ரூபாய் பத்தே போதும்,
அது தாண்டியதாய்
அதிகமாய்
வேறொன்றும் வேண்டாம்,
தேவை ஏற்பட்டால்
ஏதாவது வாங்கிக்கொள்ளப்போகிறேன்,
சாப்பிடுவதற்கு,
இல்லை பேசாமல்
இருக்கப்போகிறேன்,
அதுவும் உடலும்
மனமும்
வேலை செய்கிற நேரங்களில்
வேலைக்கவனத்தில்
இருக்குமேயன்றி
வேறெதுவுமாய் நினைத்துவிடப்போவதில்லை.
அப்புறம் எதற்கு
நீங்கள் தருகிற ரூபாய்
பத்தைத்தாண்டிய
வேறு ஒன்று ,,
என நீட்டிய பத்து
ரூபாயை வாங்கி
இரண்டாய் மடித்து
சட்டைப்பைக்குள்ளாய்
வைத்துக்கொண்டு
கல்லூரியின் விடுப்பு
நாளில்
வேலைக்குச்செல்கிற
மகனை நினைத்து
நெகிழ்ந்து போகிறது
கண்களும் மனமுமாய்/
3 comments:
பொறுப்புணர்ந்து செயல்படும் பிள்ளை வரம்
நல்லதொரு மகனே....
த.ம.1
நன்றியும் அன்பும்!
Post a Comment