அரண்மணை அருகே இருந்த எல்லாச்சாலைகளையும் வீதிகளையும் படை வீரர்களும் தொழிலாளர்களும் கைப்பற்றிக்கொண்டார்கள்.
அரண்மனை சூழ்ந்து கொள்ளப்பட்டது.பீரங்கிகள் வாகன் இடத்தில் நிறுத்தப் பட்டன.போர்க்கப்பல்கள் ஆற்றில் புகுந்து அரணமனையை எதிர்த்து நிறுத்தப் பட்டன.
பனிக்கால அரண்மனை முழுவதும் முற்றுகைக்கு உள்ளாகிறது.1917 இரவில்/
1905ல்இதேஅரண்மனைமுன்தெய்வப்படங்களைஏந்திவந்ததொழிலாளர்களை ஜார் அரசின் படைகள் ஈவிரக்கமின்றி சுட்டுக்கொன்றது. வேட்டையாடியது நினைவுக்கு வருகிறது மக்களுக்கு/
சரியாக பணிரெண்டு ஆண்டுகள் கழித்து இப்பொழுதுஅதேஇடத்தில் மீண்டும் தொழிலாளர்கள் ஆயுதங்களை ஏந்தியவாறு அதே அரண்மனை முன்/தாக்குத லை நடத்த ஏற்ற தருணம் எது?
தாங்கள் பென்சிலும் கையுமாக வரை படத்தை உற்றுக்கவனிக்கிறீர்கள். குறிக் கிறீர்கள்.
இந்த வீதியில் இந்தப்படைப்பிரிவுகள் நிறுத்தப்பட்டிருக்கிறது,
அந்தவீதியில்இன்னபட்டாளம்இருக்கிறது,அங்கேஆட்கள்அதிகம் அனுப்பப்பட வேண்டும்.இங்கேமிகக்குறைவாய்உள்ளார்கள்.ஆள் ,படை,ஆயுதங்கள், கப்பல் கள், பீரங்கிகள் எல்லாம் தயாராய்/
வீரர்களே வேளை வந்து விட்டது தாக்குதலை தொடருங்கள் என்கிறீர்கள் தாங்கள்.
தருணம்.
உஙகளின் போர்ச்செய்தி ஸ்மோல்னீ மாளிகையிலிருந்து வந்த மறுகணம் பனிக்கால அரண்மனையைச்சுற்றி நிலவியிருந்த கொடிய அமைதியைக் கிழித்துக் கொண்டு மண்ணும் விண்ணும் அதிர டமார் டமார் என்கிற வெடி முழக்கம் எழுந்தது
ராணுவத்தினரும் செங்காவல் படையினரும் ஆர்ப்பரித்து எழுந்தார்கள். பனிக் கால அரண்மனை நோக்கி அவர்களின் விசையான பாய்ச்சல் ,வீரர்கள் மழை வெள்ளம் போல் புரண்டு வருகிறார்கள்.அக்கம் பக்கத்து வீதிகளிலிருந்து பீரங்கி குண்டுகள் பொழிந்தது.மெஷின்கள் சடசடத்தது.
அரண்மனையை தடுத்து நின்ற விறகுத்தடை அரண்மீது நெருப்பு மாரி பெய்தவாறு அரண்மனை சதுகத்தில் பாய்ந்து முன்சென்றது கவச மோட்டார்.
செங்காவற் படை வீரர்களும் தொழிலாளர்களும் தொழிலாளர் புரட்சி வாழ்க என முழக்கமிட்டவாறு ராணுவக்கல்லூரி மாணவர்களையும் அதிகாரிகளை யும் விரட்டிச்செல்கிறார்கள்.
செம்படைப்பிரிவுகள் அரண்மனைக்குள் சென்றார்கள்.ராணுவ கல்லூரி மாண வர்களும் அமைச்சர்களும் கைது செய்யப்படுகிறார்கள்.
இத்தகவல் ஸ்மோல்னீ மாளிகையிலிருந்துதங்களுக்கு வந்து சேர்கிறது.
பனிக்காலஅரண்மனை நம் வசமாகிவிட்டது என்கிற செய்திதங்களைமட்டற்ற மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது.
உங்களதுசொல்லும் செயலும் கனவும் சிந்தனையும் எழுத்தும் நிஜமாகி உருப் பெற்றுஎழுந்து வெற்றி என்கிற சொல்லாய் உங்கள் முன் பிரமாண்டம் காட்டி நிற்கிறது தோழரே/
உள உவகையுடன் செய்தி கொண்டு அந்த ராணுவப்புரட்சித்தலைவரை ஆரத் தழுவிக்கொள்கிறீர்கள்.சரி அடுத்தது என்ன?
மறுநாள் முதல் புது அரசை நிறுவ வேண்டும்.உலகிலேயே முதல் தொழிலா ளர் குடியானவர்களது அரசை/
நிலபிரப்புக்களுக்கும்,சர்ச்சுகளுக்கும்எல்லாவகைபணக்காரர்களுக்கும் சொந்த மானநிலங்கள்குடியானவர்களுக்குஇலவசமாகவழங்கப்படும்.நிலத்தில்உழைக் காதவர்களுக்குநிலம்கிடையாது.நிலத்தில்உழைப்பவர்களுக்குமட்டுமே நிலம் சொந்தம் ஆகும்.
மக்கள் பல நூற்றாண்டுகளாக கண்ட கனவின் செயல்பாட்டை எழுத்தில் வடித்தீர்கள்.
அதற்கு செயல் வடிவம்,அமையப்போகும் புது அரசில் கொடுக்க வேண்டும் என முடிவும் எடுக்கிறீர்கள்.
தங்களின் அந்த முடிவை காங்கிரஸ் கட்சி காங்கிரஸ் ஆதரிக்கிறது. உறுதிப் படுத்துகிறது. கூடவே சமாதனத்தைப்பற்றியும்/
மக்கள் மகிஸார்கள் தேர்ந்தெடுத்த கட்சிக்காங்கிரஸ் கமிஸார்களின் தலைவ ராக தங்களை தேர்ந்தெடுக்கிறது.
இரவு முழுவதுமாய் நடந்த இந்தக்கூட்டத்தில் இதை அறிவிக்கிறீர்கள்.
சோவியத் அரசாங்கம் அமைந்து விட்டது.இப்போது நம் நாட்டில் சோவியத் ஆட்சி நடைபெறுகிறது.ருஷ்யாவெங்கும் சோவியத் ஆட்சியை வளப்படுத்து ங்கள்எனமக்கள்கமிஸாரவைதலைவரானதங்களின்அலுவலகஅறையில்தான் புதிய சோஷலிஸ வாழ்வின் நிர்மானம் பறிய பிரச்சனைகள் முடிவெடுக்கப் பட்டன/
பரிவு,வம்ச வர்த்தகப்பட்டங்கள் ,,,இனி ருஷ்யாவில் வழங்கப்பட மாட்டாது. இருப்புப்பாதைகளும்,கடலிலும் ஆறுகளிலும் செல்லும் கப்பல்களும், படகுக ளும் இனி அரசுக்கே சொந்தம்.
ஆலைகளும் தொழிற்சாலைகளும் இனி அரசின் உடமை ஆகிவிடும். தொழி லாளர் வர்க்கம் தானே உற்பத்தியை நிர்வகிக்கும் என்கிறது மாதிரியான புதிய அசாதாரணங்கள் சோவியத் நாட்டில் மட்டுமே முதன் முறையாக நிறுவப் பட்டன.
யுத்தம் நாட்டை பாழ்படுத்தி விட்டது.பெத்ரொகிராத்தில் கொடிய உணவுப்பஞ் சம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது.
உனவுச்சீட்டுக்களின் படி தலைக்கு கால் ராத்தல் ரொட்டி ஒவ்வொரு நாளும் வழங்கப்பட்டது.இதுகாலைசிற்றுண்டிக்குக்கூடப்போதாதே.தொழிலாளர் குடும்பங்களிலும்அப்படியேமக்கள்கமிஸாரவையிலும் அப்படியே/தாங்க ளும் அப்படித் தான் வாழ்கிறீர்கள்.தங்களுக்கும் அந்த அரிய ரேஷன்தான். பெத்ரோ கிராத் மட்டுமல்ல,எல்லா நகரங்களும் பட்டினியால் தவிக்கிறது.
ஆனால்ருஷ்யாவில் தானியம் இருந்தது.சைபீரியாவிலும் வோல்கா பிரதேசத் திலும்தானியத்திற்கு குறைவே இல்லை.கிராமங்களிலிருந்து வாங்கி நகரங்க ளுக்கு விநியோகிப்பதுதான் தேவையாய் இருக்கிறது.
மிகவும் எளிய காரியமாக அது பட்டாலும்உண்மையில் மிகவும் சிரமமான காரியமாய் இருந்தது.ரயில் போக்குவரத்து முற்றிலுமாக சீர்குலைந்திருந்தது. அதை சீர் படுத்து வதே முதல் காரியமாக இருந்தது.
நகரங்களில் விறகு எரிபொருள் நிலக்கரி எதுவும் இல்லை.
எங்கும் மறைமுக நாச வேலைக்காரர்களும் கள்ள வியாபாரிகளும் வேர் விட்டிருந்தார்கள்.கள்ள வியாபாரிகள் மக்களின்இடர்களைபயன்படுத்தி லாபம் திரட்ட விரும்பினார்கள்.
நாச வேலைக்கார்களோ புரட்சிக்கு குழிபறிக்க முயன்றார்கள்.அவர்களுக்கு ஆதரவாக இருந்தார்கள் பூர்ஷ்வாக்கள்.
பூர்ஷ்வாக்கள் சோவியத் ஆட்சியை எதிர்த்தார்கள்.ஜார் ஆட்சி கால கள்ள வியாபாரிகளும்அதிகாரிகளும் தீங்கு விளைவித்தார்கள்.இடைஞ்சல் செய்தார் கள்.
ஜெர்மானியர்கள்இதோ வந்து விடுவார்கள்.சோவியத்துக்களை ஒழித்துக்கட்டி விடுவார்கள்.அப்புறம்சுகமாகவாழலாம்எனபூர்ஷ்வாக்கள்நம்பினார்கள். ஜெர்மன் வெற்றியை எதிர்பார்த்தார்கள்.
இந்நிலையில் மக்கள் கமிஸாரவையிலிருந்து ஒரு அறிக்கை வெளியாகிறது. தொழிலாளர்களே,தோழர்களே,குடியானவர்களே,,நம்தாய்திருநாட்டிற்கு ஆபத்து, ஜெர்மானியப்படைகள் நம் எல்லையை நெருங்கி விட்டன,தாய் நாட்டை பாதுகாக்கஎழுங்கள்எனஅறைகூவி அழைகிறது.நகரங்களிலிருந்தும் , கிராமங்களி லிருந்தும்,தொழிலாளர் குடியிருப்புகளிலிருந்தும் ஆயிரமாயிரம் தொண்டர்கள் படையில் சேர முன் வந்தார்கள்.
1918 பிப்ரவரி செஞ்சேனைசோவியத்படை ஜெர்மன் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக போரிட்டது.அவர்களை சோவியத்துக்குள் நுழைய விடாமல் தடுத்தது.
செஞ்சேனை தமக்கு எதிராக போர் தொடுக்கவும் ஜெர்மன் ஜெனரல்கள் சமா தானத்திற்கு இசைய தீர்மானித்தார்கள்.
இந்நிலையில்மக்கள் கமிஸாரவையால் உருதிப்படுத்தப்பட்ட அரசாணையொ ன்று தங்களால் தயாரிக்கப்படுகிறது.
தொழிலாளர்தோழர்களே,ஆலைகளிலும்,தொழிற்சாலைகளிலும்,உணவுப்பொருள் சேமிப்புப்பட்டாளங்கள் நிறுவுங்கள்.
பல்வேறு கிராமங்களுக்குச்செல்லுங்கள்,அங்கே இருக்கும் ஏழை குடியானவர் கமிட்டி மூலமும் நடுத்தர விவசாயிகள் மூலமும் கிராமங்களில் உள்ள அதிக தானியத்தை எடுத்து ஏழைக்குடியானவர் கமிட்டியிடமும்,தொழிலாளர் பட்டா ளங்களிடமும் ஒப்படைக்கச் வேண்டும் என்கிற தங்களது அரசாணை உடன டியாக செயல்பட்டதன் விளைவு மக்கள் பட்டினியிலிருந்து காப்பாற்றப் பட் டார்கள்.
தொழிலாளர்களின்அக்டோபர்புரட்சிருஷ்யாவில்வெற்றிபெற்றதும்மார்க்ஸீய வாத புரட்சியாளர்கள் தங்கள் நாடுகளிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளை உருவாக் கினார்கள்.ஒரேஐக்கியமாக ஒன்றாவோம் என்கிற தங்களின் கூற்றுப்படி கம்யூ னிஸ்ட்கட்சிகள் ஒன்றாயின.அதற்கு கம்யூனிஸ்ட் அகிலம் என பெயர் சூட்டப் பட்டது.
அதன் முடிவில் தாங்கள் இப்படிக்கூறுகிறீர்கள்.இயந்திரங்கள் இல்லாமல் கம்யூனிஸத்தை நிறுவ முடியாது.
போரில்வெற்றியடைந்த ஐந்து ஆண்டுகளில் பஞ்சத்தைவென்றோம்.சீரழிவை சமாளித்து நேராக்கி விட்டோம்.குடியானவர்களின் வாழ்க்கை நிலைமைகள் நேராகிவிட்டன.வர்த்தகம் செய்ய கற்போம்.ஆனால் இயந்திரங்கள் இன்னும் சுமாராகவே செய்கிறோம்.இன்னும் நிறைய இயந்திரங்கள் தேவை.
எங்களதுகுறிக்கோள்இயந்திரங்கள்.வெளிநாட்டுதோழர்களே,உங்களதுதேவை புரட்சி சோவியத் நாடு நமது கலங்கரை விளக்கு.அது சொல்லும் பாதையில் செல்வோம் என கலைகிறார்கள் வெளிநாட்டு தோழர்கள்/
தொடரும்,,,,,

4 comments:
வரலாறு தொடரட்டும்
இப்பொழுதுதான் பதிவைக் கண்டேன். அருமையான, தேவையான பதிவு.
வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார் ,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் டாக்டர் ஜம்புலிங்கம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment