சரக்கு
ரயில் வந்து செல்கிற
இருப்புப்பாதைகளின்
ஊடே
ஆடுகள்
மேய்ந்து கொண்டிருக்கின்றன.
மழையற்று
வறண்டு போன நிலத்திலிருந்து
முளைத்துக்
கிளைத்திருந்தபெயர் தெரியாத
செடிகளும்
புற்களும் தாவரங்களும்
ஆங்காங்கே
இருப்புப்பாதைக்கு
வெளியேயும்
உள்ளேயும் அதன் உடல் தொட்டுமாய்/
இதில்
காய்ந்து போனதை விட்டு
பச்சையை
மட்டும்
தேடித்தேடித்தின்றுகொண்டிருந்தன
ஆடுகள்.
அப்பொழுதான்
வந்து நின்ற ரயிலிருந்து
மனையுடனும்
கைக்குழந்தையுடனும்
வந்து
இறங்கிய ஒருவர்
குழந்தைக்கு
விளையாட்டுக்காட்டவும்,
குழந்தையை
சந்ர்தோஷப்படுத்தவுமாய்
பசும்
புல்லின் முனையை எட்டித்தின்னப்போன
குட்டி
ஆடுகள் இரண்டை விடாமல்
ஓடி
ஓடி துரத்துகிறார்.
அந்தோ
பரிதாபம் வாய்க்கு எட்டியது
வயிற்றுக்கு
எட்டாத பரிதாபத்துடன்
ஆட்டுக்குட்டிகள்
இரண்டும்
ஆற்றாமை
காட்டி ஓடித்திரிவதாக,,,,,,,,,/
8 comments:
மனதைத் தொட்ட கவிதை.....
வணக்கம் வெங்கட் நாகராஜ் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
அருமையான கவிதை அண்ணா....
அருமை...
அருமை நண்பரே
அருமை
வணக்கம் பரிஉவை சேக்குமார் அண்ணா,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணகக்ம் திண்டுகல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment