5 Feb 2017

அஞ்சலி,,,,,


பெரியதான ஆரவாரமோ அல்லது வெற்று அலட்டலோ பகட்டோ இல்லாத எழுத்து அவரது/ 

அதே சமயம் சமூகத்தின் மண் சார்ந்த நிகழ்வுகளை ஆழப்பதிய வைத்தில் நம் மனங்களை வென்றவர் என அவரைப்பற்றியாய் ஞாபக நெசவுகளை நெய்ய விடுகிறவேளையில் எனது நண்பரும் தோழருமான பாண்டியன் கிராம வங்கி மேலாளர் திரு காமராஜ் சார் அவர்கள் சொன்னது ஊடாடாமல் இல்லை. 

சாத்தூர்பஸ்டாண்டில் இறங்கிய ஒரு மாலை நேரமாய் எனக்கு முதுகு காட்டி நின்று கொண்டிருந்தவர் க.சீ சிவக்குமார் போலிருக்கவே அருகில் சென்று பார்க்கிறேன். 

அடஅவரேதான்.அதிகாலையிலிருந்து இங்கேயேதான் நிற்கிறேன். பஸ் நிலை யத்தில் வெள்ளரிப்பிஞ்சு விற்பவர்கள்,டீக்கடைக்காரர்கள், கட்டண கழிப்பிடம் நடத்துபவர்கள்,நீயூஸ்பேப்பர்க்கடைக்காரர்கள்,டிரைவர்கள்,கண்டக்டர்கள் பயணி கள், மற்றும் ஆண்கள் பெண்கள் குழந்தைகள்,,,,,,,,என அனைவரையும் பார்ப்பதும் அவரது நடவடிக்கைகளை அவதானிப்பதுமாக இருக்கிறேன் என்றாராம். 


இப்படியாய் இச்சமூகத்தின் மண் சார்ந்த நிகழ்வுகளை ரத்தமும் சதையுமான எண்ண ஓட்டங்களுடன் நேரில் பார்த்து அவதானித்து எழுதுகிற எங்களின் நெஞ்சம் நிறைந்த எழுத்தாளர் திரு க சீ சிவக்குமார் அவர்களை காலன் இவ்வ ளவு சீக்கிரமாய் பறித்து க்கொண்டது தமிழ்கூறும் நல்லுலகிற்கும், அவரது குடும்ப த்தார்க்கு ம்  மிகபெரிய இழப்பே,,,/ 

அவரது மறைவிற்கு ஆழ்ந்த அஞ்சலிகள்,,,

4 comments:

THIRUMALAI said...

"பெரியதான ஆரவாரமோ அல்லது வெற்று அலட்டலோ பகட்டோ இல்லாத எழுத்து அவரது" - நிஜமான வார்த்தைகள் - பகிர்வுக்கு நன்றி!

Thulasidharan V Thillaiakathu said...

சிவகுமாரின் மரணம் அதிர்ச்சியாய் இருந்தது. அதுவும் கீழே விழுந்து என்றதும்....அயோ என்றிருந்தது. என்ன ஓர் எழுத்து!!!

ஆழ்ந்த இரங்கல்கள்

கீதா

vimalanperali said...

அஞ்சலி தெரிவித்த தங்கள் மனம்
உயர்ந்ததாகவே ஆகிப்போகிறது,,,/

vimalanperali said...

அவரது எழுத்து அவரது
மரணத்தை ஜெயித்து நிற்கட்டும்,,,/