அரிவாள்மனையின்
முனை பட
பிளவுபட்டு அறுபடுகிறதாய்
காய்கறிகள்,
அது நாட்டுக்காயானாலும்
இங்கிலீஸ் காயானாலும்/
அறுபட்ட காய்கறிகளின்
பிளவுகளில்
மிச்சப்பட்டு ஒட்டியிருக்கிற
அதன் மூச்சும்
உயிரும் வெளிப்பட்டுத்தெரிகிறதாய்/
**********************
நீண்டுபட்ட
துரோகங்களின் விஷநக நீட்சி
எதுவரை
போகும் என்பது தெரியவில்லை.
அதன்
ஆழ அகலத்தையும்
அது
காயமேற்படுத்திய தன்மையையும்
நிறுத்தி
நின்று அவதானைப்பதற்குள்ளாய்
தொடர்கிறது
துரோகம்/
அது
எதுவரை செல்லும் எனஅறுதியிட்டுச்
சொல்லமுடியவில்லை
இப்போதைக்கு/
நீண்டு
விட்ட விஷநகங்களின் இடுக்குகளில்
அழுக்குப்படியும்
வரையும்
நகங்களில்
பழுது ஏற்பட்டு
இற்றுப்போகும்
வரையும்
இப்படித்தான்
இருக்கும் போலுமாய்/
*************************
நண்பரும் தோழருமானவரின்
கடையில் குடித்த
தேநீரின் மிடறுகள்
நாவின் சுவையறும்புகள்
தொட்டு
உள்ளின் உள்ளே
படரும் போது
பால்யங்களை ஞாபகமூட்டிவிட்டுச்
செல்கிறது அந்த
புலர் பொழுதின் ஆரம்பம்/
****************************
தனது
வலது கையை எனது வலக்கரத்துடன்
சேர்த்து
குலுக்கிவிட்டு நட்பு பாரட்டிய நண்பர்
சொன்னார்.தொட்ட
கையை விலக்காமலேயே/
என்ன
நண்பா ஏன் இப்படி
எதற்காக
விலக்கம் கொண்டு போனீர்கள்.
என
அவர் முன்னாய் மெகாசைஸ் கேள்வி
ஒன்றை
ஆச்சரிக்குறியாய் நிறுத்தியபோது
சொல்கிறார்.
இல்லை
நண்பா பட்ட காயத்தின் ரணம்
இன்னும்
ஆறிபோகாமலேயே முழுவதுமாக/
ஆதலால்
மனம் பரவியுள்ள காயத்தின் ரணம்
முழுமையாக
ஆறும் முன் என்னை
சந்திக்கும்
முயற்சி வேணாம் எனச்
சொன்னவரிடம்
காயத்தை எடுத்து
வெளியில்
காட்டாமல்
உள்ளுக்குள்ளேயே
வைத்திருந்தால்
ஆறாது
ரணமாகிப்போகலாம்.
ஆகவே
எடுத்து வெளியில் வையுங்கள்.
நானும்
என் போன்றோர்களும்
மருந்து
போட்டு ஆற்றிவிடுவோம்தானே,,,,,,,/
6 comments:
இங்க்லீஷ்காய், நாட்டுக்காய் வித்தியாசமான சிந்தனை...
சுவையரும்புகள்...
நன்றியும் அன்பும்!
நன்றி மேடம் வருகைக்கு!
ஒப்பிட்ட விதம் அருமை
வாழ்த்துக்களுடன்...
நன்றி சார்,வாழ்த்துக்களுடன்
கருத்துரை வழங்கிய தங்க்களுக்கு/
Post a Comment