4 Jun 2016

சாப்பாட்டுப்பொட்டலம்,,,,,,


முன்னூறும் முன்னூறுமாக அறுநூறு பாக்கெட்டுக்கள்,பாக்கெட்டுகள் என்பது என்ன,,,,?அதனுள்ளாய் என்ன அடக்கம் என்பதை பின்னே சொல்லலாம் சற்றே இடைவெளி விட்டு என எண்ணி விடத்தோணுகிறது.அந்த எண்ணமே செயல் பாடாய் பூத்துகனிந்துவிடத்தோணுகிற நேரத்தில் இடைவெளிகள் பட்டுத் தெரிவது காலம் நேரம் என்கிற பரிணாமங்கள் தவிர்த்து வேறென்னவாய் இருந்து விட முடியும்?என்கிறதான யோசனையில் இருந்த வேளையில் தான் சின்னச்சின்ன,,,,,,என்கிற பாடலின் ஆரம்ப வரிகள் பாடலாய் கை கோர்த்துக் கேட்கிறது.

ஜெய்லானி ரஹ்மான் அலுவலகத்தில் இவனது அருகில் எட்டித் தொட்டு விடும் தூரத்தில் இருந்தாலும் கூட எளிதில் எட்டித்தொட்டு விட முடியா உயர த்தில் இருப்பவர்.

ஐந்தரைஅல்லது ஐந்தே முக்கால் அடிக்குள் தனது உயரத்தை தக்க வைத்துக் கொண்ட போதும் கூட அவரது மனம் அவரது சராசரி உயரம் தாண்டி எட்டி நின்றது பலருக்கு தெரியாத அளவிற்கு பரோ உபகாரியாய் இருந்தார்.

அவர் வேலை பார்க்கிற அலுவலகத்தில் சின்ன குண்டூசி வாங்கி வருவதிலி ருந்து பெரியதான வேலைகளை முடிக்கிற வரை அவரது பங்கு இருக்கும்.

என்ன மாமா நீங்க என்றால் போதும்.ஏ போண்ணா,நீயும் ஆளும் ,,,,,என கேலி பேச ஆரம்பித்து விடுவார்,என்ன மாமா இன்னைக்கு டீ எந்தக்கடையில வாங்குனீங்க,,,என்றால் பஸ்டாண்டுகிட்ட இருக்குற கடையில வாங்குனேன் மாமா,என்பார், நேத்து வரைக்கும் வாங்குன கடை என்னாச்சு,,,மாமா என்றால் அத ஏங்கெக்குறீங்க மாமா அவன் ஒரு மாதிரி மூஞ்சத்தூக்கி வச்சிட்டு பேச ஆரம்பிக்கிறான் மாமா,ரொம்ப மரியாத கொற வாவும் நடந்துக்குறான் மாமா, அவன்கடையில டீ நல்லா இருக்கும் இல்லைங்கல மாமா ,அதுக்காக அவன் சொல்றதயெல்லாம் சகிச்சிக்கிற முடியாதுல்ல, ஆரம்பத்துல் ஏதோ தெரியாத் தனமாசெய்யிறான் ,கழுத புத்திக்கூறு அவனுக்கு அவ்வளவுதான்னு நெனைச் சா வரவர மனுசங் குற மரியாதை கூட குடுக்க மறந்து போனான். அடப் போடான்னு வந்துட்டேன் மாமா,என்னதான் பழகுனவனா இருந்தாலும் நமக்கு ஒரு மாதிரி சுருக்குன்னு இருக்குதாஇல்லையா,,,? சொல்லுஎன்பார்/

அவர்சொல்கிறகடைமுக்குராந்தலுக்குஅருகில்இருக்கிற என் எஸ் ஆர் ஜவுளிக் கடைக்குப்பக்கத்தில்இருக்கிறது. மனைவியைக்கூட்டிக்கொண்டு கோயிலுக்குப்போகிறதினங்களில்அந்தக்கடையில்தான்டீசாப்பிடுவான்இவன். என்ன கோயிலுக்குள்ள வரலையா வழக்கம் போல,என்கிற மனைவியின் பேச்சை மனதில் ஏந்தியவனாய் கோவில் நடையில் மனைவியை இறக்கி விட்டு விட்டு வந்து விடுவான்.

அப்படியே கோயிலுக்குள்ளாய்போனாலும் அங்கிருக்கிற சிலைகளையும் சிற்பங்களையும் வேடிக்கை பார்க்கவே இவனுக்கு நேரம் சரியாக இருக்கிறது. கோயிலுக்குள் வந்து புறங்கையைக்கட்டிக்கொண்டு நடக்காதீர்கள்,சாமி கும்பு டுகிற இடத்தில் என்ன வெட்டி ஆராய்ச்சி வேண்டிக்கிடக்கிறது என மனைவி யாகப் பார்த்து வம்பாய்திருநீறு பூசி விடுவாள்கையெடுத்து சாமிகும்புட்டா என்னகொறஞ்சா போயிருவீங்க,எனக்கூறியவாறே/

கொறஞ்செல்லாம் ஒண்ணும் போயிறப்போறதில்ல,சாமி மாதிரி நீ இருக் குறப்ப வேறொன்ன எதுக்குப்போயி கும்புடணும், அதான் சாமி கும்புடுற ஒன்னையகும்புட்டுறலாம்ன்னுநெனைக்கிறேன்என்பான்.ஒங்களையெல்லாம்,, என வார்த்தைகளை முடிக்காமல் தலையிலடித்துக் கொள்வாள்.

கோயிலுக்கு எதிர் தாற்ப்போல் இருக்கிற போலீஸ் ஸ்டேசனிலிருந்து பெண் கான்ஸ்டபிள்கள்இரண்டுபேரைவெள்ளிசெவ்வாயானால்தவறாமல் கோயி லுக்குள் பார்க்கலாம்.

ஏங் சார் அதான் வீட்டம்மா சொல்றாங்கள்ல சார் ,சொன்னா கேளுங்களேன் சார், எங்கெங்கயோ போயி யார் யாரோ மொகம் தெரியாதவுங்க சொல்றத யெல்லாம் கேக்குறீங்களே சார்,இத்தன வருசம் கூட இருந்தவுங்க சொல்றத கேக்க மாட்டீங்களா,எனச் சொல்கிற போது சிரிப்பான்.

என்னைக்கு மேடம் கூட இருக்குறவுங்கள நமக்காக வேலை செய்யிறவுங்கள பாராட்டிமகிழ்ந்திருக்கோம்,அவுங்கசமையல்லஇருந்துவீட்டுவேலைவரைக்கும் என்னைக்கி எத நல்லா சொல்லீருக்கோம்,,?நல்லா சொல்லாட்டிக் கூட பரவாயில்ல,கொற சொல்லாம இருந்தா பரவாயில்லன்னு தோணுது என பதிலுக்கு கான்ஸ்டபிள்கள் இருவரிடமும் பேசுகிற இவன் பேச்சு முடிவுற் றிருந்த நேரம் டீக்கடையில்தான் நிற்பான்,

அப்போதுதான் தெரியும் ஜெய்லானி ரஹ்மான் சொன்னது, சொல்லிக் கேட்ப தை விட எதை ஒன்றையும் கண்கூடாகப்பார்க்கிற பொழுது கிடைக்கிற அனுபவம் மிகவும் மனக்கிலேசம் ஏற்படுத்துவதாய் இருந்து விடுகிறது,

வெள்ளைக்கலரில் சின்னதாக இருக்கிற போனிலிருந்து வெளிவந்த அந்த பாடல் சப்தம் இவனது போனின் ரிங்க் டோன்.

பிள்ளைகள்இருவரும்ஆளுக்கொரு ஸ்மார்ட் போன் வைத்துள்ளார்கள். அதை இவன் ஆள்க்காட்டி விரலால் தொடுவதற்குக்கூட அனுமதி கிடையாது. அதி லும் பள்ளியின் இறுதி வகுப்புப்படிக்கிற சின்னவள் ரொம்ப ஸ்ட்ரிட். தப்பித் தவறி போனைத்தொட்டு விட்டால் போதும் எட்டுத் திக்கிலிருந்தும் எதிரொ லிக்கிற ஆசரீரியாக ஆரம்பித்து விடும் ரொம்ப ஸ்டிரிட்.பிறகுஎன்னதான் செய்வான் பாவம் இவனும்.

இவனது மனைவியும் அப்படியே/ அவளும்பெரும்பாலுமாகஏதாவது ஒரு வேலையாகத்தான் இருப்பாள்.சமையலறையில் காய்கறி நறுக்க,வீடு கூட்ட அல்லது துணி துவைக்க,, ,என அவளது அன்றாட நகர்வில் மையம் கொண்டு அவளை சுழல வைத்துக் கொண்டேதான் இருக்கும்.

அதிலிருந்து வெளியேறுகிற அரிதான கணங்களில் எப்பொழுதாவது ஒரு முறை அவளது இருப்பு கணிணி தொலைக்காட்சி முன்பாக இருக்கும். மிகவும் அபூர்வமாக என்றாவது ஒரு நாள் ஏதாவது ஒரு சிறுகதை புத்தகம் அல்லது நாவலைஎடுத்துவைத்துப்படித்துக்கொண்டிருப்பாள்.அதிலும் சமகாலத்தைய எழுத்தாளர்களின் எழுத்து என்றால் மிகவும் விரும்பிப் படிப்பாள்.

சிறிது நாட்களாக எதுவும் படிப்பதில்லை.சின்ன எழுத் துக்கள் சரியாகத் தெரி வதில்லை என்கிறாள்.கண்ணாடி போட வேண்டும் கண்களைச் செக்ப் பண்ணி/ கண் டாக்டரிடம் போக வேண்டும்.நேரம்தான் கிடைக்கவில்லை.அவளையும் தனியாக அனுப்ப யோசனையாக இருக்கிறது. கண்களைச்செக்பண்ணும் போது மருந்து ஊற்றினால் ஒரு மணி நேரத்திற்கு பார்வை கொஞ்சம் மங்கல் பட்டுப்போய் விடுகிறது.அதனால் ஒருவர் கூடபோக வேண்டி இருக்கிறது.

இரண்டு பிள்ளைகளும் பள்ளிக்குப்போக படிக்க நேரம் சரியாகிப்போகிறது. அதெல்லாம் விடுத்து இவனும் மனைவியுமாக கண் டாக்டர் தேடிச்சென்ற போது ஆஸ்பத்திரி பூட்டிக்கிடந்தது.அல்லது இவர்கள் சென்ற நேரம் மதியம் சாப்பாட்டு வேளையை எட்டித்தொட்டு விடுகிற நேரமாக இருந்தது.அன்று இவர்கள் சென்று பார்த்த ஐந்தாவது ஆஸ்பத்திரியில் மாலைதான் டாக்டர் வருவார் எனச்சொல்லவும் சரி வந்தது வந்து விட்டோம் காய்கறி வாங்கிக் கொண்டு போவோம் என பஜார் சென்று ஆறு வகை காய்கறிகளில் ஒவ்வொன்றிலுமாய்,அரைக்கிலோ,கால்க்கிலோ என வாங்கிக் கொண்டு வந்தார்கள்.தக்காளியையும் சேர்த்து/

இதில் தக்காளி மட்டும்ஒருகிலோவாய்வாங்குவார்கள்எப்போதும்.இவர்கள் கேட்கா விட்டாலும் சரி கடைக்காரரே நிறுத்துப்போட்டு விடுவார்.அன்றலர்ந்த பூக்களாய் இல்லா விட்டாலும் கூட சிறிது பளிச்சென்று இருக்கிற காய்கறி களை இவனுக்குப் பிடிக்கும் எப்போதும்.அப்படியே சில நாட்கள் டல்லடித் தாலும் கூட பக்கத்திலிருக்கிற பூக்கடை அதை நிவர்த்தி பண்ணி விடும்.

காய்கறி வாங்கப்போகிற நாட்கள் தோறும் பூக்கடையில் பூ வாங்கி விடுவாள் மனைவி.ஒரு முழமோ அரை முழமோ வாங்கி வைத்துக்கொண்டால்தான் அவளுக்கு பஜார் வந்த திருப்தி இருக்கும்.வீட்டின் பக்கவாட்டாக இருக்கிற வெற்றுவெளியில் பூச்செடிகளும்,காய்கறிச்செடிகளும்,மரங்களுமாய் நட ஆசை தான் இவனுக்கு/ஆனால் அந்த ஆசை இது நாள்வரை கூடிவரவில்லை தான். சுடிதார் என்ன சேலை என்ன எது உடுத்திய போதும் அழகாகத்தான் தெரிகிறாள் அவள்.அதிலும் காட்டன் புடவை என்றால் சற்று கூடுதல் அழகு/

மூன்றோ அல்லது நான்கோ காட்டன் புடவைகள் வைத்திருக்கிறாள். அதில் ஒன்றை துவைத்துக்கொண்டிருந்த ஒரு நாளின் மதிய வேளையில் துணி துவைக்கிற இடத்திற்கு மிக அருகாமையாக வந்து விட்டிருந்த நீள பாம்பை கல் கொண்டு விரட்டியிருக்கிறாள். அப்போது இவன் வீட்டில் இல்லை, விடுமுறை தினம்தான்,எங்கோ வெளியில் சென்று விட்டான். இவன் வீட்டில் இருந்திருந்தாலும்பெரிதாக ஒன்றும் செய்து விடபோவதில்லைதான், பாம்போ டு பேச்சு வார்த்தையா நடத்த முடியும்,,,?

இவன் வந்த பின்பு விஷயத்தைச் சொன்ன அவள் பாம்பு போன திசையைக் காட்டினாள்.அவள் காண்பித்த இடம் ஒரே சீமைக்கருவேலை முட்புதராக இருந்தது.முட்புதர் தாண்டி ஊதாக்கலர் பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்த வீட்டின் பின் பக்க சுவரை எட்டித்தொட்டிருக்கலாம் பாம்பு.இந்நேரத்தில்,சரி விடுங்க அதையே எந்நேரம் வரை பாத்துக்கிட்டு இருப்பீங்க,,,,அது இல்லாத யெடத் துலயா நாம இருக்கம்,அத ஒண்ணும் செய்யாத வரை அது நம்மள ஒண்ணும் செய்யாது. அத தொந்தரவு பண்ணும் போது அது திரும்ப வந்த நம்மள தொந்தரவு பண்ணுது.விடுங்க அந்த நெனப்ப என துவைத்த துணிகளை காய்ப் போட்ட கையோடு வந்து சொன்ன யோசனைதான் டச் போன் ஒன்று வாங்கு ங்கள் என்பது/

சரி வாங்கலாம் பின்பு என முடிவு பண்ணிய நாட்கள் நகர்ந்து வந்து டச் போன்அல்லாத சின்ன போனிலேயே ரிங் டோனை கேட்க வைத்து விடுகிறது.

இந்த கேட்க வைத்தல் நேற்றுமதியம் இரண்டு மணியிலிருந்து இரண்டரை மணிக்குள்ளாக நடந்தது எனலாம்.நல்ல பசி வேளை ஊர் பாஷையில் சொன்னால் பசி நகர்ந்து முதுகுக்கு வந்து விட்டது. அலுவலகம் கம்ப்யூட்டர் உடன் வேலை பார்க்கும் சக ஊழியர்கள் அதிகாரிகள் ,,,என எல்லோரும் தத்தமது வேலை முடித்து சாப்பிடப்போய்க்கொண்டிருக்கும் வேலையில்தான் இவனும் கிளம்புகிறான் சாப்பிடப்போகலாம் என,,/

சாப்பாடு எப்போதும் பிரச்சனை ஆகித்தான் போகிறது,பிரச்சனை என்ன பிரச் சனை ,ஒன்று பசிக்கிற போது சாப்பிட முடியவில்லை.அல்லது நன்றாக பசி எடுத்து அமந்த பின்தான் சாப்பிட முடிகிறது.மக்களை நேரடியாக சந்திக் கிற வேளையில்இருக்கிறவர்களுக்கெல்லாம்இதுதான்பிரச்சனைபோலிருக்கிறது.  சமயத்தில் பசியால் கைகால் நடுங்கிப் போய் விடுகிறது.

முன்னூறும் முன்னூறுமாய்அறுநூறுசாப்பாடுகள் வேண்டும்,முன்னூறு தயிர் சாதம் முன்னூறு சாம்பார் சாதம்,அவைகளை பாக்கெட்டுகளாக போட்டு அடைக்காமல் அப்படியே கொண்டு வந்து வைத்து விடச்சொல்லுங்கள், பரிமாறிக் கொள்ளலாம் நாமே பபே முறையில் என வந்த போன் சொன்னது,

எதிர் வரும் 22 ஆம் தேதியில் தூத்துக்குடி ரோட்டில் இருக்கிற கல்யாண மண்டபத்தில் வைத்து விழா ,அதற்குத்தான் சாப்பாடு,அது போக தண்ணீர் மைக், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு, தொலைக்காட்சி செய்திபேட்டி என கொஞ்சம் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்,என பேசி முடித்து விட்டு போனை வைத்து விட்டார் தலைவர்.

பேச வேண்டியதுதான் இப்படியா பசி நேரத்தில் பேசுவது,அவர் பேசி முடிக் கும் போது பசி அமந்து போனது,சாப்பாடு பற்றி பேசிக்கொண்டிருக்கிற வேளை யில் சரியாக சாப்பிட முடியாமல் போவது காலக்கொடுமையே/

இவனுக்கு இப்போது அப்படித்தான் சாப்பிட முடியாமல் போனது,அல்சர் வயிறு வேறு நேரத்திற்கு சாப்பிடவில்லையென்றால் வயிறு ஒரு மாதிரி ஊத்தம் கொடுத்து விடும், அம்மாதிரியான நாட்களில் கொஞ்சமாகத்தான் சாப்பிட முடியும், இன்றும் அது போல சாப்பிட வேண்டியதுதான் என முடிவு செய்தவாறே சாப்பிட அமர்கிறான்.

முன்னூறும் முன்னூறுமான சாப்பாடுகளை எங்கு சொல்லலாம் மற்ற மற்றதான வேலைகளை எப்பொழுது செய்யலாம் என்கிற யோசனை சுமந்த வாறே/

6 comments:

KILLERGEE Devakottai said...

யதார்த்த நிகழ்வுகள்... காட்சிகளாய்.....
தமிழ் மணம் 2

vimalanperali said...

வணக்கம் கில்லர் ஜி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

நன்றி கில்லர் ஜி சார் வாக்களிப்பிற்கு/

வலிப்போக்கன் said...

அருமை.....

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
கதையுடன் காட்சி மிக அழகாக விரிகிறது.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

vimalanperali said...

வணக்கம் கவிஞர் த-ரூபன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/