12 Feb 2017

பகிரப்படாதவையாய்,,,,,

          
எல்லாவற்றையும் எல்லோரிடமும்
எப்பொழுதுமாய் பகிர்ந்து கொள்ள ஆசைதான்.
ஆனால் பிடித்திழுக்கிற துரதிஷ்டமும்
 தகுதியும் தராதரமும் தலைமையுமான
 உயர் மாண்புகள்
பகிர்தலை துரத்தி தள்ளிப்போகச்செய்து விடுகிறதுதான்.
இப்படியாய் பகிரப்படாதவைகளாய்

 ஏகபட்டது காற்றின் கனம் தாங்கி 
அதில் கலந்து ரூபமற்று அரூபமாய் 
காட்சியளித்தவாறாய் என் காதல் உட்பட,,,,/
                           ############
                               காதல்,,,,

அவளிடம் பகிர்ந்து கொள்ளாமால்
வேறு யாரிடம் பகிர்ந்து கொள்ள முடியும் நான்,,?
என்னிடம் பகிர்ந்து கொள்ளாமல்
வேறு யாரிடம் போய் பகிர்ந்து கொள்வாள் அவள்,,,?
குடும்பவிஷயங்களையும் அது தாங்கிய முதிர் காதலையும்,,,,./

                                      ##############
                                         குடும்பம்,,,,,,

அரிசி பருப்பு அரசலவு,குடும்பம் பட்ஜெட் பிள்ளைகள்,படிப்பு வேலை வாய்ப்பு ,திருமணம்,
இது தாண்டி காதல் என்ன வேண்டியதிருக்கு என்பவர்களின் கேள்விக்கு அது தாங்கித்தானே இதுநாள்வரை நகர்ந்திருக்கிறது குடும்பம் என்போமாக,,,,/

                                      ###############
                           கலந்தலைந்த காதல்,,,,

எல்லாம் தெரிந்திருந்த எனக்கு காதலிக்கத்தெரிந்திருக்கவில்லை
அந்த இளம் பிராயத்தில்/
அதனாலென்ன பரவாயில்லை நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் கேட்டுத்தெரிந்து கோள்ளலாம் என்றால் அவர்களும் அது விஷயத்தில் பெரிய பூஜியமே என படம் வரைந்து காட்டினார்கள்,
உறவினர் சிலரும் அதையே முன் மொழிய வெறுத்துப்போன நான் அந்தப்பெண்ணிடம் கேட்டு விட அவளும் அதையே சொல்கிறாள்.
அது நாள் வரை காற்றில் கலந்தலைந்த காதல்
முழு உருப்பெற்று அங்கு நங்கூரமிட்டதாக காட்சிப்படுகிறது அன்றிலிருந்து,,,/

7 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மை

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மை

வெங்கட் நாகராஜ் said...

அருமை.

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் வெங்கட் நாகராஜ் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Thulasidharan V Thillaiakathu said...

பகிரப்படாதவை என்று மிகவும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் அதிலும் காதல்!!! அருமை!!

vimalanperali said...

வணக்கம் துளசிதரன் சார்,
பகிரப்படாதவையாய் இங்கு காதல்தானே,,,?