சின்ன
மகளும் பெரிய மகனுமாய்
மட்டுமே
இருந்தனர் வீடு நிரப்பி/
அம்மா
கடை வீதிக்கு சென்றிருக்கிறார்கள்.
அப்படியே
கோவிலுக்கும் போய் வரத்திட்டமாம்/
மனம்
நினைத்ததை தெய்வத்திடம்
கொட்டி
வேண்டுவதற்காய்.
எனச்சொன்ன
பெரிய மகனிடம்
கைப்பையை
கொடுத்துவிட்டு
போய்
வருகிறேன் அம்மாவை பார்த்து வர,,,,,/
எனக்கிளம்புகிறான்.
அம்மா
சென்றிருக்கிற கடை வீதி
இங்கிருந்து
ஆறுகிலோ மீட்டர்களை
எட்டித்தொடும்.
தவிர
அவர்களிடம் கைபேசி கிடையாது,
அவர்கள்
இருக்கும் இடம்எது என
தெரிந்தெடுத்துச்
செல்வீர்கள்?
ஆகவே
வாருங்கள் வீட்டிற்குள்ளாய்,
நான்
எனது மென் கரங்களால் இளம் மனம் நிரம்பி
டீப்போட்டுத்தருகிறேன்.
குடித்துக்கொண்டு
இருங்கள்
வரட்டும்
அம்மா, என திரும்பத்திரும்பவுமாய்ச்
சொன்ன
சின்ன மகளின் பேச்சை
மறுதலித்து
விட்டுக் கிளம்புகிறான்.
மனம் நிறைந்த மனைவியின்நினைவுடனும்,
கண்கள் நிறைந்த எதிர்பார்ப்புடனுமாய்/
கண்கள் நிறைந்த எதிர்பார்ப்புடனுமாய்/
8 comments:
இனிமையாய்...
யதார்த்தம்...
வாழ்வியல் யதார்த்தம்
அருமை
பாசம்
வணக்கம் ராஜி அவர்களே!நன்றியும் அன்பும் வருகைக்கு!
நன்றியும்,உயர்ந்தபட்ச அன்பும் வருகைக்கு!
நன்றியும் அன்பும் உயர்நத பட்சஅன்பும்!
இனிமைதாங்கிய வாழ்த்துக்கள்!
Post a Comment