நிறுத்திய
இரு சக்கரவாகனம் இவனதாகவும்
நிறுத்திய
இடம் புழுதி படர்ந்த சாலையாகவுமாய்
ஆகிபோகிறது,
சமீப
காலங்களாய் இவனுக்குள்
ஒரு
பழக்கத் தை கைக்கொண்டிருந்தான்,
காலை
நேரம் சாப்பிடுவதில்லை,
இவனது
மனம் பிடித்தும்
உள்ளின்
உள்ளுக்குள்ளாய் விரும்பியுமாய்
அப்படியானதொரு பழக்கத்தை
கை
கொண்டு விடவில்லை இவன்,
உடல்
ஏற்றுக்கொள்ளவில்லை,
உபாதைகள்
கூடிப்போனது,
கைவிட்டு
விட்டான் அப்படியானதொரு பழக்கத்தை/
அதற்குப்பதில்
அலுவலகம் செல்கிற வழியில்
நன்கு
அறிமுகப்பட்ட அல்லது
அதிகம்
அறிமுகமில்லாத ஏதாவது
ஒரு
கடையில் ஒரு டீயும்
இவனது
மனம் பிடித்த வடையுமாய்
சாப்பிட்டு
விட்டு போவது
அன்றாடப்பழக்கங்களில்
ஒன்றாகிப் போகிறது,
அப்படியான
அன்றாடங்களில்
இன்றும்
ஒரு நாளாய் அமைந்து போக
இரு
சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு
எதிர்பட்ட
டீகடைக்கு செல்ல முனைகிற
வேளையாய்
இருசக்கர வாகனம்
நிறுத்தியிருந்த
இடம் ஒட்டியாய்
இரண்டு
இட்லிகள் வீசி எறியப்பட்டும்
அழுக்குப்படர்ந்துமாய்
கிடந்தன
அனாதயாயும்
யாரும் கைக்கொள்வாறற்றுமாய்/
5 comments:
வழி நடை..நிதர்சனம்..
அருமை..
அருமை
தம +1
நன்றியும் அன்பும்/
நன்றியும் அன்பும் கலந்துமாய்,,/
விளைந்து நிற்கிற பிரியங்கள் பட்டு,,,,/
Post a Comment