ரொம்ப நன்றிப்பா இனிம ஏங் தங்கச்சிக்கு நான் போயி பொடவை எடுத்தாலும் ஒரு மணி, அரைமணி நேரமுன்னு செலவழிச்சி பொடவை எடுப்பேன்னு சொல்லிக் கிறேன்.”என்றார்,

அன்று ஆனந்து அண்ணன் பேசிய பேச்சின் ஈரம் இன்றும் எப்பொழுதாவதான சமயங்களில் ஞாபகத்திற்கு வருவதாக,,/

கேட்டுக்கு வெளியே நின்றிருந்தாள் மனைவி.கையில் பால் வாங்கி வந்திரு ந்த வாளி இருந்தது.வாளி பார்ப்பதற்கு கூஜாவடிவு தாங்கியும்அழகாகவும்,,,,/

நல்ல வடிவமைப்புடன் இருந்த சில்வர் வாளியின் கைபிடி மட்டும் பிளாஸ் டி க்கில் இருந்தது,போன மாதம் அடுப்பில் ஏதோ வேலையாக இருந்த பொழுது கவனிக்காமல் விட்டு விட தீயின் வெம்மை அருகில் இருந்த வாளியின் மீது பட்டு வாளியின் கைபிடி உருகிப்போனது.

உருகித்தெரிந்த கைபிடியில் தெரிந்த உருவம் மனித உருவம் ஒன்று கால் நீட்டி படுத்திருப்பது போலவே இருந்தது.

”சீக்கிரம் கதவ தெறங்க எவ்வளவு நேரமா நிக்குறது,,,?இந்த மாதிரி அவசர வேளையிலதான் ஒங்களுக்கு இல்லாத யோசனையெல்லாம் வந்துரும் ஆமாம்,மீட்டர் பெட்டிய பாத்த ஒடனே அதுக்கு ஒரு கதவு செஞ்சி போட ணும், அது எந்த டிசைன்ல இருந்தா நல்லா யிருக்குமுன்னு யோசிச்சிருப்பீ ங்களே,,,”என அவள் சொன்னதும் இல்லை என இவன் யோசித்த கரண்ட் பில் விஷயத்தை சொன்னவாறே கேட்டை திறந்தான்,

இரும்புக்கிராதியில்பூக்கள்பூத்துத்தெரிந்தகேட்,பார்ப்பதற்குஅழகாக இருந்தது, போனவாரம்தான் பெயிண்ட் அடித்திருந்தார்கள்,கேட்டை திறக்கவும் அவள் இவனை இடித்துக்கொண்டு உள்ளே வரவும் சரியாக இருந்தது.

பேசாமல் அவளுடன் பால் வாங்கப்போயிருக்கலாம்.கொஞ்ச தூரம் நடந்து போய் வந்த திருப்தியாவது மிஞ்சியிருக்கும்.அவள் விழித்த நேரத்திலேயே இவனுக்கு விழிப்பும்வந்து விட்டது,

அவள் கேட்டாள்”வாங்க நான் போனதும் சும்மா படுக்கையில உருண்டுக் கிட்டு கெடக்கத்தான போறீங்க,அதுக்கு ஏங்கூட வந்தாலாவது ஒடம்புக்கு கொஞ்சம் தெம்பாவாது இருக்குமில்ல” என்றாள்.

இவன்தான்”இருக்கட்டும்கொஞ்ச நேரம் படுத்திருக்கிறேன்,கொஞ்சம் படுத்தால் உடலுக்கு தெம்பாக இருக்கும்”என அனுப்பி வைத்துவிட்ட பின் அவள் சொன் னது போல் சும்மாதான் படுத்துக்கிடந்தான்.

இதற்குஅவள்கூடவாவதுபோயிருக்கலாம்,கொஞ்சம்மனிதமுகங்கள்,கொஞ்சம் காற்று, கொஞ்சம் ரிலாக்ஸ் இன்னும் இன்னும் என கலவை கலந்து பட்டுத் தெரிந்திருக்கும்.அப்படியான நல்லதான ஆகுதலுக்குக்காகத்தான் இப்படி யெல்லாம் ஓடித்திரிவதாகிக்கழிகிறது வாழ்க்கை,/

அப்படி ஆளாவதும் நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் யாதார்த்தத்தில் காலையில் எழ முடியாமல் போய் விடுகிறது.இரவு தூங்க ஏற்பட்டுப்போகிற தாமதங்கள் மறுநாளின் காலையை கொஞ்சமாக சேதபடுத்தியும் சோம்பல் ஏற்படுத்தியும் ஆக்கி விட்டுப் போகிறதுதான்.

இருந் தாலும் அந்த சேதத்தோடும் சோம்பல் கலந்துமாய் காலையை பிரஸ் ஸா க்கிக் கொண்டு ஓடிவிடுகிறான் தினசரியாய் அலுவலகத்திற்கு. அப்படி யான பிரஸ்னெஸ்ஸீக்கு காலையில் கொஞ்சம் தாமதம் காட்டி எழுந்து விட்டால் சரியாகிப் போகும்,இல்லை சீக்கிரம் எழுவது சாலச்சிறந்தது எனக்கருதி சீக்கிரம் எழுந்து விட்டால் அன்றைக்கு முழுவதும் உடலை வம் படியாய் தூக்கி இழுத்துக்கொண்டு திரிய வேண்டியதிருக்கும்.

திறந்த கேட்டின் வழியாய் இடித்துக் கொண்டு வந்த மனைவி கையில் பிடித்திருந்த வாளியின் கைபிடியில் படுத்திருந்த மனித உருவத்தைப்போல் இன்று காலையில் கூட பார்த்தான்,

மாரியப்பன் கடையில் கறி எடுத்து விட்டு டீ சாப்பிட வழக்கமாய் போகும் கடைக்கு போன போது பூட்டியிருந்தது.

என்ன செய்ய இனி,,,,,,? டீக்குடிக்கும் ஆசையை மனதுக்குள் வைத்து மருகிக் கொண்டு போய் விடலாமா என யோசித்தவன் சரி வாய்த்தது அவ்வளவுதான் எனஎண்ணியவனாய் ஓட்டிப் போன இரு சக்கர வாகனத்தை திருப்ப நினைக் கிற போது ஆஸ்பத்திரியின் அருகில் இருக்கிற டீக்கடை ஞாபகம் வருகிறது.

வண்டியை திருப்பிக்கொண்டு அங்கு போகலாம் என நினைக்கும் போதுதான் ரோட்டின் எதிர்புறம் இருந்த வெற்றிடத்தில் கட்டிடம் கட்டிக்கொண்டிருந் தார்கள்,

ஏற்கனவே இரண்டு வீடுகளும் இரண்டு குடும்பங்களும் அவர்களது பிள்ளை களும் அவர்களின் சுக துக்கங்களும் குடி கொண்டிருந்த வீடுகள் இன்று அடை யாளம் தெரியாமல் துடைத்தெரியபட்ட கண்றாவி வேறொரு கட்டிட மாய் உருக்கொண்டு தெரிய ஆரம்பித்திருந்தது.

விசாரித்ததில் அங்கு இரு சக்கர வாகனத்தின் ஷோரூம் வருகிறது என்றார் கள்.

”விட்டால் வீட்டுக்கு ஒரு இரு சக்கர வாகனம் இருந்தே ஆக வேண்டும் என சட்டம் இயற்றச் செய்து விடுவார்கள் போலிருக்கிறதே…”/

அப்புறம்பெட்ரொல்,ரிப்பேர்,தேய்மானம்,ஸ்பேர்பார்ட்ஸ் லைசென்ஸ், ஹெல் மெட்,ட்ராபிக்,போலீஸ்,செக்கப் அது இது என ஓடி தேய வேண்டும். ஒரு நாட் டின் குடிமகனுக்கு வந்த சோதனை பாருங்கள்,,,,,என நினைத்தவனாய் டீக் குடித்துவிட்டு வரும் பொழுது கொடவுனுக்கு எதிரில் இருக்கிற ஹோட்டல் கதவில் மனித உருவம் பொறித்த ஒரு சர்வர் கையில் தட்டுடன் இருந்த மார்டன் உருவம் அழகாய் ஆக்கப்பட்டுத் தெரிந்தது,

உடல்முழுவதும் மஞ்சளும் தலை மற்றும் அவர் கையில் வைத்திருந்ஹ்ட தட்டு சிவப்பு வர்ணத்திலுமாய் ஆக்கி வைத்துத் தெரிந்த உருவம் உயிரற்ற இரும்பு கேட்டுக்கு உயிரூட்டுக் கொண்டிருந்ததாய்/

இப்பொழுதெல்லாம் கரண்ட் பில் கட்ட வேண்டும் என்கிற பிரக்ஞை அதிக மாக பட்டுப்படர்கிறது இவனுள்,

ஆறு மாதத்தின் முன்பாக வீட்டு மராமத்து வேலை நடந்து கொண்டிருந்த ஓர் நாளில் கொத்தனார்,சித்தாள் மற்றும் நிமிந்தாள் சிமிண்ட்,செங்கல் எல்லாம் வந்து விட்டது ,

வந்தவர்கள்அவைகளைஎடுத்துவைத்தும்கலவை போட்டுமாய் வேலைகளை வும் ஆரம்பித்து விட்டார்கள்.

அன்று டைல்ஸ் ஒட்ட வேண்டிய நாள்.,மூத்த மகளுடம் மனைவியும் போய் கடையில் வாங்கி வந்த டைல்ஸ்,அவர்களுக்குப்பிடித்த லைட்க் கலரில் லைட் க் கலர் பார்டர் போட்டு லைட் கலர் அட்டைப்பெட்டியில் அடைத்து வைத்து வாங்கிக்கொண்டு வந்த டைல்ஸ்.

அதை ஒட்டுவதற்காய் எடுத்து பிரித்து வைத்து பணியாளும்ரெடியாக இருந் தார்,

எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு பார்த்த பொழுது கரண்ட் இல்லை, சரி ஏதோ வேலையாக ஆப் பண்ணியிருக்கிறார்கள்,சிறிது நேரத்தில் வந்து விடும் என இருந்த பொழுது எதிர் வீட்டில் டீ வீ பாடுகிற சப்தம் கேட்டது,

மனம்மயக்கும்நல்லபாடல்களாய்இருந்தது,ஆனால்கேட்கத்தான்முடியவில்லை. கரண்ட் இல்லாத இந்த சமயத்தில் மனம் மயக்கும் பாடல்கள் எப்படி சாத்தியம்,,,?.

யோசித்துக் கொண்டிருந்த வேளையில் கரண்ட் பில் கட்டாததால் பீயூஸை பிடுங்கிக்கொண்டு போய் விட்டார்கள்,இனி கரண்டு பில்லை உடனே போய் கட்டினாலும் கூட மாலையில் வந்துதான் பீயூஸை போடுவார்கள்,என்கிற பிரஞ்சை தட்டுகிறது.

கொத்தனார் ’நான் போய் சமாளித்து பீயூஸை போடச்சொல்லி கூட்டி வருகி றேன்,பில் கட்ட வேண்டிய பணத்தை மட்டும் என்னிடம் கொடுங்கள்’ என வாங்கிப் போனார், ம்கூம் ஒன்றும் ஆகவில்லை.

கரண்ட் இல்லாமல் டைல்ஸ் ஒட்டும் வேலை நடக்காது, மற்ற வேலைக ளுக்குட்ராக்டர் தண்ணீர் ஏற்பாடுசெய்து கொடுத்து விட்டான்,பாவம் டைல்ஸ் ஒட்டுகிறவர் ,

ஒரு நாள் வேலையும் சம்பளமும் போன கோபத்தில் சபித்து விட்டுப்போய் விட்டார். இந்நேரத்திக்கு பிறகு போய் நான் எங்கு போய் வேலை செய்ய என,,,,/

அவர் சபித்து விட்டுப்போன கோபம்,வேலை நடக்காத ஆத்திரம்,கரண்ட் பில் கட்ட கவனிக்கத்தவறிய கவனமின்மை எல்லாம் ஒன்று சேர்ந்து மனைவி யின் மீது பாய் அவள் சொல்கிறாள்,

‘ஆமாமாம் எல்லாத்துக்கும் நாந்தான் ஓடிகிட்டு திரியணுமா இந்த வீட்டுல, எதையின்னு கவனிக்கிறது சொல்லுங்க,நீங்க ஒங்கபாட்டுக்கு ஆபீஸிக்கு லீவு போட முடியாதுன்னு போயிர்றீங்க,நான் வீட்டப் பாத்து வேலைக்கு வந்த வுங்கள சமாளிச்சி அவுங்களெல்லாம் போனப் பெறகு வீட்டக்கழுவி துணி தொவைச்சி நீங்களும் புள்ளைங்களும் வீட்டுக்கு வந்த பெறகு ஒங்களுக்கு டீப்போட்டுக் குடுத்து அப்பறமா போயிக்குளிச்சிட்டு சாமி கும்புடுட்டு நைட்டு க்கு சமையல் பண்ணி முடிச்சிட்டு படுக்கப்போறதுங்குள்ள பெரும்பாடாப் போ யிருது,

இதுல எதுக்கெடுத்தாலும் என்னையே கொறை சொன்னா எப்பிடி,,,?எங்க ஒரு நா மட்டும் வீட்டுல பொம்பளையா இருந்து பாருங்க,அப்புறம் தெரியும் நாங்க படுற கஷ்டம்,,,என்றாள் பதிலுக்கு/

9 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

இதுல எதுக்கெடுத்தாலும் என்னையே கொறை சொன்னா எப்பிடி,,,?எங்க ஒரு நா மட்டும் வீட்டுல பொம்பளையா இருந்து பாருங்க,அப்புறம் தெரியும் நாங்க படுற கஷ்டம்,,,என்றாள் பதிலுக்கு/

உண்மைதான்

vimalanperali said...

வணக்கம் சார்,நன்றி
வருகைக்கும் கருத்துரைக்குமாக,,,/

Tamilus said...

கதை நன்றாகவுள்ளது, வாழ்த்துக்கள்

vimalanperali said...

சார் நன்றி தகவலுக்கு,
பதிவை இணைக்க முடியவில்லை.

vimalanperali said...

நன்றி சார்,வருகைக்கும் கருத்துரைக்கும்/

Kasthuri Rengan said...

வழக்கம் போல நினைவோடை அருமை
பிறகு படங்களை எப்படித்தோழர் தேர்ந்தெடுக்கிறீர்கள்...அற்புதம் போங்க

vimalanperali said...

வணக்கம் மது அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக,,/

iramuthusamy@gmail.com said...

நல்ல கதை. வாழ்த்துகள்...

vimalanperali said...

நன்றியும் அன்பும்,,,/