குவித்து
வைத்தால் கெட்டியாகித்தெரியும்,
விரித்து
வைத்தால்
கையகலமாய்
மலர்ந்து சிரிக்கிற
பூப்போலத்தெரியும்.
அதுவே
ஒன்றன் மீது ஒன்றாய் வைத்தால்
அடுக்கு
குலையாத மல்லிகைப் போலிருக்கும்,
இதற்காகத்தானே
இட்லியை
மல்லிகைப்பூவிற்கு
ஒப்பிட்டார்கள்…?
நல்ல
உவமானம் போலவே தெரிகிறது,
உண்மை
பட்டுத்தெரிந்த உவமானம் .
இட்லி
என்கிற ஒற்றைச்சொல் தாங்கிய
ஒன்றின்
மீது இவ்வளவு பார்வை களை
செலுத்தினால்
தாங்குமா இட்லி
அல்லது
அதை கொண்டு வந்து
வைத்தவர்கள்தான்தாங்குவார்களா….
இது
போலானநளினப் பார்வைகளை,,,,?
தெரியத்தான்
இல்லை சரியாக,,,,/
பூத்துக்கிடக்கிற
வெண்பஞ்சு மேகங்களில்
ஒன்றிரண்டு
யாருக்கும் தெரியாமல்
ரகசியமாக
தரை இறங்கி வந்து
வேகவேகமாய்
இத்தட்டில் அமர்ந்து கொண்டதோ,,,?
இதில்
யாருக்கு முதலில் பாராட்டைதெரிவிப்பது
இட்லியை
இதுபோல சுட்டெடுத்த கைக்கா,
இல்லை
இட்லியை தட்டில் கொண்டு வந்து வைத்த கைக்கா
தெரியவில்லை
சரியாக,,,/
சரி
இரண்டும் வேண்டாம்,
வந்தோம்
உட்கார்ந்தோம் சாப்பிட்டோம் என
நினைத்துக்கொண்டு
போக வேண்டியதுதானே பேசாமல்,,,
என
நினைத்தவனாய் கடை விட்டு வருகிறான்
சாப்பிட்ட
இட்லிக்கு காசைக்கொடுத்துவிட்டு,,/.
5 comments:
இதுபோன்ற இட்லியைச் சுட்டெடுத்தக் கைகள்தான் பாராட்டிற்கு உரியவை நண்பரே
ஆகா...!
அருமை
வணக்கம் நாகேந்திர பாரதி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment