17 Apr 2016

தண்ணீர் குடுவை,,,,,

அந்த தண்ணீர் பாட்டிலைத்தொட்டு தூக்குகிற ஒவ்வொரு கணத்திலும் ஒரு சிறு குழந்தையை தூக்குவது போல் உள்ளது.
 
“இப்பிடியெல்லாம் இனிமே தண்ணிகுடுத்து விடாதிங்கம்மா”,அதை தூக்க முடி யாம இன்னொரு பையன கூப்புட்டுட்டு வந்து தூக்கீட்டுப்போனேன் என்கிறான் தன் தாயை நோக்கி மகன்.
 
பள்ளியில் தண்ணீர் இல்லை என  இரண்டு ஒண்ணரை லிட்டர் பாட்டில்களில் தண்ணீரை நிரப்பி பள்ளியில் கொண்டு வைத்து விட்டு வந்தால் அவன் இப்படிச் சொல்கிறான்.
 
பின் என்ன செய்ய?காலையில் எழுந்து “கேம்ஸ் இருக்கிறது” என ஹாக்கி விளையாடப் போய்விட்ட மகனுக்கு சாப்பாடு கொடுக்கப் போகிற போது கொடுத்தனுப்பிய இரண்டு படாசைஸ் தண்ணீர் கேன்களைப் பற்றித்தான் அவன் அப்படிச்சொல்கிறான்.
 
 மேலும் அவன் சொல்வதை கேளுங்கள்.பள்ளியில் பெரும்பாலான பையன் கள் இப்படித்தான் கொண்டு வருகிறார்கள்.அல்லது அவர்களுக்கு சாப்பாடு கொண்டு வருகிறபோது இப்படித்தான் தண்ணீரை அடைத்துக் கொண்டு வருகி றார்கள்.
 
பேசாமல் அதைக் கொண்டு  செல்வதற்கு பள்ளிக்குள்ளாக ஒரு  தள்ளு வண்டி யை ஏற்பாடு செய்யலாம்.
 
உடல் பருத்து வாய்ப்புறம் சிறுத்து இருக்கிற ஒண்ணரை,இரண்டு லிட்டர் பாட்டில்கள் இப்போது நிறைய வந்து விட்டன.
 
அதிலும்"பேமிலி சைஸ்பேக்ஒன்றைஆண்கள்இரண்டு கைகளிலும்,பெண்கள் வயிற்றோடும்,நெஞ்சோடுமாய் அணைத்துப் பிடித்துச் செல்கிற காட்சி எங்கும் நீக்கமற நிறைந்து காணக்கிடைக்கிறது.
 
விரித்து காண்பிக்கப்படுகிற உள்ளங்கையை விட அளவில் சற்று பெரியதாக படுகிற பேப்பர்த்தட்டில் ஒரு இனிப்பு,கொஞ்சம் காரம் பக்கத்தில் சில்வர் டம்ளரில் அல்லது பேப்பர் க்ளாஸில் ஊற்றப்பட்டிருந்த குளிர்பானம் என வீடுகளில் உறவினர்கள், விருந்தினர்கள் வருகிற நேரங்களில் அல்லது ஒரு சின்னதான விஷேச நிகழ்விற்கு  என பழகிப் போய் விட்ட வீட்டுக் கலாச் சாரங்களில் தவறாமல் இடம் பிடித்து விட்ட குளிர்பான பாட்டில்களின் காலியை என்ன செய்வது?
 
எனது சின்ன மகளைப் போல அதை அறுத்து ஆராய்ச்சி செய்கிறேன் என எதன் முன் மாதிரியையாவது செய்து கொணர்ந்து  நிறுத்துவாள்.
 
பார்க்க சந்தோஷமாக இருக்கும்.மனம் களி கொள்ளும்.அப்படியல்லாத வீடுக ளில் பள்ளிப்பிள்ளைகளுக்கு தண்ணீர் கொடுத்து விடவும்,அலுவலகம் மற்றும் இதரவேலைகளுக்குசெல்பவர்கள்தண்ணீர்கொண்டு போகவுமாய்உதவுகிறது.
 
இது போன்ற  பாட்டில்களை கடையில் போய் வாங்கினால்  ரூபாய் 40,50 என சொல்வார்கள்.
 
எனக்குத் தெரிந்து சாலைப்  பணியாளர் கோட்டை  வேலைக்கு  செல்கிற 
தினசரிகளில்அவ்வளவுஉயரபாட்டிலில்சுடவைத்ததண்ணீரை ஆற்றி ஊற்றிக் கொண்டு போவார்.
 
ஆடுமேய்க்கப்போகிறகோவிந்தசாமியும்அப்படியே.வெளியூர்களுக்குஏதாவது வேலையாய் தினசரி தனது கிராமத்திலிருந்து பஸ் ஏறி இறங்கிற அழகு மலை யும் அதற்கு விதிவிலக்கில்லாமல்/ 
 
இப்படி பலரும் பலமாதிரியாக,பலவேலைகளில்தண்ணீர்அடைத்துக்கொண்டு போகிறபாட்டில்கள் ஒரு குழந்தையின் அளவாய் எங்கு பார்த்தாலும் காணக் கிடைக்கிறது.
 
கை,கால் முளைத்துச் சிரிக்கிற குழந்தையின் உயரமாய் ஊரெங்கும் பேருந்து நிலையங்களிலும், புகை வண்டியிலும்,இரு சக்கரவாகனங்களிலும், மிதி வண்டிகளிலுமாய் பயணித்துத்திரிந்து தனது இருப்பை முன் அறிவிப்பு செய்து கொள்கிறது.

4 comments:

Thulasidharan V Thillaiakathu said...

அட! தண்ணீர் பாட்டில்களுக்கும் விவரணம்1 அருமை அதுவும் இப்போது கொளுத்தும் வெயிலுக்கு இன்னும் அதிகமாகத் தங்கள் இருப்பைத் தெரிவித்துக் கொள்ளும்தான்!! அருமையான கண்ணோட்டம்

vimalanperali said...

வணக்கம் துளசிதரன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

துரை செல்வராஜூ said...

நிதர்சனம்!..

vimalanperali said...

வணக்கம் துரை செல்வராஜ் சார்,
நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/