கோன் பேக்ட்ரியில் வேலைபார்த்து
ரிட்டயர் ஆன முருகன்.
சுருட்டுக்கம்பெனியில்
தலைவராய் இருந்த நடேசன்
பஞ்சு மில்லிலிருந்து வாலண்டரி
ரிட்டையர் மெண்ட் வாங்கிய பால்ராஜ்,
இப்போது இல்லாமலிருக்கிற
சினிமாத்தியேட்டரின் ஆபரேட்டர்
கோபாலகிருஷ்ணன்,
டீ மாஸ்டர் கோவிந்தன்,
பேப்பர் போடுகிற நடராஜன்,
தங்க வேலை செய்த சுந்தர்,
ஹோட்டலில் சப்ளையராய்
இருந்த தங்கராசண்ணன்
கொத்தனார் கோபால்என
அனைவரையும் தெரிந்து வைத்திருந்த
இவன் அவர்களுடன் பழகிய நாட்களின்
ஏதாவது ஒரு தினத்தில்
அவர்களுடன் சேர்ந்து
டீயாவது சாப்பிட்டிருக்கிறான்.
சிறிது நேரமாவது பேசியிருக்கிறான்.
அவர்களுடன் சேர்ந்து
சினிமா போயிருக்கிறான்.
வற்புறுத்தலான அழைப்பின் பேரில்
அவர்களது வீடு வரை சென்றிருக்கிறான்.
அவர்களது வீட்டு விசேசங்களில்
இவனைபார்க்க முடிந்தது.
இவனுக்கு ஒன்றென்றால் அவர்களும்,
அவர்களுக்கு ஒன்றென்றால்
இவனும் துடித்துப்போகிற
அதிசியம் நடந்தது.
நட்பும் தோழமையும்,
பிரியமும் வாஞ்சையும்
கலந்த நாட்களின் நகர்வுகளை
இப்பொழுது நினைத்தாலும் இனிக்கிறது
வாயோரம் ஒதுக்கப்பட்டிருக்கிற
ஆரஞ்சு மிட்டாயின் சுவையைப்போல/
12 comments:
வாவ் கவிதை ...
அருமையான பதிவு
http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html
நினைவுகள் என்றுமே சுகமானவை
தம +1
வணக்கம் ஸ்ரீ மலையப்பன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் காசி ராஜலிங்கம் சார்,
நன்றி வருகைகும்,கருத்துரைக்குமாக/
நட்பும் தோழமையும்,
பிரியமும் வாஞ்சையும்
கலந்த நாட்களின் நகர்வுகளை
இப்பொழுது நினைத்தாலும் இனிக்கிறது!..
தித்திக்கும் கவிதை!..
ஆரஞ்சு மிட்டாய் என்பதற்கு பதில் தேன் மிட்டாய் என்பது கொஞ்சம் கூடுதல் பொருத்தமாக இருக்கும்.
--
Jayakumar
வணக்கம் துரை செல்வராஜ் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் jk 22384 சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
ஆரஞ்ச் மிட்டாய் சுவை நன்று
வணக்கம் அசோகன் கருப்பசாமி அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment