28 Mar 2021

வித்தை

 ::                 :::::::::::::::::🍂🍂🍂🍂



அவர் தோசைகளை சுட்டடுக்கிக்கொண்டே இருக்கிறார்.

ஒரு மாய வித்தைக்காரனைப்போல!

சின்னதான அடுப்பின் மீது வைக்கப்பட்டிருந்த தோசை சட்டியும்,

அருகிலிருந்த டீ பாய்லரும் 

வெந்தலின் மீது அவரது இருப்பு போலவே,,,!

அவரது இரு கரங்களை

ஒட்டி முளைத்திருக்கிற பல கரங்கள்

புதிதாக அவரைப்பார்ப்பவர்களுக்கு ஏதோ செய்வித்தைக்காரரை

ஞாபகம் செய்வதாக,,,!

சேர்ந்தாற்போல் நான்கு பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிடக்கூடிய

சின்னதான கடை

பறவையின் கூட்டைப்போல

பார்க்க அழகாயிருக்கிறது.

மண்கீறி,துளிர் விட்டு,கிளைத்து இலைபரப்பி,பூவும்,பிஞ்சும் 

காயும் கனியுமாய் விழுதிறக்கிய மரத்தின் ஆகுருதியாயும் 

அதில் அமர்ந்தெழுந்து பறக்கிற 

ஒற்றைப்பறவையாயும் உணர முடிகிறதுதான் அக்கடைக்குச்செல்கிற கணங்கள் தோறுமாய்,,,,!


                                 ::           ::::::::::🐬🐬🐬🐬

வரக்காத்து,,,

 _________||       ||      || 👀👀👀



தனது மேனி முழுவதுமாய் திருநீறுக்கீற்றுகளை 

செய் நேர்த்தியுடன் கோடிழுத்து    

ஒரு கைதேர்ந்த ஓவியனைப்போலவும் 

சிவப்பழமாயும் காட்சியளித்த பூசாரி

பணம் கட்டுவதற்காய் வங்கிக்குள்ளாய் நுழைகிறார்.

மனதின் ஈரம் காட்டியவராய் அவர் 

வரும் பொழுதே 

தெரிந்தவராய் ,பழகியவராய்,நட்பாய் தோழமையாய்,உறவாய்,,,

அடையாளம் பூண்டிருந்த அனைவரிடமுமாய் பேச்சுக்கொடுத்தவாறும்

நலம் விசாரித்தவாறுமாய் பதிவாகிறார்.

ஊர் பற்றி பேசுகிறார்.

கோவில் பற்றி பேசுகிறார்.

தெய்வங்கள் பற்றியும் பக்தி பற்றியுமாய் பேசிய அவர் 

பண்டுவம் பற்றியும்,சித்தர்கள் பற்றியும் 

அவர்களின் பண்பு பற்றியுமாய்

பேசுகிறார்.

அந்தப்பேச்சும் விசாரித்தலும். அக்கறையுமே

அவரது மனம் மற்றும் இளகுதலின் அடையாளமாயும்,நெருக்குதலாயும் ஆகித்தெரிகிறது.

அருகாமையின் சற்று தொலைவிலிருந்தே காசாளருக்கு சிரிப்பை அனுப்பி 

வணக்கம் தெரிவித்தவர் 

பணம் கட்டிவிட்டு செல்லும் பொழுது 

சிலர் எழுந்து நின்று கரம் கூப்பி   மரியாதை தெரிவித்து அனுப்புகிறார்கள்

அந்த கிராமத்துக்கோயில் பூசாரிக்கு,,,!


                              _________::    ::    ::🍂🍂🍂

துள்ளல்,,,

 _________:::        ::  ||🐳🐳🐳🐳



துள்ளல் அதிகமாய் இருந்த  பாடல் அது.

நாயகன் ஆடிக்கொண்டிருக்கிறான்.

நாயகி அவன் மீது சாய்ந்து கொண்டிருக்கிறாள்.

இருவரின் உடையும்,ஒப்பனையும்

சற்றே விழி உறுத்திய போதும் 

பாடலின் வரிகளும்,அதனுடன் கைகோர்த்த இசையும்

பாடலுக்கு விரிந்த காட்சிகளும் ஒன்றுடன் ஒன்றாய் இழைய

நாயகனை விட்டுப்பிரிந்து தனியே ஆடிய நாயகியின் உள்ளாடை தொடை தாண்டித்தெரிகிறதாய்,,,!

சங்கடங்களை மென்று 

திரையில் சிரிக்கிற வாழ்க்கை 

அந்நேரம் அவளதாகியும் அவளைப்போல் பலரதாகியுமாய்,,,,!

                            

                   ___________::      ::         🍂🍂🍂

பயணவழி,,,

 __________::             :: 👥👥👥👥



கம்பிபிடித்தேறியதும்தானா 

அந்தப்பாடல் ஒலிக்க வேண்டும்.

பழைய பாடலாய் தெரியவில்லை.

புதிய பாடலின் சாயல் பூசியிருக்கிறதாய்

எதுவும் பட்டுத்தெரியாத நிலை.

பின் புற படிக்கட்டு வழியாகத்தான் 

ஏற வாய்க்கிறது.

வாய்த்ததும்,வாய்க்கப்பெற்றதும்

கிடைக்கப்பெற்ற வரமாகவே!

கடைசி வரிசை இருக்கையில்

மடியில் குழைந்தையுடன் அமர்ந்திருந்தவள் பாடலின் நயத்திற்கு தாளமிடுகிறாள்.

தாளமிடுவதும்,ரசிப்பதும்,

இசையில் இளைவதும் 

பேருந்தில் பயணிக்கிற ஆண்களுக்கு மட்டும்தான் சொந்தமானதா என்ன,,,?

என்பதாய் கேள்வியிடாமலேயே

இசையில் நனைந்தவளாயும் 

கையிட்ட தாளத்தையும்,

மனமிட்ட அசைவையுமாய்

நிறுத்தாது இறங்க வேண்டிய 

நிறுத்தம் வரைக்குமாய் பயணிக்கிறாள்.


                             ________::        :: 🍂🍂🍂🍂

சாலை

 ____________::           :: 👀👀👀



சாலையின் வலதுபுறமிருந்த 

அரசு அலுவலகத்திலிருந்து வெளிவருகிறேன்.

அரசு நடப்பு தாங்கி!

அதென்ன  வலது புறம்?

இடது புறத்தில்தான்

பேருந்து நிறுத்தமும்,

அதையொட்டிய கறும்புச்சாறுக்கடையும்

அதன்பின்னிருந்த புங்கை மரத்தில்

அமர்வு கொண்ட ஒற்றைக்காகமும்

அச்சிடப்பட்டுத்தெரிகிற போது 

அவ்வலுவலகம் வலப்புறமாகவே இருந்துவிட்டுத்தான் போகட்டுமே,

மனிதர்களை கொண்ட இடம் அலுவலகங்களாயும்,

கூடவே பறவைகள் கைகோர்த்து காணப்பட்ட இடம் புங்கமரமாயும் 

இருந்த போது,,,,

எது எப்பக்கமாய் இருந்தால்தான் என்ன?

என்ன கெட்டுவிடப்போகிறது பெரிதாய்,,,?

அதுவும் நதி போலதான தார்ச்சாலை

இரண்டிற்கும் நடுவாய் வகிடெடுத்துச்சென்ற போது,,,!


                  _____________::          :: 🍂🍂🍂🍂

பயணம்,,,

 _________::        ::: 🎭🎭🎭🎭



அன்றாடங்களில் பயணிக்கிற பேருந்துதான்.

காலை வேளையில் அலுவலக  அவரசத்திற்கும் 

மாலையில் களைப்பு சுமந்து 

வருகிற பொழுதிலுமாய்


பயணச்சீட்டெடுக்கிற

அதே பேருந்துதான்.

அது அல்லாது விடுமுறை தினங்களிலும், என்றாவது வேறொரு தேவை நிமித்தமாய் ஒருமணிநேர பிரயாணதூரம் தேவைப்படுகிற அவ்வூருக்கு செல்கிற வேளையாய் பேருந்தில் அந்நடத்துனரைப்

பார்ப்பதுண்டு.

ஓட்டுனரை பெரும்பாலுமாய் பார்த்ததில்லை.

அஸ்திவாரங்கள் எப்பொழுதும் கண்ணுக்குப்புலப்பட்டதில்லைதானே?பேருந்தின் அக்கடைசிக்கும் இக்கடைசிக்குமாக உலகளந்த பெருமாளாய் அலைகிற நடத்துனர் எப்பொழுதும் யாருடனாவது எது பற்றியாவது பேசிக்கொண்டே இருக்கிறார்.

ஆண்களுடன் பேசுகிறார்,

பெண்களுடன் பேசுகிறார்,

சிறுவர் சிறுமிகளுடன் பேசுகிறார்.

முதியவர்களுடனும்,

கூடவே கை பேசியில் யாருடனாவது பேசுகிறவர்

பேசுகிற வார்த்தைக்கும்

கேட்கிற காதுக்கும் வலிக்காது பேசுகிறார்.

அவர் பேசி முற்றுப்புள்ளி வைக்கிற விஷயங்கள் எல்லாவற்றிலுமாய் பட்டுத்தெரிந்த ஏதாவதொரு அங்காலாய்ப்பின் பின்னனியாய்

தனக்கு இல்லாதிருக்கிற பெண்குழந்தை பற்றிய பதிவு இல்லாமல் இல்லை.


                          || ::               :::: 👥👥👥👥

7 Dec 2020

                                               எனது ”நவம்பர் கவிதைகள்,,,”

                                                   அமேசான் வெளியீடாக,,,

                                                       பதிவிறக்கம் செய்ய,,,

https://www.amazon.in/s?k=நவம்பர்+கவிதைகள்%2C%2C%2C&i=stripbooks&ref