வாங்கிய காய் கறிகளும் அதன் கனமும் பை கொண்டிருந்தது.பிக் ஷாப்பர் பை அது.பெரிய ஜவுளிக்கடையின் பெயர் பொறித்துக்காணப்பட்ட அது துணிப் பையாக அல்லாமல் நைலான் பையாக இருந்தது.
நேற்றைக்கு முன் தினம் அலுவலகத்தை மூடுகிற ஆரறை மணி வாக்கில் அலுவலக பியூன் முத்து கிருஷ்ணன் வலது கையிலிருந்த பையை கீழே போட்ட போது அதே ஜவுளிக்கடையின் பெயர் இருந்தது அந்தப் பையில்/
அவர் பையை கீழே போடாமல் இடது கையில் அல்லது கக்கத்தில் வைத் திருந்தாரானால் இவனுக்கு அது தெரிய வாய்ப்பில்லைதான்,இதுபோலாய் வாய்ப்பில்லாமல் தெரியாமல் போன விஷயங்கள் அனேகம் என குவிந்து தெரிகிறது சமீபமாய்/அலுவலகத்திலும்,வெளியிடங்களிலுமாய் சேர்த்து/
இதில் அலுவலகம் ப்ளஸ் வெளியிடத்தில் தெரிவது பாதகமில்லைதான், சொல்லப்போனால் அது அப்படித்தான் இருக்கும்,இன்னும் சொல்லப் போனால் அது சமயத்தில் யாரோ சிலரால் அல்லது ஒருவரால் பின்னப் பட்ட பின்ன லாடைப்போலும் வாட்ஸ் அப் செய்தி போலுமாய் சிக்கல டைந்துபோய் காணப்படும்,ஆனால்இவன் பெரிதாய் நம்பி தஞ்சம் கொண்ட இடத்திலிருந்து அப்படி வரும் பொழுதுதான் சற்றே கூட அல்ல கொஞ்சம் கூடுதல் சங்கடம் சுமந்ததாகிப் போகிறது.பரவாயில்லை என அந்த நேர மென் சங்கடங்களை ஒற்றை சிரிப்பால் கடந்து போகப்பழகிக் கொள்கிற தைரியத்தை கைக்கொள்ள வேண்டியிருக்கிறதுதான் இது போலான சமய ங்களில்/

சிவப்பும் வெள்ளையும் கலந்து ரெக்சினில் தைக்கப்பட்டிருந்த அந்தப் பை யில் ஒருவருக்குதேவையான அளவிற்கு பயண நேரத்தில் துணிமணிகள் வைத்துக்கொள்ளலாம்.அதேகொள்ளளவுகொண்டதாகத்தான்இருந்ததுமஞ்சள் கலர் பிக் ஷாப்பர் பையும்/என்ன அதை ஜிப் போட்டு மூட முடியாது, இதைமூடமுடியும்.அவ்வளவுதான்வித்தியாசம்.காய்கறிகள் மற்றும் பலசரக் குகள் வாங்கிக் கொள்ளலாம் என்கிற அறிவிப்பிலாமல் கொடுத்திருந்த பை அது.
கீழேவிழுந்தமுத்துக்கிருஷ்ணனின் பையை எடுத்துக் கொடுக்கக் குனியும் போது தான் தோணுகிறது.இது போலான பெரிய நிறுவனங்களை இவன் வசிக்கிற ஊர்களிலோ அல்லது அதை ஒட்டிய சிற்றூர்களிலோ பார்க்க முடிவதில்லை என்கிற ஆதங்கம் அந்தப்பையைப்பார்த்தவுடன் வருகிறது தான்.

முத்துக்கிருஷ்ணன் மூடிக்கொண்டிருந்த கேட்டில் உறை கொண்டிருந்த இரும்புத்துருஎத்தனைஆண்டுகாலமாக அப்படியே இருக்கிறது எனத் தெரிய வில்லை.சிறிதளவுதேங்காய் எண்ணெய்விட்டால்சரியாகிப்போகும். துருவும் அகன்று விடும்,திறப்பதற்கும் கொஞ்சம் ஈஸியாக இருக்கும்.
எளிதில் சரியாகவும் ஈஸியாகவும் போய் விடுகிற ஒன்றை இப்படி ஆறப்போட்டு,ஆறப்போட்டு துரு ஏற விடுவதால் பூட்டாத கேட்டை வெட்டி எடுக்கிற காரியத்தை செய்து கொண்டிருப்பதாகப்படுகிறது. இந்தக் கேட்டிற் கும் அதுதான் நிலை போலும் என பியூன் முத்துக்கிருஷ்ணன் சொன்னது இன்று ஏனோ ஞாபகத்தில் வந்து போவதாக,,/
காலையில் வீட்டை விட்டுக்கிளம்புகையில் மணி பதினொன்றை நெருக்கி இருக்கலாம்,
அதென்னவோதெரியவில்லை,இந்த வாரத்தில் இன்றுதான் கொஞ்சம் வெயில் அடிக்கிறது,அதற்கே தஸ்க்,புஸ்க் என்கிறார்கள் சிலர்.
காலையில்ஒன்பதுமணிக்கு கோழிக்கறி எடுக்கப்போயிருந்த போது என்னா வெயிலுப்பா,,தாங்க முடியல என்றார்கள் கடைக்கு வந்திருந்த சிலர், அதென்னவோ தெரியவில்லை,இவனுக்குள் ஏற்படுகிற தற்செயல் நிகழ்வா அல்லது தற்செயல்களை தாண்டிய சாஸ்வதமா தெரியவில்லை சத்திய மாக,,/
கோழிக் கறியோ அல்லது ஆட்டுக்கறியோ எடுக்கப்போகிற தினங்களில் கறிக்குச் சொல்லிவிட்டு எங்காவது கடை தேடி டீக்குடிக்கப் போகலாமா என டீ தேடி அலைகிற மனோ நிலை வந்து விடுகிறது.
கோழிக்கறி ”விஞ்ச் பிராய்லரில்” எடுப்பான்,கடையின் ஓனர் ரெகுலராக இவனது அலுவலகத்திற்கு வந்து போகிறவர்,என்ன சார்,நான் வர்ற நேரம் வர்ற வேலைய செஞ்சி குடுக்க மாட்டேங்குறீங்க,வர வர ரொம்ப லேட் பண்றீங்கசார்என்பாள் .வாஸ்தவம்தான் அவள் சொல்வதும்,அவள் வருகிற நேரம்ஒன்றுமதியம்சாப்பாட்டு வேளையாக வருவாள் அல்லது சாப்பிட் டுக் கொண்டிருக்கும் பொழுது வருவாள்,அவளை என்னவெனக் கேட்க முனை வதும் அவளுக்கான பணியை சாப்பிட்டு விட்டு வந்து சிறிது நேரத்தில் முடித்துத்தருகிறேன் என சொல்ல முனைபவனாகவும் இவன்தான் இருப்பான் அந்தநேரத்தில்/
ஒருவெயில்நாளின்மத்தியானவேளையாக(நல்லவேளையாக எல்லோருமே சாப்பிட்டு முடிந்ததற்கப்புறம்தான்,,,,,)அலுவலகத்திற்கு வந்தவள்அப்படியே சிறிதுநேரம் உட்கார்ந்து விட்டாள்.உட்கார்ந்த சிறிது நேரத்திலேயே எழுந்து போய்தண்ணீர் குடித்தாள்.வியர்த்திருந்த முகத்தை சேலைமுந்தானையால் துடைத்தாள்.பின்சிறிதுநேரம் போய் அதே இடத்தில் அமர்ந்து கொண்டாள். இதையெல்லாம்பார்த்துக்கொண்டிருந்த இவனுக்கு அவளின் செயல் கொஞ் சம்இயல்பின்மைஇல்லாததுபோலத்தோணவேஅவளைகூப்பிட்டுக்கேட்டான், தனக்கு”லோபி.பிஎன்றும்டாக்டரிடம் போய் காண் பித்து விட்டு இப்பொழுது தான் வருவதாகவும்” சொன்னாள் அவள்.
சிறிதுநாட்களாவேபாடாய் படுத்தி வருகிற உடல் நிலை கொஞ்சம் மோசம் செய்து வருவதாகவும்,அதை சரி செய்ய டாக்டரிடம் செல்வதிலேயே நாளில் பாதிசரியாகிப்போகிறது. எனவுமாய் அலுத்துக்கொண்டாள், நேற்றை க்கு முன் தினம் இப்படித்தான் ஆஸ்பத்திரிக்கு போய்க்கொண்டிருக்கும் பொழுது பஸ்ஸை விட்டு இறங்கியவுடன் மயங்கி விழுந்து விட்டதாகவும் பஸ் டாப் பில் இருந்த சிலர் தூக்கி விட்டு தண்ணீர் தெளித்து சோடா வாங்கிக்கொடுத்து மயக்கம் தெளிவித்ததாகவும் சொன்னாள்.
அலுலவலகத்திற்குவரும்பொழுதுமட்டும்எனஇல்லை,கடைக்குகறி எடுக்கப் போகும் பொழுது கூட பேசுவாள் இது போலான பேச்சுக்களை.கடையில் கறி வெட்டிக்கொண்டிருப்பவர்தான் சொல்வார், அட ஏங்க்கா சாரப்போயி துன்பப் படுத்துறீங்க,அவுங்க சர்வீஸீக்கு அவுங்க ஆபீஸூல இது போல எத்தன கேள்விப்பட்டுருக்கமாட்டாங்க,எத்தன பாத்துருக்க மாட்டாங்க,,,,,,,, என/ அதற்கு இவனது பதில் பெரும்பாலுமாக இதுவாகத்தான் இருக்கும், சரி விடுங்க ண்ணே,நம்ம ஆம்பளைங்க நாலு யெடத்துக்குப் போவோம், நாலு பேசுவோம், அவுங்க பொம்பளைங்க பாவம் எங்க போவாங்க ,இது போலா பேசுறதுக்கும்,பகிர்ந்துக்கிறதுக்கும்,,எனசொல்லிவிட்டு ஒன்று சொல்லிவிட்டு வருவான், ”இருந்தாலும்ப்பா,நம்ம பலவீனங்கள வெளியில காண்பிச்சிக்கிறக் கூடாது. கடைங்குறது பொது யெடம் இல்லையா,நாலு பேரு வந்து போற யெடத்துல ஏற்படுற ஒரு சின்ன பலவீனம் கூட பெருசா ஊதி காண்பிக்கப் படும்தான,,,அதுனால கொஞ்சம் எதையும் யெடம் பொருள்,,,, அறிஞ்சி சொல்றதும் செய்யிறதும் எப்பவுமே நல்லதுப்பா ஆமா” எனக் கூறி விட்டு வந்து விடுவான்.கையில் கோழிக்கறியுடன்,,/,,,,
ஆட்டுக்கறிக்கென இவன் செல்கிற கடை நல்ல முத்து கடையாகவே இருந்தது,அவர் சொல்கிறார், இவன் போகிற அல்லது இவனை ரோட்டில் அல்லது டீக்கடைகளில் பார்க்கிற நேரங்களில் ,,,,”சார் பெருசா ஒண்ணு மில்ல,நீங்க கடைக்கி மாசத்துல ரெண்டு தடவ வர்றீங்க சந்தோஷம்,ஆனா நீங்க வர்ற நேரத்துல கூட்டமா இருந்துச்சின்னா பேச முடியாம போகுது என்னால,கூட்டமில்லாம இருந்துச்சின்னா பேச சந்தர்ப்பம் வாய்க்க மாட் டேங்குது,நான் சார் ரொம்பப்பேர நம்பி கெட்டுப் போனவன் சார்,அதுனால யோ என்னவோ ஒங்களப்போல இருக்குறவுங்களப் பாக்கும் போது கொஞ் சம் மனசு விட்டு பேசலாம்,இல்ல ஆத்தாமய பேசி போக்கிறலாம் ன் னு நெனைச்சிக்கிறது உண்டு,”
“அது பெரிசா ஒண்ணுமில்ல சார்,ஒங்களுக்கே தெரியும் இல்லைன்னா கேள்விப்பட்டுருப்பீங்க,நானு ஒரு கட்சியில இருக்கேன் சார்,பத்து வயசுல இருந்து என்னன்னு தெரியாம அந்தக் கட்சி மேல பிடிமானமா இருந்து பதினாறுவயசுலநெலைகொண்டுகட்சி தான் இனிம நமக்குன்னு நெனைச்சி வளந்தேண்ணே,,,,சும்மாசொல்லக்கூடாது,சின்னவயசுலகட்சிஆபீஸ் கூட்டச் செய்யன்னுஇருந்தவனவளந்துநின்னதுக்குப்புறம்பொதுக்கூட்டம் தலைவர்க பாதுகாப்புக்குன்னுஅனுப்பஆரம்பிச்சாங்க ,அங்கிட்டு இங்கிட்டு சுத்துனாலும் பெரிசா கெட்ட பழக்கம்ன்னு ஒன்னும் கெடையாது,கொஞ்சம் டீ மட்டும் அதிகமா குடிப்பேன் ,மத்தபடி தண்ணி வெண்ணி பொம்பளைங்க பழக்கம் ன்னு எதுவும் கெடையாது.சார், அதுனால புள்ள புடிச்ச வேளைய செஞ்சா லும்ஒடம்பும் மனசும் கெட்டுப் போகமா இருக்கானேன்னு வீட்டுலயும் ஒன்னும் சொல்லல,,,,,விட்டுட்டாங்க ,,,,,அவ்வளவுக்குள்ளதான் வீட்டுப் பாடும்இருந்துச்சி,,,,/கட்சியிலயிருந்துதான் எனக்கு பொண்ணு பாத்து கல்யா ணமும் பண்ணி வச்சாங்க,கட்சியில இருந்துன்னா கட்சி பண்ணி வக்கல ,கட்சியில இருக்குற எங்காளுக நாலு பேரு சேந்து எனக்கேத்த மாதிரி ஒரு பொண்ணப் பாத்து கட்டி வச்சாங்க,பொண்ணு கட்டுன வீட்டுல கறார சொல்லீட்டாங்கமொதல்லநீங்க தனி ஆளு,இனிமே அப்பிடியில்ல ,நாளைக் கே குடும்பம் குட்டின்னு ஆயிப்போச்சின்னா,, ஒங்களுக்குன்னு நெலையா ஒரு பிடிமானம் வேணும், அதுனால ஒங்க ளுன்னு ஒரு கறிக்கடை வச்சிக் குடுத்துர்றோம் ,அதுக்கு பெருசா மொதல் எதுவும் தேவை இல்லை. ஆட்டு யேவாரிகள நாலு பேற பழக்கி விட்டுற் ரோம்,ஒங்க பழக்கத்துக் கெல் லா ம் ஈஸியாஅவுங்க ஒங்களோட யேவாரம் வச்சிக்கிற விரும்புவாங்க. அவுங்க ளோட பழக்கம் வழக்க மும் குடுக்கல் வாங்கலும் கை வந்து யேவாரமும் விருத்திஆகுன்னுவைங்க, நல்ல நெலைமைக்கு வருவீங்கன்னு மாமனாரு வீட்லயிருந்து கறிக்கடையும் வச்சிக் குடுத்தாங்க, அதுவும் நல்லாத்தன் ஓடுச்சி,அதுலவர்றவருமானத்த வச்சித்தான் இன்னிக்கி வரைக்கும் குடும்பத்த ஓட்டிக்கிட்டிசொந்தமா வீடு வாசல் ன்னு கட்டி இருக்கேன்னா பாத்துக்கங்க ளேன்.இதுல்லாம்நல்லா போயிக்கிட்டு இருந்த நேரத்துலதான் மண்டையில சனியன் குடிகொண்ட மாதிரி கட்சிக்காரப்பயக நாலு பேரு சும்மா இருக்க மாட்டாம நீயிதான் கட்சியில சின்ன வயசுலயி ருந்து இருக்கயில்ல, வரப் போற பஞ்சாயத்து தேர்தல கட்சியில யிருந்து பிரசிடெண்டுக்குநிக்க வைக்கச் சொல்லி போயி கேளுன்னாங்க,சரிதான்நம்ம மேல உள்ள உறுத்தல் தான் பையங்க இப்பிடிபேசுறாங் கன்னுசொல்லி கட்சிக் காரங்ககிட்டப் போயி கேட்டா,,,,, அவுங்கஅப்பத்தான்அவுங்க சுய ரூபத்த காண்பிக்க ஆரம்பிச்சாங்க, ,,,,,,,,ஒருஅஞ்சிலட்சரூபாகுடு,ஒன்னையவேகட்சியிலயிருந்துபிரசிடெண்டுக்கு நிக்க வச்சிர்றோம்ன்னாங்க அப்பந்தான் கொஞ்சம் உறைக்க ஆரம்பிச் சிச்சி,,,அன்னையிலயிருந்து இந்த விஷயத்த ஒங்களப்பாக்கும்போது பேசி பகுந்துக்கிறனும்ன்னுதோணிச்சி.பகுந்துக்கிட்டேன். இனிம கொஞ்சம் மனசு பாரமில்லாம இருப்பேன்” என்ற கறிக்கடைக்காரரின் பேச்சைக் கேட்ட வாறு கறி எடுத்து வந்தான், சென்ற வாரம்.

கறி எடுத்துக்கொண்டு திரும்புகிற சமயம்தான் நாகராஜ் பலசரக்கு கடைக்குப்பக்கத்திலிருக்கிறகடையில்தான்டீசாப்பிட்டான்.நன்றாக இருந்தது டீ,இத்தனை நாட்களாக இப்படி ஒரு கடை இங்கு நிலை கொண் டுள்ளது பற்றி இவனுக்கு தெரியாமல் போனது ஆச்சரியத்திலும் ஆச்சரியமே,,,/
முதல்தடவைடீக்குடிக்கப்போகும்போதுகவனிக்கவில்லை,இரண்டாவது தடவையாகப் போகும் போது பார்த்து விட்டான்.டீப்போடும் இடத்திற்கு அருகிலேயே சற்றே மேலெழுந்த சுவரில் ஒரு போர்டு தொங்கியது,அதில் வரிசையாக விலை,,,,,,,எழுதியிருந்தது.”இட்லி 2 ற்கு,,,,,வடை,,,,,தோசை,,,,,, என்கிற விலைப் பட்டியலுக்கு நடுவிலாய் கொஞ்சம் நீளமாக சாம்பார் பூரி நான்கிற்கு,,,,,என எழுதி வைத்திருந்தார்கள்.ஆகா பிரமாதம் இப்படி ஒரு விஷயம் இருப்பது தெரியாமல் போனாதே இது நாள்வரை, இல்லையெ ன்றால்இந்நேரம்பத்து இருபது தடவைக்கு மேல் வாங்கியிருக்கலாமே,,,,, ?ஆத்திர அவசரத்திற்கு அலுவலகத்திற்கு கிளம்புகிற காலை வேளைகளில் இதுபோலாய்வாங்கிக் கொண்டு போகலாம்தானே,சௌகரியமாக,,,”/ என்கிற நினைப்பில் எத்தனையோ நாட்கள் அந்த இடத்தை கடந்துள்ளான்
பதினொன்றை மணிக்குக்கிளம்பியவன் பஜார் வர பணிரெண்டு மணியாகிப் போனது,பாலம் ஏறி வர வேண்டும்,அதற்கு இவ்வளவு பொழுதா எனக் கேட் காதீர்கள், இரு சக்கர வாகனம் இடையில் நின்று போனது ,கொஞ்சம் ஸ்டார்டிங் ட்ரபிள்,புதிதாக வாங்கிய 100 சி சி வண்டிதான்.1800 கிலோ மீட்டருக்கு மேல் ஓடியிருக்கிறது,முதல் சர்வீஸே இன்னும் பண்ண வில் லை, ஒர்க்ஷாப்பில்கேட்டே இரு மாதத்திற்கு மேலாகிப் போனது,இன்னும் சர்வீஸிற்குப்போடநேரம்வாய்க்கவில்லை.வீட்டிலிருந்துகிளம்பிஅல்லம்பட்டி முக்கு வந்த போதுதான் வண்டி நின்று விட்டது.பின் மிதியாக மிதித்து கிளம்பி வரும்பொழுது தாமதமாகிப்போனது.
முதல்வேலையாகவண்டியை சர்வீஸிற்கு விடவேண்டும்,எது எப்படியான போதும்எனநினைத்துக்கொண்டேவந்தவன்காய்கறிகடைமுன்வந்துநின்றதும்,
மிகவும்மகிழ்ந்துபோனான்.கடையில்கிட்டத்தட்டஅனைத்துக்காய்கறிகளுமே இருந்தது.
வாங்கியகாய்கறிகளும்அதன் கனமும் பை கொண்டிருந்தது நீண்ட நாட்கள் கழித்து,,,/

3 comments:
அருமை
தொடர்நது எழுதுங்கள் நண்பரே
அருமை ஐயா...
வணக்கம் கரந்தைஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment