24 Oct 2016

தீர்க்கக்கோடாய்,,,,,,,,



            

நான்நல்லா சாப்புட்டு வருஷக்கணக்குல ஆச்சு.சார்,என்ன செய்ய ஒண்ணு பாக்கணும், இல்லைன்னா அந்த யெடத்த விட்டு வந்துரணும் என்கிற சொல்சுழற்சியைஎதிர் கொண்டவனாய்த்தான் நுழைகிறான் அவ்விடத்தில்/

மேற்கண்டசொல்லைசொன்னபெண்ணுக்குவயதுஐம்பதைநெருக்கிஇருக்கலாம், கூட வந்திருந்த பெண்ணுக்கு எப்படியும் நாற்பதுக்கும் மேலான வயது என உறுதியாகச்சொல்லி விடலாம்,அவளது சிவந்த நிறத்திற்கும் பருத்த உடலு க்கும் வயது ஏற்றிச்சொல்லும் தோற்றம் இருந்தது,ஆனால் விடாப்பிடியாக அப்படியெல்லாம் சொல்லிவிடமாட்டேன் எளிதில் எனது வயதை எனவும், இதோ உடன் கூட்டி வந்திருக்கிறேனே இவள் வயதை வேண்டுமானால் சொல்கிறேன் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் என்றாள் அவள்,செய்தாலும் செய்வாள்அவள்பார்த்தால்அப்படித்தான் தெரிகிறாள்.கொஞ்சம் வெடுப்பாகத் தான்இருந்தாள்.இந்த வயதில் இவ்வளவு வெடுப்புஎன்றால்பிராயத்தில்,,,,,,,,,

அவர்கள் இருவரும் கட்டியிருந்த சேலை வழக்கமான பூப்போட்ட டிசைன் தான், ஆனால் பார்க்க சற்று பாந்தமாக இருந்தது,நன்றாக இருந்தால் முன் னூறு ரூபாய்க்கும் மேல் விலை சொல்ல முடியாத சேலை.

ஒல்லியாக இருந்த அம்மாள் கட்டியிருந்த சேலையில் கிளைகள் இல்லா மல் பூத்திருந்த பூக்கள் ஒன்றோடு ஒன்று நெருக்கமாகவும் சற்றே நிறமிழ ந்து காணப்பட்டுமாய்,/அவள் நடக்கும் போது அவளுடன் அசைந்த பூக்கள் பூத்து மலர்ந்து மணம் வீசியதாய்,,/ 

சற்று குண்டாய் இருந்தவள் கட்டியிருந்த புடவையில் இருந்த பூக்கள் பெரிது பெரிதாய் இருந்தது,கொஞ்சம் போனால் அவள் நடக்கும் பொழுது சேலையிலிருந்துபூக்கள்கழண்டு வேறிடத்தில் போய் விழுந்துவிடும் போல் இருந்தது,சமீபகாலமாகஇவன்எடுக்கிறசேலையில் அப்படியெல்லாம் பூக்கள் வைத்து எடுப்பதில்லை.அப்படியே இடையில் பூக்கள் வைத்து வந்தாலும் கூட அவைகளை கழட்டி தனியாக வைத்து விட்டு விட்டோ அல்லது கடைக்காரரிடம் கொடுத்து விட்டோ வந்து விடுகிறான்,அப்படி கொடுக்கிற அல்லது எடுத்து வைத்துவிட்டு வந்து விடுகிற பூக்கள் வாடிப்போகும் போது இவன் மனது கொஞ்சம் சங்கடப்படத்தான் செய்கிறது,ஆனாலும் அதை இவன் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறான்,

கடைசியாக இவன் புடவை எடுத்தது போன வாரம் என நினைக்கிறான், கடையின் ஓனர் கூட கேட்டார், பழக்கமானவர்,வழக்கமாக அங்கு வாங்கு வதாலும் தவணைப் பணத்தை அவர்களது எதிர்பார்ப்பிற்கு மாறாமல் கட்டு வதாலும்/

“ஏன் சார் பூப்போட்ட சேலைய தவிர்க்கிறீங்க,இப்ப என்னதான் மாடனா நெறைய வந்துட்டாலும் கூட பூக்கள் இன்னும் நிறமெழந்தும் செல்வாக்கு யெழந்தும் போகல பாத்துக்கங்க,’,,,என்பார், 

”வாஸ்தவம்தான் அவர் சொல்வதும் கூட என்றாலும்  இவனுக்குக்காதல் என்னவோ மாடர்ன் காட்டன் புடவைகள் மீதும்,கோடு போட்ட மில் சேலைகள் மீதும்தான்,

இவன் புடவைகள் எடுக்கிற கடையில் எப்பொழுதும் அம்பர் சேலை எடுக்கிற வயதான அம்மாவிடம் ஒரு தடவை மிகவும் தயங்கித் தயங்கிக் கேட்ட பொழுது  ”ஒங்களுக்கு எப்பிடி காட்டன் புடவைகள் மேல ஒரு ஆசையோ அது போல எனக்கு அம்பர் சேலை மேல ஒரு பிரியம் எனக்கு கல்யாணமான கொஞ்ச நாள்லயிருந்து அம்பர் சேலைகளத்தான் கட்டிக் கிட்டுவர்ரேன், அதுக்குன்னு பெரிசா ஒண்ணும் காரணம்இல்ல,கல்யாணம் முடிஞ்ச புதுசுல விருந்துக்கு போயிருந்த ஊர்ல கோயிலுக்குப் போயிருந் தோம்.அங்கவச்சி ஒருஅம்மாவப்பாத்தோம், ரொம்பவயசானவங்கெல் லாம் கெடையாது,நடுவாந்திரமான வயசுதான்.அம்பர் சேலைதான் கட்டீர்ந்தாங்க, நான் கோயிலுக்கு எதுக்கு போனேனோ அந்த வேலைய விட்டுட்டு அந்தம் மாபின்னாடியேபோயிசேலையப்பத்தி கேட்டு தெரிஞ்சிக்கிட்டேன், அன்னை யில இருந்து இன்னைக்கி வரைக்கும் அம்பர் சேலைதான் உடுத்துக்கிட்டு வர்ரேன்,ஏந்தலையப்பாத்தஒடனே கடைக்காரரும் அம்பர் சேலைய எடுத்து ரெடியா வச்சிருவாரு/நான் வாட்டு வந்த ஒடனே அவுங்க பிரிச்சிக் காண்பி க்கிற நாலைஞ்சு சேலைகள்ல ஒண்ண மட்டும் எடுத்துக்கிட்டு சப்தம் இல்லாமபோயிருவேன்,ரொம்பவும் வேலை வைக்காததுனால கடைக்கார ங்களும்,நான் வர்றத  விரும்புவாங்க, இந்த மாதிரி கஷ்டமர்ங்க வந்தா எங்களுக்கு ரொம்ப சௌகரியம்பார் கடை முதலாளி”/என அவள் அன்று உதித்தசொல் இது போலானவர்களைப்பார்க்கும் போது தவிர்க்க முடியா மல் ஞாபகம் வந்து விடுகிறதுண்டு.அது போல்தான் இவர்கள் இருவரைப் பார்த்ததும் ஞாபகம் வந்தது.

இவனும்மனைவியுமாகபோயிருந்தபோது ஆஸ்பத்திரியின் முன் பக்கத்தில் இரண்டுபெண்கள்பேசிக்கொண்டிருந்தார்கள்,இவன்மனைவிபோய்அவர்களது பக்கத்தில்அமர்ந்ததும்மிகச்சரியாக அவர்களை டாக்டர் கூப்பிட்டு விட்டார். அவர்களை/

மேலக்குப்புசாமி தெருவிலிருக்கிற ஹோமியோபதி ஆஸ்பத்திரிக்கு இவன் வாடிக்கையாளராகி ஒரு வருடத்திற்கு மேலாக இருக்கும். இதற்கு முன் பார்த்தஇடத்திலிருந்து இங்கு இடம் பெயர்ந்து வந்த நாள் முதலாய் நிலை கொண்ட புயலாய் இங்குதான் மையம் கொள்கிறான்.இவனது உடலில் குடி கொண்ட  நோய்களுக்கான மருத்துவத்திற்காக/

இவன்வருவதுமட்டுமில்லாமில்லாமலமனைவியையும்இங்குதான்கூப்பிட்டு வருகிறான் வைத்தியம் பார்க்க,,,/ முதலில் பார்த்த இடத்திலிருந்து இது கொஞ்சம் திருப்தியாய் இருக்கிறது என்றாள்,இவனுக்குத்தான் கொஞ்சம் அடிக்கடி வந்து போகும் நிலை ஏற்பட்டது,

குமாரலிங்கபுரத்திற்குமாறுதலான நாளிலிருந்து இவனில் அந்த நோய் குடி கொண்டதா அல்லது ஏற்கனவே குடிகொண்டிருந்தது குமாரலிங்கபுரம் போனநாளிலிருந்துகூடிப்போனதாதெரியவில்லை. பெரும்பாலுமாக தினசரி ஆஸ்பத்திரிக்குபோகவேண்டியிருந்தது.மருத்துவரும் தலை கீழாக தண்ணீர் குடித்துப்பார்த்தார்.இவனுக்குள் குடிகொண்ட நோய்தான் இவனை பாடாய்ப் படுத்திஎடுத்தது,பெரிதாகஒன்றும் இல்லை,இரு சக்கர வாகனத்தில் தொடர் ச்சியாக ஒரு கிலோ மீட்டர் கூட செல்ல முடியவில்லை.தலை சுற்றியது பஜார் போய் வருவதற்கு முன்பாய் நாலைந்து இடங்களில் நின்று விடுவான்,

பெரும்பாலுமாய் இவன் நிற்பது டீக்கடைகளிலாய் இருக்கும்,டீக்கடைகள் பெரும்பாலுமாய் இவனுக்கு தெரிந்தவைகளாய்த்தான் இருக்கிறது.

ஒருநாள்பாலத்தின்அருகில்இருக்கிற டீக்கடையின் மாஸ்டர் கூட கேட்டார் ,”ஏண்ணேஇந்தா இருக்குற பஜார் போய் வர்றதுங்குள்ள இத்தன கடையில நிக்குறீங்களே” என,,,,அதற்கு இவனது பதில் சிரிப்பாய்த்தான் இருந்தது.

தவிர்க்கமுடியாமல்ஒரே ஒரு கடைக்காரரிடம் மட்டும் சொல்லி விட்டான் இவனது உடல் நிலை பற்றி,,,,எல்லாம் கேட்ட அவர் தன் உடல் நிலை பற்றி கொஞ்சம் சொன்னார்.இது போலான தினங்களில் ஆஸ்பத்திரிக்கு போனதினங்கள்போய்இப்பொழுதெல்லாம்ஆடிக்கொருமுறை அமாவாசைக் கொரு முறை போய் வருகிற நிலையாகத்தான் இருக்கிறது.

மேலக்குப்பு சாமித்தெரு இவன் அறிந்த தெருதான்.பெண்கள் மேல் நிலைப் பள்ளிக்கும்,அரசுஆஸ்பத்திரிக்குமாய்வரும்பொழுது அந்தத்தெரு வழியாகத் தான்போவான்வருவான்.இதுபோதெரு திரும்பும் இடத்தில்தான் பெட்ரோல் பங்க் இருக்கிறது, அந்தப் பக்கம் போனால் பஜார் அல்லது மார்க்கெட் அங்குதான் பெட்ரோல் போட்டுக் கொள்வான்.

ஒரு முறை இவன் சார்ந்திருக்கிற இலக்கிய அமைப்பு கவியரங்க நிகழ்ச்சி வைத்த பொழுது அதற்கான விளம்பர போர்டை அரசு ஆஸ்பத்திரியின் உள்ளே கொண்டு போய் கட்டிவிட்டு வந்தான் உடன் வந்த நண்பரின் துணையுடன்/

வந்தநண்பர்தான் சொன்னார்,”ஏன்நண்பா நோயாளிகள் இருக்கிற இடத்தில் கவிதைபாடுவதைப்பற்றியவிளம்பரமாஇதுவேஒருகவிதையாகஇருக்கிறதே” என்றார்,இவன் சொன்னான் அதற்கு ,இது கவிதை மட்டுமல்ல சமூகத் தின் மிகை முரண் யாதர்த்தம் என/

அந்த கவியரங்கத்தில் கூட்டம் அவ்வளவாக இல்லை என்றாலும் கூட மாணவர்கள் நிறையப்பேர் வந்திருந்தார்கள்,வந்திருந்த மாணவர்களும் மாணவிகளும் எட்டாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை படிக்கிற மாணவர்கள்.அவர்கள் பெரும்பாலுமாய் அவர்களது பள்ளி சீருடையுடனே யே வந்திருந்தார்கள். அவர்களில் ஒரு மாணவன் இரு பால் இனத்தவ ராய் இருந்தான், அதைக் கவனித்ததும் இவனது நண்பன் சொன்னான் இவனது காதருகில் வந்து, ”கவியரங்க நிகழ்வு பெரும் வெற்றி”என,,அந்த மாணவனை கை காட்டி,,/

அந்தமாணவனும்இவர்கள் பேசியதையும் இவர்களது அசைவையும் கவனி த்திருக்க வேண்டும்,அடிக்கடி இவர்களைப்பார்ப்பதும்,தலையை கவிழ்ந்து கொள்வதுமாய் இருந்தான்.

கவியரங்க நிகழ்வு முடிந்து போகும் போது இவனும் நண்பனும் அந்த மாணவனுக்கு கைகொடுத்து அனுப்பி வைத்தார்கள்.சங்கடமாய் சிரித்துக் கொண்ட அவன் ”இது போலாய் எனக்கு கற்பிக்கும் ஆசிரியர் கூட என் கைபிடித்து குலுக்கியது கிடையாது,ஆனால் ஒரே நாளில் அறிமுகமான நீங்கள் என்னை கைகுடுத்து ஊக்குவிக்கிறீர்கள்/உங்களை மறக்க மாட்டே ன்,என் வாழ்நாளில், அது மட்டுமில்லை,என்னை என் வீடும் எனது சுற்றுப் புறமும்நான் படிக்கிற பள்ளியும் ஒதுக்கி வைக்கிற போது நீங்கள் மட்டும்  ஊக்குவிக்கிறீர்களே எனச் சொல்லி மகிழ்ச்சியாய்சென்றான். அதுதான் நாங்கள் என மனதினுள் ளாகச்  சொல்லிக்கொண்டான்.இவன்/

அன்று மாலையே அமைச்சர் பங்கேற்கிற விழா அந்தப்பள்ளியில் நடந்தது. ஓங்கி வளர்ந்த மரங்களை காட்சிப்படுத்திய நுழைவாயில் தாண்டித்தான் ஸ்டேடியம் போக வேண்டியிருந்தது,இவனுடன் சேர்ந்து நண்பர்களும் வந்திருந்தார்கள்.அவர்கள் பேச்சிலோ அவர்கள் அடித்த லூட்டியிலோ இவன் கலந்து கொள்ளவில்லை,அல்லது இவன் மனம் ஈடு பாடு கொள்ள வில்லை.மாறாகஸ்டேடியம்,அங்குநடக்க இருக்கிற நிகழ்ச்சி இது மட்டுமே இவன் கண் முன்னாகவும் மனம் முழுவதுமாய்/

சரிஇருக்கட்டுமேஅதனால்என்ன என இருந்த போது நண்பர் இவனை விட வில்லை,இவன்அதெல்லாம் வேஸ்ட்,வந்த வேலையை கவனிப்போம் என நண்பர்களை துண்டித்து விட்டு விட்டு ஒரு ஐஸ்கிரீம் வாங்கிக்கொண்டு போய் உட்கார்ந்து விட்டான் ,ஆடிட்டோரியத்தில்/

ஆஸ்பெஸ்டாஸ்கூரைவேயப்பட்டிருந்த ஆடிட்டோரியம் கொஞ்சம் பெரிதா கவே காணப்பட்டதாகத்தெரிந்தது.

இவன்வந்ததிலிருந்துஆடிட்டோரியத்திற்கும்பள்ளிதலைமைஆசிரியர்அறைக் குமாய்ஓடிக்கொண்டிருந்தடீச்சர்இவன்கவனித்துக் கொண்டிருந்ததை கவனி த்து விட்டாள்.நேராக இவனிடம் வந்த அவள் எங்கிருந்து வருகிறீர்கள், என்ன ஏது என்கிற விசாரணையில் இறங்கி விட்டாள்.இவனும் கொஞ்சம் கோபமாகவும் எரிச்சலாகவும் பதில் சொல்லி விட்டான் அதற்கு,/

”என்ன நினைத்து இப்படியெல்லாம் என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள் என என்னால் யூகிக்க முடிகிறது,நீங்கள் நினைக்கிற மாதிரியான ஆள் இல்லை நான், தவிர நீங்கள் பொது நிகழ்ச்சி எனசொல்லித்தானே இதை நடத்துகி றீர்கள்,அப்புறம் இவர் வரக்கூடாது அவர் வரக்கூடாது என்றால் முன்னமே வெளியில் எழுதிப்போட்டிருக்க வேண்டும்” என இவன் கொஞ்சம் சப்தம் கூட்டவும் இந்தப் பேச்சையும் நடப்பையும் கவனித்துக் கொண்டவாறே வந்த இன்னொரு டீச்சர்”சார்,சார் விடுங்க,அங்கன பாருங்க அமைச்சர் வர்றாருன்னு அவுங்க கட்சிகாரங்க பண்ணுற அழிச்சாட்டியத்த,,,,,இத அவுங்ககிட்ட சொல்ல முடியல ஒங்க கிட்ட வந்து கோவத்தக் காமிக்கிறா தப்பா நெனைச்சிக்கிறாதீங்க சார்” என்கிற சொல்லுடன் விலகிச்சென்று விட்டாள்,

அன்றைய விழா நடப்பும்  அமைச்சரின் நல்ல தமிழ் பேச்சும் இவனிடம் கோபப்பட்டுப்பேசிய டீச்சரின் நினைவும் இவன் மனதில் நீண்ட நாள் குடி கொண்டிருந்தது,அடுத்தடுத்தநாட்களில்அந்தப்பள்ளிப்பக்கமாகஇவன் சென்ற போதும் அல்லது அந்ததெருவை இவன் கடக்க நேர்கிற சமயங்க ளினன்று மாய் அன்று பள்ளியில் இவனிடம் கோபப்பட்டுப்பேசிய டீச்சரை இவன் பார்க்க நேர்வதுண்டு,

பள்ளியினுள்ளாகஎப்படிடீச்சராக காட்சிப்பட்டாளோ அப்படியே வெளியிலும் இருந்தாள்,ஒரு வேளை இருபத்தி நான்கு மணி டீச்சராக இருப்பாளோ என யோசிக்க வைத்து விடுகிறாள் அவளைப்பார்க்கிற சமயங்களில்/

பள்ளி விட்டு வருகிற ஒரு நாளில் இவன் ஆஸ்பத்திரியில் உட்கார்ந்திருந் ததைப்பார்த்தடீச்சர் ”என்ன சார் ஒடம்புக்கு ஏதுமா,ஏன் இப்பிடி இங்க வந்து உக்காந்துருக்குறீங்க” என்றாள்,

இவன்ஏதாவது ஓரு உடல் நலக்குறைவென்றால் இங்கு வரும் வழக்கத் தைச்சொன்னான்,சிறிதுநேரம்பேசிக்கொண்டிருந்தவள் தனக்கும் காண்பிக்க வேண்டும், நீண்ட நாட்களாக இருக்கும் உடல் பிரச்சனைக்கு/ எங்கு போய் யாரிடம் காண்பிப்பது எனத்தெரியாமல் திணறிக்கொண்டிருந்தேன், இனி மேல் இங்கு காண்பிக்கலாம் என நினைக்கிறேன் என்றாள்.

இவன் அமர்ந்திருந்தமரப்பெஞ்சிற்கு எதிர்த்தார் போல் அமர்ந்திருந்த அவள் இவன்அமர்ந்திருந்தபெஞ்சில் வந்து அமர்ந்து கொண்டு ”சாரி சார், அன்னை க்கிஸ்கூல்லஅப்பிடி நடந்துக்கிட்டது என்னோட தப்புதான்,என்னோட அப்பா வயசு இல்லைன்னா அண்ணன் மாதிரி இருக்குற ஒங்கள அப்பிடி நெனை ச்சி தப்பா பேசீருக்கக்கூடாதுதான்,எனக்கு சார், அன்னைக்கி ஒரே மன அழுத்தம் என்னதான் நல்ல சேலை துணிமணிகளக் கட்டிக்கிட்டு வெளி யில சிரிச்சிக் கிட்டு இருந்தாலும் கூட அன்னைக்கி எனக்கிருந்த டென்சன் வேறசார்,ஸ்டேஜ்டெகரேசன்,சவுண்ட் சிஸ்டத்துல ஆரம்பிச்சி ,வர்ற விருந் தினர்கள கவனிக்கிற பொறுப்பு வரை ஏந்தலையிலதான், தவிர டீ காப்பி ஸ்நாக்ஸ்,கூல்டிரிங்க்ஸ்வரை,,,,ஏன்பொறுப்புதான்,இதுலஏதாவது ஒன்னுல எசகு பெசகு ஆனாக்கூட ஏங் தலை மேனேஜ்மெண்ட போர்ட் வரைக்கும் உருளும். இந்த லட்சணத்துல கூட வேலை பாக்குறவங்க குடுத்த டார்ச்சர் வேற,என்னதான் எனக்கு விழாநடத்துறபொறுப்ப நிர்வாகம் குடுத்துருந்தா லும் கூட சீனியர் டீச்சர்களும் வாத்தியார்களும் அவுங்களுக்கு இந்தப் பொறுப்பக் குடுக்கலைன்னு கவலையும் பொறாமையும்,,,/அது பல நேரங் கள்ல செய்யிற ஏற்பாடுகளுக்கு ரொம்ப தடையாக்கூட இருந்துச்சி, இப்பி டித்தான் விழாவுக்கு மொத நா நான் ஏற்பாடு செஞ்சி வச்சிருந்த ஸ்டேஜ் டெகரேசன்,சவுண்ட் சிஸ்டம் மத்த சில வேலைகள்ல கொழப்பம் ஆகிப் போச்சி,எல்லாமே என்னன்னு விசாரிச்சப்ப எனக்கு சீனியர் ஒருத்தர் பண்ணுன வேலைன்னு தெரிஞ்சிச்சி,சரி இனிம இப்பிடியே விட்டா லாயக் குப் படாதுன்னு விழா கமிட்டிகிட்டப்போயி சொல்லீட்டேன் நெலைமய,,,,,/ அவுங்க கூப்பிட்டு  அந்த சீனியர விழா முடியிர வரைக்கும் ஸ்கூல் பக்க மே வரக் கூடான்னுட் டாங்க,,,,, இந்த மாதிரியெல்லாம் நடக்குற நிகழ்வுக ளோடவிளைவு தான் ஒங்கள மாதிரி ஆட்கள்கிட்ட இப்பிடியெல்லாம் பேச வச்சிருது, சார்,அதான் அன்னைக்கி அப்பிடிபேசீட்டேன்தப்பா எடுத்துக்காதீ ங்க” என்றாள்,

அன்று அவள் மருத்துவம் பார்த்துப்போன பின்பும் கூட அகலாத டீச்சரின் நினைவு இவனை மிகவும் இம்சித்து விட்டதுதான்,

பள்ளிஇறுதிவகுப்புமுடித்துவிட்ட தனது மகளை டீச்சர் ட்ரெயினிங் சேர்க்க வேண்டும்அடுத்தவருடம்எனநினைத்திருந்தான்,அதுஇப்பொழுது புஸ்தானா, அடப்பாவிகளா,,,,என்கிறநினைப்புமேலிட்டவனாகவும்மனம்தொங்கியவனாக
வும்/

இவனது மகள் ப்ளஸ் டூ படிக்கிற போது ஒரு மழை நாளன்றின் மாலை வேளையாக பள்ளி விட்டு வரும் பொழுது அவள் வகுப்புப் பையன் (பக்க வாட்டு வரிசை பெஞ்சில் அமர்ந்திருப்பவன்) லெட்டர் கொடுத்து விட் டான்,லெட்டர் கொடுத்து விட்டு தலை கவிழ்ந்து நின்றவனிடம் நாளைக்கு பள்ளிக்கு வரும் பொழுது இந்த கடிதத்திற்கு வாய் மூலமாய் பதில் சொல்லி விடுகிறேன் எனச் சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தவள் நேராக வந்து இவனிடம் கொடுத்திருக்கிறாள் கடிதத்தை,,,/

இவனும் வாங்கிப்படித்து விட்டு உனது வயது இப்பொழுது பதினேழு, அவனது வயதும் அதுவே,,,,,,,ஆகவே இது காதலெல்லாம் இல்லை,இந்த வயதில் எல் லோருக்கும் வருகிற மாற்றுப்பால் இனக்கவர்ச்சியே,எனவே இது பற்றியெல்லாம் சீரியஸாக ஒன்றும் யோசிக்க வேண்டாம்,உனக்கு என்ன தோணுகிறது இந்த விஷயத்தில் எனச்சொல் நான் வழி சொல்கி றேன் என இவன் சொல்லி விட மறு நாள் ஸ்கூலுக்குப்போன இவனது மகள்மதியம் சாப்பாட்டு வேளையாகப்பார்த்து அவனைக்கூப்பிட்டு சொல்லி யிருக்கிறாள்,”நீ ஒன்றும் தப்பானவனில்லை,தப்பான எண்ணத்திலும் இந்தக் கடித்தைக் கொடுக் கவில்லை.கடிதத்தின் உள்ளே உள்ள வார்த்தைகளின் அர்த்தம் புரியாமல் அதற்கான அருஞ்சொற்பொருள் புடிபடாமல் கொடுத்து விட்டாய் கடிதத்தை என்னிடம்,/

மிகவும் அவசர அவசரமாய்,ஷாஜகான்,லைலா மஜ்னு,அம்பிகாவதி அமரா வதி எல்லாம் இழுத்துள்ளாய்,,,,,,,,வேணாம் அவ்வளவு தூரம்,வேஸ்டாய் சுத்தி விட்டாய்,இல்லாத ஊருக்கு வழி கேட்டது போல் கேட்டுள்ளாய் என்னிடம். வழியும் இல்லை இப்பொழுது என்னிடம்,நீ கொடுத்தது காதல் கடிதமும் இல்லை,உன் மனதில் என் பற்றிய எண்ணங்களால் நீ பின்னிப்  பிணைந்து வைத்திருப்பது காதலும் இல்லை.என்னைப்பற்றிய கவர்ச்சி அவ்வளவே,,,,, என்போல் இன்னொருத்தியைப்பார்த்தவுடன் இந்தக்கவர்ச்சி காணாமல் போய் விடும்.அப்பொழுது நீ ஓரிடத்தில் நிற்பாய்,நான் ஓரிடத் தில் நிற்பேன்,ஆகவே வேணாம் இந்த எண்ணம்,இதை வேறோடு பிடுங்கி எறிந்துவிடுஎன கடுமையாக சொல்லிவிட்டு வந்ததாய் சொன்னாள் அன்று மாலை இவனிடம்/

இவன்  பாராட்டிய பாராட்டுக்கு சொல் மட்டும்தான் என்னது, மற்றதெல் லாம் தங்களுடையதும்,அம்மாவினுடையதுதானேஅப்பாஎன்றாள் இவனது மகள்.

உங்களைப்போலெல்லாம் காதலிக்க இப்பொழுதெல்லாம் யாரும் இல்லை என நினைக்கிறேன்.அப்படி மாய்ந்து மாய்ந்து காதலித்து இரு வீட்டார்க ளின் எதிர்ப்பையும் மீறி மணம் புரிந்து வாழ்க்கையில் சாதித்தவர்கள். நன் றாகஇருக்கிறீர்கள்,இந்தநன்றாயிருத்தலுக்குநீங்கள்பட்டசிரமமும்,கஷ்டமும் கொஞ்ச நஞ்சமல்ல,,,,,அந்த கொஞ்ச நஞ்சத்திற்கு நான் அல்லது எனது செயல் வினையாகிவிடக்கூடாது என நினைத்துதான் அந்தப் பையனிடம் எனது முடிவை இப்படி சொன்னேன் தைரியமாக என்றாள்,

அன்று சொன்ன தைரியத்தை கொண்டவளின் பேச்சு நினைவுக்கு வந்தது, டீச்சரிடம் பேசிக்  கொண்டிருந்த நாளில்/

இந்நினைவுசுமந்து அந்தப்பக்கமாக சென்று விட்டால் சுல்தான் பாய் கடை யில் நிச்சயமாக டீ சாப்பிட்டு விடுவான்,என்ன பாய் ஏதாவது விஷேசமா என்றால்அவர்நீங்கள் டீ சாப்பிட வருவதே விசேஷம்தான் என்பார், “அவன் கடுவாபார்ட்டியப்ப அவன்கிட்ட ஒண்ணு வாங்க முடியாது,ஆனா சார் நீங்க போய் கணக்கு வச்சு கையில் இருக்குற நேரம் குடுத்தும் ,இல்லாத நேரம் சொல்லீட்டுமா டீக்குடிச்சுட்டு வந்துர்றீங்களே சார்,என்பார்கள் நண்பர்கள்/

இவனும் அப்படித்தான்,அதற்குக்காரணம் அவரது கடை டீயின் ருசியும் டீக் கடையில் ஒலிக்கிற பாடல்களும் எனச்சொல்லலாம்/ கிருஷ்ணா முகுந்தா முராரேவிலிருந்து,,,,,,,,,இப்பொழுது வெளிவந்த புதுப்பட பாடல் வரைக்கும் எல்லாமும் அவரது கைவசமும் மனதினுள்ளுமாக/ 

அதிலும் இளையராஜாவின் பாடல்கள் என்றால் உயிரை விடுவார் மனிதர்/ இவனுக்குக்கூட அப்படி ஒரு கிறுக்கு உண்டு.அந்தப்பாடல்களை கேட்டுக் கொண்டும்அதன்இனிமையில் நனைந்தவாறும் சமயத்தில் இரண்டு மூன்று டீக்களைக்கூட வாங்கிக்குடித்து விடுவான்/

அந்தக்கடைக்குப்போகிற சமயங்களில் டீக்குடிக்கும் முன்பாக ஒரு டீக் குடிப்பான்,டீக்குடிக்கும்போதுஒருடீக்குடிப்பான்,டீக்குடித்தபின்ஒருடீக்குடிப்பான். அப்படிக்குடித்து விட்டு வருகிற சமயங்களிலும் குடிக்காமல் வருகிற சமயங்களிலும் கூட இவன் டீக்குடிக்கிற கடைகள் தவிர்த்து மற்ற டீக் கடைகளிலும் அமந்து அமந்து எரிகிற பொடிப்பொடியான விளக்குகள் சுற்ற டேப் ரிக்கார்டர்களும்,சவுண்ட் சிஸ்டமும் இருக்கப்பார்த்திருக்கிறான். 

மேலக்குப்புசாமி தெருவிலிருக்கிற ஹோமியோபதி ஆஸ்பத்திரி இவனை  கைக் கொண்டதா அல்லது இவன் ஹோமியோபதி ஆஸ்பத்திரியில் தஞ்சம் கொண்டானா என்பது இவனது பதிவில் சரியாக இல்லை.

நல்லவிஸ்தீரணமான இடம் எனச்சொல்ல முடியாவிட்டாலும் கைக்கு அட க்கமான கட்டிடம்.பார்க்க வருகிற நோயாளிகள் அமர வெளியில் சிறிது இடம் விட்டு இடையில் ஒரு மரப்பலகை தடுப்பு வைத்து நீட்டி வழிவிட்டு உள்ளே மருத்துவர் இருந்தார்.

நீளமான மரபெஞ்சும் நான்கைந்து பிளாஸ்டிக் ஸ்டூல்களுகமாக நோயாளி கள் அமர்கிற இடத்தில் போட்டிருந்தார்கள். 

இவன் தனியாகப்போகிற போதும் சரி,மனைவியுடன் போகிற போதும் சரி நீளமரபெஞ்சில்சம்மணங்கால்போட்டுத்தான்அமர்வான்.ஏன்அப்படிஎன மருத் துவர் கேட்கிற போதும் சரி,மனைவி கேட்கிற போதும் இருக்கட்டுமே இது ஒரு எக்ஸர்சைஸ் போல என்பான். 

ஆனால் மருத்துவர் சரியாக கண்டுபிடித்து விடுவார்.ஹாயாக கால் நீட்டி அமர்வதை விடவும் இதில் ஒரு பாதுகாப்பு இருப்பதாய் தெரியும். இரண் டாவது உடம்பு ஒரு கட்டுக்குள் இருப்பதாய் நினைக்க வைக்கும்.

.ஆகவேஇப்படிஉட்கார்ந்திருப்பதில்ஒருசௌகரியத்தை உணர்வீர்கள் என்கிற சொல் தாங்கியும் அந்த சொல்ச்சுட்டியின் ஞாபகத்துடனும் ஆஸ்பத் திரிக்கு போன அன்றுதான் எங்களைகடந்து போன பெண்மணி உள்ளே டாக்டரிடம் அப்படியாய் பேசிக்கொண்டிருந்தாள், 

:என்னசெய்யச் சொல்லுங்க டாக்டர், அவரு ஒடம்புக்கு முடியாம படுத்துக் கெடக்குறாரு படுக்கையோட படுக்கையா,அவருக்கு தினசரி பீ,,,,மூத்திரம் அள்ளி ஒடம்பு தொடச்சி அவருக்கு துணி மாத்தி விட்டு வெளியில வந்து உக்காரும் போது எனக்கு சோறு அள்ளி சாப்புட முடியல,அப்பிடி மீறி சாப்பிட்டாலும் வாந்திதான வந்துருது, என்ன செய்ய சொல்லுங்க,இந்த பீ மூத்துர வாடையெல்லாம் சகிச்சிக்கிட்டு இருந்தாலும் கூட ஏதாவது ஒரு நேரத்துல இல்லன்னாலும் கூட சோத்த அள்ளி வாயில வக்கிறப்ப ஞாபகம் வந்துருது.என்ன செய்ய பின்னே கொஞ்சம் நஞ்சம் சாப்புட்டதும் வெளியிலவந்துருது,ஏன்வீட்டுக்காரருக்குமட்டும் இல்ல,மொதல்ல ஏங்மாமி யாருக்குப்பாத்ததேன்,அப்புறம் ஏங் மாமனாருக்குப் பாத்தேன்,இப்ப ஏன் வீட்டுக்காரருக்கு, பாக்குறேன்,,,,இன்னும் யார், யாருக்குப் பாக்கணும்ன்னு எழுதி வச்சிருக்கோ,,,, தெரியல டாக்டர்,

முன்னயெல்லாம்இப்ப இருக்குற ஒடம்பு போல மூணு மடங்கு குண்டா இருப்பேன். இப்ப சாப்புட முடியாம, செய்யாம இப்பிடி மெலிஞ்சி ஒடம்பு நலிஞ்சி போயிட்டேன் டாக்டர் எனச் சொன்ன அவள்,,,,,,அது  மட்டுமில்ல ஏங் ஒடம்பப்பத்தி கவலப் படாம ஒண்ணு அவுங்களப்பாக்கணும்,இல்ல அந்த யெடத்த விட்டு வந்துரணும் அதுதான் வழி என டாக்டரிடம் சொன்னாள்.

அதற்கு டாக்டர் அப்பிடியெல்லாம் இல்லம்மா,இனிமே நீங்க நல்லா சாப்பு டலாம்,எப்பயும் போல மன அருவருப்பு இல்லாம இருக்கலாம், புள்ளை களோட பேதம் பாராட்டாம இருக்கலாம்.

நான் குடுக்குற மாத்திரைய ஒரு மாசம் சாப்புட்டுட்டு என்னைய வந்து பாருங்க,அப்ப ஒங்க நெலைமையே தலை கீழா மாறியிருக்கும்,எல்லாம் மனுசனாப்பாத்துவச்சிக்கிறதுதானம்மா என அவளிடம் மாத்திரை குப்பியை கொடுத்து அனுப்பினார் டாக்டர்/

6 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

மற்றவர்களை ஊக்குவிக்கவும் உற்சாகப் படுத்தவும் ஒரு நல்ல மனம் வேண்டும் நண்பரே

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும் மாறாத அன்பிற்குமாய்/

vimalanperali said...

வணக்கம் நாகேந்திர பாரதி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்கும்
அன்பிற்குமாக/

Yarlpavanan said...

இனிய தீபாவளி வாழ்த்துகள்

vimalanperali said...

வணக்கம் காசி ராஜலிங்கம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

மங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்,,,/