3 Apr 2017

நீராடி,,,நீராடி,,,,/

வி ஏ ஓ வீட்டுக்கிணற்றில் குளிப்பதுதான் இவனுக்கு மிகவும் பிடித்தமானதா கவும் இவனது அன்றாடகடமைகளில் ஒன்றாகவும் ஆகிப்போகிறது.

வீட்டிலிருந்து வெற்றுடம்புடனும் தோளில் துண்டுடனுமாய் கிளம்பி வந்து அழகையா கடையில் டீக் குடிக்கிற போதே வயிறு முட்டிக்கொண்டு விடும்.

வீட்டில் ஏற்கனவே இரண்டு டீக்குடித்திருப்பான்,அது கடையில் குடிக்கிற டீயை விட இரண்டு மடங்கு அளவு அதிகம் கொண்டதாய் இருக்கும்.

சப்தம் போடுவாள் மனைவி.ஏன் இப்பிடி பண்றீங்க,எதுவுமே ஒரு அளவுதான, இங்க வீட்ல ரெண்டு டம்பளர் டீயக்குடிச்சிட்டுப்போயி கடையில வேற டீயக் குடிக்கிறீங்களாம்ல,என்கிற அவளது பேச்சிற்கு அப்போதைக்கு ஏதும் பதிலற்று வெறும் வாயை மென்றாலும் கூட அடுப்படிக்கு பக்கத்தில் போய் நின்று கொ ண்டும் அவளின்பின்னால்இருந்து முன்னால் நகர்ந்து போய் அவளது இரண்டு கைகளையும்பிடித்துக்கொண்டு ஒவ்வொரு விரலாக பிடித்து சொடக்கு எடுத்து விடுவான்.

சும்மா ஐஸ் வைக்காதீங்க,என டீத்தூள் இருக்கிற பாட்டிலால் கையில் ஒரு போடுபோடுவாள்.அதில்லாம்மாநீயீ போடுறடீயோடருசிநாக்கோட சுவையறு ம்புகள்ல ஒட்டிக்கிட்டு கெடந்தாலும் கூட அங்கிட்டுபோகும் போது இழுத்து ருது கடை,நான் என்ன செய்யட்டும் சொல்லு,என்பான் அப்பாவியாக/

நாளப் பின்ன கடையில் போயி டீக்குடிக்காதீங்க சொல்லீட்டேன்,_அவள்.

சரி பாப்போம்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,_இவன்

பாப்போம்என்னபாப்போம்குடிக்கக்கூடதுன்னா குடிக்கக்கூடாதுதான், ஆமாம்_  அவள்,

ஆமாம் இப்ப டீக்குடிக்கக்கூடதுன்னு,நாளைக்கு பசிச்சா ஆத்துரஅவசரத்துக்கு கடையிலசாப்டக்கூடாதுனுவ,,,,அப்பறம்வீட்டுக்குநேரத்துக்குவரணும்ன்னுவ, அப்பறம் விருந்துக்கும் மருந்துக்கும்கூட தண்ணி வெந்நிக் குடிக்கக் கூடாது ன்னுவ,அப்புறம்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,_இவன்

அய்யோ கருமம், கருமம்,,,,,கருமம் பிடிச்ச மனுசன்,,,,,,,நான் என்ன சொன்னா நீங்க எங்க வந்து நிக்குறீங்க,,,,மொதல்ல கெளம்புங்க,போயிகடையில் போயி இன்னும்ரெண்டுடீயக்கூடசேத்துவச்சிகுடிங்க,,,,எனக்கென்ன என அவள் காண் பிக்கிறபொய்க்கோபத்திற்குசரிசரிரொம்பப்பாடாத,மொதல்லடீயக்குடு,,,இவன்/

ஆமாமாம் ரொம்பப்பாடுறாங்க பாடமாட்டாம,,,,,அவள்.

நீ பாடுற பாட்டுக்கு தலையசைக்கணுன்னு புத்திக்கு எட்டுது,ஆனா ருசி கண்ட நாக்கு கேக்குதா,,,_இவன்

ஆமாமாம் கேக்காது ,கேக்காது,நாக்க இழுத்துப்புடிச்சி ஒரு சூடு போட்டா அப்புறம் ஒழுக்கமா கேக்கும்_அவள்

நீ சொல்றதப்பாத்தா செஞ்சாலும் செய்வ போலயிருக்குல்ல_இவன்

ஆமாமாம் அப்பிடிசெஞ்சாத்தான் நீன்க்களும் ஒழுங்குக்கு வருவீங்க போலயி ருக்கு _அவள்

சரி அதெல்லாம் கெடக்கட்டும் வுடு பக்கத்துல வந்து பத்து வெரலுக்கும் இரு பது சொடக்கு எடுத்து வுட்டுருக்கேன்,ஏதாவது நல்லதா ரெண்டு சொல்லக் கூடாதா,பாட்டாப்பாடுறயே இப்பிடி,,,,,_இவன்

பாட்டும் இல்ல வசனமும் இல்ல,எல்லாம் ஒங்க நல்லத்துக்காக சொல்றது தான்,_அவள்.

நல்லதுசொல்றதெல்லாம்இருக்கட்டும்,மொதல்லதெருவுல யெறங்கிப் போயி பாத்துட்டு வா,அவுங்கவுங்க வீட்ல அவுங்கவுங்க புருசன் மார்க இப்பிடி வெரலப்பிடிச்சு சொடக்கு எடுத்து விட மாட்டாங்கான்னு ஏங்கிப் போயிருக் காங்க எண்ணன்னா ரொம்பத்தான பிகுப் பண்ணிக்கிறயே,,,,?

ஆமாம், பிகுப்பண்ணிக்கிறாங்க,பிகு,,,பெரிசா,இப்ப அய்யாதான் போயி எல்லா வீட்லயும் போயி பாத்துட்டு வந்தீங்களாக்கும்,,,?இல்ல ஒங்ககிட்ட வந்துதான் சொன்னாங்களாக்கும் ,ஏங்கிப் போயிருக்கிற விஷயத்த,,,?பேசாம வேலையப் பாக்குறதில்ல,_அவள்

இதுக்கு மேல நான் என்னத்த கம்முன்னு கெடக்க சொல்லு,நான் டீக்குடிக்கி றதுக்கே இந்தப்பாட்டுப்பாடுற,அவனவன் தண்ணியடிச்சிட்டு ரோட்டுக் காட் டுல உருண்டுக்கிட்டு திரியிறான்,அவன் மாதிரி ஆளுக செய்யிறதெல்லாம் ஒண் ணும்சொல்றதில்ல,என்னையப்போல ஆள்க டீக்குடிக்கிறதுலதாம் வந்து அந்த மானிக்கி வந்து,,,,,,,,_இவன்.

அதுக்குச்சொல்லல இப்ப எதையுமே அளவோட வச்சிருந்தா நல்லதுதானே,,,? இல்லையா,,,,_அவள்.

எனக்குமட்டும்அளவுக்கு மீறி குடிக்கணுன்னு ஆசையா என்ன,முடியல கிட்டத் தட்ட அதுக்கு அடிமையாகிப்போன கதைதா பாத்துக்க வேறென்ன சொல்ல, ஒரு டீயவே என்னால விடமுடியலையே,தண்ணி ஒரு போதை அதை எப்பிடி அவுங்களால,,,,,,,,தெரியல_இவன்.

இப்படியான பேச்சுடன் தான் அவர்களது அன்றாடகாலைவேளைகள் நகரும்.

பெரும்பாலுமே அவனது காலை புலர்வு சீக்கிரமாய் இருக்கும்,சீக்கிரம் என்பது அவனைப்பொறுத்த அளவில் ஏழு மணிதான்.அந்த ஏழு மணியின் எழுதலுக்கு இவனின் மனைவி ஆறு மணியிலிருந்து ஆரம்பித்து விடுவாள்.நேரமாகுது எந்திருங்க சீக்கிரம்,எந்திரிங்க சீக்கிரம் என,,,,,,/

அவளது பேச்சிற்கு ஆத்த மாட்டாமல் என்றாவது ஒரு நாள் படு ரோஷமாய் ஆறு அல்லது ஆறரைக்கு எழுந்தால் உண்டு,இல்லையெனில் அவனது தூக் கம் ஏழு மணிவரையே,,,,,,,,/

அழகையா கடையில் குடிக்கிற டீக்கு எப்பொழுதுமே ஒரு தனி ருசி உண்டு தான். என்ன அழகைய்யா என்னப்பா டீ பால்தான போடுற இல்ல தேன் கல ந்து போடுறயா இந்த தித்திப்பா இருக்குதே என்பான் சமயத்தில்,இவன் போ கிற அவசரமான நேரங்களில் டீக்கடைக்கார அழகையா பிஸியாகவே இருப் பார், என்றாவது அதிக கூட்டமில்லாத ஒரு நாளில் பேசுவான் டீக்கடைக்கார ரிடம், அதுபோலான நேரங்களில் பேசப்படுகிற முக்கியப்பேச்சாய் இது இருக் கும், டீக்கடைக்காரரும் சிரித்துக்கொள்வார் பதிலுக்கு./

ஏதோ நம்மளால முடிஞ்ச அளவுக்கு செய்யிறேன்,நீங்க டீமட்டும்தான சாப் புட்டுப் பாத்துருக்கீங்க,இன்னும் இட்லி,வடையெல்லாம்சாப்புடதில்லையே, சாப்புட்டுப்பாருங்கஅப்பறம் சொல்லுவீங்க, நம்மகடைடீயிலஇருந்து எல்லா மே எப்பிடியிருக்குன்னு,,,,,,என்பார்.

அடநீ வேறப்பா இதுக்கே ஏங் பொண்டாட்டி திட்டுதிட்டுன்னு திட்டுறா அதிக மா டீக்குடிக்கிறீங்கன்னு.இன்னும் இதுல நீ சொன்னதையும் சேத்து வச்சி சாப் புட்டேன்னு வையி,அவ்வளவுதான்,என்னய வீட்டவிட்டு தள்ளி வச்சிருவா பாத்துக்க என்பான்.

இல்ல சார் ஒங்கள தினமும் கடையிலேயே சாப்புடச் சொல்லல, சாப்புட்டுப் பாத்து சொல்லத்தான சொன்னேன்,இதுக்குப் போயி எதுக்கு வீட்டயெல்லாம் இழுக்குறீங்க பாவம்.அவுங்க என்ன கடையில ஒங்க சாப்புட வேணாம்ன்னா சொல்லுறாங்கடீஅதிகமாகுடிக்காதீங்கன்னுதானசொல்லுறாங்க,அது படிதான் கேளுங்களே,தேன் மாதிரி இருக்குங்குறதுக்காக வாங்கி வாங்கி ஊத்திக் கிட்டே இருந்தா என்னத்துக்கு ஆகும் வயிறு, ஆமாம் சொல்லுங்க பாப்போம். என்பார் கடைக்காரர்,

சரிதான் நீ சொல்றதும், எதுவுமே ஒரு அளவுதான,அளவுக்கு மீறுனா,,,,,,ன்னு ஆகிப்போகும் அப்புறம் எனச் சொல்லியவாறே அன்றாடங்களில் குளிக்கப் போவான் வி ஏ ஓ வீட்டுக் கிணற்றிற்கு/

2 comments:

ADMIN said...

அழகய்யா டீக்கடை,விஏஓ கிணறு, அப்புறம் அம்மிணியோட சண்டை எல்லாமே அருமை. உண்மையிலேயே வாழ்க்கை துணை சொல்றது எல்லாமே நன்மைக்குதான் இருந்தாலும், இயல்பாகிவிட்ட பழக்கத்தை விடறது ரொம்ப கஷ்டம்தான்.

vimalanperali said...

வணக்கம் தஙக்ம் பழனி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/