13 Feb 2017

14 லுகளில்......

கடைக்காரருடன் பேசிக்கொண்டிருக்கும் போதுதான் தெரிகிறது,

இது ஒன்றும் புதிதில்லை,விலை ஏறிப்போவதும் இறங்கித்தெரிவதும் சகஜம் தானே,,,, இதில் ஆச்சரியம் கொள்ள என்ன இருக்கிறது என பேச்சை தொடர்ந் தவாறாய் வாங்கிய காய்கறிகளை விட பையின் கனம் கூடுதல் பட்டுத் தெரிந்ததாய்/

தக்காளி ஒருகிலோ,உருளைக்கிழங்கு அரைக்கிலோ,மொச்சைக்காயும் ,பச் சைப் பட்டாணியும் அரை அரைக்கிலோ,என வாங்கி முடித்த பின்னாய் ஞாபகம் வர எப்பொழுதும் வாங்கும் புடலங்காயும்,சுரைக்காயும் ஞாபகத் திற்கு பார்த்துக்கொள்ளலாம் நாளை என விட்டு விட்டவனாய் வாங்கியவை களுக்கு பணம் கொடுத்துவிட்டு திரும்பிய போது கவனிக்கிறேன்,

கடையில் வயர் கூடையுன் காய் கறி வாங்கிக்கொண்டு நின்ற பெண்ணை,, என்னுள் உரை கொண்டிருந்த எங்கோ பார்த்த அவளை ஞாபக அலைகளில் திரும்பத்திரும்பவுமாய் கொண்டு வர முயற்சி செய்து பார்த்த போது அட, நம்ம,,,,,,,,

நரை கூடி மூப்பு எய்தி இருந்த அவளை ஏற்றிட்டவனாய் சிறிது நேரம் பார்த்துவிட்டு கண்களில் நீர் தழும்ப வந்து விடுகிறேன்,

என்றோ எப்போழுதோ என் மனதில் குடி கொண்டு என் மனம் வியாபித்த காதலியின் நினைவுடன்,,,,,,/

தினங்களை விடுத்து காதலைக்கொண்டாடுவோம்/

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

காதலைக் கொண்டாடுவோம்

vimalanperali said...

வணக்கம் கரந்தைஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Thulasidharan V Thillaiakathu said...

எக்காலமென்றாலும் காலமெல்லாம் காதல் வாழ்க!!

vimalanperali said...

வணக்கம் துளசிதரன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/