வீட்டிற்கு வருகையில் மாலை முடிந்து இரவை எட்டித்தொட்டு விடப்போகிற நேரமாய் இருந்தது.
கை நீட்டி அழைத்து ஆசை பொங்க ரத்தமும் சதையுமான உணர்வோங்கலில் கண்ணே மணியே என்றும் ரசவாதம் பொங்குகிற கனிவுப் பார்வையுடன் ஒற்றைக் கண்ணால் பார்த்து பக்கவாட்டாய் விழித்தழைத்து வா என் கைய ருகே என நீட்டுகிற கையில் வந்தமர்ந்த மந்திரமாய் நிகழந்து போன எட்டித் தொடுதல்நிகழ்வுஇன்பமும்மனம்பிடித்துப்போனதுமானவிஷயமும்தானே …….?
காலையில் ஒன்பது முப்பது மணிக்குப்போய் குனிகிற தலையை மதியம் சாப்பாட்டு நேர இடைவேளையின் போதும் மாலையில் அலுவலகம் முடிந்த தும் தான் நிமிர்த்தி பார்க்க முடிகிறது.
அதற்குள்ளாய் அங்கு நிலவுகிற போட்டி பொறாமை,புறஞ்சொல்லல் உயர்வு தாழ்வுநவிற்சி மனப்பான்மை,,இன்னும் இன்னுமாய் இதர இதரவான எல்லாம் தாண்டி வரும் போது அலுத்துப்போகிறதுதான் உடலும் ,மனமும்/
வேலைப்பளு ஒருபக்கம் என்றால் மனரீதியாய் படும் புண்மைகளின் ரணம் மறுபக்கம் என குளம் கட்டிக்காணப்படுகிற இடத்தை தாண்டி வந்து,,,,,பஜார் சென்றுவிட்டுகாய்கறி வெங்காயம் வேறு ஏதாவது தேவை என்றால் வாங்கிக் கொண்டு வர வேண்டியதாய் இருக்கும்.
இதில்காய்கறியும்வெங்காயமும்வாங்குகிறநாட்களில்வேறெதுவுமாய்வாங்கத் தேவை இருக்காது. அல்லது வாங்குவதும் இல்லை.
காய்கறிவாங்குகிற அன்று வெங்கயாம் வாங்குவதில்லை,வெங்காயம் வாங்கு கிற நாட்களில் காய்கறிகள் வாங்குவதில்லை,
காரணம்இல்லாமல்இல்லை.அல்லது கையிலிருக்கிற காசு காணாமல் போய் விடப்போவதில்லை.அப்படியேகாணாமல்போனாலும்கூடபெரியதாக பிரச்சனை ஒன்றும் இருந்து விடப் போவதில்லை.
இந்த விஷயத்தில் காய்கறிக்கடைக் காரரை விட வெங்காயக் கடைக்காரர் ஒரு படி மேல்.இதில் படிகள் பெரியதா இல்லை சிறியதா என்பதுதான் பிரச்ச னை சமயா சமயங்களில் பெரும் உயரம் கொண்ட படிகளாகவும் சமயத்தில் கண்ணுக்குத்தெரியாத சின்னச்சின்னப்படிகளாவும்/
”என்னது பத்து ரூவா கம்மியா இருக்குதுங்குறதுக்காக வீட்ல போயி ரூவா எடுத்துக்கிட்டு வந்து அப்புறமா வெங்காயம் வாங்கிக்கிர்றேன்றீங்களே, அட சும்மா இருங்க சார்,நீங்க ஒரு பக்கம்.ஒங்கள நம்பி அப்பிடியே ஒரு மூட்டை வெங்காயத்தக்கூடதூக்கி அனுப்பலாம்.பத்து ரூவாயிக்காக வீட்டுக்கோ,இல்ல தெரிஞ்சவுங்ககிட்டயோபோயிநிக்காட்டிஎன்னசார்”எனச்சொல்கிறவெங்காயக் கடைக்காரர் பேசும் பேச்சு மனதை குளிர்விக்க பண்ணிவிடுவதுண்டுதான் அந்த நேரத்திற்கு/
வாங்குனகாய்கறிகளுக்குநீங்க காசும் குடுக்க வேணாம் வாங்குன காய்கறிகள் ஒங்க வீட்ல வந்து ஒப்படைச்சிர்றோம் எனச்சிரிப்பார் காய்கறிக்கடைக்காரர், அந்த வெள்ளைச்சிரிப்பு இல்லை என்றால் அவர் இல்லை போலிருக்கிறது.
பொதுவாகஇதுபோல்வியாபாரங்களில்இருக்கிறவர்கள்இவ்வளவு வெள்ளந்தி யாகசிரித்தும்பேசியும்நான்பார்த்ததில்லைஎனஅவரிடம்சொல்கிற ஒவ்வொரு முறையுமாய் சப்தமாய்ச்சிரிப்பார்.
அவரதுகடை காய்கறிகளுக்காக இல்லாவிட்டாலும் கூட அவரது சிரிப்பிற்கா கவே அவரதுகடைக்குப்போகத்தூண்டும் அடிக்கடியாய்/
இதில்மிகப்பெரியகொடுமைஎன்னவென்றால்காய்கறிகடையிலேயே வெங்கா யமும் தேங்காயும் கிடைக்கும்/
ஆனால்அவர்மறந்தும்கூட கேட்டு விட மாட்டார்.என்னுடைய கடையிலேயே காய்கறிகளுடன் சேர்த்து வெங்காயமும் தேங்காயும் வாங்கலாமே என/
கத்திரிகாயுடன் வெண்டைக்காயும்,வெண்டைக்காயுடன் முட்டைக்கோஸீம், முட்டைக்கோஸீன் படர்பார்வையில்ஊருளைக்கிழங்கும்உருளைக் கிழங்கின் கனிவான பார்வையில் தக்காளியும் முருங்கை பீன்ஸீம்,சவ்சவ்வும் இன்ன பிற காய்கறிகளுமாய் கலந்து கட்டி காணக்கிடைக்கிற கனிவான நேரம் நம் மனது ஆனந்தக்கூத்திட்டு விடுகிறதுதான்.
இப்படியாய் இரண்டு கடைக்காரர்களும் இட்டுக்கட்டிய வார்தைகளன்றி பேசு கிறபேச்சின் ஆழம் மனதின் உள்வரை சென்று தைத்துவிடும்தான் சமயத்தில்/
காய்கறியோ வெங்காயமோ ஒரு சேரவோ அல்லது தனித்தனியாகவோ வாங்கி வருகிற பொழுதுகளில் மனம் மயக்குதலும் மனம் பிடித்தலுமான எட்டித் தொடுதல் நிகழ்ச்சி நடந்து போகிறது இயற்கையின் முழுமனம் கட்டி/
பகல் முழுவதுமாய் சுட்டுக்காட்டிய சூரியனை மாலை கனிந்து வந்து விட்டது நான் பார்த்துக்கொள்கிறேன் இனி. மீதமான நேரத்தை இரவாக்கும் முன் பகலைபின் தள்ளி மாலையாக்கி மாலையிலிருந்து நீளும் இரு கரங்களை இரவுநோக்கிநீட்டி அழைத்து வரச்செய்து அது அழைத்து வருகிற வேலையை இனிய வேளையாய் பூத்துவிச்செய்கிறேன் மனதில் ஆயிரம் பூ மலர என்கிற ஆனந்தத்துடன் தான் வீடு வந்தான் அன்றும்/
இரு சக்கரவாகனத்தை நிறுத்திவிட்டு வந்த இவனிடம் இடது தோள் பட்டை யில்தொங்கிய சாப்பாட்டுப்பையை பெரிய மகள்வாங்கினாள்.ஹெல் மெட்டை இளைய மகள் வாங்கினாள்.இது வேறு ஒருபக்கம் ,எங்கு சென்றா லும் கைக்குழந்தை போல தூக்கிக்கொண்டு செல்ல வேண்டியதாய் இருக் கிறது,
கூட்டமான இடங்களில் இருபதிலும் அது அல்லாத இடங்களில் முப்பதிலு மாய் வேகம் கொண்டு நகரத்திற்க்குள்ளேயே பயணிப்பவர்களுக்கு ஹெல் மெட் எதற்கு என்கிறார் நண்பர் அடிக்கடியுமாயு ஹெல்மெட் கேஸில் புடிபடு கிற போதுமாய்/
பையும் ஹெல்மெட்டும் வீட்டிற்குள் போன மறுகணம் காலைக்கழுவி விட்டு வீட்டிற்குள் போகலாம் என நினைக்கையில் சின்ன மகள்தான் சொன்னாள்.
அம்மாபஜாருக்குப்போயிருக்குறாங்க,பலசரக்குசாமான்ங்கவாங்கீட்டுஅப்பிடியே கோயிலும் போயிட்டு வரணும்ன்னு சொல்லீட்டு கெளம்புனாங்க, என்றாள்.
சரி அப்பிடியா எனச்சொல்லிவிட்டு வீட்டிற்குள்ளே நுழையலாம் எனகாலடி எடுத்து வைத்த போது எடுத்து வைத்த காலடியின் தடம் ஓரடியான முன்ன கர்விலிருந்து ஈரடி பின் வாங்கியது,
வீட்டிற்குள் போனதும் பையை கழட்டி வைத்து விட்டு குளித்து முடித்த பின் மென்மை பூத்த ஒரு டீயுடனும் புன்னகை சுமந்த பேச்சுடனுமாய் டீவி முன் போ, புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டோ அல்லது சும்மாவோ அமர்கிற வேளை பெரும் ரிலாக்ஸாகவும் நிம்மதி அமைந்ததாகவும் தோற்றம் காட்டி விட்டு போகும் மனம்.
நிஜம் எப்படியாய் இருந்த போதிலும் அப்படியாய் ஒரு தோற்றம் காட்டி விட்டுப்போகிறது வீடு.எது எப்படியிருந்த போதிலும் அவள் அற்று இருந்த வீடு வெறுமை சுமந்தே காணப்பட்டதாக அந்த நேரத்திற்கு/
இத்தனைக்கும்சின்ன மகள் குளித்து விட்டு வாருங்கள் டீப்போட்டுத்தருகிறே ன் என்றாள். அம்மாவைப் போல டீப்போட முடியாவிட்டாலும் கூட அதில் பாதிஅளவிற்காவதுசுவையைக்கண்டுபிடித்துடீப்போட்டுத்தருகிறேன்என்றாள்.
பெரியவள் போல் இல்லை சின்னவள்,சுண்டுகிற ஒரு சுண்டிற்கும் பேச்சிற்கும் பார்வைக்குமாய் எட்டு கர்ணங்கள் அடிப்பவள் மனதளவில்/
பெரியவள் அப்பிடியில்லை. சுண்டு கிற எட்டு சுண்டிற்கு ஒரு சுண்டிற்குத் தான் மனதைத்திருப்புவாள்.என்ன இது ஒங்களோட பெரிய யெழவாப்போச்சி என்பதாக/
நோக்கறிவதற்கும்,டொக்கறிவதற்குமான வித்தியாசம்/
டீப்போட்டுத்தருகிறேன்எனச்சொன்னவளை ஏறிட்ட போது ”எனக்குத்தெரியும் ஒங்களுக்கு நானோ அக்கா வோ போட்டுத்தர்ற டீயக்குடிக்க மனசு வராதுன் னு இருந்தாலும் கேட்டேன்”.எனச்சொன்னவளை அருகில் அழைத்து உச்சி மோந்து விட்டு சரி இருங்கள் இருவரும் வீட்டில்/நான் மெல்லக்கிளம்பிப் போய் அம்மாவைம் அழைத்து வருகிறேன் எனச்சொன்ன இவனிடம் வாங்கிய ஹெல்மெட்டைஇடதுகையால்எடுத்துக்கொடுத்துஅனுப்பி வைத்தாள்.
ஹெல்மெட்டைகொடுக்கும்போதுசொன்னாள்.
“அம்மாவஎங்கயின்னு போயிப் பாப்பீங்க,அம்மா எந்தக் கடைக்குப் போயிருக் காங்கன்னு தெரியாது.அம்மா இந்த நேரம் எந்தக் கோயி லுக்குள்ள இருப்பா ங்கன்னும் சொல்லீற முடியாது கரெக்டா, தவுர அம்மாகிட்ட செல்போனும் கெடையாது.எங்க போயி நின்னு எப்பிடிப்பேசி எங்க இருப்பாங்கன்னு எப்பிடி கண்டுபிடிப்பீங்க சொல்லுங்க பேசாம வாங்க வீட்டுக்குள்ள அவ போட்டுத்தர்ற டீகுடிச்சிட்டு கேரம் போர்டு வெளையாடுங்க, கொஞ்ச நேரத்துல அம்மா வந்துருவாங்க”எனச்சொன்ன பெரிய மகளை ஏறிட்ட சின்ன மகள் நீ என்ன சொன்னாலும்அவருமனசுக்குசமாதானம்ஆகாது.அம்மாவப்பாத்து அவுங்கள கூட்டீட்டு வந்தாத்தான் அவருக்கு நிம்மதிஅது வரைக்கும் டீ இல்ல,கேரம் போர்டு இல்ல,எதுவுமே ஏத்துக்கிறாது. அவருக்குத் தேவை இப்போதைக்கு அம்மாவின் மொகமும் அவுங்களோட பேச்சும் பார்வையும் மட்டும்தான். “ எனச்சொன்ன சின்ன மகளின் சொல்லை மனதில் ஏந்தி வீட்டிற்குள்ளிருந்து வெளியே வருகிறான்.
நல்ல தாயாய் பிள்ளைகளுக்கும், நல்ல மனைவியாய் இவனுக்கும் நல்ல தொரு மனுசியாய் தெருக்காரர்களுக்கும் காட்சிப்படுகிற அவள் வீடு வந்து சேர்கிறது வரை நகர்கிற நிமிடங்கள் வெறுமை வாய்ந்ததாகவே/
அதுவரைமனைவியின் ரத்தமும் சதையும் ஆன்மாவும் உள்ளடக்கிய பிம்பம் தான்கண்ணுக்குத்தெரியுமே தவிர வேறெதுவுமாய்தெரியாது, எண்ணவும் தோ ணாது.
சேர்ந்தெழும்பி கைகோர்த்து நிற்கிற உணர்வுகளுக்கும் அப்படித்தான் அவளது திருமுகம்காணும்வரைமனது சரியாக வேலை செய்யாது,அப்படியே செய்தா லும் ஒரு வித உன்மத்தம் பிடித்த்து போல் இருக்கும்.வேறு யாராவது ஏதா வது கேட்டால் கூட காது கேட்காது.நண்பர்கள் அல்லது தோழர்கள் யாராவது பார்க்கவேண்டும்எனஅழைத்தால்கூடபார்க்கப்போகத்தோணாது,இனந்தெரியாத ஒருவிதஎரிச்சலில்மனம்குமைந்து கொண்டே இருக்கும். உன்மத்தம் கொண்ட மனது ஏதோ என்னமோ என ஏதாவது எண்ணிக்கொண்டே ஒருவித குழப்பம் கொண்டதாய்இருக்கும்.என்றெண்ணியவனாய் பயணித்தான் இரு சக்கர வாகனத்தில்/
ஏதோ ஒரு விதத்தில் இன்னும் இழுத்துப்பிடித்து ஓடுகிற வண்டியாய் சரிக் கட்டுரிப்பேர்செய்து,ரிப்பேர்செய்து ஓட்டிக்கொண்டிருக்கிறான் இன்னுமாய்,
பழைய வண்டி அது .ஒர்க்ஷாப்பில் சொல்லி வைத்து ஒரு சில மாதங்கள் காத்திருந்து வாங்கிய வண்டி/
1997மாடல்,வித்அவுட்கியர்வண்டி,”ஒரு இழுப்பில் எங்கு போகச் சொன்னாலும் போகும்,நிற்கிறச்சொல்கிற இடத்தில் நிற்கும்,போகச்சொல்லுகிற இடத்தில் போகும் அதுதான் இந்த வண்டியோட சிறப்பு,,,இதவிடவேறென்ன வேணும் ஒரு வண்டிக்கு,நம்பி வாங்குங்க, ஓட்டுங்க, கொஞ்ச காலத்துக்கு பிடிக்கலைன் னாஅப்புறமாசொல்லுங்க,மாத்திக்கிருவம்,எனச்சொல்லிஒர்க்ஷாப்க்காரர்வாங்கித் தந்த வண்டியை எப்பொழுது எடுத்த போதும் ஒர்க ஷாப்க்காரரின் ஞாபக மும்,அந்த நாட்களில் அவர் பேசிய பேச்சின் ஈரமும் இன்னுமாய் நினைவில் இருக்கிறது.
ரயில்வே லைன் வழியாகத்தான் சென்றான்.மேம்பாலம் கட்டுவதனால் வேறு வழியில்லை, இரண்டாவது கேட் வழியாகச்செல்லலாம்,அங்கு அடிக்கடி ரயில் வருவதற்காக கேட்டை அடைத்து விடுகிறார்கள்,கேட்டை அடைத்து விட்டால் கூட்டமான கூட்டமாய் சேர்ந்து விடுகிறது.ரயில்வே கேட் திறந்தது மாய் அதைக்கடந்துசெல்வது அலாவுதீன் குகையை கடந்து சென்று வருவது போலிருக்கும். சமயத்தில்அதைக்கூட எளிதில் கடந்து விடலாம் என எண்னத்தோன்றி விடும்.
ஆனால் இதைக்கடப்பது அவ்வளவு எளிதாய் இருப்பதில்லை, சரியாககாலை வேளையிலும் மாலை வேளையிலுமாக பிள்ளைகள் பள்ளிக்குச் செல்கிற நேரமாயும்அலுவலக நேரத்திலுமாய் ரயில்கள் வருவதும் அதற்காக கேட் அடைபட்டுக்கிடப்பதும்சற்றேஎரிச்சல்பண்ணிவிடும், தாமதம் செய்து விடுவது கூட உண்டு,செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல வேண்டிய நேரத் திற்கு செல்ல முடியாது.செய்ய வேண்டிய வேலை அதனால் கெட்டுப் போனதாய் நிறைய அனுபவம் உண்டு.
என்னசெய்யலாம் இதற்கு மாற்று வழி என்ன என யோசிக்கும் போது கிடைத் ததுதான் ரயில்வே லைன் வழி.
குட் செட் ரோடு தாண்டி அதன் ஓரமாகவே சென்று லைனைக்கடந்து அந்தப் பக்கமாய் ஏறினால் வருகிற ரயில்வே ஸ்டேஷன் வழியே இப்பொழுது சிறந்த வழியாக ஆகித்தெரிகிறது,
ஆத்திர அவசரத்திற்கு.அடைபட்டுக்கிடக்கும் கேட் டின் முன்பாகவும் காத்துக் கிடக்கிற மனிதக்கூட்டத்திற்குள் ஒருவராயும் நில்லாமல் சீக்கிரத்தில் வந்து விடலாம்.போய் விடலாம் எண்றெண்ணி போய்க் கொண்டிருக்கிறான்,
பொதுவாகவேவண்டியைக்கொஞ்சம்வேகமாகவேஓட்டினான்,மனதின்வேகம்
செயலிலும்தெரிகிறதுபோலும்.
ரயில்வேஸ்டேசனை நெருங்கும் போது வேகம் கொண்ட மனது ஒற்றை வரியில் அவிழ்த்து விடுகிறது போலும்இதுநேரம் வரைக்குமாய் கட்டி க்காத்து வைத்திருந்த ஆவல் உடைந்து போனது போலும் கண்களில் நீர் கட்டிப் போகி றது,
சின்ன மகள் சொன்னது போல் அவளிடம் செல்போன் கிடையாது,அவள் எங்கிருப்பாள் இப்போது கோவிலிலா அல்லது பலசரக்கு வாங்குற கடையிலா தெரியாது,
உத்தேசமாக வேண்டுமானால் போய் இங்குதான் இருப்பாள் என தேடிப் பார்க் கலாம்,
கோவில்கள் மூன்று,அவள் வழக்கமாக சென்று பலசரக்கு வாங்கும் கடை ஒன்றுஅதில்ஏதாவதுஒன்றில்தானேஇருக்கவேண்டும்,போய்விட வேண்டியது தான் எல்லா இடங்களுக்குமாய்.
போன தடவை பலசரக்குக்கடைக்காரர் கூட கேட்டு விட்டார் இப்படி தேடிப் போன அன்று ”என்ன சார் உயிர்ல பாதிய தேடி வந்துட்டீங்களா” என,,,,/
இவனும்ஆமாம்என தலையாட்டிவனாய் அவள் வாங்கி வைத்திருந்த பல சரக்குகளைவண்டியின் முன்னால் வைத்துக் கொண்டுஅவளையும் பின்னால் ஏற்றிக்கொண்டு கிளம்பி வந்தான்.அது போல்தான் இன்றும் ஆகுமோ என நினைத்தவனாய் போய்க் கொண்டிருந்தான்.
முதலில் இவன் சென்றது முருகன் கோவிலுக்கு,இரண்டாவதாய் சென்றது, மாரியம்மன் கோவிலுக்கு,மூன்றாவதாய் சென்றது சிவன் கோவிலுக்கு. மூன்றையும் இணைத்துக்கட்டிய மனக்கயிற்றில் அவள் அவள் காணக் கிடை க்கவில்லை,
சரி போகலாம் பலசரக்குக்கடை நோக்கி என,கோவிலுக்கு வெளியே வந்து வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்புகையில் மனைவி பலசரக்குக்கடை நோக்கி சென்று கொண்டிருந்தது கோவில் வாசலில் இருந்து பார்த்த போது தெரிந்தது,
இங்கிருந்து கூப்பிட்டாலும் கேட்டு விடாத தூரம்,பக்கத்தில் போய் நின்று சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என நினைத்து வண்டியை திருப்பி வேகமெடுத்து ஓட்டிக்கொண்டு போய் அவள் அருகாய் நிறுத்தி ஹாரன் ஒலி எழுப்பிய போது வேகமாக திரும்பியவள் ”நீங்களா நல்ல வேளை பயந்தே போனேன்,” இப்பிடி யா வந்து கத்த வுடுவீங்க என தலையில் மென்மையாக ஒரு கொட்டு வைத்து விட்டு வண்டியின் பின்னால் ஏறி அமர்ந்து கொண்டாள்,
கண்களில் ஏற்கனவே கொஞ்சமாய் கட்டி காய்ந்திருந்த கண்ணீர் திரும்பவும் குளம் கட்டி நிற்கிறதாய்/
ரயில்வேஸ்டேசனை நெருங்கும் போது வேகம் கொண்ட மனது ஒற்றை வரியில் அவிழ்த்து விடுகிறது போலும்இதுநேரம் வரைக்குமாய் கட்டி க்காத்து வைத்திருந்த ஆவல் உடைந்து போனது போலும் கண்களில் நீர் கட்டிப் போகி றது,
சின்ன மகள் சொன்னது போல் அவளிடம் செல்போன் கிடையாது,அவள் எங்கிருப்பாள் இப்போது கோவிலிலா அல்லது பலசரக்கு வாங்குற கடையிலா தெரியாது,
உத்தேசமாக வேண்டுமானால் போய் இங்குதான் இருப்பாள் என தேடிப் பார்க் கலாம்,
கோவில்கள் மூன்று,அவள் வழக்கமாக சென்று பலசரக்கு வாங்கும் கடை ஒன்றுஅதில்ஏதாவதுஒன்றில்தானேஇருக்கவேண்டும்,போய்விட வேண்டியது தான் எல்லா இடங்களுக்குமாய்.
போன தடவை பலசரக்குக்கடைக்காரர் கூட கேட்டு விட்டார் இப்படி தேடிப் போன அன்று ”என்ன சார் உயிர்ல பாதிய தேடி வந்துட்டீங்களா” என,,,,/
இவனும்ஆமாம்என தலையாட்டிவனாய் அவள் வாங்கி வைத்திருந்த பல சரக்குகளைவண்டியின் முன்னால் வைத்துக் கொண்டுஅவளையும் பின்னால் ஏற்றிக்கொண்டு கிளம்பி வந்தான்.அது போல்தான் இன்றும் ஆகுமோ என நினைத்தவனாய் போய்க் கொண்டிருந்தான்.
முதலில் இவன் சென்றது முருகன் கோவிலுக்கு,இரண்டாவதாய் சென்றது, மாரியம்மன் கோவிலுக்கு,மூன்றாவதாய் சென்றது சிவன் கோவிலுக்கு. மூன்றையும் இணைத்துக்கட்டிய மனக்கயிற்றில் அவள் அவள் காணக் கிடை க்கவில்லை,
சரி போகலாம் பலசரக்குக்கடை நோக்கி என,கோவிலுக்கு வெளியே வந்து வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்புகையில் மனைவி பலசரக்குக்கடை நோக்கி சென்று கொண்டிருந்தது கோவில் வாசலில் இருந்து பார்த்த போது தெரிந்தது,
இங்கிருந்து கூப்பிட்டாலும் கேட்டு விடாத தூரம்,பக்கத்தில் போய் நின்று சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என நினைத்து வண்டியை திருப்பி வேகமெடுத்து ஓட்டிக்கொண்டு போய் அவள் அருகாய் நிறுத்தி ஹாரன் ஒலி எழுப்பிய போது வேகமாக திரும்பியவள் ”நீங்களா நல்ல வேளை பயந்தே போனேன்,” இப்பிடி யா வந்து கத்த வுடுவீங்க என தலையில் மென்மையாக ஒரு கொட்டு வைத்து விட்டு வண்டியின் பின்னால் ஏறி அமர்ந்து கொண்டாள்,
கண்களில் ஏற்கனவே கொஞ்சமாய் கட்டி காய்ந்திருந்த கண்ணீர் திரும்பவும் குளம் கட்டி நிற்கிறதாய்/
6 comments:
நெகிழ்ச்சி...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
flow is wonderful
அருமை
நன்றியும் அன்பும்,,,/
அருமை
Post a Comment