தெருவிற்குள் செல்லும்
போது மழை/
கட்டிடத்திற்கு
நீர் ஊற்றிக்கொண்டிருக்கும்
பணியாள்/
##############
கால் முளைத்த பூக்கள்
இரண்டு
நடை பயின்று செல்கின்றன,
அட தெருவோரம் சென்ற நாய்க்குட்டிகள்
இரண்டு கருப்பொன்றும்
வெள்ளையொன்றுமாய்,,,/
###############
தெருமுனையில் வாய்
திறந்து கிடக்கிறது பள்ளம்.
வீடு ஊன்ற தோண்டப்பட்ட
அஸ்திவாரக்குழி/
###############
வழியெங்கிலும்
கைபற்றி வந்த நாணம்,
படர்ந்து பரந்திருந்த
மேகக்கூட்டம் பின் தொடர்வதாய்,,,,/
################
உடற்பயிற்சி ஆரம்பமாகிவிட்டது
தெருவில் இருக்கும்
வேகத்தடையில் ஏறி இறக்குறது
இரு சக்கரவாகனம்/
#################
பூவுக்குள் பூகம்பம்,
கீரைக்காரப்பாட்டி
சண்டையிலிறங்கி விட்டாள்
குடித்துவிட்டு
வந்து தெருவில் சப்தமிடுபவனுடன்/
###############
பச்சாதாபப்பார்வையுடன்
அவர்/
விற்காமல் தேங்கிக்கிடக்கிற
காய்கறிகள் கடையினுள்ளே,,,,/
#################
முடங்கிப்போனது
பிழைப்பு
விற்காத வியாபாரம்/
##############
7 comments:
வித்தியாசமாய்...
அருமை...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் கராந்தை ஜெயக்குமார் அவர்களே,
நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/
சிதறல்களாய்
சிந்திய வரிகள்
அருமை ஐயா!
அனைத்துச் சிதறல்களும் அருமை ஆனால் சிதறவில்லை!!
வணக்கம் காசி ராஜலிங்கம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் துளசிதரன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment