கட்டம் போட்ட சட்டையை
பின்னாலிருந்துபார்த்த
போது
அதன் எண்ணிக்கை
எத்தனை
எனத்தெரியவில்லை.
அதை தெரிந்து கொள்வதும்
அந்த நேரத்திற்கு
அனாவசியமே/
நெருக்கமான கட்டங்களை
சுமந்து கொண்டிருந்த
கலர்க்கலர் கோடுகள்
அந்த சட்டைக்கு
அழகு சேர்த்ததாய் /
இறக்கிவிடப்பட்ட
அரைக்கை வரை
மடக்கிவிட்டுவிட்டு
அங்கிருந்து
தொங்கிய பட்டையை
மடக்கிவிட்டு
விட்டுவிட்டு இழுத்து
பட்டன் போட்டு
மாட்டிக்கொண்டு
நேர்நடையாய் நடந்த
அவனின் வயது
20திற்கு மிகாமல் இருக்கலாம்.
கல்லூரியின் இளங்களையில்
முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்த
அவன் வீட்டிற்குத்
தேவையான பொருள்
வாங்க போய்க்கொண்டிருக்கிறான்.
அவன் நடந்து போகிற
மண் பாதையில்
முளைத்துத்தெரிந்த
புல்லின் நுனி
அவனது காலில் பட்டு
உரசிய போது
அவனது உடல் சிலிர்த்தது
போலவே
மனமும் சிலிர்த்து
அடங்கியது.
4 comments:
அருமை அருமை
அந்தச் சிலிர்ப்பை உணர்ந்து
இரசித்தவர்களுக்கு இந்தக் கவிதை
கூடுதல் சிலிர்ப்பை நிச்சயம் தரும்
வாழ்த்துக்களுடன்...
நன்றியும் அன்பும்!
அருமை
அருமை
தம 1
nice
Post a Comment